Chapter 8

Utter the name of Thirumālirum Solai - (திருமாலிருஞ்சோலை மலை)

திருமாலிருஞ்சோலை மலை என்று சொல் (திருப்பேர் நகர்)
Emperumān is very fond of Āzhvār’s thirumEni. The word ‘ThirumEni’ is used to denote the body especially when referring to that of Bhagavān or revered sages like Āzhvār. Bhagavān was keen on delivering Āzhvār from this mortal world by taking him to paramapadam with his body intact. Āzhvār wanted Bhagavān to refrain from doing so by emphasizing the nature + Read more
ஆழ்வாரின் திருமேனியின்மீது எம்பெருமானுக்கு அளவு கடந்த ஆசை. இந்தத் திருமேனியோடு பரமபதத்திற்கு இவரை அழைத்துச் செல்ல விரும்பினான். ஆழ்வார் தம் உடலின் தன்மையைக் கூறி இவ்விருப்பத்தைத் தடுத்தார். எம்பெருமானின் விரைவும் சிறிது தடைபட்டது.
ஆழ்வார், பகவானை நோக்கி, “என்னை அழைத்துச் செல்லத் + Read more
Verses: 3860 to 3870
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will go to the golden sky and rule there
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 10.8.1

3860 திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்ன *
திருமால்வந்து என்னெஞ்சுநிறையப்புகுந்தான் *
குருமாமணியுந்துபுனல் பொன்னித்தென்பால் *
திருமால்சென்றுசேர்விடம் தென்திருப்பேரே. (2)
3860 ## திருமாலிருஞ்சோலை மலை * என்றேன் என்ன *
திருமால் வந்து * என் நெஞ்சு நிறையப் புகுந்தான் **
குரு மா மணி உந்து புனல் * பொன்னித் தென்பால் *
திருமால் சென்று சேர்விடம் * தென் திருப்பேரே (1)
3860 ## tirumāliruñcolai malai * ĕṉṟeṉ ĕṉṉa *
tirumāl vantu * ĕṉ nĕñcu niṟaiyap pukuntāṉ **
kuru mā maṇi untu puṉal * pŏṉṉit tĕṉpāl *
tirumāl cĕṉṟu cerviṭam * tĕṉ tiruppere (1)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The lovely Tiruppēr, situated on the south bank of the river Poṉṉi, with floodwaters laden with costly rubies, is the favored abode of Tirumāl. He entered my heart and spread Himself completely when I merely uttered the name of Tirumāliruñcōlai, the holy Mount.

Explanatory Notes

The Āzhvār brings into focus, the Lord’s redemptive grace, shed on the subjects with sweet spontaniety, on the slightest pretext. There is the vicarious reward from the Lord Who treats even the casual mention, by some one, of His names and those of the pilgrim centres, without any religious fervour behind it, as a genuine exercise in chanting these names, with due reverence. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் திருமாலிருஞ்சோலை மலை என்று சொன்னேன் என்பதையே; என்ன நிமித்தமாகக் கொண்டு; திருமால் வந்து எம்பெருமான் வந்து; என் நெஞ்சு என்னெஞ்சினுள்ளே; நிறையப் புகுந்தான் நிறையப் புகுத்தான்; திருமால் சென்று இப்படிப்பட்ட திருமால் சென்று; சேர்விடம் சேர்ந்த இடம்; குரு மா மணி மிகச்சிறந்த மாணிக்கங்களை; உந்து புனல் கொண்டு கொழிக்கின்ற; பொன்னி காவிரி ஆற்றினுடைய; தென்பால் தென்பக்கத்திலுள்ள; தென் திருப்பேரே அழகிய திருப்பேர் நகராம்
vandhu (like someone with an expectation) arrived; en nenjam in my heart (which does not co-operate with the words which are spoken); niṛaiya fully; pugundhān entered;; thirumāl (to arrive in my heart) one who is residing in the divine abode of paramapadham, along with her as said in -ṣriyāsārdham jagathpathi:-; senṛu sĕrvidam the abode where he reached and mercifully rested; kuru mā maṇi very best precious gems; undhu pushing; punal having water; ponni on river ponni #s (cauvery-s); thenpāl on the southern bank; then thiruppĕr beautiful thiruppĕr; pĕrĕ in thiruppĕr; uṛaiginṛa one who is eternally residing

