PAT 5.4.10

என்பால் இடவகை கொண்டனையே

472 தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் *
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி! *
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் *
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2)
472 taṭa varaivāy mil̤irntu miṉṉum * taval̤a nĕṭuṅkŏṭi pol *
cuṭar- ŏl̤iyāy nĕñciṉ ul̤l̤e * toṉṟum ĕṉ coti nampī ! **
vaṭa taṭamum vaikuntamum * matil tuvarāpatiyum *
iṭa vakaikal̤ ikazhntiṭṭu * ĕṉpāl iṭavakai kŏṇṭaṉaiye (10)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

472. O1 dear One! You are the light that glows in my heart, like a shining lamp that looks like the bright coral vine growing on a towering mountain. You left Your heavenly abode( Vaikuntam), northern milky ocean and walled Dwaraka and chose to reside in my heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடவரை வாய் பெரிய பர்வதத்தில்; மிளிர்ந்து மின்னும் ஜொலித்து ஒளிரும்; தவள நெடும் வெளுத்த பெரியதொரு; கொடிபோல் கொடிபோல; சுடர் ஒளியாய் சுடர் ஒளியாக; நெஞ்சின் உள்ளே என் மனதிற்குள்ளே; தோன்றும் என் தோன்றும் என்; சோதி நம்பி! ஜோதியானபிரானே!; வட தடமும் வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்; வைகுந்தமும் வைகுந்தமும்; மதிள் மதில்களையுடைய; துவராபதியும் துவாரகையும்; இட வகைகள் ஆகிய இடங்களை யெல்லாம்; இகழ்ந்திட்டு என்பால் விட்டு என் பக்கலில்; இட வகை கொண்டனையே இடம் கொண்டாயே! என்று ஈடுபடுகிறார்
coti nampi! o Lord of Light!; toṉṟum ĕṉ who appear; nĕñciṉ ul̤l̤e inside my heart; cuṭar ŏl̤iyāy as a radiant light; taval̤a nĕṭum like a large, white; kŏṭipol flag; mil̤irntu miṉṉum that is hining and glittering; taṭavarai vāy on a great mountain; vaikuntamum leaving Vaikunta; vaṭa taṭamum and Thirupparkadal in the northern direction; tuvarāpatiyum and Dwaraka; matil̤ fortified with walls; ikaḻntiṭṭu ĕṉpāl You came to me leaving; iṭa vakaikal̤ all such places; iṭa vakai kŏṇṭaṉaiye and chose to dwell within me