NAT 12.9

துவராபதிக்கு என்னைச் செல்ல விடுங்கள்

625 கூட்டிலிருந்துகிளியெப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும் *
ஊட்டக்கொடாதுசெறுப்பனாகில்
உலகளந்தான்என் றுயரக்கூவும் *
நாட்டில்தலைப்பழியெய்தியுங்கள்
நன்மையிழந்துதலையிடாதே *
சூட்டுயர்மாடங்கள்சூழ்ந்துதோன்றும்
துவராபதிக்கென்னையுய்த்திடுமின்.
625 kūṭṭil iruntu kil̤i ĕppotum *
kovintā kovintā ĕṉṟu aḻaikkum *
ūṭṭak kŏṭātu cĕṟuppaṉākil *
ulaku al̤antāṉ ĕṉṟu uyarak kūvum **
nāṭṭil talaippaḻi ĕyti *
uṅkal̤ naṉmai iḻantu talaiyiṭāte *
cūṭṭu uyar māṭaṅkal̤ cūḻntutoṉṟum *
tuvarāpatikku ĕṉṉai uyttiṭumiṉ. (9)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

625. “My parrot from its cage, always calls, ‘Govinda, Govinda!’ In anger when I don’t feed it, it calls Him loudly and says, ‘O lord, you have measured the world!’ (ulagalandan) People will blame you and you will all be ashamed, if I leave home and go to His place, Take me to Dwaraka filled with high palaces and leave me there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூட்டிலிருந்து கிளி கூட்டில் இருக்கும் கிளி; எப்போதும் கோவிந்தா! எப்போதும் கோவிந்தா!; கோவிந்தா! கோவிந்தா!; என்று அழைக்கும் என்று கூவுகிறது; ஊட்டக் கொடாது உணவு கொடுக்காமல்; செறுப்பனாகில் துன்பப் படுத்தினேனாகில்; உலகு அளந்தான்! உலகளந்த பெருமானே!; என்று உயரக் கூவும் என்றும் உரக்கக் கூவும்; நாட்டில் உலகில்; தலைப்பழி எய்தி பெருத்த பழியை சம்பாதித்து; உங்கள் நன்மை உங்கள் பெயரையும்; இழந்து கெடுத்துக்கொண்டு; தலையிடாதே தலை கவிழ்ந்து நிற்பதாகிறது; சூட்டு உயர் உயர்ந்த மாடங்களால்; சூழ்ந்து தோன்றும் சூழப்பட்டு விளங்கும்; துவராபதிக்கு துவாரகையிலே; என்னை என்னை; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்

Detailed WBW explanation

The parrot I had been nurturing would cry out, "Govindā! Govindā!" from within its cage. Should I withold its nourishment as a form of punishment, it would then exclaim, "Ulagāṇḍa Perumāṇe!" Upon hearing these sacred names, I find myself overwhelmed, swooning in reverence. Therefore, to avert the act of repeatedly bowing down, which might bring considerable censure upon

+ Read more