99

Thiru KanDamennum KaDinagar

கண்டமென்னும் கடிநகர்

Thiru KanDamennum KaDinagar

Devaprayāgai

ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேகாய நமஹ

Thayar: Sri PunDarIka Valli
Moolavar: Sri Neelamega Perumāl, Sri PurushOttaman
Vimaanam: MangaLa
Pushkarani: MangaLa Theertham, Gangai Nadhi
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Vada Nādu
Area: Uttraanchal
State: Uttarakand
Sampradayam: Thenkalai
Search Keyword: Thirukkandam
Mangalāsāsanam: Periya Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 4.7.1

391 தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்
தடிந்த எம்தாசரதிபோய் *
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட
எம்புருடோ த்தமனிருக்கை *
கங்கைகங்கையென்றவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும் *
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற
கண்டமென்னும்கடிநகரே. (2)
391 ## தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த * எம் தாசரதி போய் *
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட * எம் புருடோத்தமன் இருக்கை **
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே * கடு வினை களைந்திடுகிற்கும் *
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற * கண்டம் என்னும் கடிநகரே (1)
391. ##
thaNGgaiyai mookkum thamaiyanai thalaiyum thadindha * em dhāsaradhi pOy *
eNGgum thanpuhazhāvirundhu arasāNda * em purushOththaman irukkai *
gaNGgai gaNGgai enRa vāsahaththālE * kadu vinai kaLaindhidukiRkum *
gaNGgaiyin karaimEl kaithozha n^inRa * kaNdam ennum kadin^aharE. (2) 1.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

391. Dasharatha’s son, Rāma who cut off the heads of Rāvanan and the nose of his sister Surpanakha stayed in Thirukkandam and rules as his fame spreads everywhere. If a devotee goes there where our lord Purushothaman stays and merely says, “Ganges, Ganges!” his bad karmā will disappear and he will receive the virtue of joining his hands to worship the god on the banks of the Ganges.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கங்கை கங்கை கங்கை கங்கை; என்ற வாசகத்தாலே என்று சொல்லுவதாலேயே; கடு வினை கடுமையான பாவங்களை; களைந்திடுகிற்கும் கழிக்கவல்ல; கங்கையின் கரை மேல் கங்கை நதியின் கரை மேல்; கை தொழ நின்ற கைகூப்பி தொழும்படியாக நின்ற; கண்டம் என்னும் கண்டம் என்னும் பெயரையுடைய; கடிநகரே சிறந்த நகரம்தான்; தங்கையை தங்கை சூர்ப்பணகையின்; மூக்கும் மூக்கையும்; தமையனை அண்ணன் ராவணனின்; தலையும் தலையையும்; தடிந்த எம் அறுத்த நம்; தாசரதி சக்ரவர்த்தித் திருமகன் தசரத குமாரன்; போய் அயோத்தியில் எழுந்தருளி; எங்கும் எல்லாயிடத்திலும்; தன் புகழா இருந்து தன் புகழ் பரவும்படி இருந்து; அரசு ஆண்ட ஆட்சி செய்தருளினவனும; எம் புருடோத்தமன் புருஷோத்தமப் பெருமாளுடைய; இருக்கை வாஸஸ்தலமாம்

PAT 4.7.2

392 சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச்
சந்திரன்வெங்கதிரஞ்ச *
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின்
மால்புருடோ த்தமன்வாழ்வு *
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும்
நாரணன்பாதத்துழாயும் *
கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
392 சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச் * சந்திரன் வெங்கதிர் அஞ்ச *
மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின் * மால் புருடோத்தமன் வாழ்வு **
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் * நாரணன் பாதத் துழாயும் *
கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (2)
392
salam podhi udambin thazhalumizh pEzhvāy * chandhiran veNGgadhir aNYcha *
malarndhu ezhundhaNavu maNivaNNa uruvin * māl purushOththaman vāzhvu *
nalamthihazh sadaiyān mudikkonRai malarum * nāraNan pādhath thuzhāyum *
kalandhizhi punalāl puhar padugaNGgai * kaNdam ennum kadi n^aharE. 2.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

