Chapter 8

Utter the name of Thirumālirum Solai - (திருமாலிருஞ்சோலை மலை)

திருமாலிருஞ்சோலை மலை என்று சொல் (திருப்பேர் நகர்)
Emperumān is very fond of Āzhvār’s thirumEni. The word ‘ThirumEni’ is used to denote the body especially when referring to that of Bhagavān or revered sages like Āzhvār. Bhagavān was keen on delivering Āzhvār from this mortal world by taking him to paramapadam with his body intact. Āzhvār wanted Bhagavān to refrain from doing so by emphasizing the nature + Read more
ஆழ்வாரின் திருமேனியின்மீது எம்பெருமானுக்கு அளவு கடந்த ஆசை. இந்தத் திருமேனியோடு பரமபதத்திற்கு இவரை அழைத்துச் செல்ல விரும்பினான். ஆழ்வார் தம் உடலின் தன்மையைக் கூறி இவ்விருப்பத்தைத் தடுத்தார். எம்பெருமானின் விரைவும் சிறிது தடைபட்டது.

ஆழ்வார், பகவானை நோக்கி, “என்னை அழைத்துச் செல்லத் + Read more
Verses: 3860 to 3870
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will go to the golden sky and rule there
  • TVM 10.8.1
    3860 ## திருமாலிருஞ்சோலை மலை * என்றேன் என்ன *
    திருமால் வந்து * என் நெஞ்சு நிறையப் புகுந்தான் **
    குரு மா மணி உந்து புனல் * பொன்னித் தென்பால் *
    திருமால் சென்று சேர்விடம் * தென் திருப்பேரே (1)
  • TVM 10.8.2
    3861 பேரே உறைகின்ற பிரான் * இன்று வந்து *
    பேரேன் என்று * என் நெஞ்சு நிறையப் புகுந்தான் **
    கார் ஏழ் கடல் ஏழ் * மலை ஏழ் உலகு உண்டும் *
    ஆரா வயிற்றானை * அடங்கப் பிடித்தேனே (2)
  • TVM 10.8.3
    3862 பிடித்தேன் பிறவி கெடுத்தேன் * பிணி சாரேன் *
    மடித்தேன் மனை வாழ்க்கையுள் * நிற்பது ஓர் மாயையை **
    கொடிக் கோபுர மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
    அடிச் சேர்வது எனக்கு * எளிது ஆயினவாறே (3)
  • TVM 10.8.4
    3863 எளிதாயினவாறு என்று * என் கண்கள் களிப்பக் *
    களிது ஆகிய சிந்தையனாய்க் * களிக்கின்றேன் **
    கிளி தாவிய சோலைகள் சூழ் * திருப்பேரான் *
    தெளிது ஆகிய * சேண் விசும்பு தருவானே (4)
  • TVM 10.8.5
    3864 வானே தருவான் * எனக்கா என்னோடு ஒட்டி *
    ஊன் ஏய் குரம்பை * இதனுள் புகுந்து ** இன்று
    தானே தடுமாற்ற * வினைகள் தவிர்த்தான் *
    தேன் ஏய் பொழில் * தென் திருப்பேர் நகரானே (5)
  • TVM 10.8.6
    3865 திருப்பேர் நகரான் * திருமாலிருஞ்சோலை *
    பொருப்பே உறைகின்ற பிரான் * இன்று வந்து **
    இருப்பேன் என்று * என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
    விருப்பே பெற்று * அமுதம் உண்டு களித்தேனே (6)
  • TVM 10.8.7
    3866 உண்டு களித்தேற்கு * உம்பர் என் குறை * மேலைத்
    தொண்டு உகளித்து * அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் **
    வண்டு களிக்கும் பொழில் சூழ் * திருப்பேரான் *
    கண்டு களிப்ப * கண்ணுள் நின்று அகலானே? (7)
  • TVM 10.8.8
    3867 கண்ணுள் நின்று அகலான் * கருத்தின்கண் பெரியன் *
    எண்ணில் நுண் பொருள் * ஏழ் இசையின் சுவை தானே **
    வண்ண நல் மணி மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
    திண்ணம் என் மனத்துப் * புகுந்தான் செறிந்து இன்றே (8)
  • TVM 10.8.9
    3868 இன்று என்னைப் பொருளாக்கித் * தன்னை என்னுள் வைத்தான் *
    அன்று என்னைப் புறம்போகப் * புணர்த்தது என் செய்வான்? **
    குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
    ஒன்று எனக்கு அருள் செய்ய * உணர்த்தல் உற்றேனே (9)
  • TVM 10.8.10
    3869 உற்றேன் உகந்து பணிசெய்து * உன பாதம்
    பெற்றேன் * ஈதே இன்னம் * வேண்டுவது எந்தாய் **
    கற்றார் மறைவாணர்கள் * வாழ் திருப்பேராற்கு *
    அற்றார் அடியார் தமக்கு * அல்லல் நில்லாவே (10)
  • TVM 10.8.11
    3870 ## நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல் *
    நல்லார் பலர் வாழ் * குருகூர்ச் சடகோபன் **
    சொல் ஆர் தமிழ் * ஆயிரத்துள் இவை பத்தும்
    வல்லார் * தொண்டர் ஆள்வது * சூழ் பொன் விசும்பே (11)