37

Thirumanik Koodam

திருமணிக்கூடம்

Thirumanik Koodam

Thiru Nāngur

ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ மணிக்கூட நாயகாய நமஹ

Thayar: Sri Thirumagal Nāchiyār (Sridevi), Boodevi
Moolavar: Varadharāja Perumāl, Manikooda Nāyakan, Gajendara Varadan
Utsavar: Varadharāja Perumāl
Vimaanam: Kanaga
Pushkarani: Chandhra
Thirukolam: Amarndha (Sitting)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 1:00 p.m. 3:00 p.m. to 8:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Thirumanikkudam
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.5.1

1288 தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி * மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை *
பூம்புனற்பொன்னி முற்றும்புகுந்து பொன்வரண்ட * எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே. (2)
1288 ## தூம்பு உடைப் பனைக் கை வேழம் *
துயர் கெடுத்தருளி * மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக் *
கடு மழை காத்த எந்தை *
பூம் புனல் பொன்னி முற்றும் **
புகுந்து பொன் வரன்ட எங்கும் *
தேம் பொழில் கமழும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே-1
1288. ##
thoombudaip panaikkai vEzham * thuyar_keduththaruLi *
mannukāmbudaik kunRamEnthik * kadumazhai kāththa enthai *
poompunal Ponni muRRum * pugunthu PoNnvaraNda *
engumthEmPozhil kamazhum nāngoor_th * thirumaNikkoodaththānE (4.5.1)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1288. Our father who took away the suffering of the long-trunked elephant Gajendra when he was caught by a crocodile and carried Govardhanā mountain as an umbrella and saved the cows and cowherds from the storm stays in Thirumanikkudam in Nangur blooming with fragrant flowers in the groves that shed honey where the Kaveri river with flourishing water flows bringing gold and leaving it on its banks.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூம்பு உடை துளைகளையுடைய பெரிய; பனைக்கை பனை போல் தும்பிக்கையுடைய; வேழம் துயர் யானையின் துயர்; கெடுத்தருளி கெடுத்தருளினவனும்; மன்னும் பூமியில் மூங்கில்கள்; காம்புடை வேரூன்றியிருந்த; குன்றம் கோவர்த்தன மலையை; ஏந்தி குடையாக தூக்கி; கடு மழை கடும் மழை; காத்த எந்தை காத்த எம்பெருமான்; பூம்புனல் அழகிய ஜலத்தையுடைய; பொன்னி காவேரி; முற்றும் புகுந்து எங்கும் பாய்ந்து; பொன் பொற்குவியல்களை; வரண்ட எங்கும் தள்ளிக் கொண்டு வர; தேம்பொழில் நீர் நிறந்த சோலைகள்; கமழும் மணம் வீசும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
thUmbu udai having holes; panai stout like a palm tree; kai having trunk; vEzham gajEndhrAzhwAn-s; thuyar sorrow; keduththu aruLi mercifully eliminated; mannu fitting well (on earth) and remaining (well rooted); kAmbu udai having bamboos; kunRam gOvardhana mountain; Endhi held as umbrella; kadu cruel; mazhai hailstorm; kAththa stopped and protected gOkulam; endhai my lord; pU beautiful; punal having water; ponni the divine kAvEri river; muRRum at all places; pugundhu entered; pon gold (which were present there); varaNda as brought along; engum at all places; thEm pozhil water filled gardens; kamazhum spreading fragrance; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.2

