Thiruvāsiriyam

திருவாசிரியம்

Thiruvāsiriyam
The Tiruvāciriyam Prabandham, composed by Nammazhvar, shines as the essence of the Yajur Veda. It contains seven verses. In the Thiruvirutham, āzhvār cries out to the Lord to remove his bodily attachments, and the Lord, desiring to create a Prabandham for the people through his divine words, reveals His true form, nature, qualities, and divine experiences + Read more
நம்மாழ்வார் அருளிய திருவாசிரியம் என்னும் இப்பிரபந்தம் யஜுர் வேத ஸாரமாக விளங்குகிறது. ஏழு பாசுரங்களை கொண்டது. திருவிருத்தத்தில் பகவானிடம் தனக்கு சரீர சம்பந்தத்தை போக்கித் தர வேண்டும் என்று ஆழ்வார் கதறியும், அவரது திருவாக்கினால் உலகத்தாருக்கு பிரபந்தம் உருவாக வேண்டும் என்ற திருவுள்ளம் + Read more
Group: 3rd 1000
Verses: 2578 to 2584
Glorification: Krishna Avatar (க்ருஷ்ணாவதாரம்)
Eq scripture: Yajur Veda
āzhvār: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TS 1

2578 செக்கர்மாமுகிலுடுத்துமிக்கசெஞ்சுடர்ப்
பரிதிசூடி * அஞ்சுடர்மதியம்பூண்டு *
பலசுடர்புனைந்தபவளச்செவ்வாய் *
திகழ்பசுஞ்சோதிமரகதக்குன்றம் *
கடலோன்கைமிசைக்கண்வளர்வதுபோல் *
பீதகவாடைமுடிபூண்முதலா *
மேதகுபல்கலனணிந்து * சோதி
வாயவும்கண்ணவும்சிவப்ப * மீதிட்டுப்
பச்சைமேனிமிகப்பகைப்ப *
நச்சுவினைக்கவர்தலையரவினமளியேறி
எறிகடல்நடுவுளறிதுயிலமர்ந்து *
சிவனயனிந்திரனிவர்முதலனைத்தோர் *
தெய்வக்குழாங்கள்கைதொழக்கிடந்த *
தாமரையுந்தித்தனிப்பெருநாயக! *
மூவுலகளந்தசேவடியோயே!
2578 ## செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ் சுடர்ப்
பரிதி சூடி * அம் சுடர் மதியம் பூண்டு *
பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய் *
திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம் *
கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் *
பீதக ஆடை முடி பூண் முதலா *
மேதகு பல் கலன் அணிந்து * சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப * மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப *
நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி *
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து *
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் *
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த *
தாமரை உந்தித் தனிப் பெரு நாயக *
மூவுலகு அளந்த சேவடியோயே 1
2578 ## cĕkkar mā mukil uṭuttu mikka cĕñ cuṭarp
pariti cūṭi * am cuṭar matiyam pūṇṭu *
pala cuṭar puṉainta paval̤ac cĕvvāy *
tikazh pacuñ coti marakatak kuṉṟam *
kaṭaloṉ kaimmicaik kaṇval̤arvatu pol *
pītaka āṭai muṭi pūṇ mutalā *
metaku pal kalaṉ aṇintu * coti
vāyavum kaṇṇavum civappa * mītiṭṭup
paccai meṉi mikap pakaippa *
naccu viṉaik kavartalai araviṉ amal̤i eṟi *
ĕṟi kaṭal naṭuvul̤ aṟituyil amarntu *
civaṉ ayaṉ intiraṉ ivar mutal aṉaittor *
tĕyvak kuzhāṅkal̤ kaitŏzhak kiṭanta *
tāmarai untit taṉip pĕru nāyaka *
mūvulaku al̤anta cevaṭiyoye -1