392. Divine Thirukkandam, the Thiruppadi where the water of the southern Ganges flows mixed with kondrai blossoms that decorate the matted hair of Shivā shining with goodness and with thulasi that adorns the feet of Nāranan is where Thirumāl Purushothaman stays. That dark sapphire-colored one grew to the sky and measured it for Mahābali, frightening the cool moon and the hot sun.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நலம் திகழ் கங்கையை முடியில் தரிக்கும் நன்மை திகழும்; சடையான் முடி ருத்ரன் தலையில்; கொன்றை மலரும் கொன்றை மலரும்; நாரணன் நாரணனின்; பாதத் துழாயும் பாதத் திருத்துழாயும்; கலந்து இழி கலந்து வானிலிருந்து; புனலால் பொழிந்த நீராலே; புகர் படு கங்கை ஒளிவிடும் கங்கை பாயும்; கண்டம் என்னும் கண்டம் என்னும் பெயரையுடைய; கடிநகரே சிறந்த நகரம்; சலம் பொதி ஜலத்தைப் பொதிந்து கொண்டிருக்கிற; உடம்பின் சந்திரன் உடம்பையுடைய சந்திரனும்; தழல் உமிழ் நெருப்பை உமிழ்கின்ற; பேழ்வாய் கிரணங்களையுடைய; வெங்கதிர் வெம்மையான சூரியனும்; அஞ்ச அஞ்சும்படியாக; மலர்ந்து பரந்த உருவத்தையெடுத்துக் கொண்டு; எழுந்த கிளர்ந்து அளந்த போது; அணவும் அவர்கள் இருப்பிடத்தைச் சென்று கிட்டின; மணிவண்ண உருவின் நீலமணி நிற வடிவுடைய; மால் புருடோத்தமன் வாழ்வு எம்பெருமானின் வாழுமிடம்

PAT 4.7.3

393 அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி
அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து * அங்
கெதிர்முகவசுரர்தலைகளையிடறும்
எம்புருடோ த்தமனிருக்கை *
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில்
சங்கரன்சடையினில்தங்கி *
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
393 அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி * அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து * அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் * எம் புருடோத்தமன் இருக்கை **
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில் * சங்கரன் சடையினிற் தங்கி *
கதிர் முகம் மணிகொண்டு இழி புனற் கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (3)
393
adhirmuham udaiya valamburi kumizhththi * azhalumizh āzhi koNdeRindhu * aNGgu-
edhir muhavasurar thalaihaLai idaRum * em purushOththaman irukkai *
sadhumuhan kaiyil sadhuppuyan thāLil * shankaran sadaiyinil thaNGgi *
kadhir muha maNi koNdizhipunal gaNGgai * kaNdam ennum kadi n^aharE. 3.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

393. Divine Thirukkandam is where the Ganges flows carrying shining diamonds from the hand of the four-headed Nānmuhan onto the feet of the four-armed god to stay in the matted hair of Sankaran who bows to the lord's feet. It is the Thiruppadi where Purushothaman stays who blows the roaring valampuri conch and cuts off the heads of his enemies with his fiery discus.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சதுமுகன் கையில் நான்முகன் கையிலும்; சதுப்புயன் நான்கு தோள்களையுடைய திருவிக்கிரமனின்; தாளில் தாளிலும்; சங்கரன் சடையினில் ருத்திரனுடைய தலையிலும்; தங்கி கதிர் முகம் தங்கி ஒளியுடைய; மணி கொண்டு ரத்தினங்களை கொண்டு; இழிபுனல் ஜலம் கொழித்தோடும்; கங்கை கங்கை கரையிலிருக்கும்; கண்டம் என்னும் கண்டம் என்னும் பெயரையுடைய; கடிநகரே சிறந்த நகரமே!; அதிர் முகம் உடைய ஒலி எழுப்பும்; வலம்புரி குமிழ்த்தி பாஞ்சசன்னியத்தை ஊதி; அழல் உமிழ் நெருப்பைக் கக்கும்; ஆழி சக்கராயுதத்தை; கொண்டு எறிந்து கொண்டு எறிந்து; அங்கு எதிர் முக போரிட எதிர்த்து வந்த; அசுரர் தலைகளை அசுரர்களுடைய தலைகளை; இடறும் உருட்டிய; எம் புருடோத்தமனின் எம் புருடோத்தமனின்; இருக்கை இருப்பிடம்