1289 கவ்வைவாளெயிற்றுவன்பேய்க் கதிர்முலைசுவைத்து * இலங்கை
வவ்வியஇடும்பைகூரக் கடுங்கணைதுரந்தஎந்தை *
கொவ்வைவாய்மகளிர்கொங்கைக் குங்குமம்கழுவிப் போந்த *
தெய்வநீர்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1289 கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் *
கதிர் முலை சுவைத்து * இலங்கை
வவ்விய இடும்பை தீரக் *
கடுங் கணை துரந்த எந்தை ** -
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் *
குங்குமம் கழுவிப் போந்த *
தெய்வ நீர் கழும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே-2
1289
kavvai vāLeyiRRu vanpEyk * kathirmulai chuvaiththu *
ilangai vavviya idumbai thirak * kadungaNai thurantha enthai *
kovvaivāy magaLir kongaik * kungumam kazhuvip pOntha *
theyvan^eer kamazhum nāngoor_th * thirumaNikkoodaththānE (4.5.2)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1289. Our father who drank milk from the breasts of Putanā whose teeth were sharp as swords, and who shot his powerful arrows to kill the Rākshasas in Lankā and take away the suffering of the people stays in Thirumanikkudam in Nāngur where women with sweet mouths as red as kovvai fruits bathe in the Kaveri river and the kumkum ornamenting their breasts is washed off and mingles with the water, making it divine.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கவ்வை ஆரவாரம்செய்பவளும்; வாள் வாள்போன்ற; எயிற்று பற்களையுடையவளும்; வன் கல்நெஞ்சுடையவளான; பேய் பூதனையின்; கதிர்முலை விஷப்பாலை; சுவைத்து உண்டவனும்; இலங்கை வவ்விய இலங்கையின்; இடும்பை தீர துயர் தீர; கடுங் கடுமையான; கணை துரந்த அம்புகளை செலுத்தின; எந்தை எம்பெருமான்; கொவ்வை கோவைக்கனி போன்ற; வாய் அதரத்தையுடைய; மகளிர் பெண்கள்; கொங்கை மார்புக்; குங்குமம் கழுவி குங்குமத்தை கழுவின; போந்த தெய்வ திவ்யமான; நீர் கமழும் மணம் கமழும் நீருடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
kavvai having loud roar; vAL sword like; eyiRu having teeth; van cruel minded; pEy pUthanA-s; kadhir shining (due to abundance of poison); mulai bosom; suvaiththu mercifully consumed; ilangai lankA-s; manniya eternal; idumbai poverty of being connected to evil people; thIra to eliminate; kadum cruel; kaNai (killer) arrows; thurandha who shot; endhai my lord; kovvai like kOvai fruit; vAy having lips; magaLir ladies-; kongai applied on bosoms; kungumam vermillion mix; kazhuvi wash; pOndha and flowing; dheyvam distinguished; nIr water; kamazhum spreading fragrance; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.3

1290 மாத்தொழில்மடங்கக்செற்று மருதிறநடந்து * வன்தாள்
சேத்தொழில்சிதைத்துப் பின்னைசெவ்வித்தோள் புணர்ந்தஎந்தை *
நாத்தொழில்மறைவல்லார்கள் நயந்துஅறம்பயந்த * வண்கைத்
தீத்தொழில்பயிலும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1290 மாத் தொழில் மடங்கச் செற்று *
மருது இற நடந்து * வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் * பின்னை
செவ்வித் தோள் புணர்ந்த எந்தை ** -
நாத் தொழில் மறை வல்லார்கள் *
நயந்து அறம் பயந்த வண் கைத் *
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே-3
1290
māthThozhil madangak CheRRu * maruthiRa nadanthu *
vaNnthāLchEthThozhil chithaiththu * pinnai ChevviththOL puNarntha enthai *
nāthThozhil maRaivallārgaL * nayanthu_aRampayantha VaNkaith *
theethThozhil payilum nāngoor_th * thirumaNikkoodaththānE (4.5.3)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1290. Our father who conquered the Asuran Kesi when he came as a horse, went between two marudu trees and destroyed the Asurans, and fought with seven bulls and married Nappinnai, embracing her beautiful arms, stays in Thirumanikkudam in Nāngur where generous, virtuous Andanars recite the Vedās well and perform fire sacrifices.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாத் தொழில் குதிரை வடிவுகொண்டு வந்த; மடங்கக் செற்று அஸுரனைக் கொன்று; மருது மருதமரங்கள்; இற நடந்து இற்று விழும்படி நடந்து; வன்தாள் வலிய கால்களையுடைய; சேத் தொழில் ஏழு ரிஷபங்களை; சிதைத்து அழித்து; பின்னை நப்பின்னையின்; செவ்வி தோள் அழகிய தோள்களை; புணர்ந்த எந்தை அணைத்த பெருமான்; நாத் தொழில் நாவுக்கு வியாபாரமான; மறை வேதங்களைக் கற்ற; வல்லார்கள் வல்லவர்கள் அவைகளை; நயந்து மதித்து; அறம்பயந்த தருமங்களை அனுஷ்டித்தவர்களும்; வண் கை திடமான கைகளாலே செய்யப்படும்; தீத் தொழில் அக்நி காரியங்களை; பயிலும் இடை விடாது செய்யும் வைதிகர்கள் வாழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
mA kESi, the demon-s; thozhil act; madanga to be controlled; seRRu killed; marudhu marudha trees; iRa to break; nadandhu crawled in between those; van strong; thAL having feet; sE bulls; thozhil act; sidhaiththu destroyed; pinnai nappinnaip pirAtti-s; sevvi beautiful; thOL with shoulders; puNarndha one who embraced; endhai my lord; nA thozhil the act of the tongue, adhyayanam (learning/reciting) which was done; maRai vEdhams; vallArgaL brAhmaNas who can handle; nayandhu eagerly; dharmaththai conducted; vaN generous; kai with the hands; thI thozhil fire rituals; payilum conducting; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.4

