88

Thiruvilliputhur

திருவில்லிபுத்தூர்

Thiruvilliputhur

Srivilliputhur

ஸ்ரீ கோதா ஸமேத ஸ்ரீ ரங்கமன்னார் ஸ்வாமிநே ஸ்ரீ வடபத்ரசாயிநேச நமஹ

Thayar: Sri Aandāl (Sri Godhā Nāchiyār)
Moolavar: Sri Vadapathrasāyi , Rangamannār
Utsavar: Rangamannār
Vimaanam: Samsana
Pushkarani: Thirumikkulam
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Virudhunagar
State: TamilNadu
Aagamam: Vaikānasam
Sampradayam: Thenkalai
Brahmotsavam: Aani Swathi - Aazwar Aadi Pooram - Aandaal Purattaasi Thiruvonam
Days: 9 9 9
Timings: 6:00 a.m. to 11:30 a.m. 4:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: SriVillipputhur
Mangalāsāsanam: Āṇḍāl, Periya Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 2.2.6

133 மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு *
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய்! உன்னைக்கண்டார் *
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்! *
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே. (2)
133 ## மின் அனைய நுண் இடையார் * விரி குழல்மேல் நுழைந்த வண்டு *
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் * இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார் **
என்ன நோன்பு நோற்றாள் கொலோ * இவனைப் பெற்ற வயிறு உடையாள் *
என்னும் வார்த்தை எய்துவித்த * இருடிகேசா முலை உணாயே (6)
133. ##
minnanaiya n^uNNidaiyār * virikuzhalmEl n^uzhaindha vaNdu *
innisaikkum villipuththoor * inidhamarndhāy! unnaik kaNdār *
enna n^Onbu n^ORRāLkolO * ivanaip peRRa vayiRudaiyāL *
ennum vārththaiy eydhuviththa * irudeekEsā! mulai uNāyE. 6.

Ragam

புன்னாகவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

133. You reside in SriVillipputhur happily where the sweetly buzzing bees swarm around the long hair of women with waists as thin as lightning. You make the people who see you, praise your mother, saying, "O What tapas did his mother do to give birth to this son?” O Rishikesha, come and drink the milk from my breasts.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் அனைய மின்னலைப் போன்ற; நுண் நுட்பமாக உள்ள; இடையார் இடுப்பை உடைய; விரி குழல் மேல் விரிந்து பரந்த கூந்தல் மேல்; நுழைந்த வண்டு நுழைந்த வண்டு; இன் இசைக்கும் ரீங்காரம் செய்யும்; வில்லிபுத்தூர் வில்லிபுத்தூர் தலத்திலே; இனிது அமர்ந்தாய் மன நிறைவாய் அமர்ந்தாய்; உன்னைக் கண்டார் உன்னைப் பார்ப்பவர்; என்ன நோன்பு என்ன தவம்; நோற்றாள் கொலோ செய்தாளோ; இவனைப் பெற்ற இவனை பிள்ளயாகப் பெற்ற; வயிறு உடையாள் வயிற்றையுடையவள்; என்னும் வார்த்தை என்று வார்த்தை; எய்துவித்த தோன்றும்படி செய்த; இருடீகேசா! ஹ்ருஷீகேசா!; முலை உணாயே தாய்ப் பாலை உண்ணாயோ!

NAT 5.5

549 மென்னடையன்னம்பரந்துவிளையாடும்
வில்லிபுத்தூருறைவான்றன் *
பொன்னடிகாண்பதோராசையினால் என்
பொருகயற்கண்ணிணை துஞ்சா *
இன்னடிசிலொடுபாலமுதூட்டி
எடுத்தவென்கோலக்கிளியை *
உன்னொடுதோழமைகொள்ளுவன்குயிலே!
உலகளந்தான்வரக்கூவாய். (2)
549 * மென்னடை அன்னம் பரந்து விளையாடும் *
வில்லிபுத்தூர் உறைவான் தன் *
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் * என்
பொரு கயற் கண்ணினை துஞ்சா **
இன் அடிசிலொடு பால்-அமுது ஊட்டி *
எடுத்த என் கோலக் கிளியை *
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே ! *
உலகு அளந்தான் வரக் கூவாய் (5)
549
mennadai yannam parandhu viLaiyādum * villipuththoor uRaivān than *
ponnadi kāNpathOr āsaiyināl * en poruhayaR kaNNiNai thuNYcā *
innadisilOdu pālamuthootti * eduththa en kOlakkiLiyai *
unnodu thOzhamai koLLuvan kuyilE! * ulahaLandhān varak koovāy * . (2) 5

Ragam

ஆனந்தபைரவி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

549. He resides in SriVillipputhur where the swans that walk softly, play. My fish-like eyes do not close to sleep because they wish to see His golden feet. O cuckoo bird, I will make the beautiful parrot that I raised feeding it sweet rice and milk, be your friend. Coo and call him, so that who measured the world will come to me.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மென்னடை மென்மையான நடையோடு; அன்னம் அன்னங்கள்; பரந்து பரந்து; விளையாடும் விளையாடும்; வில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூரில்; உறைவான் தன் உறைபவனின்; பொன்னடி பொன் போன்ற திருவடிகளை; காண்பது காணவேண்டுமெனும்; ஓர் ஆசையினால் ஆசையினாலே; என் என்னுடைய; பொரு கயல் கயல் மீன்கள் போன்ற; கண் இணை கண் இணைகள்; துஞ்சா தூங்கவில்லை; குயிலே! ஓ குயிலே!; உலகு உலகங்களை; அளந்தான் அளந்தவன்; வரக் கூவாய் இங்கே வரக் கூவுவாய்; இன் இனிப்பான; அடிசிலொடு பொங்கலையும்; பால்அமுது பாலமுதையும்; ஊட்டி எடுத்த ஊட்டி வளர்த்த; என் கோல எனது அழகிய; கிளியை கிளியை; உன்னொடு உன்னுடன்; தோழமை தோழமை; கொள்வன் கொள்ளச்செய்வேன்