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2578. O lord, with red garments, your crown is the sun that spreads bright rays and the beautiful moon floats above your head. Your mouth is as lovely as coral and you shine like a light and an emerald hill. You are adorned with golden clothes and many precious ornaments and your mouth and eyes shine, adding to the luster of your dark body. You rest on thousand-headed Adisesha in the middle of ocean with rolling waves as Shivā, Nānmuhan who stays on a lotus on your navel, Indra and all the crowd of gods worship you. O lord, you measured all the three worlds with your divine feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செக்கர் மா சிவந்த பெரிய; முகில் உடுத்து மேகத்தை ஆடையாக கட்டி; மிக்க செஞ் சுடர் மிகச் சிவந்த கிரணங்களையுடைய; பரிதி சூடி சூரியனை தலையில் தரித்து; அம் சுடர் அழகிய கிரணங்களையுடைய; மதியம் பூண்டு சந்திரனை அணிந்து; பல சுடர் நக்ஷத்திரங்களாகிய இவைகளையும்; புனைந்த தரித்துள்ள; பவள பவழங்கள் போன்ற; செவ்வாய் சிவந்த வாயையுடையதும்; திகழ் பசுஞ் சோதி பசுமையான நிறத்தையுடையதுமான; மரதகக் குன்றம் மரகத மலையானது; கடலோன் கடல் அரசனான; கைம்மிசை வருணனின் அலைகளாகிற கையின் மேல்; கண்வளர்வது போல சயனித்திருப்பது போல்; பீதக ஆடை பீதாம்பர ஆடை; முடி பூண் முதலா கிரீடம் கண்டி முதலான; மேதகு சிறந்த; பல் கலன் அணிந்து பல ஆபரணங்களை அணிந்து; சோதி வாயவும் ஒளியுள்ள பவளம் போன்ற வாயும்; கண்ணவும் சிவப்ப கண்களும் சிவந்திருக்கும்படி; பச்சை மேனி பச்சை நிறமுடைய திருமேனி; மீதிட்டுப் மிக மற்ற ஒளிகளைவிட மேலோங்கி; பகைப்ப மற்ற போட்டியில் வெற்றி கொண்டு; எறி கடல் அலைகளையுடைய கடலின்; நடுவுள் நடுவில்; நச்சு வினை விஷத்தொழிலையுடைய; கவர்தலை கவிழ்ந்த தலையையுடைய; அரவின் ஆதிசேஷனான; அமளி ஏறி படுக்கையில் ஏறி; அறிதுயில் யோகநித்திரையில்; அமர்ந்து அமர்ந்து; சிவன் அயன் இந்திரன் சிவன் பிரமன் இந்திரன்; இவர் முதல் அனைத்தோர் ஆகிய எல்லா; தெய்வக் குழாங்கள் தேவர்களின் கூட்டங்களும்; கைதொழ கை கூப்பி வணங்கும்படி; கிடந்த இருந்தவனும்; தாமரை உந்தி நாபீ கமலத்தையுடையவனும்; தனிப் பெரு தனிப் பெரும்; நாயக நாயகனான பெருமானே!; மூவுலகு அளந்த மூன்று உலகங்களையும் அளந்த; சேவடி யோயே! திருவடிகளையுடையவனே!
sekkar mā mugil uduththu wearing a huge red cloud around his waist; mikka sem sudar with the highly effulgent red rays; paridhi sūdi sun on his head; am sudar beautiful cool rays; madhiyam pūṇdu wearing the moon; pala sudar (stars) with many glitters; punaindha wearing it; paval̤am sem vāi red coral like lips; thigazh pasum sŏdhi bright green color; maragadha kunṛam an emerald mountain; kadalŏn kai misai on the hands (waves) of the ocean king (varuṇa); kaṇ val̤arvadhu pol just like sleeping; pīthaga ādai pīthāmbaram (yellow garment); mudi crown; pūṇ necklace; mudhalā etc; mĕthagu palkalan aṇindhu wearing a variety of worthy jewellery; sŏdhi vāyavum glowing coral red lips; kaṇṇavum eyes; sivappa being red in color; mīdhittu being victorious (competition); pachchai mĕni miga pagaippa green color becomes more visible; nachchu vinai (while destroying enemies) he who has poisonous acts; kavar thalai having fallen heads; aravu amal̤i on the cośy bed of thiruvanandhāzhwān (ādhiṣĕshan); ĕṛi climbing; kadal naduvul in the midst of sea full of waves; aṛi thuyil amarndhu engaged in yŏga nidhrā (meditation) to protect the world; ṣivan ayan indhiran ivar mudhal like ṣiva, brahmā, indhra; anaiththŏr dheyva kuzhāngal all the group of dhĕvathās; kai thozha to worship with the joined palms; kidandha lying down; thāmarai undhi having the nābhīkamalam (lotus in the navel, which is the origin for all creation); thani peru nāyaga ŏh emperumān who is greater than all!; mū ulagu al̤andha measured the three world; sĕvadiyŏyĕ ŏh one who is having the divine feet!

TS 2

2579 உலகுபடைத் துண்டவெந்தை * அறைகழல்
சுடர்ப்பூந்தாமரைசூடுதற்கு * அவாவு
ஆருயிருருகியுக்க * நேரிய
காதலன்பிலின்பீன்தேறல் * அமுத
வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு * ஒருபொருட்கு
அசைவோரசைக * திருவொடுமருவிய
இயற்கை * மாயாப்பெருவிறலுலகம்
மூன்றினொடுநல்வீடுபெறினும் *
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர்குறிப்பே?
2579 உலகு படைத்து உண்ட எந்தை * அறை கழல்
சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு * அவாவு
ஆர் உயிர் உருகி உக்க * நேரிய
காதல் அன்பில் இன்பு ஈன் தேறல் * அமுத
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு * ஒரு பொருட்கு
அசைவோர் அசைக * திருவொடு மருவிய
இயற்கை * மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும் *
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? 2
2579 ulaku paṭaittu uṇṭa ĕntai * aṟai kazhal
cuṭarp pūn tāmarai cūṭutaṟku * avāvu
ār uyir uruki ukka * neriya
kātal aṉpil iṉpu īṉ teṟal * amuta
vĕl̤l̤attāṉ ām ciṟappu viṭṭu * ŏru pŏruṭku
acaivor acaika * tiruvŏṭu maruviya
iyaṟkai * māyāp pĕru viṟal ulakam
mūṉṟiṉoṭu nal vīṭu pĕṟiṉum *
kŏl̤vatu ĕṇṇumo tĕl̤l̤iyor kuṟippe?-2