1291 தாங்கருஞ்சினத்துவன்தாள் தடக்கைமாமருப்புவாங்கி *
பூங்குருந்தொசித்துப்புள்வாய்பிளந்த எருதடர்த்தஎந்தை *
மாங்கனிநுகர்ந்தமந்தி வந்துவண்டிரிய * வாழைத்
தீங்கனிநுகரும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1291 தாங்கு-அரும் சினத்து வன் தாள் *
தடக் கை மா மருப்பு வாங்கி *
பூங் குருந்து ஒசித்து புள் வாய்
பிளந்து * எருது அடர்த்த எந்தை ** -
மாங்கனி நுகர்ந்த மந்தி *
வந்து வண்டு இரிய * வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே-4
1291
thāngaruNY chinaththu vaNnthāL * thadakkaimā maruppu vāngi *
poonkurun^thu ochiththup puLvāy piLanthu * eruthadarththa enthai *
māngani nugarntha manthi * vanthuvaNdiriya *
vāzhaiththeengaNni nugarum nāngoor_th * thirumaNikkoodaththānE (4.5.4)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1291. Our father who fought angrily with the long-trunked elephant Kuvalayābeedam and broke its tusks, killed the Asurans when they came as kurundu trees breaking them, killed Bahasuran, splitting open his beak when he came as a bird, and defeated Arishtāsuran when he came as a bull stays in Thirumanikkudam in Nāngur where a monkey eats a mango fruit and then goes to a banana tree and eats bananas, scaring away the bees that swarm around it.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாங்கு அரும் தாங்கமுடியாத; சினத்து கோபத்தையுடையதும்; வன்தாள் வலிய கால்களையும்; தடக்கை துதிக்கையையுமுடைய; மா மருப்பு யானையின் கொம்பை; வாங்கி பிடுங்கியவனும்; பூங் குருந்து குருந்த மரத்தை; ஒசித்து முறித்தவனும்; புள் வாய் பறவையின்; பிளந்து வாயைக் கிழித்தவனும்; எருது அடர்த்த எருதுகளை; எந்தை அடக்கியவனுமான பெருமான்; மாங்கனி மாம்பழங்களை; நுகர்ந்த உண்ட; மந்தி வந்து குரங்கு வந்து; வண்டு இரிய வண்டுகள் சிதறியோடும்படி; வாழைத் இனிய வாழை; தீங்கனி நுகரும் பழங்களை உண்ணும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
thAngu arum unable to bear (for anyone); sinaththu having anger; van thAL having strong feet; thadam kai kuvalayApeedam, which is having huge trunk, its; mA large; maruppu tusk; vAngi plucked; pUm blossomed; kurundhu kurundha tree; osiththu broke; puL bakAsura-s; vAy mouth; piLandhu tore; erudhu bulls; adarththa one who crushed and killed; endhai my lord; mAngani mangoes; nugarndha ate; mandhi female monkey; vandhu left there; vaNdu (came to drink honey) beetles; iriya to disperse and run away; vAzhai plantain tree-s; thI sweet; kani fruits; nugarum ate; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.5

