104

Thiru Dwārakai

துவாரகை

Thiru Dwārakai

Thuvarai, Thuvarāpadhi

ஸ்ரீ கல்யாணநாச்சியார் ஸமேத ஸ்ரீ கல்யாணநாராயணாய நமஹ

In the state of Gujarat, about 150 kilometers from Jamnagar, lies Dwarka. Situated near the port of Okha on the western Saurashtra coast, it is located on the banks of the holy river Gomati. The Gomati river is a small river running approximately five miles. It can be said that there are no northern Puranas that have not sung or spoken about this holy

+ Read more
குஜராத் மாநிலத்தில், ஜாம்நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் துவாரகை உள்ளது. மேற்கு சௌராஷ்டிராக் கடலோரம் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில், கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. கோமதி நதி சுமார் ஐந்து மைல் தூரமே ஓடும் சிறிய நதி. இந்த திருத்தலத்தை பாடாத, + Read more
Thayar: Sri Kalyāna Nāchiyār (Sri Lakshmisri, Rukmani)
Moolavar: Kalyāna Nārāyanan, Dwārakādheesan, Dwārakānāthji
Vimaanam: Hemakooda
Pushkarani: Gomathi Theertham, Samuthira Sangamām
Thirukolam: Nindra (Standing)
Direction: West
Mandalam: Vada Nādu
Area: Gujarat
State: Gujarat
Sampradayam: Thenkalai
Search Keyword: Dwaraka
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 4.1.6

333 பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
வல்லானை * மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் *
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை *
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்.
333 பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் * புணர்முலை வாய்மடுக்க
வல்லானை * மா மணிவண்ணனை * மருவும் இடம் நாடுதிரேல் **
பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு * பௌவம் எறி துவரை *
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே * இருந்தானைக் கண்டார் உளர் (6)
333 pŏllā vaṭivu uṭaip peycci tuñcap * puṇarmulai vāymaṭukka
vallāṉai * mā maṇivaṇṇaṉai * maruvum iṭam nāṭutirel **
pallāyiram pĕrun tevimārŏṭu * pauvam ĕṟi tuvarai *
ĕllārum cūzhac ciṅkācaṉatte * iruntāṉaik kaṇṭār ul̤ar (6)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

333. If you are searching for the place of the handsome sapphire-colored god, the heroic one who drank milk from the breasts of the ugly devil Putanā and killed her, go to the people who saw him seated on a throne surrounded by thousands of queens in famous Dwaraka.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொல்லா கோரமான; வடிவு உடை வடிவத்தையுடைய; பேய்ச்சி பூதனையானவள்; துஞ்ச மாளும்படியாக; புணர்முலை அவள் மார்பகத்தில்; வாய் மடுக்க வாயை வைத்து; வல்லானை உண்ண வல்லவனை; மாமணி நீலமணி போன்ற; வண்ணனை கண்ணன்; மருவும் இடம் இருக்குமிடம்; நாடுதிரேல் தேடுகிறீர்களாகில்; பல்லாயிரம் பதினாறாயிரம்; பெருந் தேவிமாரொடு தேவிமாரோடு; பௌவம் எறி அலைகள்வீசும் கடல் சூழ்ந்த; துவரை துவாரகையிலே; எல்லாரும் எல்லாரும்; சூழ சூழ்ந்து கொண்டிருக்க; சிங்காசனத்தே சிம்மாசனத்தில்; இருந்தானை இருந்த கண்ணனை; கண்டார் உளர் பார்த்தவர்கள் உள்ளனர்

PAT 4.7.8

398 திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து
தன்மைத்துனன்மார்க்காய் *
அரசினையவியஅரசினையருளும்
அரிபுருடோ த்தமனமர்வு *
நிரைநிரையாகநெடியனயூபம்
நிரந்தரம்ஒழுக்குவிட்டு * இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
398 திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை வேந்து * தன் மைத்துனன்மார்க்காய் *
அரசினை அவிய அரசினை அருளும் * அரி புருடோத்தமன் அமர்வு **
நிரை நிரையாக நெடியன யூபம் * நிரந்தரம் ஒழுக்குவிட்டு * இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (8)
398 tirai pŏru kaṭal cūzh tiṇmatiṟ tuvarai ventu * taṉ maittuṉaṉmārkkāy *
araciṉai aviya araciṉai arul̤um * ari puruṭottamaṉ amarvu **
nirai niraiyāka nĕṭiyaṉa yūpam * nirantaram ŏzhukkuviṭṭu * iraṇṭu
karai purai vel̤vip pukai kamazh kaṅkaik * kaṇṭam ĕṉṉum kaṭinakare (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