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2579. You, our father, created the world and swallowed it. My heart longs to worship your shining lotus feet ornamented with sounding anklets, melting to receive you. My love for you flows like sweet nectar. Some people wish only for material things, never thinking of being your devotee— let them do whatever they want. The nature of this illusionary world is to become rich. Even if someone gets everything he needs in this world and excellent Mokshā, the wise will not want a worldly life. Their only aim will be to reach your feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு உலகங்களை; படைத்து படைத்து; உண்ட பிரளயத்தில் உண்ட; எந்தை பெருமானின்; அறை சப்திக்கும்; கழல் திருவடிகள்; சுடர்ப் பூந் தாமரை ஒளியுள்ள தாமரைப்பூ; சூடுதற்கு அணிவதற்கு; அவாவு ஆர் ஆசையுடைய; உயிர் உருகி உக்க ஆத்மாவானது உருகி விழ; நேரிய காதல் அதனால் உண்டான பக்தி; அன்பில் பக்தியினாலுண்டான பரம பக்தி; இன்பு இனிமை; ஈன் தேறல் இவைகளின்; அமுத அமுதக் கடலின்; வெள்ளத்தானாம் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்படியான; சிறப்பு விட்டு மேன்மையை விட்டு; ஒரு பொருட்டு கீழான ஒரு பலனுக்காக; அசைவோர் அலைகின்றவர்கள்; அசைக அலையட்டும்; திருவொடு மருவிய செல்வத்தோடு கூடிய; இயற்கை ஸ்வபாவத்தோடும்; மாயாப் பெரு விறல் அழியாத பெருமிடுக்கோடு; உலகம் மூன்றினொடு மூன்று உலகங்களோடு கூட; நல் வீடு பெறினும் மோக்ஷத்தைப் பெற்றாலும்; தெள்ளியோர் தெளிந்த ஞானிகளின்; குறிப்பே அபிப்ராயம்; கொள்வது பெற்றுக்கொள்ள; எண்ணுமோ? நினைக்குமோ?
ulagupadaiththu emperumān who created all the worlds; uṇda and ate them up (during pral̤ayam (deluge)); endhai emperumān is my lord; aṛaikazhal holy feet of the lord resounding with the ankle bells; sudar pū thāmarai glittering lotus flower; sūdudhaṛku to wear it (beautiful lotus like thiruvadi to wear it on head); avā with desire; ār filled with; uyir urugi ukka the soul that melts and fall; nĕriya kādhal the love/affection (in the form of bhakthi) which resulted from it; anbil in the the desire (to reach emperumān); inbu that produces the bliss; īn thĕṛal amudha vel̤l̤aththānām submerging into nectar-like ocean which is great in sweetness.; siṛappu vittu renouncing the pride; oru porutku for the meagre goals of life; asaivŏr those who get afflicted; asaiga wanders; thiruvodu maruviya in association with the wealth/opulence; iyaṛkai true nature; māyā peru viṛal with imperishable immense strength; ulagam mūnṛinodu along with the three worlds; nal vīdu peṛinum even if attaining mŏksham (which is the ultimate goal of life) also; thel̤l̤iyŏr the vivĕki’s who have clear wisdom; kuṛippu opinion; kol̤vadhu to obtain all these; eṇṇumŏ will think?

TS 3

2580 குறிப்பில்கொண்டுநெறிப்பட * உலகம்
மூன்று உடன் வணங்குதோன்று புகழ் * ஆணை
மெய்பெறநடாய தெய்வம்மூவரில்
முதல்வனாகி * சுடர்விளங்ககலத்து *
வரைபுரைதிரை பொருபெருவரைவெருவர *
உருமுரலொலிமலி நளிர்கடற்படவர
வரசுடல் தடவரை சுழற்றிய * தனிமாத்
தெய்வத்தடியவர்க்கு இனிநாமாளாகவே
இசையுங்கொல்? * ஊழிதோறூழியோவாதே.
2580 குறிப்பில் கொண்டு நெறிப்பட * உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை *
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வன் ஆகி * சுடர் விளங்கு அகலத்து *
வரை புரை திரை பொரு பெரு வரை வெருவர *
உரும் உரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு * உடல் தட வரை சுழற்றிய * தனி மாத்
தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே
இசையுங்கொல் * ஊழிதோறு ஊழி ஓவாதே? 3
2580 kuṟippil kŏṇṭu nĕṟippaṭa * ulakam
mūṉṟu uṭaṉ vaṇaṅku toṉṟu pukazh āṇai *
mĕy pĕṟa naṭāya tĕyvam mūvaril
mutalvaṉ āki * cuṭar vil̤aṅku akalattu *
varai purai tirai pŏru pĕru varai vĕruvara *
urum ural ŏli mali nal̤ir kaṭal paṭa aravu
aracu * uṭal taṭa varai cuzhaṟṟiya * taṉi māt
tĕyvattu aṭiyavarkku iṉi nām āl̤ākave
icaiyuṅkŏl * ūzhitoṟu ūzhi ovāte?-3