1292 கருமகளிலங்கையாட்டி பிலங்கொள்வாய்திறந்து * தன்மேல்
வருமவள்செவியும்மூக்கும் வாளினால்தடிந்தஎந்தை *
பெருமகள்பேதைமங்கை தன்னொடும்பிரிவிலாத *
திருமகள்மருவும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1292 கரு மகள் இலங்கையாட்டி *
பிலங் கொள் வாய் திறந்து * தன்மேல்
வரும்-அவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை ** -
பெரு மகள் பேதை மங்கை *
தன்னொடும் பிரிவு இலாத *
திருமகள் மருவும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே-5
1292
karumagaL ilangaiyātti * pilangoLvāy thiRanthu *
thanmEl varumavaL Cheviyummookkum * vāLināl thadintha enthai *
perumagaL pEthai mangai * thannodum pirivilātha *
thirumagaL maruvum nāngoor_th * thirumaNikkoodaththanE (4.5.5)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1292. Our father who cut off with a sword the nose and ears of dark Surpanaha, the princess of Lankā, when she came opening her cave-like mouth stays in Thirumanikkudam in Nāngur where the innocent earth goddess and the divine Lakshmi stay always with him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு மகள் மட்டமான ஸ்த்ரீயான; இலங்கை இலங்கையில்; ஆட்டி அதிகாரம் செலுத்துமவளாய்; பிலங்கொள் குஹைபோன்ற; வாய் திறந்து வாயைத் திறந்துகொண்டு; தன்மேல் தன் அருகில்; வரும் அவள் வந்த சூர்ப்பணகையின்; செவியும் மூக்கும் காதையும் மூக்கையும்; வாளினால் வாளினால்; தடிந்த எந்தை அறுத்த எம்பெருமான்; பெருமகள் பெருமையுடைய; பேதை மங்கை பூதேவியும்; தன்னொடும் பிரிவு இலாத தன்னை விட்டுப்பிரியாத; திருமகள் மருவும் திருமகளும் இருக்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
karumagaL very lowly like a chaNdALa woman; ilangai Atti being the controller of lankA; pilam koL cave like; vAy thiRandhu opening her mouth; than mEl on self; varum avaL sUrpaNakA, who came; seviyum ear; mUkkum nose; vALinAl with the sword; thadhindha severed; endhai my lord; peru magaL having natural femininity; pEdhai one who is ignorant on the defects of devotees; mangai bhUmip pirAtti; thannodum with her; pirivu ilAdha one who never separates (being together always); thirumagaL SrIdhEvi; maruvum eternally residing; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.6