TVM 10.8.2

3861 பேரேயுறைகின்றபிரான் இன்றுவந்து *
பேரேனென்று என்னெஞ்சுநிறையப்புகுந்தான் *
காரேழ்கடலேழ் மலையேழுலகுண்டும் *
ஆராவயிற்றானை அடங்கப்பிடித்தேனே.
3861 பேரே உறைகின்ற பிரான் * இன்று வந்து *
பேரேன் என்று * என் நெஞ்சு நிறையப் புகுந்தான் **
கார் ஏழ் கடல் ஏழ் * மலை ஏழ் உலகு உண்டும் *
ஆரா வயிற்றானை * அடங்கப் பிடித்தேனே (2)
3861 pere uṟaikiṉṟa pirāṉ * iṉṟu vantu *
pereṉ ĕṉṟu * ĕṉ nĕñcu niṟaiyap pukuntāṉ **
kār ezh kaṭal ezh * malai ezh ulaku uṇṭum *
ārā vayiṟṟāṉai * aṭaṅkap piṭitteṉe (2)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

My Father, who resides in Tiruppēr, has now joyously entered my heart and stands firmly within. Though He consumed the seven clouds, seven oceans, seven mountains, and the seven worlds, He didn't feel full until now, spreading Himself completely inside me.

Explanatory Notes

(i) The Supreme Lord did sustain, during the great deluge, all the worlds, with their vast contents and all beings, with no exception whatever. Even so, He did not feel full at all. This void was, of course, due to the absence of His contact with the Āzhvār and it was only to overcome this deficiency that the Lord stationed Himself along with His Divine Consort at Tiruppēr, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேரே உறைகின்ற திருப்பேர் நகரில் வாழ்கின்ற; பிரான் எம்பெருமான்; இன்று வந்து இன்று தானே விரும்பி வந்து; பேரேன் என்று இனி போகமாட்டேன் என்று; என் நெஞ்சு நிறைய என் நெஞ்சு நிறையும்படி; புகுந்தான் புகுந்தான்; கார் ஏழ் ஏழு மேகங்கள்; கடல் ஏழ் ஏழு கடல்கள்; மலை ஏழ் ஏழு மலைகள் ஆகிய; உலகு உலகங்கள் அனைத்தையும்; உண்டும் உண்டும்; ஆரா நிறையாத; வயிற்றானை வயிற்றையுடைய பெருமானை; அடங்க என் நெஞ்சில் அடங்கும்படி நான்; பிடித்தேனே அநுபவிக்கப் பெற்றேன்
pirān sarvĕṣvaran; inṛu vandhu (as if he were incomplete before) today (without any reason, as if he were with expectation) came; pĕrĕn enṛu saying -ī will not leave- (even if we ask him to leave); en nenju in my heart; niṛaiya to make it very complete; pugundhān entered;; kār ĕzh seven types of clouds (such as pushkalāvarthakam etc); kadal ĕzh seven oceans; malai ĕzh having the seven kulaparvathams (anchoring mountains); ulagu uṇdum even after consuming all the worlds; ārā vayiṝānai one who has unfilled stomach; adanga entering in me and becoming complete in all ways; pidiththĕn got to enjoy.; kodi having flags; gŏpuram on towers

TVM 10.8.3

3862 பிடித்தேன்பிறவிகெடுத்தேன் பிணிசாரேன் *
மடித்தேன்மனைவாழ்க்கையுள் நிற்பதோர்மாயையை *
கொடிக்கோபுரமாடங்கள்சூழ் திருப்பேரான் *
அடிச்சேர்வது எனக்கெளிதாயினவாறே.
3862 பிடித்தேன் பிறவி கெடுத்தேன் * பிணி சாரேன் *
மடித்தேன் மனை வாழ்க்கையுள் * நிற்பது ஓர் மாயையை **
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
அடிச் சேர்வது எனக்கு * எளிது ஆயினவாறே (3)
3862 piṭitteṉ piṟavi kĕṭutteṉ * piṇi cāreṉ *
maṭitteṉ maṉai vāzhkkaiyul̤ * niṟpatu or māyaiyai **
kŏṭik kopura māṭaṅkal̤ cūzh * tirupperāṉ *
aṭic cervatu ĕṉakku * ĕl̤itu āyiṉavāṟe (3)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

How easily could I attain my Lord, Who dwells in Tiruppēr, enclosed by towers with banners aloft and tall castles! My grip on His feet is firm, cutting out pestilence, ending my cycle of births, and escaping the trap of dark ignorance.