398. Beautiful Thirukkandam is on the banks of the Ganges where the cowsheds accommodate large number of cows and the fragrance of sacrifices spreads on both banks and their smoke continually rises in long streams. That Thiruppadi is the place of Hari Purushothaman, who took the land of Duryodhanā and gave it to his brothers-in-laws. and He is the king of Dwaraka surrounded by the roaring ocean and strong walls

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிரை நிரையாக திரள் திரளாக; நெடியன உயரமான; யூபம் பசு கட்டும் தொழுவக் கம்பங்கள்; நிரந்தரம் இடை விடாது; ஒழுக்குவிட்டு நெடுக இருக்க; இரண்டு கரை புரை இருபக்கத்துக் கரைகளும்; வேள்விப் புகை யாக தூபமான; கமழ் நறுமணம் சூழ்ந்த; கங்கை கங்கைக் கரைமேல்; கண்டம் என்னும் கடிநகரே கண்டம் என்னும் கடிநகரே!; திரை பொரு அலை வீசும்; கடல் சூழ் கடலாலே சூழப்பட்ட; திண்மதிள் திண்மையான மதிள்களையுடைய; துவரை துவாரகைக்கு; வேந்து தன் அரசனான கண்ணன் தன்னுடைய; மைத்துனன் மைத்துனர்களான; மார்க்காய் பாண்டவர்களுக்காக; அரசினை துரியோதனாதி அரசு; அவிய அழியச் செய்து; அரசினை ராஜ்யத்தை; அருளும் கொடுத்தருளினவனும்; அரி புருடோத்தமன் அரிய எம்பெருமான்; அமர்வு இருக்குமிடம்

PAT 4.7.9

399 வடதிசைமதுரைசாளக்கிராமம்
வைகுந்தம்துவரைஅயோத்தி *
இடமுடைவதரியிடவகையுடைய
எம்புருடோ த்தமனிருக்கை *
தடவரையதிரத்தரணிவிண்டிடியத்
தலைப்பற்றிக்கரைமரஞ்சாடி *
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே. (2)
399 வட திசை மதுரை சாளக்கிராமம் * வைகுந்தம் துவரை அயோத்தி *
இடம் உடை வதரி இடவகை உடைய * எம் புருடோத்தமன் இருக்கை **
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் * தலைப்பற்றிக் கரை மரம் சாடி *
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (9)
399 vaṭa ticai maturai cāl̤akkirāmam * vaikuntam tuvarai ayotti *
iṭam uṭai vatari iṭavakai uṭaiya * ĕm puruṭottamaṉ irukkai **
taṭavarai atirat taraṇi viṇṭu iṭiyat * talaippaṟṟik karai maram cāṭi *
kaṭaliṉaik kalaṅkak kaṭuttu izhi kaṅkaik * kaṇṭam ĕṉṉum kaṭinakare (9)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

399. Purshothaman who resides in SālakkiRāmam, Vaikuntam, Dwaraka, Ayodhya, Thiruvadari (Badrinath) and northern Madhura resides in the divine Thirukkandam where the flooding Ganges flows shaking the mountains with its roar and splitting the earth and making the trees on its banks fall.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடவரை பெரிய மலைகளானவை; அதிர அதிரும்படி; தரணி பூமியானது; விண்டு பிளவுபட்டு; இடிய இடிந்து விழும்படியாகவும்; தலைப்பற்றி மரங்களின் தலையளவு உயர்ந்த; கரை மரம் சாடி மரங்களை மோதி; கடலினைக் கலங்க கடலும் கலங்கும்படி; கடுத்து இழி வேகமாக பாயும்; கங்கை கங்கை மீதுள்ள; கண்டம் என்னும் கண்டம் என்னும்; கடிநகரே கடிநகரே!; வட திசை மதுரை வடக்கிலுள்ள மதுரையும்; சாளக்கிராமம் சாளக்கிராமமும்; வைகுந்தம் துவரை வைகுந்தமும் துவாரகையும்; அயோத்தி அயோத்தியும்; இடம் உடை வதரி விசாலமான பதரியும்; இடவகை உடைய இருப்பிடமாகக் கொண்ட; எம் புருடோத்தமன் எம்பெருமான்; இருக்கை இருக்குமிடம்