1293 கெண்டையும்குறளும்புள்ளும் கேழலும்அரியும்மாவும் *
அண்டமும்சுடரும்அல்லாவாற்றலும்ஆயஎந்தை *
ஓண்டிறல்தென்னனோடவடவரசோட்டம்கண்ட *
திண்டிறலாளர்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1293 கெண்டையும் குறளும் புள்ளும் * கேழலும் அரியும் மாவும் *
அண்டமும் சுடரும் அல்லா * ஆற்றலும் ஆய எந்தை **
ஒண் திறல் தென்னன் ஓட * வட அரசு ஓட்டம் கண்ட *
திண் திறலாளர் நாங்கூர்த் * திருமணிக்கூடத்தானே-6
1293
Kendaiyum kuRaLum puLLum * kEzhalum ariyummāvum *
andamum chudarum allā * āRRalum āya_enthai *
ondiRal ThennaNnOda * vadavara chOttam_kanda *
thindiRalāLar nāngoor_th * thirumaNikkoodaththanE (4.5.6)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1293. Our father who is the earth, the sun, the moon and all other things and has taken the forms of a fish, a dwarf, a swan, a boar, a man-lion and a horse stays in the Thirumanikkudam temple in Nāngur where warriors chased off the northern Cholas and the strong southern Pandiyan kings and defeated them.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கெண்டையும் குறளும் மத்ஸ்யமும் வாமனனும்; புள்ளும்கேழலும் ஹம்ஸமும் வராஹமும்; அரியும் நரசிம்மமும்; மாவும் ஹயக்ரீவனும் ஆகிய இவ்வவதாரங்களையுடையவனும்; அண்டமும் சுடரும் அண்டமும் சூரியசந்திரர்களும்; அல்லா ஆற்றலும் மற்றுமுள்ள எல்லா வஸ்துக்களிலுமிருக்கும்; ஆய எந்தை எம்பெருமான்; ஒண் திறல் மிக்க பலத்தையுடைய; தென்னன் தென் தேசத்துக்கு அரசனான பாண்டியன்; ஓட ஓடும்படியாகவும்; வட அரசு வடக்கேயுள்ள சோழ; ஓட்டம் கண்ட அரசனை ஓடச் செய்தும்; திண் திறலாளர் திடமான பலத்தையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
keNdaiyum mathsya (fish); kuRaLum vAmana; puLLum hamsa (swan), the bird; kEzhalum varAha (pig); ariyum narasimha; mavum hayagrIva (having such incarnations); aNdamum brahmA-s oval shaped universe; sudarum sun and moon; allA other; ARRalum best entities; Aya one who is mercifully present to have as his prakAram (forms); endhai my lord; oN thiRal very strong; thennan pANdiya, who was the ruler of southern region; Oda to flee; vadavarasu chOzha who was the king of the region north of pANdiya-s kingdom; Ottam kaNda made to flee after losing; thiN thiRalALar very strong brAhmaNas-; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.7

1294 குன்றமும்வானும்மண்ணும் குளிர்புனல்திங்களோடு *
நின்றவெஞ்சுடரும் அல்லாநிலைகளும்ஆயஎந்தை *
மன்றமும்வயலும்காவும் மாடமும்மணங்கொண்டு * எங்கும்
தென்றல்வந்துலவும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1294 குன்றமும் வானும் மண்ணும் *
குளிர் புனல் திங்களோடு *
நின்ற வெம் சுடரும் அல்லா *
நிலைகளும் ஆய எந்தை ** -
மன்றமும் வயலும் காவும் *
மாடமும் மணங் கொண்டு * எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே-7
1294
kunRamum vānum maNNum * kuLir_puNnal thingaLOdu *
ninRaVeNYchudarum allā * nilaikaLum āya_enthai *
manRamum vayalum kāvum * mādamum maNankoNdu *
engumThenRalvan^thulavum nāngoor_th * thirumaNikkoodaththānE (4.5.7)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1294. Our father who is the mountains, the sky, the earth, cool water, the moon, the hot sun and all other things stays in Thirumanikkudam temple in Nāngur where a breeze blows spreading fragrance everywhere through mandrams, fields, groves and palaces.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றமும் மலைகளும்; வானும் ஆகாசமும்; மண்ணும் பூமியும்; குளிர் புனல் குளிர்ந்த நீரும்; திங்களோடு சந்திரனும்; நின்ற நிலையான; வெம் சுடரும் வெப்பமுடைய சூரியனும்; அல்லா மற்றுமுள்ள; நிலைகளும் நக்ஷத்ராதிகளும்; ஆய ஆகிய அனைத்தும் தானேயாய்; எந்தை இருக்கும் எம்பெருமான்; மன்றமும் பெரிய வீதிகளும்; வயலும் வயல்களும்; காவும் தோட்டங்களும்; மாடமும் மாட மாளிகைகளும் ஆகிய; எங்கும் எல்லாவிடங்களிலும்; தென்றல் தென்றல் காற்றானது; மணங்கொண்டு மணம் வீசிக்கொண்டு; வந்து உலவும் வந்து உலாவும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
kunRamum mountains; vAnum ether; maNNum earth; kuLir cool; punal water; thingaLOdu moon; ninRa firmly stood; vem sudarum sun which has hot rays; allA nilaigaLum all other stars (all of these); Aya having as his prakAram; endhai my lord; manRamum wide streets; vayalum fertile fields; kAvum gardens; mAdamum mansions (caused from these); maNam fragrance; koNdu vandhu extracting it; engum in all places; thenRal southerly breeze from the mountain; ulavum roaming; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.8