PAT 4.7.4

394 இமையவர்இறுமாந்திருந்தரசாள
ஏற்றுவந்தெதிர்பொருசேனை *
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும்
நம்புருடோ த்தமன்நகர்தான் *
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும்
இருகரைஉலகிரைத்தாட *
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
394 இமையவர் இறுமாந்து இருந்து அரசாள * ஏற்று வந்து எதிர் பொரு சேனை *
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் * நம் புருடோத்தமன் நகர்தான் **
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும் * இரு கரை உலகு இரைத்து ஆட *
கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (4)
394
imaiyavar iRumāndhirundhu arasāLa * ERRuvandhedhir poru sEnai *
namapuram n^aNuha n^āndhaham visiRum * nam purushOththaman n^ahar thān *
imavandham thodaNGgi_ iruNGgadalaLavum * irukarai ulahiraiththāda *
kamaiyudai perumai gaNGgaiyin karaimEl * kaNdam ennum kadi n^aharE. 4.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

394. Divine Thirukkandam is on the banks of the famous Ganges that descends from the Himalaya mountains and flows to the shore of the large sea, shaking the mountains with its roaring that spreads all over the earth. It is the Thiruppathi where our lord Purushothaman stays carrying his Nāndagam sword that sent his enemies’ armies to the land of Yama and helped the gods in the sky rule their lands.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமவந்தம் இமயமலையில்; தொடங்கி உச்சிமுதற்கொண்டு; இருங்கடல் அளவும் பெரிய கடல் வரைக்கும்; இரு கரை இரண்டு கரைகளிலுமுள்ள; உலகு உலகிலுள்ளோர்; இரைத்து ஆட ஆரவாரித்துக்கொண்டு நீராட; கமை உடை அவர்களின் பாபத்தை பொறுக்கும்; பெருமை பெருமையுடைய; கங்கையின் கரைமேல் கங்கையின் கரைமேல்; கண்டம் என்னும் கண்டம் என்னும் பெயரையுடைய; கடிநகரே சிறந்த நகரமே; இமையவர் இந்திரன் முதலிய தேவர்கள்; இறுமாந்து இருந்து செருக்குடன் இருந்து; அரசாள ராஜ்யம் நிர்வகிப்பதற்காக; ஏற்றுவந்து எதிர் துணிந்து எதிரே வந்த; பொரு சேனை போர்ப்படை; நமபுரம் நணுக யமலோகம் செல்ல; நாந்தகம் விசிறும் நாந்தகம் என்னும் வாளை வீசும்; நம் புருடோத்தமன் நம் எம்பிரான்; நகர்தான் நகரம்தான்

PAT 4.7.5

395 உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும்
ஒண்சுடராழியும்சங்கும் *
மழுவொடுவாளும்படைக்கலமுடைய
மால்புருடோ த்தமன்வாழ்வு *
எழுமையும்கூடிஈண்டியபாவம்
இறைப்பொழுதளவினில்எல்லாம் *
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
395 உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் * ஒண் சுடர் ஆழியும் சங்கும் *
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய * மால் புருடோத்தமன் வாழ்வு **
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் * இறைப் பொழுது அளவினில் எல்லாம் *
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (5)
395
uzhuvadhOr padaiyum ulakkaiyum villum * oN sudar āzhiyum shaNGkum *
mazhuvodu vāLum padaikkalam udaiya * māl purushOththaman vāzhvu *
ezhumaiyum koodi_ eeNdiyapāvam * iRaip pozhudhaLavinil ellām *
kazhuvidum perumai gaNGgaiyin karaimEl * kaNdam ennum kadi n^aharE. 5.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