PAT 4.9.4

415 பதினாறாமாயிரவர் தேவிமார்
பணிசெய்ய * துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில் *
புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்
பொன்வயிற்றில்பூவேபோல்வான் *
பொதுநாயகம்பாவித்து இருமாந்து
பொன்சாய்க்கும்புனலரங்கமே.
415 பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பணிசெய்ய * துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்றிருந்த * மணவாளர் மன்னு கோயில் **
புது நாள்மலர்க் கமலம் * எம்பெருமான் பொன் வயிற்றிற் பூவே போல்வான் *
பொது-நாயகம் பாவித்து * இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே (4)
415 patiṉāṟām āyiravar * tevimār paṇicĕyya * tuvarai ĕṉṉum
atil nāyakarāki vīṟṟirunta * maṇavāl̤ar maṉṉu koyil **
putu nāl̤malark kamalam * ĕmpĕrumāṉ pŏṉ vayiṟṟiṟ pūve polvāṉ *
pŏtu-nāyakam pāvittu * iṟumāntu pŏṉ cāykkum puṉal araṅkame (4)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

415. Sixteen thousand wives serve Him who stays in Dwaraka like a new bridegroom He resides in lovely Srirangam surrounded by water precious as gold where fresh lotuses bloom and shine like the lotus on the golden navel of our god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துவரை துவாரகை; என்னும் அதில் என்னும் ஊரில்; பதினாறாம் ஆயிரவர் பதினாறாயிரம்; தேவிமார் தேவியர்; பணி செய்ய பணி புரிய; நாயகராகி நாயகனாய்; வீற்றிருந்த வீற்றிருந்த; மணவாளர் அழகிய பிரான்; மன்னு வாசம் செய்யும்; கோயில் கோவிலானது; புது நாள்மலர் அன்றாடம் மலரும்; கமலம் தாமரை; எம் பெருமான் எம்பெருமானின்; பொன் வயிற்றில் பொன் வயிற்றில்; பூவே பூக்கும்; போல்வான் பூவைப் போல் மலர; பொது நாயகம் தன்னைவிட; பாவித்து சிறந்த மலர் இல்லை; இறுமாந்து என்ற கர்வத்துடன்; பொன் மற்ற தாமரைகளின்; சாய்க்கும் அழகை மதியாது; புனல் நீர்வளத்தையுடைய; அரங்கமே அரங்கமே

PAT 5.4.10

472 தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் *
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி! *
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் *
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2)
472 தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் * தவள நெடுங்கொடி போல் *
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே * தோன்றும் என் சோதி நம்பீ ! **
வட தடமும் வைகுந்தமும் * மதிற் துவராபதியும் *
இட வகைகள் இகழ்ந்திட்டு * என்பால் இடவகை கொண்டனையே (10)
472 taṭa varaivāy mil̤irntu miṉṉum * taval̤a nĕṭuṅkŏṭi pol *
cuṭar- ŏl̤iyāy nĕñciṉ ul̤l̤e * toṉṟum ĕṉ coti nampī ! **
vaṭa taṭamum vaikuntamum * matiṟ tuvarāpatiyum *
iṭa vakaikal̤ ikazhntiṭṭu * ĕṉpāl iṭavakai kŏṇṭaṉaiye (10)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

