கீழ் பாட்டோடு சங்கதி இதுக்கு – நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு எங்களுக்கும் அவத்யம் என்கிறார் நதே நுரூபே-ஜிதந்தே -என்னக் கடவது இறே-
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத் தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக் காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்