395. Divine Thirukkandam is on the banks of the Ganges and has the power to take away the sins of seven births in one moment. It is in that Thiruppadi that our Thirumāl Purushothaman stays who carries a plough, pestle, bow, shining discus, conch, axe and sword.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எழுமையும் கூடி ஏழு ஜன்மங்களிலும்; ஈண்டிய திரண்டிட்ட; பாவம் பாவங்களை யெல்லாம்; இறைப் பொழுது கண நேர; அளவினில் அளவினில்; எல்லாம் எல்லாவற்றையும்; கழுவிடும் அகற்றிவிடும்படியான; பெருமைக் கழுவிடும் பெருமையையுடைய; கங்கையின் கங்கையின்; கரைமேல் கரைமேலுள்ள; கண்டம் என்னும் கண்டம் என்னும்; கடிநகரே கடிநகரே; உழுவது உழுவதற்கு உதவும்; ஓர் படையும் ஓர் கலப்பையையும்; உலக்கையும் உலக்கையையும்; வில்லும் சார்ங்கத்தையும்; ஒண் சுடர் அழகிய ஒளிமிக்க; ஆழியும் சக்ராயுதத்தையும்; சங்கும் பாஞ்ச சன்னியத்தையும்; மழுவொடு கோடாலியோடு; வாளும் நாந்தக வாளையும்; படைக்கலம் உடைய ஆயுதமாகவுடைய; மால் புருடோத்தமன் வாழ்வு எம்பெருமான் வாழுமிடம்

PAT 4.7.6

396 தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம்
சலசலபொழிந்திடக்கண்டு *
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை
மால்புருடோ த்தமன்வாழ்வு *
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர்
அவபிரதம்குடைந்தாட *
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
396 தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம் * சலசல பொழிந்திடக் கண்டு *
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை * மால் புருடோத்தமன் வாழ்வு **
அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர் * அவபிரதம் குடைந்து ஆட *
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (6)
396
thalaip peydhu kumuRichchalam podhimEham * salasala pozhindhidak kaNdu *
malaip perum kudaiyāl maRaiththavan madhurai * māl purushOththaman vāzhvu *
alaippudaith thiraivāy arundhava munivar * avapiradham kudaindhāda *
kalappaihaL kozhikkum gaNGgaiyin karaimEl * kaNdam ennum kadi n^aharE. 6.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

396. Divine Thirukkandam is on the banks of the Ganges with rolling waves where paddy fields flourish and rishis bathe and do powerful tapas. It is in that Thiruppadi that Purushothaman, the king of Mathura, stays who stopped the rain with Govardhanā mountain using it as an umbrella when the thick clouds poured rain with the sound “chala, chala” and thundered.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அலைப்பு உடை அலைகளை உடைய; திரைவாய் கடலிலே; அருந்தவ முனிவர் அரிய தவமுடைய முனிவர்கள்; அவபிரதம் யாகத்திற்குப் பின்பு; குடைந்து ஆட ஸ்நானம் செய்ய அதனால் யாகபூமியிலுள்ள; கலப்பைகள் கலப்பை போன்றவற்றையெல்லாம்; கொழிக்கும் தள்ளிக்கொண்டு போகும்; கங்கையின் கரைமேல் கங்கையின் கரைமேலுள்ள; கண்டம் என்னும் கடிநகரே கண்டம் என்னும் கடிநகரே; சலம் பொதி மேகம் கடல் நீரைப் பொழியும் மேகம்; தலைப்பெய்து திருவாய்ப்பாடியில் வந்து கூடி; குமுறிச் இடித்து முழங்கும்; சலசல பொழிந்திட சலசலவெனப் பொழிவதை; கண்டு பார்த்து; மலைப் பெரும் கோவர்த்தன மலையாகிற பெரிய; குடையால் குடையாலே; மறைத்தவன் தடுத்தருளினவனும்; மதுரை மால் மதுரைப் பிரான்; புருடோத்தமன் வாழ்வு எம்பெருமான் உறையும் இடமானது

PAT 4.7.7

397 விற்பிடித்திறுத்துவேழத்தைமுறுக்கி
மேலிருந்தவன்தலைசாடி *
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனையுதைத்த
மால்புருடோ த்தமன்வாழ்வு *
அற்புதமுடையஅயிராவதமதமும்
அவரிளம்படியரொண்சாந்தும் *
கற்பகமலரும்கலந்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
397 விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி * மேல் இருந்தவன் தலை சாடி *
மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த * மால் புருடோத்தமன் வாழ்வு **
அற்புதம் உடைய ஐராவத மதமும் * அவர் இளம்படியர் ஒண் சாந்தும் *
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (7)
397
viRpidiththiRuththu vEzhaththai murukki * mElirundhu avan_thalai sādi *
maRporuthezhap pāyndhu_ araiyanayudhaiththa * māl purushOththaman vāzhvu *
aRpudham udaiya_aiyirāvadhamadhamum * avar iLampadiyar oNsāndhum *
kaRpa kamalarum kalandhizhi gangai * kaNdam ennum kadi n^aharE. 7.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