Explanatory Notes

(i) The Āzhvār keeps musing over the manner in which the Lord has come and mingled with him, out of His spontaneous grace and wonders how the Lord became so easily accessible to him. Having got hold of the Lord’s feet, he is determined not to relax his grip over them hereafter. The benefits flowing from his attainment of the Lord’s feet are: (1) the dreadful cycle of birth + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடி கொடிகளையுடைய; கோபுர கோபுரங்களாலும்; மாடங்கள் சூழ் மாடங்களாலும் சூழ்ந்த; திருப்பேரான் திருப்பேர் நகரில் வாழும் பெருமானின்; அடிச் சேர்வது திருவடிகளை அடைவது; எனக்கு எளிது எனக்கு எளிதாக; ஆயின வாறே! இருந்ததால் முதலில் அவன்; பிடித்தேன் திருவடிகளைப் பிடிக்கப் பெற்றேன்; பிறவி அதனால் பிறவியை; கெடுத்தேன் அறுத்தேன்; பிணி வியாதிகள் வந்து; சாரேன் அணுகாவகை பெற்றேன்; மனை இல்லற; வாழ்க்கையுள் வாழ்வில்; நிற்பது ஓர் நிற்கையாகிற ஓர்; மாயையை அஜ்ஞானத்தை அவன் அருளால்; மடித்தேன் நீக்கிக் கொண்டேன்
mādangal̤ on mansions; sūzh surrounded by; thiruppĕrān one who is easily approachable and is having thiruppĕr as his residence; adi divine feet; sĕrvadhu reaching; enakku el̤idhāyina āṛu easily approachable way for me; pidiththĕn got to reach (his divine feet without any reason at first);; piṛavi connection to birth; keduththĕn eliminated;; piṇi (caused by such birth) sorrows,; sāṛĕn won-t have;; manai vāzhakkai ul̤ in samsāram (bondage); niṛpadhu remaining; ŏr māyaiayai ignorance; madiththĕn avoided.; en kaṇgal̤ my thirsty eyes; el̤idhu āyina āṛu enṛu saying -the goal which is difficult to attain, has become easy!-

TVM 10.8.4

3863 எளிதாயினவாறென்று எங்கண்கள்களிப்ப *
களிதாகியசிந்தையனாய்க் களிக்கின்றேன் *
கிளிதாவியசோலைகள்சூழ் திருப்பேரான் *
தெளிதாகியசேண்விசும்புதருவானே.
3863 எளிதாயினவாறு என்று * என் கண்கள் களிப்பக் *
களிது ஆகிய சிந்தையனாய்க் * களிக்கின்றேன் **
கிளி தாவிய சோலைகள் சூழ் * திருப்பேரான் *
தெளிது ஆகிய * சேண் விசும்பு தருவானே (4)
3863 ĕl̤itāyiṉavāṟu ĕṉṟu * ĕṉ kaṇkal̤ kal̤ippak *
kal̤itu ākiya cintaiyaṉāyk * kal̤ikkiṉṟeṉ **
kil̤i tāviya colaikal̤ cūzh * tirupperāṉ *
tĕl̤itu ākiya * ceṇ vicumpu taruvāṉe (4)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord, dwelling in Tiruppēr surrounded by lovely orchards where parrots reside, is about to bestow upon me the immaculate SriVaikuntam of great splendor. My eyes rejoice, knowing that the SriVaikuntam is brought within my easy reach by the Lord’s grace, and my mind dances with joy.

Explanatory Notes

(i) The home of parrots: This refers to the lovely gardens in Tiruppēr, where parrots are perched merrily. This could also refer to the township of Tiruppēr, inhabited by truth-loving, knowledgeable persons who would parrot-like repeat what they had gathered from their preceptors, without any distortion or deviation.

(ii) From this land of dark nescience to the yonder + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிளி தாவிய கிளிகள் தாவும்படி செறிந்த; சோலைகள் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருப்பேரான் திருப்பேர் நகரில் வாழும் பெருமான்; தெளிது ஆகிய தெளிந்த நிலமான; சேண் விசும்பு பரமாகாசம் என்னும் பரமபதத்தை; தருவானே தருவான் அதனால்; என் கண்கள் என் கண்கள்; எளிதாயினவாறு இந்த எளிமைக்கு ஈடுபட்டு; களிப்ப களிக்கும்படியாக; களிது ஆகிய பரமானந்தம் அடைந்த; சிந்தையனாய் நெஞ்சை உடையவனாக; களிக்கின்றேன் களிக்கின்றேன்
kal̤ippa to become joyful; kal̤idhu āgiya joyful; sindhaiyanāy being with the one who has the heart; kal̤ikkinṛĕn ī am enjoying;; kil̤i thāviya dense to let the parrots hop around; sŏlaigal̤ sūzh surrounded by gardens; thiruppĕrān one who is present as easily approachable in thiruppĕr; thel̤idhu āgiya being radiant, due to its being filled with great goodness; sĕṇ visumbu parama vyŏma (supreme sky) which is higher (than the abode of brahmā); tharuvān is ready to bestow.; thĕn ĕy abundance of beetles; pozhil having garden