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2580. He, the first one of the three gods, with shining jewels on his chest, rules all the three worlds, leading them on a good path. He churned the milky ocean using Mandara mountain for a churning stick and the snake Vāsuki for a rope, and as the ocean was churned, it roared with a a loud noise like thunder as its waves rolled. May we serve the devotees of the matchless god continuously, eon after eon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகம் மூன்று மூன்று உலகங்களும்; நெறிப்பட நல் வழியில் செல்லும்படியாக; குறிப்பில் கொண்டு திருவுள்ளம் பற்றி; உடன் உலகங்கள் ஒன்றுபட்டு; வணங்கு வணங்கும்; தோன்று புகழ் புகழையுடைய பெருமான்; ஆணை மெய் தன் ஆணையை சரிவர; பெற நடாய நடத்துபவனாய்; தெய்வம் பிரமன் ருத்ரன் இந்திரன்; மூவரில் மூவரில்; முதல்வன் ஆகி முதல்வனாய்; சுடர் விளங்கு ஆபரணங்களின் ஒளியுள்ள; அகலத்து மார்பையுடையவனாய்; வரை புரை திரை மலை போன்ற அலைகள்; பொர பெரு மோதும் பெரிய; வரை வெருவர மலைகள் நடுங்கும்படி; உரும் முரல் இடிபோல் ஒலிக்கின்ற; ஒலி மலி கோஷம் நிறைந்ததும்; நளிர் கடல் குளிர்ந்த கடலை; பட அரவு படங்களையுடைய ஸர்ப்பமான; அரசு உடல் வாசுகியின் உடலை; தட வரை மந்திரமலையில்; சுழற்றிய சுற்றி கடைந்த; தனிமா ஒப்பற்ற தனித்தலைமையுடைய; தெய்வத்து எம்பெருமானின்; அடியவர்க்கு அடியவர்களுக்கு; இனி நாம் இனி நாங்கள்; ஊழிதோறு ஊழி ஒவ்வொரு கல்பத்திலும்; ஓவாதே இடைவிடாது; ஆளாகவே கைங்கர்யம் பண்ண வேண்டுமோ?
mūnṛru ulagam the three worlds; neṛi pada to live in the path of righteousness (dharma); kuṛippil koṇdu (bhagavān) who make sankalpam (divine will) in his divine heart; udan vaṇangu worshipped by all the people of the three worlds; thŏnṛu pugazh having renowned fame; āṇai mey pera nadāya conducts his divine rules (ṣruthi) in right way.; dheyvam mūvaril among the three gods brahmā, rudhra and indhra; mudhalvan āgi ḥe is the foremost of the three gods.; sudar vil̤angu agalaththu having shining bejeweled divine chest.; varai purai thirai the waves as large as mountain; poru to collide; peru varai veruvu uṛa to tremble even the giant mountain; urumu ural oli mali roars like thunderclap; nal̤ir kadal the cool ocean; padam aravu arasu with vāsuki (the king of serpents with expanded hoods).; udal body; thadam varai suzhaṝiya winding round the great mountain (mandhara) and churned the ocean; thani māth theyvam emperumān who is distinctly supreme; adiyavarkku to the bhāgavathas; ini nām here after ourselves; ūzhithŏṛuzhi during every kalpa (eon).; ŏvādhu incessantly; āl̤āga to become servitors; isaiyum kol will it be possible (being servitors to ḥis devotees)?

TS 4

2581 ஊழிதோறூழியோவாது * வாழிய
வென்று யாம்தொழ இசையுங்கொல்? *
யாவகையுலகமும் யாவருமில்லா *
மேல்வரும் பெரும்பாழ்க்காலத்து * இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து * ஒருதா
னாகித்தெய்வநான்முகக்கொழுமுளை
யீன்று * முக்கணீசனொடுதேவுபலநுதலி *
மூவுலகம்விளைத்தஉந்தி *
மாயக்கடவுள்மாமுதலடியே.
2581 ஊழிதோறு ஊழி ஓவாது * வாழிய
என்று யாம் தொழ இசையுங்கொல் *
யாவகை உலகமும் யாவரும் இல்லா *
மேல் வரும் பெரும்பாழ்க் காலத்து * இரும் பொருட்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து * ஒரு தான் ஆகி
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று *
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி *
மூவுலகம் விளைத்த உந்தி *
மாயக் கடவுள் மா முதல் அடியே? 4
2581 ūzhitoṟu ūzhi ovātu * vāzhiya
ĕṉṟu yām tŏzha icaiyuṅkŏl *
yāvakai ulakamum yāvarum illā *
mel varum pĕrumpāzhk kālattu * irum pŏruṭku
ĕllām arum pĕṟal taṉi vittu * ŏru tāṉ āki
tĕyva nāṉmukak kŏzhu mul̤ai īṉṟu *
mukkaṇ īcaṉŏṭu tevu pala nutali *
mūvulakam vil̤aitta unti *
māyak kaṭavul̤ mā mutal aṭiye? -4

