Chapter 9

Āzhvār sings on the warm welcome he received upon reaching paramapadam - (சூழ் விசும்பு)*

பரமபதத்தில் தமக்குக் கிடைத்த நல் வரவேற்பை ஆழ்வார் அனுபவித்துப் பாடுதல்
When a prince of royal lineage is on a procession, auspicious musical instruments are sounded as part of the protocol; similarly, when Āzhvār proceeds to go towards paramapadam, sounds rang out from the clouds. The waves of the sea danced with joy. Renowned vocalists such as the kinnarar and kerudar (celestial beings) sang beautifully. Conches and brass pipe horns were blown. Celestial women gave their blessings and praise. This chapter elaborates on this festivity.
அரசகுமரர் செல்லும்போது மங்கள வாத்தியங்கள் முழங்குவது வழக்கம்., அதுபோல் ஆழ்வார் பரமபதத்திற்கு எழுந்தருளும்போது மேகங்கள் முழங்கின. கடலலைகள் அசைந்தாடின. பாடுவதில் வல்லவர்களான கின்னரர் கெருடர்கள் கீதங்கள் பாடினார்கள். காளங்களும் வலம் புரியும் இசைந்தன. தேவமடந்தையர் வாழ்த்தினர். இச்செய்தியைக் + Read more
Verses: 3871 to 3881
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
  • TVM 10.9.1
    3871 ## சூழ் விசும்பு அணி முகில் * தூரியம் முழக்கின *
    ஆழ் கடல் அலை திரை * கை எடுத்து ஆடின **
    ஏழ் பொழிலும் * வளம் ஏந்திய என் அப்பன் *
    வாழ் புகழ் நாரணன் * தமரைக் கண்டு உகந்தே (1)
  • TVM 10.9.2
    3872 நாரணன் தமரைக் கண்டு உகந்து * நல் நீர் முகில் *
    பூரண பொன் குடம் * பூரித்தது உயர் விண்ணில் **
    நீர் அணி கடல்கள் * நின்று ஆர்த்தன * நெடு வரைத்
    தோரணம் நிரைத்து * எங்கும் தொழுதனர் உலகே (2)
  • TVM 10.9.3
    3873 தொழுதனர் உலகர்கள் * தூப நல் மலர் மழை
    பொழிவனர் * பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே **
    எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் * முனிவர்கள் *
    வழி இது வைகுந்தர்க்கு என்று * வந்து எதிரே (3)
  • TVM 10.9.4
    3874 எதிர் எதிர் இமையவர் * இருப்பிடம் வகுத்தனர் *
    கதிரவர் அவர் அவர் * கைந்நிரை காட்டினர் **
    அதிர் குரல் முரசங்கள் * அலை கடல் முழக்கு ஒத்த *
    மது விரி துழாய் முடி * மாதவன் தமர்க்கே (4)
  • TVM 10.9.5
    3875 மாதவன் தமர் என்று * வாசலில் வானவர் *
    போதுமின் எமது இடம் * புகுதுக என்றலும் **
    கீதங்கள் பாடினர் * கின்னரர் கெருடர்கள் *
    வேத நல் வாயவர் * வேள்வி உள்மடுத்தே (5)
  • TVM 10.9.6
    3876 வேள்வி உள்மடுத்தலும் * விரை கமழ் நறும் புகை *
    காளங்கள் வலம்புரி * கலந்து எங்கும் இசைத்தனர் **
    ஆள்மின்கள் வானகம் * ஆழியான் தமர் என்று *
    வாள் ஒண் கண் மடந்தையர் * வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)
  • TVM 10.9.7
    3877 மடந்தையர் வாழ்த்தலும் * மருதரும் வசுக்களும் *
    தொடர்ந்து எங்கும் * தோத்திரம் சொல்லினர் ** தொடுகடல்
    கிடந்த எம் கேசவன் * கிளர் ஒளி மணிமுடி *
    குடந்தை எம் கோவலன் * குடி அடியார்க்கே (7)
  • TVM 10.9.8
    3878 குடி அடியார் இவர் * கோவிந்தன் தனக்கு என்று *
    முடி உடை வானவர் * முறை முறை எதிர்கொள்ள **
    கொடி அணி நெடு மதிள் * கோபுரம் குறுகினர் *
    வடிவு உடை மாதவன் * வைகுந்தம் புகவே (8)
  • TVM 10.9.9
    3879 வைகுந்தம் புகுதலும் * வாசலில் வானவர் *
    வைகுந்தன் தமர் எமர் * எமது இடம் புகுது என்று **
    வைகுந்தத்து அமரரும் * முனிவரும் வியந்தனர் *
    வைகுந்தம் புகுவது * மண்ணவர் விதியே (9)
  • TVM 10.9.10
    3880 விதிவகை புகுந்தனர் என்று * நல் வேதியர் *
    பதியினில் பாங்கினில் * பாதங்கள் கழுவினர் **
    நிதியும் நல் சுண்ணமும் * நிறை குட விளக்கமும் *
    மதி முக மடந்தையர் * ஏந்தினர் வந்தே (10)
  • TVM 10.9.11
    3881 ## வந்து அவர் எதிர் கொள்ள * மா மணி மண்டபத்து *
    அந்தம் இல் பேரின்பத்து * அடியரோடு இருந்தமை **
    கொந்து அலர் பொழில் * குருகூர்ச் சடகோபன் * சொல்
    சந்தங்கள் ஆயிரத்து * இவை வல்லார் முனிவரே (11)