TVM 10.8.5

3864 வானேதருவான் எனக்காஎன்னோடொட்டி *
ஊனேய்குரம்பை யிதனுள்புகுந்து * இன்று
தானேதடுமாற்றவினைகள் தவிர்த்தான் *
தேனேபொழில் தென் திருப்பேர்நகரானே.
3864 வானே தருவான் * எனக்கா என்னோடு ஒட்டி *
ஊன் ஏய் குரம்பை * இதனுள் புகுந்து ** இன்று
தானே தடுமாற்ற * வினைகள் தவிர்த்தான் *
தேன் ஏய் பொழில் * தென் திருப்பேர் நகரானே (5)
3864 vāṉe taruvāṉ * ĕṉakkā ĕṉṉoṭu ŏṭṭi *
ūṉ ey kurampai * itaṉul̤ pukuntu ** iṉṟu
tāṉe taṭumāṟṟa * viṉaikal̤ tavirttāṉ *
teṉ ey pŏzhil * tĕṉ tirupper nakarāṉe (5)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord, dwelling in Tiṛuppēr city with its fine orchards where honey bees hum gaily, is intent on granting me spiritual bliss. He has come to me on His own, entering my body and ridding me of all impediments, the fruits of my past actions.

Explanatory Notes

(i) The Āzhvār exclaims that the Lord, enshrined in Tiruppēr, not only took a vow that He would take him to spiritual world but also rid him of all impediments, the ‘Puṇya’ and ‘Pāpa’, merit and demerit respectively, the fruits of his actions, good and bad. As a matter of fact, the Lord has, all along, been very keen on taking the Āzhvār to spiritual world but nevertheless + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேனேய் வண்டுகள் செறிந்த; பொழில் சோலைகளை உடைய; தென் திருப்பேர் தென் திருப்பேர்; நகரானே நகரில் வாழும் பெருமான்; வானே தருவான் பரமபதமே தர; எனக்காய் இசைந்து; என்னோடு ஒட்டி என்னுடன் சபதம் செய்து; ஊன் ஏய் மாம்சத்தினாலான; குரம்பை இதனுள் இந்த சரீரத்துக்குள்; புகுந்து இன்று புகுந்து இன்று; தானே தடுமாற்ற தடுமாற்றம் செய்யும்; வினைகள் பாப புண்யங்களை; தவிர்த்தான் போக்கி அருளினான்
then beautiful; thiruppĕr nagarān one who resides in the city named thiruppĕr; enakku for me; vānĕ tharuvān āy vowing to bestow me paramapadham; ennŏdu with me; otti taking oath; ūn ĕy abundance of flesh; kurambai idhan ul̤ inside this body which is a skeleton; inṛu today; thānĕ on his own; pugundhu arrived and entered; thadumāṝam reason for the perplexity (in his separation); vinaigal̤ puṇya (virtues), pāpa (vices); thavirththān eliminated.; thiruppĕr nagarān in thiruppĕr nagar; thirumālirunjŏlai poruppĕ in the divine hill named thirumālirunjŏlai

TVM 10.8.6

3865 திருப்பேர்நகரான் திருமாலிருஞ்சோலை *
பொருப்பேயுறைகின்றபிரான் இன்றுவந்து *
இருப்பேனென்று என்னெஞ்சுநிறையப்புகுந்தான் *
விருப்பேபெற்று அமுதமுண்டுகளித்தேனே. (2)
3865 திருப்பேர் நகரான் * திருமாலிருஞ்சோலை *
பொருப்பே உறைகின்ற பிரான் * இன்று வந்து **
இருப்பேன் என்று * என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று * அமுதம் உண்டு களித்தேனே (6)
3865 tirupper nakarāṉ * tirumāliruñcolai *
pŏruppe uṟaikiṉṟa pirāṉ * iṉṟu vantu **
iruppeṉ ĕṉṟu * ĕṉ nĕñcu niṟaiyap pukuntāṉ
viruppe pĕṟṟu * amutam uṇṭu kal̤itteṉe (6)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord in Tiruppēr city, Who also dwells in Tirumāliruñcōlai and many other delightful abodes, has today entered my heart and filled it completely. He has promised to stay there forever. I revel in His love, drinking deeply of that insatiable nectar.