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2581. Will he accept us as his devotees in all the eons so that we may worship him? At the time of terrible flood when there was no world and no people, he, the seed from which everything came, the only god at the end of the eon, created Nānmuhan from his navel on a lotus, and Nānmuhan created three-eyed Shivā and the other gods and all the three worlds. Let us worship the feet of Māyan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாவகை உலகமும் அனைத்து உலகங்களும்; யாவரும் அனைத்து பிராணிகளும்; இல்லா மேல் வரும் இல்லாதவாறு முன்பே கழிந்துபோன; பெரும்பாழ்க் காலத்து மிகவும் நீண்ட பிரளய காலத்தில்; இரும் பொருட்கு எல்லாம் எண்ணற்ற ஜீவராசிகளுக்கெல்லாம்; பெறல் அரும் அடைவதற்கு அரியவனும்; தனி ஒரு வித்து ஒப்பற்றவனும் காரணமானவனும்; தான் ஆகி தானேயாக நின்று; தெய்வ நான்முக தெய்வமான பிரமன் என்னும்; கொழு முளை பூர்ணமான ஒரு முளையை; முக்கண் மூன்று கண்களையுடைய; ஈசனொடு ருத்ரனுடன்; தேவு பல பல தேவதைகளையும்; ஈன்று படைத்து; நுதலி ஆக இவ்வகையாலே; மூவுலகம் மூன்று லோகங்களையும்; விளைத்த உந்தி படைத்த நாபியையுடைய; மாயக் கடவுள் ஆச்சர்யபூதனான பெருமானின்; மா முதல் மூல காரணமான; அடியே திருவடிகளையே; ஊழிதோறு ஊழி காலங்கள் தோறும்; ஓவாது வாழிய இடைவிடாமல் வாழவேண்டும்; என்று யாம் தொழ என்று நாம் சொல்லி துதித்து; இசையுங்கொல் வணங்குவோம்!
yāvagai ulagamum all the categories of the world; yāvarum illā all kinds of living beings; illā without; mĕlvarum the past times; perum pāzh kālaththu very long; irum porutku ellām for the countless living beings; peṛal arum emperuman who is difficult to attain; thani oru viththu ḥe is the distinct, independent primordial cause.; thān āgi emperumān himself (alone); dheyvam nānmugan the dhĕvathā, brahmā; kozhu mul̤ai perfect sprout; mukkaṇ īsanŏdu along with the three-eyed rudhra; pala dhĕvu several dhĕvathās; īnṛu creates; nudhali and make sankalpam (vow them to be the incharge for creation, destruction etc); mū ulagam the three worlds; vil̤aiththa creates; undhi ḥe who has divine navel; māyan ḥe who has amaśing ability; kadavul being the supreme god.; mā mudhal emperumān who is the supreme primordial cause, his; adi divine feet; ūzhithŏṛūzhi during every kalpa (eon); ŏvadhu incessantly; vāzhiya to live; enṛu that; yām us; thozha to praise (by performing mangal̤āṣāsanam); isaiyum kol will it be possible?

TS 5

2582 மாமுதலடிப்போதொன்றுகவிழ்த்தலர்த்தி *
மண்முழுதுமகப்படுத்து * ஒண்சுடரடிப்போது
ஒன்றுவிண்செலீஇ * நான்முகப்புத்தேள்
நாடுவியந்துவப்ப * வானவர்முறைமுறை
வழிபடநெறீஇ * தாமரைக்காடு
மலர்க்கண்ணொடுகனிவாயுடையது மாய் *
இருநாயிறுஆயிரம்மலர்ந்தன்ன *
கற்பகக்காவுபற்பலவன்ன *
முடிதோளாயிரம்தழைத்த *
நெடியோய்க் கல்லது அடியதோவுலகே?
2582 மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி *
மண் முழுதும் அகப்படுத்து * ஒண் சுடர் அடிப் போது
ஒன்று விண் செலீஇ * நான்முகப் புத்தேள் நாடு
வியந்து உவப்ப * வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ * தாமரைக் காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதும் ஆய் *
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன *
கற்பகக் காவு பற்பல அன்ன *
முடி தோள் ஆயிரம் தழைத்த *
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? 5
2582 mā mutal aṭip potu ŏṉṟu kavizhttu alartti *
maṇ muzhutum akappaṭuttu * ŏṇ cuṭar aṭip potu
ŏṉṟu viṇ cĕlīi * nāṉmukap puttel̤ nāṭu
viyantu uvappa * vāṉavar muṟaimuṟai
vazhipaṭa nĕṟīi * tāmaraik kāṭu
malark kaṇṇŏṭu kaṉi vāy uṭaiyatum āy *
iru nāyiṟu āyiram malarntaṉṉa *
kaṟpakak kāvu paṟpala aṉṉa *
muṭi tol̤ āyiram tazhaitta *
nĕṭiyoykku allatu aṭiyato ulake? -5

