PT 2.3.8

பிரகலாதனுக்கு அருளியவன் தங்கும் இடம்

1075 பள்ளியிலோதிவந்ததன்சிறுவன்
வாயில்ஓராயிரநாமம் *
ஒள்ளியவாகிப்போத ஆங்குஅதனுக்கு
ஒன்றுமோர்பொறுப்பிலனாகி *
பிள்ளையைச் சீறிவெகுண்டு தூண்புடைப்பப்
பிறையெயிற்றனல்விழிபேழ்வாய் *
தெள்ளியசிங்கமாகியதேவைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
PT.2.3.8
1075 ## pal̤l̤iyil oti vanta taṉ ciṟuvaṉ * vāyil or āyiram nāmam *
ŏl̤l̤iya ākip pota āṅku ataṉukku * ŏṉṟum or pŏṟuppu ilaṉ āki **
pil̤l̤aiyaic cīṟi vĕkuṇṭu tūṇ puṭaippa * piṟai ĕyiṟṟu aṉal vizhip pezh vāy *
tĕl̤l̤iya ciṅkam ākiya tevait * tiruvallikkeṇik kaṇṭeṉe-8

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1075. Prahlāda, returning home from school, recited a thousand divine names with shining joy. But Hiraṇya, unable to bear even a trace of that praise, grew furious and struck a pillar in rage. From it emerged the heroic Lion with crescent-like fangs, fire-filled eyes, and a gaping mouth, Narasimha, the Lord! I saw Him in sacred Thiruvallikkēṇi with my own eyes!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பள்ளியில் பள்ளிக்கூடத்தில்; ஓதி வந்த படித்து விட்டு வீட்டுக்கு வந்த; தன் சிறுவன் தன் மகன் பிரகலாதன்; வாயில் வாயில்; ஓராயிரம் நாமம் ஸஹஸ்ர நாமங்களை; ஒள்ளிய ஆகிப் போத அழகாக உச்சரிக்க; ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் அதை எள்ளளவும்; பொறுப்பு இலன் பொறுக்கமாட்டாதவனாக; ஆகி ஆகி இரணியன்; பிள்ளையை அந்த பிரகலாதனை; சீறி வெகுண்டு மிகவும் கோபித்து; தூண் புடைப்ப தூணைத் தட்டினபோது; பிறை பிறைபோன்ற; எயிற்று பற்களையும்; அனல் நெருப்பைக் கக்கும்; விழி கண்களையும்; பேழ்வாய் பெரிய வாயையுமுடைய; தெள்ளிய தெளிந்த; சிங்கம் நரசிம்மவதாரம் செய்த; ஆகிய தேவை தேவனை தெளிசிங்கப் பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
pal̤l̤iyil in school; ŏdhi after studies; vandha one who came to him; than siṛuvan his son prahlādhāzhwān, his; vāyil divine lips; ŏr āyira nāmam (sarvĕṣvaran-s) one thousand divine names; ol̤l̤iyavāgi beautifully; pŏdha as it came towards him; āngu there; adhanukku for reciting such emperumān-s divine names; onṛum ŏr even little bit; poṛuppu ilan āgi not having tolerance; pil̤l̤aiyai towards his son; sīṛi veguṇdu being very angry; thūṇ the pillar (which was laid by himself); pudaippa hit (in that); piṛai like crescent; eyiṛu teeth; anal fire sparks emitting; vizhi eyes; pĕzhvāy huge mouth; thel̤l̤iya clear; singam āgiya one who mercifully incarnated as narasimha; dhĕvai lord; thiruvallikkĕṇik kaṇdĕnĕ ī saw in thiruvallikkĕṇi.

Āchārya Vyākyānam

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே——2-3-8-

ஒள்ளியவாகி-அழகாக ஆஹ்வாத ஹஸ்தம்-பூரிப்புடன் திரு முகம்

—————————————————————

வியாக்யானம் –

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்

+ Read more