397. Beautiful Thirukkandam is on the bank of the Ganges whose fragrant water flows mixed with Karpaga flowers, with the sweet-smelling sandal paste of young girls bathing in it and with the fragrant musth of the Indra’s wonderful elephant Airavadam. It is in that Thiruppadi that lord Purushothaman who controlled the elephant Kuvalayāpeedam and, fighting with the king Kamsan, kicked and killed him stays holding a bow.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அற்புதம் உடைய ஆச்சரியமான; ஐராவத ஐராவதம் எனும் யானையின்; மதமும் மதநீரும்; அவர் தேவர்களின்; இளம்படியர் தேவிமார்கள் அணிந்த; ஒண் சாந்தும் சிறந்த சந்தனமும்; கற்பக மலரும் கற்பகப் பூக்களும்; கலந்து இழி கலந்து ஓடும்; கங்கை கங்கைக்கரையில் உள்ள; கண்டம் என்னும் கடிநகரே கண்டம் என்னும் கடிநகரே!; விற் பிடித்து கம்சனின் வில்லைப்; இறுத்து பிடித்து முறித்து; வேழத்தை குவலயாபீடம் என்ற யானையை; முறுக்கி அழித்து; மேல் இருந்தவன் யானையின் மேலிருந்த பாகனுடைய; தலை சாடி தலையை சிதறடித்து; மற் பொருது சாணூர முஷ்டிகாதி மல்லர்களோடு; எழப் பாய்ந்து எழுச்சியுடன் பாய்ந்து; அரையனை கட்டிலின் மீதிருந்த கம்சனை; உதைத்த பாய்ந்து உதைத்த; மால் புருடோத்தமன் வாழ்வு எம்பெருமான் இருக்குமிடம்

PAT 4.7.8

398 திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து
தன்மைத்துனன்மார்க்காய் *
அரசினையவியஅரசினையருளும்
அரிபுருடோ த்தமனமர்வு *
நிரைநிரையாகநெடியனயூபம்
நிரந்தரம்ஒழுக்குவிட்டு * இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
398 திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை வேந்து * தன் மைத்துனன்மார்க்காய் *
அரசினை அவிய அரசினை அருளும் * அரி புருடோத்தமன் அமர்வு **
நிரை நிரையாக நெடியன யூபம் * நிரந்தரம் ஒழுக்குவிட்டு * இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (8)
398
thirai porukadal soozh thiN madhiL thuvarai vEndhu * than maiththunanmārkkāy *
arasinai aviya_arasinai aruLum * ari purushOththamanam arvu *
nirai n^irai āha n^ediyanayoobam * nirandharam ozhukku vittu * iraNdu-
karai purai vELvip puhai kamazh gangai * kaNdam ennum kadi n^aharE. 8.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

398. Beautiful Thirukkandam is on the banks of the Ganges where the cowsheds accommodate large number of cows and the fragrance of sacrifices spreads on both banks and their smoke continually rises in long streams. That Thiruppadi is the place of Hari Purushothaman, who took the land of Duryodhanā and gave it to his brothers-in-laws. and He is the king of Dwaraka surrounded by the roaring ocean and strong walls