472. O1 dear One! You are the light that glows in my heart, like a shining lamp that looks like the bright coral vine growing on a towering mountain. You left Your heavenly abode( Vaikuntam), northern milky ocean and walled Dwaraka and chose to reside in my heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடவரை வாய் பெரிய பர்வதத்தில்; மிளிர்ந்து மின்னும் ஜொலித்து ஒளிரும்; தவள நெடும் வெளுத்த பெரியதொரு; கொடிபோல் கொடிபோல; சுடர் ஒளியாய் சுடர் ஒளியாக; நெஞ்சின் உள்ளே என் மனதிற்குள்ளே; தோன்றும் என் தோன்றும் என்; சோதி நம்பி! ஜோதியானபிரானே!; வட தடமும் வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்; வைகுந்தமும் வைகுந்தமும்; மதிள் மதில்களையுடைய; துவராபதியும் துவாரகையும்; இட வகைகள் ஆகிய இடங்களை யெல்லாம்; இகழ்ந்திட்டு என்பால் விட்டு என் பக்கலில்; இட வகை கொண்டனையே இடம் கொண்டாயே! என்று ஈடுபடுகிறார்

NAT 1.4

507 சுவரில்புராண! நின்பேரெழுதிச்
சுறவநற்கொடிகளும்துரங்கங்களும் *
கவரிப்பிணாக்களும்கருப்புவில்லும்
காட்டித்தந்தேன் கண்டாய்காமதேவா! *
அவரைப்பிராயந்தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்தவென்தடமுலைகள் *
துவரைப்பிரானுக்கேசங்கற்பித்துத்
தொழுதுவைத்தேனொல்லைவிதிக்கிற்றியே.
507 சுவரில் புராண! நின் பேர் எழுதிச் * சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும் *
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் * காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா **
அவரைப் பிராயம் தொடங்கி * என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் *
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் * தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே (4)
507 சுவரில் புராண! நின் பேர் எழுதிச் * சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும் *
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் * காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா **
அவரைப் பிராயம் தொடங்கி * என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் *
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் * தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே (4)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

507. O Kamadeva, (god of love) I wrote your name on the wall, and I made a fish flag and gave it to you with horses, damsel holding fans and a sugarcane-bow. I worshipped you and sought you to give me your grace From childhood I am determined to offer my bosom and myself at once to the lord of Dwaraka.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புராண! புராண காலத்தவனே!; காமதேவா! காம தேவனே!; சுவரில் சுவர்களில்; நின் பேர் எழுதி உன் பெயர்களை எழுதி; சுறவ நற் கொடிகளும் மீன் கொடிகளையும்; துரங்கங்களும் குதிரைகளையும்; கவரிப் சாமரம் வீசுகின்ற; பிணாக்களும் பெண்களையும்; கருப்பு வில்லும் கரும்பு வில்லையும்; காட்டித் தந்தேன் காணிக்கையாகத் தந்தேன்; கண்டாய் கண்டாய்; அவரைப் பிராயம் இளம்பருவம்; தொடங்கி தொடங்கி; என்றும் ஆதரித்து என்றும் விரும்பி; எழுந்த என் கிளர்ந்த; தட முலைகள் என் மார்பகங்களை; துவரை துவாரகை; பிரானுக்கே பிரானுக்கே கண்ணனுக்கே என்று; சங்கற்பித்து தீர்மானித்து; தொழுது வைத்தேன் முடிவு செய்து வைத்தேன்; ஒல்லை விரைவில் அவனிடம்; விதிக்கிற்றியே சேர்த்திடுவாய்

NAT 4.8

541 ஆவலன்புடையார்தம் மனத்தன்றி
மேவலன் * விரைசூழ் துவராபதிக்
காவலன் * கன்றுமேய்த்து விளையாடும் *
கோவலன்வரில் கூடிடுகூடலே.
541 ஆவல் அன்பு உடையார் தம் * மனத்து அன்றி
மேவலன் * விரை சூழ் * துவராபதிக்
காவலன் ** கன்று மேய்த்து விளையாடும் *
கோவலன் வரில் * கூடிடு கூடலே (8)
541 āval aṉpu uṭaiyār tam * maṉattu aṉṟi
mevalaṉ * virai cūzh * tuvarāpatik
kāvalaṉ ** kaṉṟu meyttu vil̤aiyāṭum *
kovalaṉ varil * kūṭiṭu kūṭale (8)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