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2582. Your eyes are like lotuses blooming in a forest, your mouth is as sweet as a fruit, your feet are like a thousand suns shining together and your thousand divine arms are like many flourishing forests of the karpaga garden. When you put one foot on the earth and measured the whole world and raised your other shining lotus foot to the sky and measured it, the world created by Nānmuhan was amazed and pleased and the gods in the sky performed their worship. O Thirumāl! Can anyone measure the world with their feet like this except you ?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா முதல் மூல காரணமான; போது தாமரை போன்ற; அடி ஒன்று ஒரு திருவடியை; கவிழ்த்து அலர்த்தி கவிழ்த்துப் பரப்பி; மண் முழுதும் பூமிப்பரப்பை எல்லாம்; அகப்படுத்து கைப்பற்றியும்; ஒண் சுடர் அழகிய ஒளிமயமான; போது மலர் போன்ற; ஒன்று அடி மற்றொரு திருவடியை; நான்முகப் புத்தேள் பிரமனாகிய தேவதையின்; நாடு லோகமானது; வியந்து உவப்ப அதிசயப்பட்டு மகிழவும்; வானவர் நெறீ இ மற்றுமுள்ள தேவதைகள்; முறை முறை சாஸ்திர விதிப்படி; வழிபட வணங்கும்படியாகவும்; விண் செலீ இ ஆகாசத்தில் செலுத்தியும்; தாமரைக் காடு தாமரைப் பூக்கள் நிறைந்த காடு; மலர் மலர்ந்தது போன்ற; கண்ணொடு கண்களையும்; கனி வாய் பழம் போன்ற சிவந்த அதரத்தை; உடையதும் ஆய் உடையவனாயும்; இரு ஆயிரம் நாயிறு ஆயிரம் ஸூர்யர்கள் சேர்ந்து; மலர்ந்தன்ன உதித்தாற்போன்ற; முடி கிரீடமுடையவனும்; பற்பல பலவகைப்பட்ட; கற்பக கற்பக; காவு அன்ன சோலைகள் போல்; தழைத்த ஓங்கி வளர்ந்துள்ள; தோள் தோள்கள்; ஆயிரம் ஆயிரங்கள் உடையவரும்; நெடியோய்க்கு பரம புருஷனான உன்னைத் தவிர; அல்லது வேறு யாருக்கு; அடியதோ அடிமைப்படக் கூடியது; உலகே இந்த உலகம்
mā mudhal emperumān who is the supreme cause, your; adi divine foot; onṛu pŏdhu a (red lotus) flower; kavizhththu alarththi overturned and spread out; maṇ muzhudhum agappaduththu captured the whole surface of the earth; oṇ beautiful; sudar shining; pŏdhu like a flower; onṛu adi the other divine foot; nānmugan puththĕl̤ for the dhĕvathā brahmā; nādu viyandhu uvappa to the amaśement and delight of the world; vānavar and the dhĕvathās in that world; neṛeei to walk in the right path; muṛai ordain; muṛai as said in ṣāsthras; vazhipada to worship; viṇ in the sky; seleei sending upwards; thāmarai kādu forest filled with lotus flowers; malar blossoming; kaṇṇŏdu with divine eyes; kanivāi udaiyadhumāy having (reddish) divine lips like a fruit; iru vast (with many rays); āyiram nāyiṛu thousand suns; malarndhanna like rising; mudi paṛpala many crowns; kaṛpagakkāvu anna like a forest with kaṛpaga (celestial, wish-fulfilling) trees; thazhaiththa grown up tall; āyiram thŏl̤ having thousand divine shoulders; nediyŏykku alladhum for any one except emperumān who is supreme; ulagu this world; adiyadhŏ is it subservient?

