PT 2.3.4

கோவர்த்தன மலையால் மழை தடுத்தவன் தங்கும் இடம்

1071 இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த
எழில்விழவில்பழநடைசெய் *
மந்திரவிதியில்பூசனைபெறாது
மழைபொழிந்திடத்தளர்ந்து * ஆயர்
எந்தமோடு இனவாநிரைதளராமல்
எம்பெருமான்! அருளென்ன *
அந்தமில்வரையால்மழைதடுத் தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
PT.2.3.4
1071 intiraṉukku ĕṉṟu āyarkal̤ ĕṭutta * ĕzhil vizhavil pazha naṭaicĕy *
mantira vitiyil pūcaṉai pĕṟātu * mazhai pŏzhintiṭat tal̤arntu **
āyar ĕntammoṭu iṉa ā-nirai tal̤arāmal * ĕm pĕrumāṉ arul̤ ĕṉṉa *
antam il varaiyāl mazhai taṭuttāṉait * tiruvallikkeṇik kaṇṭeṉe-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1071. Our lord Kannan saved the cows and the cowherds when they worshiped him saying, “O dear lord! Give us your grace and protect us and our cows from the storm!”, carried Govardhanā mountain as an umbrella and saved them from the storm sent by Indra, as he was angry because they had not performed their pujas to him immediately. He stays in Thiruvallikkeni and I saw him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்திரனுக்கு இந்திரனுக்கு; என்று விருந்திட வேண்டுமென்று; ஆயர்கள் எடுத்த ஆயர்கள் நடத்தின; எழில் விழவில் அழகிய விழாவில்; பழ நடைசெய் எப்போதும் செய்யும்; மந்திர விதியில் மந்திர விதிப்படி; பூசனை பூஜைகள்; பெறாது செய்யப்படாததால்; மழை பொழிந்திட இந்திரன் கல் மழை பெய்விக்க; தளர்ந்து ஆயர் ஆயர்கள் துன்பப்பட்டு; எம் பெருமான் கண்ணபிரானே!; எந்தம்மோடு இன நாங்களும்; ஆ நிரை பசுக்களின் கூட்டமும்; தளராமல் மழையினால் துயரப்படாமல்; அருள் காப்பாற்றபடவேண்டும்; என்ன என்று பிரார்த்திக்க; அந்தம் இல் அளவில்லாத மிகப்பெரிய; வரையால் கோவர்த்தனமலையைக் கொண்டு; மழை மழையை; தடுத்தானை தடுத்தருளின பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
indhiranukku enṛu to offer feast for indhra; āyargal̤ cowherds; eduththa vowed; ezhil beautiful; vizhavil in the festival of sacrifice; pazha nadai sey as per previous practice; mandhira vidhiyil as per manthrams; pūsanai peṛādhu due to not getting worshipped; mazhai hale; pozhindhida made it rain; āyar cowherds; thal̤arndhu became sad; emperumān ŏh our lord!; endhammŏdu with us; inam herds of; ānirai herds of cow; thal̤arāmal to not suffer; arul̤ mercifully protect; enna as they prayed; andham il immeasurable; varaiyāl by gŏvardhana mountain; mazhai that rain; thaduththānai one who stopped; thiruvallikkĕṇik kaṇdĕnĕ saw in thiruvallikkĕṇi