PT 2.3.5

நப்பின்னையின் மணாளன் தங்கும் இடம்

1072 இன்துணைப்பதுமத்து அலர்மகள்தனக்கும்
இன்பன் நற்புவிதனக்குஇறைவன் *
தந்துணைஆயர்பாவை நப்பின்னை
தனக்குஇறை மற்றையோர்க்கெல்லாம்
வன்துணை * பஞ்சபாண்டவர்க்காகி
வாயுரைதூதுசென்றியங்கும்
என்துணை * எந்தைதந்தைதம்மானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
PT.2.3.5
1072 iṉ tuṇaip patumattu alarmakal̤-taṉakkum iṉpaṉ * nal puvi-taṉakku iṟaivaṉ *
taṉ tuṇai āyar pāvai nappiṉṉai taṉakku iṟai * maṟṟaiyorkku ĕllām
vaṉ tuṇai ** pañca pāṇṭavarkku āki * vāy urai tūtu cĕṉṟu iyaṅkum *
ĕṉ tuṇai ĕntai tantai tammāṉai * tiruvallikkeṇik kaṇṭeṉe-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1072. Thirumāl, the king of the world, the beloved of Lakshmi, the husband of Nappinnai, the cowherd girl, and a companion for all, who went as a messenger to the Kauravās for the Pāndavās and was the help of my father and the father of my father, stays in Thiruvallikkeni temple and I saw him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன் துணை தனக்கினிய துணையான; பதுமத்து தாமரைப்பூவில்; அலர்மகள் தனக்கும் பிறந்த மஹாலக்ஷ்மிக்கு; இன்பன் இனியவனும்; நல் புவி தனக்கு இறைவன் பூமா தேவிக்கு நாதனும்; தன் துணை தன்னையே துணையாகக் கொண்ட; ஆயர் பாவை ஆயர்குலப் பெண்; நப்பின்னை தனக்கு நப்பின்னைக்கு; இறை நாயகனும்; மற்றையோர்க்கு எல்லாம் மற்றுமுள்ள எல்லாருக்கும்; வன் துணை பெரிய வலிய துணையாயிருப்பவனும்; பஞ்ச பாண்டவர்க்கு ஆகி பஞ்ச பாண்டவர்களுக்கு; தூது சென்று தானே தூதனாக சென்று; வாய் உரை அவர்களுக்காக; இயங்கும் பேசினவனும்; என் துணை எனக்குத் துணையானவனும்; எந்தை தந்தை என் குலத் தந்தையுமான; தம்மானை பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
in sweet (for his heart); thuṇai being a companion; padhumam one who has lotus flower as birth place; alar magal̤ thanakkum for periya pirāttiyār; inban being enjoyable; nal one who forbears everything; puvi thanakku for ṣrī bhūmip pirātti; iṛaivan being dear; than thuṇai having him as the only companion; āyar pāvai cowherd girl; nappinnai thanakku for nappinnaip pirātti; iṛai being the lord; maṝaiyŏrkku ellām for everyone else; val thuṇai being a strong companion; panja pāṇdavarkku for pancha pāṇdavas; āgi assuming all types of relationships; vāy urai their words; senṛu informed to dhuryŏdhana et al; thūdhu iyangum one who mercifully went as divine messenger; en thuṇai being a friend in need for people like me; endhai thandhai thammānai the lord of my clan; thiruvallikkĕṇik kaṇdĕnĕ ī saw in thiruvallikkĕṇi.