TS 6

2583 ஓஓ! உலகினதியல்வே! * ஈன்றோளிருக்க
மணைநீராட்டி * படைத்திடந்துண்டுமிழ்ந்
தளந்து * தேர்ந்துலகளிக்கும் முதற்பெருங்
கடவுள்நிற்ப * புடைப்பலதானறி
தெய்வம்பேணுதல் * தனாது
புல்லறிவாண்மைபொருந்தக்காட்டி *
கொல்வனமுதலா அல்லனமுயலும் *
இனையசெய்கைஇன்புதுன்பளி *
தொன்மாமாயப்பிறவியுள்நீங்கா *
பன்மாமாயத்தழுந்துமாநளிர்ந்தே.
2583 ஓஓ உலகினது இயல்வே! * ஈன்றோள் இருக்க
மணை நீராட்டி * படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து * தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெருங்
கடவுள் நிற்ப * புடைப் பல தான் அறி
தெய்வம் பேணுதல் * தனாது
புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி *
கொல்வன முதலா அல்லன முயலும் *
இனைய செய்கை இன்பு துன்பு அளி *
தொல் மா மாயப் பிறவியுள் நீங்கா *
பல் மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே 6
2583 oo ulakiṉatu iyalve! * īṉṟol̤ irukka
maṇai nīrāṭṭi * paṭaittu iṭantu uṇṭu umizhntu
al̤antu * terntu ulaku al̤ikkum mutal pĕruṅ
kaṭavul̤ niṟpa * puṭaip pala tāṉ aṟi
tĕyvam peṇutal * taṉātu
pullaṟivāṇmai pŏruntak kāṭṭi *
kŏlvaṉa mutalā allaṉa muyalum *
iṉaiya cĕykai iṉpu tuṉpu al̤i *
tŏl mā māyap piṟaviyul̤ nīṅkā *
pal mā māyattu azhuntumā nal̤irnte -6

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2583. Is this the nature of this world? Some ignorant people worship small gods and it is if they were worshiping a wooden plank when they have a mother who gave birth to them. When they have their own ancient first god who created, split open, and measured the earth, giving them his grace, they do not worship him but they worship small gods thinking that they are the real gods. They offer them meat and then eat it and do many wrong things, worshiping in a way that will give them only sorrow. As they enjoy their lives, they are involved in the illusions of this world, only to be born again and suffer again in life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு படைத்து உலகங்களைப் படைத்தும்; இடந்து வராகமாக பூமியை குத்தி எடுத்தும்; உண்டு உமிழ்ந்து பிரளயத்தில் உண்டு உமிழ்ந்தும்; அளந்து திருவிக்கிரமனாய் அளந்து; தேர்ந்து சிந்தித்து; அளிக்கும் காப்பாற்றும்; முதற் பெரும் ஆதி காரணனும் நாராயணனுமான; கடவுள் நிற்ப கடவுளாக எம்பெருமான் இருக்க; புடைப் பல அவனை விட்டு பலவகைப்பட்ட; தான் அறி தான் அறிந்த; தெய்வம் பேணுதல் சில தெய்வங்களை ஆதரிப்பது; தனாது புல்லறிவு தன்னுடைய கீழான புத்தியை; ஆண்மை பொருந்த பெரியவர்களுக்கு; காட்டி விளங்கக் காண்பித்து; ஈன்றோள் இருக்க பெற்ற தாய் இருக்கும் போது; மணை அறிவற்றதொரு மணைக்கு; நீராட்டி நீராட்டுவது போல் இருக்கிறது; செய்கை அத்தேவதைகளின் செய்கைகள்; கொல்வன முதலா கொன்று பலியிடும் தாழ்ந்த; அல்லன முயலும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு; இனைய அளி அத்தேவதைகள் அளிக்கும் பலமானது; துன்பு இன்பு துக்கத்துடன் கூடிய சுகமாகும்; தொல் மா மாய அநாதியான பெரிய ஆச்சர்யமான; பிறவியுள் தொன்மையான பிறவியில் மூழ்கி; நீங்கா பல் மா மாயத்து நீங்காத மாயத்தில்; நளிர்ந்தே! அழுந்துமா ஆழ்த்தி அழுந்துவதே இச்செயல்; உலகினது அந்தோ இது தான் உலக; இயல்வே! ஓ ஓ! இயல்போ?
ulagu this earth; padaiththu (in the beginning) creating; idandhu (during varāha avathāram) digging out (from the walls of the universe); uṇdu (during deluge) eating it; umizhndhu (at the time of intervening creation) spitting out; al̤andhu (at the time of thrivikrama avathāram) measuring; thĕrndhu deeply thinking (about its protection); al̤ikkum protecting; mudhal perum kadavul̤ the primary cause and supreme lord, ṣrīman nārāyaṇan; niṛpa while he remains (as the refuge); pudai (considered as his) wealth; pala of different types; thān aṛi dheyvam (a few) dhĕvathās (deities) known to him [jīvāthmā] (as refuge); pĕṇudhal supporting them (as protectors); thanādhu pul aṛivu his lowly intelligence; āṇmai porundhakkātti showing in such a way that it enters (the minds of) learned people; īnṛŏl̤ irukka when one’s mother is there; maṇai nīrātti bathing a wooden plank (which is an insentient entity); seygai the activities of those dhĕvathās; kolvana mudhalā harmful acts; allana muyalum carrying out banned activities; inaiya having qualities like these; al̤i the strength (given by those dhĕvathās); thunbu together with sorrow; inbu joyful; thol from time immemorial; being huge; māyam amaśing; piṛaviyul̤ in this samsāram (materialistic realm); nīngā instead of leaving; pal mā being variegated; māyaththu worldly pursuits such as ṣabdham etc (sound, touch etc) (lustful); nal̤irndhu very well; azhundhumā being fully sunk; ulaginadhu iyalvu nature of this world; ŏh ŏh how is it!

