PT 2.3.10

இச்சொல்மாலை படித்தோர் தேவருலகு ஆள்வர்

1077 மன்னுதண்பொழிலும்வாவியும்மதிளும்
மாடமாளிகையும்மண்டபமும் *
தென்னன்தொண்டையர்கோன்செய்தநல்மயிலைத்
திருவல்லிக்கேணிநின்றானை *
கன்னிநன்மாட மங்கையர்தலைவன்
காமருசீர்க்கலிகன்றி *
சொன்னசொன்மாலைபத்துடன்வல்லார்
சுகமினிதாள்வர்வானுலகே. (2)
PT.2.3.10
1077 ## maṉṉu taṇ pŏzhilum vāviyum matil̤um * māṭa māl̤ikaiyum maṇṭapamum *
tĕṉṉaṉ tŏṇṭaiyar-koṉ cĕyta nal mayilait * tiruvallikkeṇi niṉṟāṉai **
kaṉṉi nal māṭa maṅkaiyar talaivaṉ * kāmaru cīrk kalikaṉṟi *
cŏṉṉa cŏl-mālai pattu uṭaṉ vallār * cukam iṉitu āl̤var vāṉ-ulake-10

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1077. The famous poet Kaliyan, the chief of Thirumangai filled with beautiful palaces, composed a garland of ten pāsurams on the god of Thiruvallikkeni filled with mandapams, tall palaces with porches, forts, ponds and cool groves constructed by the southern king of the Thondai country. If devotees learn and recite these ten pāsurams, they will reach the world of the gods in the sky and rule there happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு பொழிலும் நித்தியமாய்; தண் குளிர்ந்த; சோலைகளும் சோலைகளும்; வாவியும் நீர் நிலங்களும்; மதிளும் மதில்களும்; மாட மாளிகையும் மாட மாளிகைகளும்; மண்டபமும் மண்டபங்களும்; தென்னன் பாண்டிய குலத்தவரான; தொண்டையர் கோன் திருமங்கை ஆழ்வார்; செய்த அருளிச்செய்த; நல் மயிலை அழகிய மயிலையிலிருக்கும்; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; நின்றானை இருக்கும்; கன்னி நல் அழிவில்லாத நல்ல; மாட மாடங்களையுடைய; மங்கையர் தலைவன் திருமங்கைத் தலைவன்; காமரு சீர்க்கலிகன்றி அழகிய திருமங்கையாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; சொல் மாலை சொல் மாலையான; பத்துடன் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓதவல்லவர்கள்; சுகம் இனிது இனிய சுகமான; வான் உலகே ஆள்வர் பரமபதத்தை ஆள்வர்
mannu eternally; thaṇ cool; pozhilum gardens; vāviyum water bodies; madhil̤um fortified streets; mādam mansions; māl̤igaiyum multi-storeyed bungalows; maṇdapamum having halls; thennan descendant of pāṇdiya king; thoṇdaiyar for the residents of thoṇdai nādu; kŏn the king, thoṇdaimān chakravarthi; seydha built; nal beautiful; mayilaith thiruvallikkĕṇi in thiruvallikkĕṇi which is part of mylāppūr which is the capital city; ninṛānai on the one who stood; kanni as protection; nal beautiful; mādam having mansions; mangaiyar for the residents of thirumangai region; thalaivan being the leader; kāmar beautiful; sīr having ṣrīvaishṇavaṣrī (wealth of kainkaryam); kalikanṛi āzhvār; sonna mercifully sang; sol mālai garland of words; paththudan the ten pāsurams; vallār those who can learn; inidhu sugam to have eternal experience; vānulagu paramapadham; āl̤var will reach.