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிரை நிரையாக திரள் திரளாக; நெடியன உயரமான; யூபம் பசு கட்டும் தொழுவக் கம்பங்கள்; நிரந்தரம் இடை விடாது; ஒழுக்குவிட்டு நெடுக இருக்க; இரண்டு கரை புரை இருபக்கத்துக் கரைகளும்; வேள்விப் புகை யாக தூபமான; கமழ் நறுமணம் சூழ்ந்த; கங்கை கங்கைக் கரைமேல்; கண்டம் என்னும் கடிநகரே கண்டம் என்னும் கடிநகரே!; திரை பொரு அலை வீசும்; கடல் சூழ் கடலாலே சூழப்பட்ட; திண்மதிள் திண்மையான மதிள்களையுடைய; துவரை துவாரகைக்கு; வேந்து தன் அரசனான கண்ணன் தன்னுடைய; மைத்துனன் மைத்துனர்களான; மார்க்காய் பாண்டவர்களுக்காக; அரசினை துரியோதனாதி அரசு; அவிய அழியச் செய்து; அரசினை ராஜ்யத்தை; அருளும் கொடுத்தருளினவனும்; அரி புருடோத்தமன் அரிய எம்பெருமான்; அமர்வு இருக்குமிடம்

PAT 4.7.9

399 வடதிசைமதுரைசாளக்கிராமம்
வைகுந்தம்துவரைஅயோத்தி *
இடமுடைவதரியிடவகையுடைய
எம்புருடோ த்தமனிருக்கை *
தடவரையதிரத்தரணிவிண்டிடியத்
தலைப்பற்றிக்கரைமரஞ்சாடி *
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே. (2)
399 வட திசை மதுரை சாளக்கிராமம் * வைகுந்தம் துவரை அயோத்தி *
இடம் உடை வதரி இடவகை உடைய * எம் புருடோத்தமன் இருக்கை **
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் * தலைப்பற்றிக் கரை மரம் சாடி *
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (9)
399
vadathisai madhurai sāLakkirāmam * vaikuntam thuvarai ayOdhdhi *
idam udai vadhari idavahai udaiya * em purushOththaman irukkai *
thadavarai athirath tharaNi viNdidiya * thalaip paRRik karaimaram sādi *
kadalinai kalanga kaduththizhi gangai * kaNdam ennum kadi n^aharE. (2) 9.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

399. Purshothaman who resides in SālakkiRāmam, Vaikuntam, Dwaraka, Ayodhya, Thiruvadari (Badrinath) and northern Madhura resides in the divine Thirukkandam where the flooding Ganges flows shaking the mountains with its roar and splitting the earth and making the trees on its banks fall.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடவரை பெரிய மலைகளானவை; அதிர அதிரும்படி; தரணி பூமியானது; விண்டு பிளவுபட்டு; இடிய இடிந்து விழும்படியாகவும்; தலைப்பற்றி மரங்களின் தலையளவு உயர்ந்த; கரை மரம் சாடி மரங்களை மோதி; கடலினைக் கலங்க கடலும் கலங்கும்படி; கடுத்து இழி வேகமாக பாயும்; கங்கை கங்கை மீதுள்ள; கண்டம் என்னும் கண்டம் என்னும்; கடிநகரே கடிநகரே!; வட திசை மதுரை வடக்கிலுள்ள மதுரையும்; சாளக்கிராமம் சாளக்கிராமமும்; வைகுந்தம் துவரை வைகுந்தமும் துவாரகையும்; அயோத்தி அயோத்தியும்; இடம் உடை வதரி விசாலமான பதரியும்; இடவகை உடைய இருப்பிடமாகக் கொண்ட; எம் புருடோத்தமன் எம்பெருமான்; இருக்கை இருக்குமிடம்

PAT 4.7.10

400 மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி * மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய
எம்புருடோ த்தமனிருக்கை *
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான் *
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே. (2)
400 மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் * மூன்று எழுத்து ஆக்கி * மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய * எம் புருடோத்தமன் இருக்கை **
மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி * மூன்றினில் மூன்று உரு ஆனான் *
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (10)
400
moonRezhuththadhanai moonRezhuththadhanāl * moonRezhuththākki * moonRezhuththai-
EnRu koNdiruppārkku_irakkam n^an_kudaiya * em purushOththaman irukkai *
moonRadi n^imirththu moonRinil thOnRi * moonRinil moonRuruvānān *
kān_thadam pozhilsoozh gangaiyin karaimEl * kaNdam ennum kadi n^aharE. (2) 10.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

400. The lord who is all three gods, who measured the world with three footsteps, the One who has three attributes the Purushothaman who gives his grace to his devotees stays in Divine Thirukkandam on the bank of the Ganges surrounded by flourishing groves