Explanatory Notes

(i) Many indeed arc the enchanting abodes of the Lord in His worshippable Form and yet, He has entered the Āzhvār’s heart as if He has nowhere else to go and now only He feels complacent as a ‘Kṛta Kṛtya’ (one who has discharged one’s duty thoroughly), after getting Himself lodged in the Āzhvār’s heart-region.

(ii) “Has this day got inside me”: Why this day only and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருப்பேர் திருப்பேர்; நகரான் நகரில் வாழும் பெருமானே; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; பொருப்பே உறைகின்ற மலையிலும் உறைகின்ற; பிரான் பெருமான் அவனே; இன்று வந்து இன்று இங்கு வந்து; என் நெஞ்சு என் நெஞ்சில்; இருப்பேன் என்று இருப்பேன் என்று கூறி; நிறையப் என்னுள் நிறையும்படி; புகுந்தான் புகுந்தான்; விருப்பே பெற்று அவருடைய விருப்பத்தைப் பெற்று; அமுதம் குணானுபவரூபமான அமுதத்தை; உண்டு அநுபவித்து; களித்தேனே களிக்கின்றேன்
uṛaiginṛa one who is eternally residing; pirān the great benefactor; inṛu today (while there is no reason); vandhu himself arrived; iruppĕn enṛu vowing -let me stay here-; en nenju my heart; niṛaiya to become complete; pugundhān entered;; viruppĕ peṝu receiving (his perfect) gift; amudham uṇdu drinking the nectar (enjoying his qualities); kal̤iththĕn ī became joyful.; vaṇdu kal̤ikkum beetles which enjoy (drinking nectar); pozhil sūzh surrounded by garden

TVM 10.8.7

3866 உண்டுகளித்தேற்கு உம்பரென்குறை? * மேலைத்
தொண்டுகளித்து அந்திதொழும்சொல்லுப்பெற்றேன் *
வண்டுகளிக்கும்பொழில்சூழ் திருப்பேரான் *
கண்டுகளிப்பக் கண்ணுள்நின்றகலானே.
3866 உண்டு களித்தேற்கு * உம்பர் என் குறை * மேலைத்
தொண்டு உகளித்து * அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் **
வண்டு களிக்கும் பொழில் சூழ் * திருப்பேரான் *
கண்டு களிப்ப * கண்ணுள் நின்று அகலானே? (7)
3866 uṇṭu kal̤itteṟku * umpar ĕṉ kuṟai * melait
tŏṇṭu ukal̤ittu * anti tŏzhum cŏllup pĕṟṟeṉ **
vaṇṭu kal̤ikkum pŏzhil cūzh * tirupperāṉ *
kaṇṭu kal̤ippa * kaṇṇul̤ niṉṟu akalāṉe? (7)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

My Lord, who lives in Tiruppēr with its beautiful orchards where bees happily buzz around, is always in my sight. Being close to Him fills me with joy. What more could I ask for in SriVaikuntam? I have experienced the happiness of serving Him completely, saying ‘namaḥ’ to show that I belong to Him.

Explanatory Notes

(i) Having tasted the supreme bliss of service unto the Lord, right here, by singing these love-laden songs, (Tiruvāymoḻi), the Āzhvār is led to pause and think what more could there be for him to enjoy on the yonder side of spiritual world. Uttering the word ‘namaḥ’ or worship of the Lord, betokening one’s realisation of the true nature of the soul that one is the exclusive + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு களிக்கும் வண்டுகள் களிக்கும்; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருப்பேரான் திருப்பேர் நகரில் வாழும் பெருமான்; கண்டு தன்னை நான் எப்பொழுதும்; களிப்ப கண்டு களிக்குமாறு; கண்ணுள் நின்று என் கண்ணுக்கு விஷயமாக நின்று; அகலானே விட்டுப் பிரியா நின்றான்; உண்டு இப்படிப்பட்ட அநுபவம்; களித்தேற்கு பெற்று மகிழ்ந்த எனக்கு; உம்பர் என் பரமபதம் அடைய வேண்டும் என்ற; குறை? குறை உண்டாகுமோ?; மேலை மேலான; தொண்டு கைங்கர்யத்தின் சுவை; உகளித்து அனுபவித்த பின்; அந்தி முடிவிலே நான் அவனுக்கே என்னும்; தொழும் நம: என்னும்; சொல்லுப் பெற்றேன் சொல்லையும் கூறப் பெற்றேன்
thiruppĕrān emperumān residing in thiruppĕr nagar; kaṇdu kal̤ippa to be blissful by constantly seeing (him); kaṇ ul̤ ninṛu being the object of my sight; agalān is not leaving;; uṇdu kal̤iththĕṛku (in this manner) for me who enjoyed him eternally; umbar enjoyment in going further to a special abode (paramapadham); en kuṛai what worry is there?; mĕlaith thoṇdu great servitude; ugal̤iththu acquiring great joy; andhi in the end; thozhum (as said in -nama ithyĕva vādhina:-) words indicating worship/surrender; sollu to say the word -nama:-; peṝĕn got.; kaṇ ul̤ ninṛu being eternally enjoyable for my external eyes; agalān not leaving;