541. The protector of flourishing Dwaraka who grazes the cows and plays with the cowherds does not enter the minds of those who do not love Him. O kūdal, if He comes to us, you should come together. Come and join the place where you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆவல் ஆவலையும்; அன்பு அன்பையும்; உடையார் உடையவர்களுடைய; தம் மனத்து நெஞ்சு தவிர; அன்றி வேறு இடத்திலும்; மேவலன் செல்லாதவனும்; விரை சூழ் நன் மணம் சூழ்ந்த; துவராபதி துவாரகாபுரியின்; காவலன் பாதுகாவலனுமான; கன்று மேய்த்து கன்றுகளை மேய்த்து; விளையாடும் விளையாடும்; கோவலன் கோபாலன்; வரில் வரக்கூடுமாகில்; நீ கூடிடு நீ அவனோடு சேர்ந்திருக்க; கூடலே செய்திடு

NAT 9.8

594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள் *
மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ? *
சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான் *
ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே.
594 காலை எழுந்திருந்து * கரிய குருவிக் கணங்கள் *
மாலின் வரவு சொல்லி * மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ? **
சோலைமலைப் பெருமான் * துவாராபதி எம்பெருமான் *
ஆலின் இலைப் பெருமான் * அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)
594 kālai ĕzhuntiruntu * kariya kuruvik kaṇaṅkal̤ *
māliṉ varavu cŏlli * marul̤ pāṭutal mĕymmai kŏlo? **
colaimalaip pĕrumāṉ * tuvārāpati ĕmpĕrumāṉ *
āliṉ ilaip pĕrumāṉ * avaṉ vārttai uraikkiṉṟate (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

594. A flock of black sparrows wakes up in the morning, welcomes Thirumāl and sings the raga marul. Is it true that they sing that raga to wake him up? They sing as if they are repeating the names of Him who stays in Thirumālirunjolai, He who is the lord of Dwaraka, He who sleeps on a banyan leaf, does not come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரிய குருவி கரிய குருவி; கணங்கள் கூட்டங்கள்; காலை விடிகாலையில்; எழுந்திருந்து எழுந்து; சோலை மலை திருமாலிருஞ்சோலை மலை; பெருமான் தலைவனாயும்; துவராபதி துவாரகையின்; எம்பெருமான் பிரானாயும் உள்ள; ஆலின் இலை ஆலிலைமேல் துயின்ற; பெருமான் எம்பெருமான்; அவன் வார்த்தை வார்த்தைகளை; உரைக்கின்றதே சொல்லும்; மாலின் எம்பெருமானின்; வரவு வருகையை; சொல்லி சொல்லிக் கொண்டு; மருள் மருள் என்ற பண்ணைப்; பாடுதல் பாடுவதானது; மெய்ம்மைகொலோ? உண்மைதானோ?

NAT 12.9

625 கூட்டிலிருந்துகிளியெப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும் *
ஊட்டக்கொடாதுசெறுப்பனாகில்
உலகளந்தான்என் றுயரக்கூவும் *
நாட்டில்தலைப்பழியெய்தியுங்கள்
நன்மையிழந்துதலையிடாதே *
சூட்டுயர்மாடங்கள்சூழ்ந்துதோன்றும்
துவராபதிக்கென்னையுய்த்திடுமின்.
625 கூட்டில் இருந்து கிளி எப்போதும் * கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் *
ஊட்டக் கொடாது செறுப்பனாகில் * உலகு அளந்தான் என்று உயரக் கூவும் **
நாட்டில் தலைப்பழி எய்தி * உங்கள் நன்மை இழந்து தலையிடாதே *
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் * துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (9)
625 கூட்டில் இருந்து கிளி எப்போதும் * கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் *
ஊட்டக் கொடாது செறுப்பனாகில் * உலகு அளந்தான் என்று உயரக் கூவும் **
நாட்டில் தலைப்பழி எய்தி * உங்கள் நன்மை இழந்து தலையிடாதே *
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் * துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (9)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

