NMT 71

பகவத்கீதை கற்க: மெய்ஞ்ஞானம் பெறலாம்

2452 சேயனணியன் சிறியன்மிகப்பெரியன் *
ஆயன் துவரைக்கோனாய்நின்ற - மாயன் * அன்று
ஓதிய வாக்கதனைக்கல்லார் * உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ்ஞானமில்.
2452 ceyaṉ aṇiyaṉ * ciṟiyaṉ mikap pĕriyaṉ *
āyaṉ tuvaraik koṉāy niṉṟa - māyaṉ ** aṉṟu
otiya * vākku ataṉaik kallār * ulakattil
etilar ām mĕyñ ñāṉam il (71)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2452. The Māyan, the king of Dwaraka who was born as a cowherd is far away and is near, small and large. Those who do not know the words that the god said to Arjunā will live in the world without any true knowledge and will not be loved by others.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறியன் கண்ணன் சிறுபிள்ளையாய்; அணியன் சுலபனாய்; மிகப் பெரியன் மிகப் பெரியவனாய்; சேயன் எட்டாதவனாயும்; ஆயனாய் ஆயர் குலத்தில்; நின்ற பிறந்தவனாயும்; துவரை துவாரகைக்கு; கோனாய் அரசனுமான; மாயன் அன்று மாயன் அன்று; ஓதிய பாரதயுத்தத்தில் அருளிச்செய்த; வாக்கு சரம ஸ்லோகமாகிய; அதனை அந்த வாக்கை; கல்லார் கற்காதவர்கள்; உலகத்தில் உலகத்தில்; மெய் உண்மைப் பொருளை; ஞானம் இல் அறியாத அஞ்ஞானிகளாக; ஏதிலர் ஆம் இறைவனின் பகைவர்களாவர்
sĕyan being at a far away distance; migap periyan being huge; siṛiyan incarnating in lowly forms (lower than samsāris); aṇiyan being very easy to approach; āyan being born in the clan of herdsmen; thuvarai kŏnāy ninṛa having the greatness of being the head of dhwārakāpuri (dhwārka, in present day ṅujarat ṣtate); māyan emperumān; anṛu during that time (when mahābhāratha war was fought); ŏdhiya mercifully said (on the seat of his chariot, to arjuna); vākku adhanai that divine word (of charama ṣlŏkam); ulagaththil in this world; kallār not having learnt; mey gyānam il without having the inclination for true knowledge; ĕdhilar ām are inimical towards emperumān