TVM 10.8.8

3867 கண்ணுள்நின்றகலான் கருத்தின்கண்பெரியன் *
எண்ணில்நுண்பொருள் ஏழிசையின்சுவைதானே *
வண்ணநன்மணிமாடங்கள்சூழ் திருப்பேரான் *
திண்ணமென்மனத்துப் புகுந்தான்செறிந்தின்றே.
3867 கண்ணுள் நின்று அகலான் * கருத்தின்கண் பெரியன் *
எண்ணில் நுண் பொருள் * ஏழ் இசையின் சுவை தானே **
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
திண்ணம் என் மனத்துப் * புகுந்தான் செறிந்து இன்றே (8)
3867 kaṇṇul̤ niṉṟu akalāṉ * karuttiṉkaṇ pĕriyaṉ *
ĕṇṇil nuṇ pŏrul̤ * ezh icaiyiṉ cuvai tāṉe **
vaṇṇa nal maṇi māṭaṅkal̤ cūzh * tirupperāṉ *
tiṇṇam ĕṉ maṉattup * pukuntāṉ cĕṟintu iṉṟe (8)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord Supreme, subtle beyond comprehension and the essence of all music, now resides in Tiruppēr, surrounded by glittering castles. He is intent on taking me to the spiritual world and will not tolerate being apart from my sight. It is now certain that He has firmly entered my mind.

Explanatory Notes

The Lord, too subtle to be comprehended by those who seek to comprehend Him through strenuous efforts, is now fiercely concentrating on the elaborate arrangements to be made in connection with the ensuing journey of the Āzhvār to spiritual world. The Lord’s vision stands continually in front of the Āzhvār, feasting his eyes, and he is enjoying right here the blessed rapport + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருத்தின் என்னைப் பரமபதத்துக்கு; கண் பெரியன் அழைத்துச் செல்லுவதற்காக; கண்ணுள் நின்று என் கண்ணைவிட்டு; அகலான் அகலாதிருக்கின்றான்; எண்ணில் எண்ணிப் பார்த்தால்; நுண் அதி சூக்ஷ்மமான; பொருள் ஸ்வபாவம் உடையவனாய்; தானே தானே; ஏழு இசையின் ஏழு ஸ்வரங்களின்; சுவை சுவையின் ஸாரமுமாய்; வண்ண நல் பல வண்ணங்களாய்; மணி ரத்தினங்களாலான; மாடங்கள் சூழ் மாடங்களால் சூழ்ந்த; திருப்பேரான் திருப்பேர் நகரில் வாழும் பெருமான்; என் மனத்து என் மனத்தில்; செறிந்து இன்றே இன்று செறிந்து வந்து; புகுந்தான புகுந்தான்; திண்ணம் இது உண்மையே
karuththin kaṇ in the heart (seeing his thoughts, due to the eagerness in carrying āzhvār from here to the special abode of paramapadham and enjoying there); periyan is great;; eṇṇil while thinking (saying -let us know him-); nuṇ porul̤ having very subtle qualities; thānĕ himself (while enjoying); ĕzh isaiyin suvai having the sweetness of saptha svaram (the seven musical notes); vaṇṇam in many colours; nanmaṇi made with the best gems; mādangal̤ sūzh surrounded by mansions; thiruppĕrān one who is residing in thiruppĕr; en manaththu in my heart (which craved to attain him); thiṇṇam without any reason; inṛu today; seṛindhu to remain firm; pugundhān entered.; inṛu now (after the initial merciful glance occurred); ennai me (who previously remained as said in -asannĕva-)

