NAT 9.8

குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்கின்றன

594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள் *
மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ? *
சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான் *
ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே.
594 kālai ĕzhuntiruntu * kariya kuruvik kaṇaṅkal̤ *
māliṉ varavu cŏlli * marul̤ pāṭutal mĕymmai kŏlo? **
colaimalaip pĕrumāṉ * tuvārāpati ĕmpĕrumāṉ *
āliṉ ilaip pĕrumāṉ * avaṉ vārttai uraikkiṉṟate (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

594. A flock of black sparrows wakes up in the morning, welcomes Thirumāl and sings the raga marul. Is it true that they sing that raga to wake him up? They sing as if they are repeating the names of Him who stays in Thirumālirunjolai, He who is the lord of Dwaraka, He who sleeps on a banyan leaf, does not come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கரிய குருவி கரிய குருவி; கணங்கள் கூட்டங்கள்; காலை விடிகாலையில்; எழுந்திருந்து எழுந்து; சோலை மலை திருமாலிருஞ்சோலை மலை; பெருமான் தலைவனாயும்; துவராபதி துவாரகையின்; எம்பெருமான் பிரானாயும் உள்ள; ஆலின் இலை ஆலிலைமேல் துயின்ற; பெருமான் எம்பெருமான்; அவன் வார்த்தை வார்த்தைகளை; உரைக்கின்றதே சொல்லும்; மாலின் எம்பெருமானின்; வரவு வருகையை; சொல்லி சொல்லிக் கொண்டு; மருள் மருள் என்ற பண்ணைப்; பாடுதல் பாடுவதானது; மெய்ம்மைகொலோ? உண்மைதானோ?
kaṇaṅkal̤ the flock of; kariya kuruvi dark sparrows; ĕḻuntiruntu wake up; kālai in the early morning; mĕymmaikŏlo? is it true; pāṭutal that they sing; marul̤ marul' melody; cŏlli announcing; varavu the arrival; māliṉ of the Lord; avaṉ vārttai and also recite; uraikkiṉṟate the words; pĕrumāṉ the Lord of; colai malai Thirumalirunjolai; ĕmpĕrumāṉ who is also the Lord of; tuvarāpati Dwaraka; pĕrumāṉ and is the One who; āliṉ ilai slept on a banyan tree

Detailed WBW explanation

Flocks of deep-hued sparrows, rising at dawn, eloquently recite the divine words of the Supreme Being, the Lord of Thirumālirunjolai, the Sovereign of Śrī Dvārakā, who reposes gracefully upon a tender banyan leaf. Through the melodious strains of paṇ, they herald His imminent arrival. Could such a wondrous event transpire?