PAT 4.1.6

துவாரகையிலே அரியணையில் கண்ணன்

333 பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
வல்லானை * மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் *
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை *
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்.
333 pŏllā vaṭivu uṭaip peycci tuñcap * puṇarmulai vāymaṭukka
vallāṉai * mā maṇivaṇṇaṉai * maruvum iṭam nāṭutirel **
pallāyiram pĕrun tevimārŏṭu * pauvam ĕṟi tuvarai *
ĕllārum cūzhac ciṅkācaṉatte * iruntāṉaik kaṇṭār ul̤ar (6)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

333. If you are searching for the place of the handsome sapphire-colored god, the heroic one who drank milk from the breasts of the ugly devil Putanā and killed her, go to the people who saw him seated on a throne surrounded by thousands of queens in famous Dwaraka.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொல்லா கோரமான; வடிவு உடை வடிவத்தையுடைய; பேய்ச்சி பூதனையானவள்; துஞ்ச மாளும்படியாக; புணர்முலை அவள் மார்பகத்தில்; வாய் மடுக்க வாயை வைத்து; வல்லானை உண்ண வல்லவனை; மாமணி நீலமணி போன்ற; வண்ணனை கண்ணன்; மருவும் இடம் இருக்குமிடம்; நாடுதிரேல் தேடுகிறீர்களாகில்; பல்லாயிரம் பதினாறாயிரம்; பெருந் தேவிமாரொடு தேவிமாரோடு; பௌவம் எறி அலைகள்வீசும் கடல் சூழ்ந்த; துவரை துவாரகையிலே; எல்லாரும் எல்லாரும்; சூழ சூழ்ந்து கொண்டிருக்க; சிங்காசனத்தே சிம்மாசனத்தில்; இருந்தானை இருந்த கண்ணனை; கண்டார் உளர் பார்த்தவர்கள் உள்ளனர்
nāṭutirel if you searching for; maruvum iṭam the place where; māmaṇi the blue gem; vaṇṇaṉai Kannan resides; vāy maṭukka who kept His mouth; vallāṉai and drank milk; puṇarmulai from breasts and; tuñca killed; peycci Putana; vaṭivu uṭai who had a form that; pŏllā was fierceful; kaṇṭār ul̤ar there are those who have seen; iruntāṉai Kannan; ciṅkācaṉatte seated on the throne; cūḻa surrounded by; ĕllārum all the; pallāyiram sixteen thousand; pĕrun tevimārŏṭu wives; tuvarai at Dwaraka; pauvam ĕṟi that is surrounded by sea