625. “My parrot from its cage, always calls, ‘Govinda, Govinda!’ In anger when I don’t feed it, it calls Him loudly and says, ‘O lord, you have measured the world!’ (ulagalandan) People will blame you and you will all be ashamed, if I leave home and go to His place, Take me to Dwaraka filled with high palaces and leave me there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூட்டிலிருந்து கிளி கூட்டில் இருக்கும் கிளி; எப்போதும் கோவிந்தா! எப்போதும் கோவிந்தா!; கோவிந்தா! கோவிந்தா!; என்று அழைக்கும் என்று கூவுகிறது; ஊட்டக் கொடாது உணவு கொடுக்காமல்; செறுப்பனாகில் துன்பப் படுத்தினேனாகில்; உலகு அளந்தான்! உலகளந்த பெருமானே!; என்று உயரக் கூவும் என்றும் உரக்கக் கூவும்; நாட்டில் உலகில்; தலைப்பழி எய்தி பெருத்த பழியை சம்பாதித்து; உங்கள் நன்மை உங்கள் பெயரையும்; இழந்து கெடுத்துக்கொண்டு; தலையிடாதே தலை கவிழ்ந்து நிற்பதாகிறது; சூட்டு உயர் உயர்ந்த மாடங்களால்; சூழ்ந்து தோன்றும் சூழப்பட்டு விளங்கும்; துவராபதிக்கு துவாரகையிலே; என்னை என்னை; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்

PT 6.6.7

1504 முலைத்தடத்தநஞ்சுண்டுதுஞ்சப்பேய்ச்சி
முதுதுவரைக்குலபதியாக்காலிப்பின்னே *
இலைத்தடத்தகுழலூதி ஆயர்மாதர்
இனவளைகொண்டானடிக்கீழ்எய்தகிற்பீர்! *
மலைத்தடத்தமணிகொணர்ந்துவையம்உய்ய
வளங்கொடுக்கும்வருபுனலம்பொன்னிநாடன் *
சிலைத்தடக்கைக்குலச்சோழன்சேர்ந்தகோயில்
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.
1504 முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி *
முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே *
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் *
இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர் **
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய *
வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன் *
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே-7
1504 mulait taṭatta nañcu uṇṭu tuñcap peycci *
mutu tuvaraik kulapatiyāk kālippiṉṉe *
ilait taṭatta kuzhal ūti āyar mātar *
iṉa val̤ai kŏṇṭāṉ aṭikkīzh ĕytakiṟpīr **
malait taṭatta maṇi kŏṇarntu vaiyam uyya *
val̤am kŏṭukkum varu puṉal am pŏṉṉināṭaṉ *
cilait taṭak kaik kulac cozhaṉ cernta koyil *
tirunaṟaiyūr maṇimāṭam cermiṉkal̤e-7

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1504. O devotees, worship the feet of the lord who drank milk from the breasts of the devil Putanā and killed her, ruled as the king of Dwaraka and played a flute and grazed the cows and made the bangles of the cowherd girls grow loose. He stays in the temple in Thirunaraiyur where the river Ponni brings large jewels from the mountains and nourishes the land with its water. The Chola king with a bow in his strong hands, ruler of the land where the Kaveri flows, went to the Manimādam temple filled with jewel-studded palaces and worshiped the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேய்ச்சி துஞ்ச பூதனை மாளும்படி; முலைத் தடத்த நஞ்சு விஷம் கலந்த பாலை; உண்டு உட்கொண்டவனும்; முது துவரை பழைய கோமதி துவாரகைக்கு; குலபதி ஆய் தலைவனும்; காலிப்பின்னே பசுக்களின் பின்; இலை இலையாலே; தடத்த செய்யப்பட்ட; குழல் புல்லாங்குழலை; ஊதி ஊதி; ஆயர் மாதர் இடைப்பெண்களின்; இன வளை வளையல்களை; கொண்டான் அபகரித்தவனின்; அடிக்கீழ் திருவடிகளை; எய்தகிற்பீர்! பற்ற விரும்புபவர்களே!; மலைத் தடத்த மலைகளிலுள்ள; மணி ரத்தினங்களை; கொணர்ந்து கொண்டு வந்து; வையம் உய்ய வையம் உய்ய; வளம் கொடுக்கும் வளம் கொடுக்கும்; வரு புனல் பெருகிவரும் நீரையுடைய; அம் பொன்னி அழகிய காவேரி; நாடன் நாட்டின் தலைவனும்; சிலைத் தடக்கைக் வில்லைக் கையிலுடைய; குலச் சோழன் க்ஷத்ரிய குலச் சோழன்; சேர்ந்த கோயில் வணங்கிய கோயில்; மணி மணிகளால் இழைக்கப்பட்ட; மாடம் மாடங்களையுடைய; திருநறையூர் திருநறையூர்; சேர்மின்களே சென்று அடையுங்கள்