TVM 10.8.9

3868 இன்றென்னைப்பொருளாக்கித் தன்னைஎன்னுள் வைத்தான் *
அன்றென்னைப்புறம்போகப்புணர்த்தது என்செய்வான்? *
குன்றென்னத்திகழ்மாடங்கள்சூழ் திருப்பேரான் *
ஒன்றெனக்கருள்செய்ய உணர்த்தலுற்றேனே.
3868 இன்று என்னைப் பொருளாக்கித் * தன்னை என்னுள் வைத்தான் *
அன்று என்னைப் புறம்போகப் * புணர்த்தது என் செய்வான்? **
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
ஒன்று எனக்கு அருள் செய்ய * உணர்த்தல் உற்றேனே (9)
3868 iṉṟu ĕṉṉaip pŏrul̤ākkit * taṉṉai ĕṉṉul̤ vaittāṉ *
aṉṟu ĕṉṉaip puṟampokap * puṇarttatu ĕṉ cĕyvāṉ? **
kuṉṟu ĕṉṉat tikazh māṭaṅkal̤ cūzh * tirupperāṉ *
ŏṉṟu ĕṉakku arul̤ cĕyya * uṇarttal uṟṟeṉe (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord, now dwelling steadfastly in my mind at Tiruppēr, surrounded by majestic mansions, has finally turned His attention to me after neglecting and overlooking me for ages. I wonder why He kept His eyes closed to me all this time but now showers upon me His abundant grace. Would He kindly explain one or the other to me?

Explanatory Notes

(i) This is the topical song of this decad. The gist of this song has already been set out in the form of a dialogue, opened by the Āzhvār with the Lord, in the preamble to this decad. When asked by his disciple, Nañcīyar, as to what reply the Lord gave to the Āzhvār, Śrī Parāśara Bhaṭṭar would appear to have said;

“The Lord has obviously no answer, as such. He, who + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்று என்னை என்னை இன்று; பொருளாக்கி ஒரு பொருளாக்கி; தன்னை என் உள் தள்ளத் தகுந்த என்னுள்; வைத்தான் தன்னை வைத்தான்; அன்று என்னை அன்று என்னை; புறம் போக விஷயாந்தரங்களிலே போக; புணர்த்தது அலைய விட்டான்; என் செய்வான்? எதற்காக?; குன்று என்ன குன்றுகள் போன்று; திகழ் திகழும்; மாடங்கள் சூழ் மாடங்கள் சூழ்ந்த; திருப்பேரான் திருப்பேர் நகரில் வாழும் பெருமான்; ஒன்று எனக்கு எனக்கு; அருள் செய்ய அருள் செய்த காரணத்தை; உணர்த்தல் உற்றேனே கூற வேண்டும்
porul̤ ākki made to be an entity (as said in -santhamĕnam-); thannai him (who is distinguishedly enjoyable); en ul̤ in my heart (which is to be given up); vaiththān (voluntarily brought and) placed;; anṛu previously (before such merciful glance occurred); ennai me (who is fully at his disposal); puṛam pŏga to stay away, by being engaged in worldly pleasures (facing away from him); puṇarththadhu vowed; en seyvān why?; kunṛenna to be said as a hill; thigazh shining; mādangal̤ sūzh surrounded by mansions; thiruppĕrān emperumān who is in thiruppĕr; onṛu the reason for one (of these two scenarios); enakku arul̤ seyya to mercifully explain to me; uṇarththal uṝĕn was focussed (saying -you should truthfully inform me-).; uṝĕn without any reason [effort from my side], ī reached your divine feet;; ugandhu out of love

TVM 10.8.10

3869 உற்றேன்உகந்துபணிசெய்து உனபாதம்
பெற்றேன் * ஈதேயின்னம்வேண்டுவதுஎந்தாய்! *
கற்றார்மறைவாணர்கள்வாழ் திருப்பேராற்கு *
அற்றாரடியார்தமக்கு அல்லல்நில்லாவே. (2)
3869 உற்றேன் உகந்து பணிசெய்து * உன பாதம்
பெற்றேன் * ஈதே இன்னம் * வேண்டுவது எந்தாய் **
கற்றார் மறைவாணர்கள் * வாழ் திருப்பேராற்கு *
அற்றார் அடியார் தமக்கு * அல்லல் நில்லாவே (10)
3869 uṟṟeṉ ukantu paṇicĕytu * uṉa pātam
pĕṟṟeṉ * īte iṉṉam * veṇṭuvatu ĕntāy **
kaṟṟār maṟaivāṇarkal̤ * vāzh tirupperāṟku *
aṟṟār aṭiyār tamakku * allal nillāve (10)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

My Lord, I have attained Your lovely feet and rendered loving service, singing these songs. What I now desire is the continuation of this bliss. The learned ones, well-versed in Vedic lore and solely devoted to You, my Lord, enshrined in Tiruppēr, will forever be freed from grief.

