PT 10.1.2

திருவேங்கடமும் திருத்தண்காவும்

1849 பொன்னைமாமணியை அணியார்ந்ததோர்
மின்னை * வேங்கடத்துஉச்சியில் கண்டுபோய் *
என்னையாளுடைஈசனை எம்பிரான்
தன்னை * யாம்சென்றுகாண்டும் தண்காவிலே.
1849 ## pŏṉṉai mā maṇiyai * aṇi ārntatu or
miṉṉai * veṅkaṭattu ucciyil kaṇṭu poy **
ĕṉṉai āl̤uṭai īcaṉai * ĕmpirāṉ-
taṉṉai * yām cĕṉṟu kāṇṭum- * taṇkāvile-2

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1849. He is gold and a shining diamond, the beautiful lightning that stays on the top of the Venkatam hills. He is my dear lord and he rules me. I will go see him in Thiruthangā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன்னை பொன்னைப் போன்றவனும்; மா மணியை நீலமணியைப் போன்றவனும்; அணி அழகு; ஆர்ந்தது ஓர் மிக்கதோர்; மின்னை மின்னல் போல் ஒளியுள்ளவனும்; என்னை என்னை; ஆளுடை தொண்டனாக உடைய; ஈசனை ஈசனை; எம்பிரான் தன்னை எம்பெருமானை; வேங்கடத்து திருவேங்கடத்து; உச்சியில் உச்சியில்; கண்டு யாம் கண்டு யாம்; போய் சென்று சென்று வணங்கினோம்; தண்காவிலே இன்று திருத்தண்காவிலே; காண்டும் வணங்குவோம்