PT 6.8.7

1524 கட்டேறுநீள்சோலைக் காண்டவத்தைத்தீமூட்டி
விட்டானை * மெய்யம்அமர்ந்த பெருமானை *
மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானைநாடி நறையூரில்கண்டேனே.
1524 கட்டு ஏறு நீள் சோலைக் * காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை **
மட்டு ஏறு கற்பகத்தை * மாதர்க்கு ஆய் * வண் துவரை
நட்டானை நாடி * நறையூரில் கண்டேனே-7
1524 kaṭṭu eṟu nīl̤ colaik * kāṇṭavattait tī mūṭṭi
viṭṭāṉai * mĕyyam amarnta pĕrumāṉai **
maṭṭu eṟu kaṟpakattai * mātarkku āy * vaṇ tuvarai
naṭṭāṉai nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-7

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1524. He is the god of Thirumeyyam who burned the forest Kāndam filled with abundant groves, brought the Karpaga tree dripping with honey from Indra’s world for his wife Satyabama and planted it in Dwarakapuri. I searched for him and saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கட்டு ஏறு காவல் மிகுந்த; நீள் நீண்ட; சோலை சோலைகளால் சூழ்ந்த; காண்டவத்தை காண்டாவனத்தை; தீ மூட்டி தீ மூட்டி; விட்டானை விட்டவனை; மெய்யம் திருமெய்யத்தில்; அமர்ந்த அமர்ந்த; பெருமானை பெருமானை; மட்டு ஏறு தேன் மிகுந்த; கற்பகத்தை கல்பக விருக்ஷத்தை; மாதர்க்கு ஆய் ஸத்யபாமைக்காக; வண் துவரை துவாரகாபுரியில்; நட்டானை நட்டவனை; நாடி தேடிச் சென்று; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

NMT 71

2452 சேயனணியன் சிறியன்மிகப்பெரியன் *
ஆயன் துவரைக்கோனாய்நின்ற - மாயன் * அன்று
ஓதிய வாக்கதனைக்கல்லார் * உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ்ஞானமில்.
2452 சேயன் அணியன் * சிறியன் மிகப் பெரியன் *
ஆயன் துவரைக் கோனாய் நின்ற - மாயன் ** அன்று
ஓதிய * வாக்கு அதனைக் கல்லார் * உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71)
2452 ceyaṉ aṇiyaṉ * ciṟiyaṉ mikap pĕriyaṉ *
āyaṉ tuvaraik koṉāy niṉṟa - māyaṉ ** aṉṟu
otiya * vākku ataṉaik kallār * ulakattil
etilar ām mĕyñ ñāṉam il (71)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2452. The Māyan, the king of Dwaraka who was born as a cowherd is far away and is near, small and large. Those who do not know the words that the god said to Arjunā will live in the world without any true knowledge and will not be loved by others.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறியன் கண்ணன் சிறுபிள்ளையாய்; அணியன் சுலபனாய்; மிகப் பெரியன் மிகப் பெரியவனாய்; சேயன் எட்டாதவனாயும்; ஆயனாய் ஆயர் குலத்தில்; நின்ற பிறந்தவனாயும்; துவரை துவாரகைக்கு; கோனாய் அரசனுமான; மாயன் அன்று மாயன் அன்று; ஓதிய பாரதயுத்தத்தில் அருளிச்செய்த; வாக்கு சரம ஸ்லோகமாகிய; அதனை அந்த வாக்கை; கல்லார் கற்காதவர்கள்; உலகத்தில் உலகத்தில்; மெய் உண்மைப் பொருளை; ஞானம் இல் அறியாத அஞ்ஞானிகளாக; ஏதிலர் ஆம் இறைவனின் பகைவர்களாவர்
sĕyan being at a far away distance; migap periyan being huge; siṛiyan incarnating in lowly forms (lower than samsāris); aṇiyan being very easy to approach; āyan being born in the clan of herdsmen; thuvarai kŏnāy ninṛa having the greatness of being the head of dhwārakāpuri (dhwārka, in present day ṅujarat ṣtate); māyan emperumān; anṛu during that time (when mahābhāratha war was fought); ŏdhiya mercifully said (on the seat of his chariot, to arjuna); vākku adhanai that divine word (of charama ṣlŏkam); ulagaththil in this world; kallār not having learnt; mey gyānam il without having the inclination for true knowledge; ĕdhilar ām are inimical towards emperumān