Explanatory Notes

(i) After keeping quiet for a while, without furnishing any reply to the Āzhvār’s query as in the last song, the Lord enquired of the Āzhvār what more he needed. The Āzhvār’s reply is, as above. Having been assigned the blissful service of singing this great hymnal (Tiruvāymoḻi) there is indeed no greater felicity he could aspire. Immensely pleased with this reply, the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தாய்! எம்பெருமானே!; உற்றேன் உன் திருவடிகளை அடைந்தேன்; உகந்து அதனால் உகந்து; பணி வாசிகமான திருவாய்மொழி பாடி; செய்து கைங்கர்யம் செய்து; உன பாதம் உன் திருவடிகளை; பெற்றேன் அடையப் பெற்றேன்; ஈதே இன்னம் இந்த கைங்கர்யமே என்றும்; வேண்டுவது விரும்புகின்றேன்; கற்றார் மறை வேதங்களைக் கற்ற; வாணர்கள் வாழ் வைதிகர்கள் வாழும்; திருப்பேராற்கு திருப்பேர் நகரிலே உறையும்; அற்றார் பெருமானுக்கு அற்றுத் தீர்ந்த; அடியார் தமக்கு அடியார்களுக்கு; அல்லல் எந்தவிதத் துன்பமும்; நில்லாவே உண்டாகாது
paṇi seydhu serving through speech; una pādham peṝĕn ī attained the divine feet of yours, who are the ultimate goal;; endhāy ŏh one who is naturally related to me!; īdhĕ this service only; innam forever; vĕṇduvadhu desired; kaṝār those who are learned (by knowing what is to be known, from preceptors); maṛai meanings of vĕdham, which are heard; vāṇargal̤ those who are experts in conducting them; vāzh living with bhagavath anubhavam (enjoying bhagavān); thiruppĕrāṛku for you, who are residing in thiruppĕr; aṝār ananyārha (exclusively existing); adiyār thamakku for those devotees; allal sorrows which stop the enjoyment; nillāvĕ will naturally not stay.; allal for sorrow; nillā being the abode of not letting stay

TVM 10.8.11

3870 நில்லாவல்லல் நீள்வயல்சூழ்திருப்பேர்மேல் *
நல்லார்பலர்வாழ் குருகூர்ச்சடகோபன் *
சொல்லார்தமிழ் ஆயிரத்துள்இவைபத்தும்
வல்லார் * தொண்டராள்வது சூழ்பொன்விசும்பே. (2)
3870 ## நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல் *
நல்லார் பலர் வாழ் * குருகூர்ச் சடகோபன் **
சொல் ஆர் தமிழ் * ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் * தொண்டர் ஆள்வது * சூழ் பொன் விசும்பே (11)
3870 ## nillā allal nīl̤ vayal cūzh tiruppermel *
nallār palar vāzh * kurukūrc caṭakopaṉ **
cŏl ār tamizh * āyirattul̤ ivai pattum
vallār * tŏṇṭar āl̤vatu * cūzh pŏṉ vicumpe (11)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The devotees who deeply understand these ten songs, selected from Caṭakōpaṉ of Kurukūr's larger collection in pure Tamil, composed in praise of the Lord at Tiruppēr, where fertile fields surround the sacred center, will indeed have influence over the radiant SriVaikuntam, free from affliction.

Explanatory Notes

The chanters of this decad are assured not merely of their ascent to spiritual world but they will go there as masters and not as mere residents.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அல்லல் துக்கங்களானவை தானே; நில்லா விட்டுப் போகுமிடமாய்; நீள் வயல் சூழ் பெரும் வயல்களாலே சூழ்ந்த; திருப்பேர்மேல் திருப்பேரைக் குறித்து; நல்லார் நல்லவர்கள் பலர் திருவாய்மொழியில்; பலர் வாழ் ஈடுபட்டு வாழும்; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல்லார் அருளிச்செய்த; தமிழ் தமிழ் பாசுரங்களான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் தொண்டர் ஓத வல்ல பாகவதர்கள்; ஆள்வது சூழ் ஆளுமிடம் ஒளி சூழ்ந்த; பொன் விசும்பே பரமபதமே ஆகும்
nīl̤ vayal sūzh being surrounded by vast fields; thiruppĕr mĕl on thiruppĕr; nallār distinguished personalities; palar many; vāzh living while hearing thiruvāimozhi; kurugūrch chatakŏpan nammāzhvār, the controller of āzhvārthirunagari, his; sol ār strung with words; thamizh thamizh; āyiraththul̤ among the thousand pāsurams; ivai paththum vallār those who can practice this decad; thoṇdar bhāgavathas (devotees); āl̤vadhu conducting it, being the leader; sūzh pervading everywhere, being boundless; pon radiant; visumbu paramapadham, which is known as paramavyŏma.; en appan being my distinguished relative; vāzh pugazh having great qualities which bring joy