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கான் தடம் நறுமணம் வீசும் பெரிய; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்துள்ள; கங்கையின் கரைமேல் கங்கையின் கரை மீதுள்ள; கண்டம் என்னும் கடிநகரே கண்டம் என்னும் கடிநகர்; மூன்று அடி திருமந்திரத்தை மூன்று பதமாக; நிமிர்த்து வளர்த்து; மூன்றினில் அம் மூன்று பதத்திலும் ஆகார த்ரயத்தை; மூன்றினில் தோற்றுவித்து மூன்றினில்; மூன்று உரு ஆனான் மூன்று உரு ஆனான் சேஷத்வம்; சரண்யத்வம் ப்ராப்யத்வம் என்கிற மூன்று உருவானான்; மூன்று எழுத்து அதனை அ உ ம ‘ஓம்’ எனும் பிரணவத்தை; மூன்று எழுத்து அதனால் நிருக்தம்’ என்று மூன்ற அட்சரமான; மூன்று மூன்றெழுத்துக்கு வாசகமான; எழுத்தாக்கி மூன்று பதமாய் பிரித்து; மூன்று எழுத்தை அந்த மூன்றெழுத்தை; ஏன்று கொண்டு நமக்குத் தஞ்சம் என்று; இருப்பார்க்கு உணர்பவர்களுக்கு; இரக்கம் நன்கு உடைய சிறந்த கருணையையுடையவனும்; எம் புருடோத்தமன் இருக்கை எம்பெருமான் இருக்குமிடம்

PAT 4.7.11

401 பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து
உறைபுருடோ த்தமனடிமேல் *
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன்
விட்டுசித்தன்விருப்புற்று *
தங்கியஅன்பால்செய்தமிழ்மாலை
தங்கியநாவுடையார்க்கு *
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே
குளித்திருந்தகணக்காமே. (2)
401 ## பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து * உறை புருடோத்தமன் அடிமேல் *
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன் * விட்டுசித்தன் விருப்பு உற்றுத் **
தங்கிய அன்பால் செய் தமிழ்- மாலை * தங்கிய நா உடையார்க்குக் *
கங்கையிற் திருமால் கழலிணைக் கீழே * குளித்திருந்த கணக்கு ஆமே (11)
401. ##
pongoli gangai karaimali kaNdaththu * uRai purushOththaman adimEl *
vengali n^aliyā villi puththoor kOn * vishNu chiththan viruppuRRu *
thangiya anbāl seydha thamizh mālai * thangiya n^āvudaiyārkku *
gangaiyil thirumāl kazhaliNaik keezhE * kuLiththirundha kaNakkāmE. (2) 11.

Ragam

அடாணா

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

401. Vishnuchithan, the chief of Villiputhur who has no troubles in his life, composed with devotion ten Tamil pāsurams on Purushothaman, the god of Thirukkandam where the Ganges flows with abundant, gurgling water. Those who recite these pāsurams, will go to Vaikuntam and stay beneath Thirumāl’s ankleted feet.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு ஒலி ஒலி பொங்கும்; கங்கைக் கரை கங்கைக் கரையிலுள்ள; மலி எல்லா வகையிலும் ஏற்ற மிக்க; கண்டத்து திருக்கண்டங்குடி நகரில்; உறை புருடோத்தமன் பொருந்தி இருக்கும் எம்பெருமான்; அடிமேல் திருவடிகளில்; வெங்கலி கொடிய கலியாலும்; நலியா நலிவு செய்யமுடியாத; வில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு; கோன் தலைவரான; விட்டு சித்தன் பெரியாழ்வார்; விருப்பு உற்று ஆசைப்பட்டு; தங்கிய அன்பால் நிலை நின்ற பக்தியினால்; செய் தமிழ் மாலை அருளிச்செய்த பாசுரங்களை; தங்கிய பக்தியுடன்; நா உடையார்க்கு நாவினில் அனுசந்திப்பவர்கட்கு; கங்கையில் திருமால் கங்கையில் எம்பெருமான்; கழலிணைக் கீழே திருவடியின் கீழே; குளித்திருந்த கணக்காமே நீராடி சேவை செய்வதற்கு ஈடாகும்!