TVM 5.3.6

3260 அன்னையென்செய்யிலென்? ஊரென்சொல்லிலென்? தோழிமீர்! *
என்னையினியுமக்காசையில்லை அகப்பட்டேன் *
முன்னையமரர்முதல்வன் வண்துவராபதி
மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன்வலையுளே.
3260 அன்னை என் செய்யில் என்? * ஊர் என் சொல்லில் என்? தோழிமீர் *
என்னை இனி உமக்கு * ஆசை இல்லை அகப்பட்டேன் **
முன்னை அமரர் முதல்வன் * வண் துவராபதி
மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)
3260 aṉṉai ĕṉ cĕyyil ĕṉ? * ūr ĕṉ cŏllil ĕṉ? tozhimīr *
ĕṉṉai iṉi umakku * ācai illai akappaṭṭeṉ **
muṉṉai amarar mutalvaṉ * vaṇ tuvarāpati
maṉṉaṉ * maṇivaṇṇaṉ vācutevaṉ valaiyul̤e (6)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

It doesn't matter what my mother says or what the people around us think. Leave me be. I am captivated by Vāsudevan, with his sapphire hue, the prince of Tuvārakai, the beautiful city, and the chief of Nithyasuris.

Explanatory Notes

(i) Nityas—the ‘Nitya Sūrīs’ or the Eternal Heroes, the ever-free angels in spiritual world.

(ii) Finding the Nāyakī implacable, her mates tried to impress upon her that, by her conduct, she would only imperil the life of her mother and it would be a terrible loss, all round—the Lord hasn’t come to her, her mother would die and the folks around would heap abuses on + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழிமீர் தோழிமார்களே!; முன்னை முழு முதல் கடவுளான அவன்; அமரர் முதல்வன் நித்யஸூரிகளின் தலைவன்; வண் துவராபதி அழகிய துவாரகைக்கு; மன்னன் அரசன்; மணிவண்ணன் நீலமணி போன்ற வடிவுடையவன்; வாசுதேவன் வசுதேவரின் புத்ரனான கண்ணனின்; வலையுளே வலையினுள்ளே; அகப்பட்டேன் சிக்கிக் கொண்டேன்; இனி என்னை இனி என்னை மீட்க நினைக்கும்; உமக்கு நீங்கள்; ஆசை இல்லை அந்த ஆசையை விட்டுவிடுங்கள்; அன்னை என் என் தாயார்; செய்யில் என்? என்ன செய்தால் என்ன?; ஊர் என் ஊரார்; சொல்லில் என்? பழி சொல் தான் என்னை என்ன செய்யும்?
amarar to nithyasūris (eternal servitors of emperumān in paramapadham); mudhalvan having the greatness of being their leader; vaṇ having unlimited wealth; thuvarāpathi for ṣrīmath dhvārakā; mannan having the quality of being the king; maṇi attractive like blue gem; vaṇṇan having beautiful form; vāsudhĕvan (even if has no beauty, he cannot be given up for having high family heritage) one who is the son of vasudhĕva, his; valaiyul̤ĕ in to this (deeply strung with four strings) web (of attractive activities), in an inescapable manner; agappattĕn got caught;; ini now; ennai in my case; umakku for you all (who are trying to withdraw me from him); āsai to be obeying you; illai not required;; annai mother; en whatever; seyyil she does; en what does it matter?; ūr people of the town; en whatever; sollil they say; en what does it matter?; ennai me; valaiyul̤ by his attractive qualities and activities