TS 7

2584 நளிர்மதிச்சடையனும்நான்முகக்கடவுளும் *
தளிரொளியிமையவர்தலைவனும்முதலா *
யாவகையுலகமும்யாவருமகப்பட *
நிலநீர்தீகால்சுடரிருவிசும்பும் *
மலர்சுடர்பிறவும்சிறிதுடன்மயங்க *
ஒருபொருள்புறப்பாடின்றிமுழுவதும்
அகப்படக்கரந்து * ஓராலிலைச்சேர்ந்தஎம்
பெருமாமாயனையல்லது *
ஒருமாதெய்வம்மற்றுடையமோயாமே? (2)
2584 ## நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் *
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா *
யாவகை உலகமும் யாவரும் அகப்பட *
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் *
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க *
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்து * ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது *
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே? 7
2584 ## nal̤ir matic caṭaiyaṉum nāṉmukak kaṭavul̤um *
tal̤ir ŏl̤i imaiyavar talaivaṉum mutalā *
yāvakai ulakamum yāvarum akappaṭa *
nilam nīr tī kāl cuṭar iru vicumpum *
malar cuṭar piṟavum ciṟitu uṭaṉ mayaṅka *
ŏru pŏrul̤ puṟappāṭu iṉṟi muzhuvatum
akappaṭak karantu * or āl ilaic cernta ĕm
pĕru mā māyaṉai allatu *
ŏru mā tĕyvam maṟṟu uṭaiyamo yāme? -7

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2584. Shivā with the crescent moon in his matted hair, Nānmuhan, Indra, the gods in the sky and all the creatures of the world worship him. At the end of the eon he swallowed the earth, ocean, fire, wind, sun, moon, the sky and all other flourishing and shining things in the world and kept them in his stomach as he, the divine Māyan, rested on a banyan leaf. Is there any other god who is more divine for us to worship?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நளிர் மதி குளிர்ந்த சந்திரனை; சடையனும் தலையில் தரித்துள்ள ருத்ரனும்; நான்முக நாலு முகங்களையுடைய; கடவுளும் பிரமனும்; தளிர் ஒளி தளிர் போன்ற ஒளியுடைய; இமையவர் தேவர்கள்; தலைவனும் தலைவனான; முதலா இந்திரன் முதலானவர்களும்; யாவரும் எல்லா சேதனர்களும்; அகப்பட உட்பட; நிலம் நீர் தீ கால் பூமி ஜலம் அக்னி காற்று; சுடர் இரு விசும்பும் தேஜஸ்ஸோடு வியாபித்த ஆகாசம்; மலர் சுடர் சூரிய சந்திரர்களும்; பிறவும் மற்றுமுள்ளவைகளும்; சிறிது உடன் ஒரே சமயத்தில்; மயங்க வயிற்றில் கலங்கும்படியாக சேரும்படி; ஒரு பொருள் ஒரு பொருளும்; புறப்பாடு இன்றி வெளியேறாதபடி; முழுவதும் எல்லாவற்றையும்; அகப்படக் கரந்து தன் உள்ளே இருக்கும்படி உண்டு; ஓர் ஆல் இலை ஓர் ஆலிலையில்; சேர்ந்த நித்திரை செய்பவனாய்; எம் பெரு மா எம்பெருமான்; மாயனை மாயனான; அல்லது ஒரு மா நாராயணனைத்தவிர ஒரு மேலான; மற்று தெய்வம் வேறு ஒரு தெய்வம்; யாமே நாம்; உடையமோ? உடையவர் ஆவோமோ?
nal̤ir madhi sadaiyanum rudhra who has donned the cool chandra (moon) on his head; nānmugak kadavul̤um brahmā, with four heads; thal̤ir ol̤i having (beautiful) radiance like a tender shoot; imaiyavar thalaivanum mudhalā indhra, the head of celestial entities et al; yāvagai ulagamum all types of worlds; yāvarum agappada including all the sentient entities; nilam earth; nīr water; thī fire; kāl wind; sudar due to radiance; iru pervaded; visumbum sky also; malar sudar sun and moon, having bright rays; piṛavum all other entities; udan at the same time; siṛidhu on one side (inside the stomach); mayanga being together; oru porul̤ even one entity; puṛappādu inṛi being unable to go out; muzhuvadhum all; agappada being inside; karandhu eating and hiding (inside the stomach); ŏr ālilai on a banyan leaf; sĕrndha sleeping; em my lord; peru being great; unable to measure; māyanai alladhu other than ṣrīman nārāyaṇa, who has amaśing power; maṝu anyone else; great; oru dheyvam a deity; yām we; udaiyamŏ do we have (as fit for attaining)?