Chapter 7

Āzhvār acclaims the extent of the Lord’s affection for him - (செஞ்சொல் கவிகாள்)

எம்பெருமான் தம்மிடத்தில் வைத்திருந்த பெரும்பற்றை ஆழ்வார் பாராட்டுதல் (திருமாலிருஞ்சோலை)
When one desires a flower for its fragrance, one wears not just the flower but its stem/root as well. Similarly, emperumān doesn’t let go of the fragrance of knowledge that emanates from a sage’s body either. Since Bhagavān is a ‘bhakthi sabalan’ (meaning One whose resoluteness wavers when faced with ardent devotion), He wanted to take Āzhvār to paramapadam, + Read more
மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர். அதுபோல் ஞானியரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.
அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று + Read more
Verses: 3849 to 3859
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கேசி
Timing: 10.49 - 12.00 PM
Recital benefits: the feelings of their senses and mind will be removed
  • TVM 10.7.1
    3849 ## செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் * திருமாலிருஞ்சோலை *
    வஞ்சக் கள்வன் மா மாயன் * மாயக் கவியாய் வந்து ** என்
    நெஞ்சும் உயிரும் உள் கலந்து * நின்றார் அறியாவண்ணம் * என்
    நெஞ்சும் உயிரும் அவை உண்டு * தானே ஆகி நிறைந்தானே (1)
  • TVM 10.7.2
    3850 தானே ஆகி நிறைந்து * எல்லா உலகும் உயிரும் தானே ஆய் *
    தானே யான் என்பான் ஆகித் * தன்னைத் தானே துதித்து ** எனக்குத்
    தேனே பாலே கன்னலே அமுதே * திருமாலிருஞ்சோலை *
    கோனே ஆகி நின்றொழிந்தான் * என்னை முற்றும் உயிர் உண்டே (2)
  • TVM 10.7.3
    3851 என்னை முற்றும் உயிர் உண்டு * என் மாய ஆக்கை இதனுள் புக்கு *
    என்னை முற்றும் தானே ஆய் * நின்ற மாய அம்மான் சேர் **
    தென் நன் திருமாலிருஞ்சோலைத் * திசை கைகூப்பிச் சேர்ந்த யான் *
    இன்னும் போவேனேகொலோ? * என்கொல் அம்மான் திரு அருளே? (3)
  • TVM 10.7.4
    3852 என்கொல் அம்மான் திரு அருள்கள் * உலகும் உயிரும் தானே ஆய் *
    நன்கு என் உடலம் கைவிடான் * ஞாலத்தூடே நடந்து உழக்கி **
    தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற * திருமாலிருஞ்சோலை *
    நங்கள் குன்றம் கைவிடான் * நண்ணா அசுரர் நலியவே? (4)
  • TVM 10.7.5
    3853 நண்ணா அசுரர் நலிவு எய்த * நல்ல அமரர் பொலிவு எய்த *
    எண்ணாதனகள் எண்ணும் * நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப **
    பண் ஆர் பாடல் இன் கவிகள் * யானாய்த் தன்னைத் தான் பாடி *
    தென்னா என்னும் என் அம்மான் * திருமாலிருஞ்சோலையானே (5)
  • TVM 10.7.6
    3854 திருமாலிருஞ்சோலையானே ஆகிச் * செழு மூவுலகும் * தன்
    ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து * ஊழி ஊழி தலையளிக்கும் **
    திருமால் என்னை ஆளும் மால் * சிவனும் பிரமனும் காணாது *
    அரு மால் எய்தி அடி பரவ * அருளை ஈந்த அம்மானே (6)
  • TVM 10.7.7
    3855 அருளை ஈ என் அம்மானே! என்னும் * முக்கண் அம்மானும் *
    தெருள் கொள் பிரமன் அம்மானும் * தேவர் கோனும் தேவரும் **
    இருள்கள் கடியும் முனிவரும் * ஏத்தும் அம்மான் திருமலை *
    மருள்கள் கடியும் மணிமலை * திருமாலிருஞ்சோலை மலையே (7)
  • TVM 10.7.8
    3856 திருமாலிருஞ்சோலை மலையே * திருப்பாற்கடலே என் தலையே *
    திருமால் வைகுந்தமே * தண் திருவேங்கடமே எனது உடலே **
    அரு மா மாயத்து எனது உயிரே * மனமே வாக்கே கருமமே *
    ஒரு மா நொடியும் பிரியான் * என் ஊழி முதல்வன் ஒருவனே (8)
  • TVM 10.7.9
    3857 ஊழி முதல்வன் ஒருவனே என்னும் * ஒருவன் உலகு எல்லாம் *
    ஊழிதோறும் தன்னுள்ளே படைத்துக் * காத்துக் கெடுத்து உழலும் **
    ஆழிவண்ணன் என் அம்மான் * அம் தண் திருமாலிருஞ்சோலை *
    வாழி மனமே! கைவிடேல்! * உடலும் உயிரும் மங்க ஒட்டே (9)
  • TVM 10.7.10
    3858 மங்க ஒட்டு உன் மா மாயை * திருமாலிருஞ்சோலை மேய *
    நங்கள் கோனே யானே நீ ஆகி * என்னை அளித்தானே **
    பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் * கருமேந்திரியம் ஐம்பூதம் *
    இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி * மான் ஆங்காரம் மனங்களே. (10)
  • TVM 10.7.11
    3859 ## மான் ஆங்காரம் மனம் கெட * ஐவர் வன்கையர் மங்க *
    தான் ஆங்காரமாய்ப் புக்கு * தானே தானே ஆனானை **
    தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் * சடகோபன் சொல் ஆயிரத்துள் *
    மான் ஆங்காரத்து இவை பத்தும் * திருமாலிருஞ்சோலை மலைக்கே. (11)