PT 2.3.1

அருச்சுனன் தேர்த்தட்டில் நின்றவன்

1068 விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும்
வேழமும்பாகனும்வீழ *
செற்றவன்தன்னை * புரமெரிசெய்த
சிவனுறுதுயர்களைதேவை *
பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு
பார்த்தன்றன்தேர்முன்நின்றானை *
சிற்றவைபணியால்முடிதுறந் தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
PT.2.3.1
1068 ## vil pĕru vizhavum kañcaṉum mallum * vezhamum pākaṉum vīzha *
cĕṟṟavaṉ-taṉṉai puram ĕri cĕyta * civaṉ uṟu tuyar kal̤ai tevai **
paṟṟalar vīyak kol kaiyil kŏṇṭu * pārttaṉ-taṉ termuṉ niṉṟāṉai *
ciṟṟavai paṇiyāl muṭi tuṟantāṉait * tiruvallikkeṇik kaṇṭeṉe-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1068. The lord fought and killed Kamsan, the wrestlers and the elephant Kuvalayabeedam and its mahout, removed the curse of Shivā, the destroyer of the three forts, helped Arjunā and drove the chariot in the Bhārathā war, defeating the enemies of the Pāndavās, and as Rāma, he obeyed the orders of his stepmother and gave up the kingdom of Ayodhya to his younger brother Bharathan. He stays in Thiruvallikkeni and I saw him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரு வில் பெரிய வில்; விழவும் உத்ஸவமும்; கஞ்சனும் கம்ஸனும்; மல்லும் மல்லர்களும்; வேழமும் குவலயாபீட யானையும்; பாகனும் அதன் பாகனும்; வீழ விழும்படி; செற்றவன் தன்னை அழித்தவனும்; புரம் எரி செய்த திரிபுரமெரித்த; சிவன் உறு சிவபெருமான் அடைந்த; துயர் ப்ரஹ்மஹத்தி சாபத்தை; களை தேவை போக்கினவனும்; பற்றலர் சத்துருக்கள்; வீயக் மாளும்படியாக; கோல் சாட்டையை; கையில் கொண்டு கையிலே கொண்டு; பார்த்தன் தன் அர்ஜுனனுடைய; தேர் முன் தேர் முன் பார்த்தசாரதியாய்; நின்றானை நின்றவனும்; சிற்றவை சிறிய தாய்; பணியால் கைகேயியின் சொல்லைக்கேட்டு; முடி கிரீடத்தை; துறந்தானை துறந்தவனுமான எம்பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
vil peru vizhavum the great festival of dhanur yāgam (ritual with bow); kanjanum kamsa; mallum the wrestlers such as chāṇūra, mushtika et al; vĕzhamum the elephant named kuvalayāpeedam; pāganum its mahout; vīzha to fall down; seṝavan thannai being the one who destroyed; puram eri seydha one who burnt thripuram (the three towns); sivan rudhran; uṛu acquired; thuyar the suffering due to harming his teacher (brahmā); kal̤ai eliminated; dhĕvai being the lord; paṝalar enemies; vīya to be destroyed; kŏl thorny stick; kaiyil in his hand; koṇdu holding; pārththan than arjunan-s; thĕr mun in front of the chariot; ninṛānai being the one who stood as the charioteer; siṝavai step-mother kaikĕyi-s; paṇiyāl obeying the words; mudi crown (which is to be given during coronation); thuṛandhānai ṣrī pārthasārathy who well abandoned; thiruvallikkĕṇi in thiruvallikkĕṇi; kaṇdĕn ī got to see