1295 சங்கையும்துணிவும்பொய்யும்மெய்யும் இத்தரணி யோம்பும் *
பொங்கியமுகிலும் அல்லாப்பொருள்களும்ஆயஎந்தை *
பங்கயமுகுத்ததேறல்பருகியவாளைபாய *
செங்கயலுகளும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1295 சங்கையும் துணிவும் பொய்யும் *
மெய்யும் இத் தரணி ஓம்பும் *
பொங்கிய முகிலும் அல்லாப் *
பொருள்களும் ஆய எந்தை ** -
பங்கயம் உகுத்த தேறல் *
பருகிய வாளை பாய *
செங் கயல் உகளும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே -8
1295
changaiyum thuNivum Poyyum * meyyum iththaraNiyOmbum *
Pongiya mugilum allāp * PoruLgaLum āya_enthai *
pangaya muguththa thERal * parugiya vāLaipāya *
chengayalugaLum nāngoor_th * thirumaNikkoodaththānE (4.5.8)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1295. Our father who is doubt, bravery, lies and truth, the cloud that nourishes the earth and all other things stays in Thirumanikkudam temple in Nāngur where vālai fish drink honey dripping from lotuses and jump while beautiful kayal fish frolic in the ponds.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கையும் ஸந்தேஹமும்; துணிவும் நிச்சயமும்; பொய்யும் அஸத்யமும்; மெய்யும் ஸத்யமும்; இத் தரணி இந்த உலகத்தை; ஓம்பும் காக்கும்; பொங்கிய பலனை எதிபார்க்காத; முகிலும் மேகமும்; அல்லா மற்றுமுள்ள; பொருள்களும் பொருள்களும்; ஆய தானேயாய் இருக்கும்; எந்தை எம்பெருமான்; பங்கயம் தாமரைப் பூவிலிருந்து; உகுத்த தேறல் பெருகின தேனை; பருகிய வாளை பருகிய வாளை; பாய மீன்கள் இங்குமங்கும் ஓட; செங்கயல் சிவந்த கயல் மீன்கள்; உகளும் பயந்து துள்ளுமிடமான; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
sangaiyum doubt; thuNivum clarity; poyyum untruth; meyyum truth; iththaraNi this earth; Ombum one which protects; pongiya growing; mugilum cloud; allA other; poruLgaLum entities (all of these); Aya one who can control; endhai my lord; pangayam from lotus flower; uguththa flowing; thERal honey; parugiya drank; vALai huge fish; pAya as it jumps; sem reddish; kayal small fish; ugaLum jump away (due to fear); nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.9

1296 பாவமும்அறமும்வீடும் இன்பமும்துன்பந்தானும் *
கோவமும்அருளும் அல்லாக்குணங்களும்ஆயஎந்தை *
மூவரில்எங்கள்மூர்த்தி இவனெனமுனிவரோடு *
தேவர்வந்திறைஞ்சும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1296 பாவமும் அறமும் வீடும் *
இன்பமும் துன்பம்-தானும் *
கோவமும் அருளும் அல்லாக் *
குணங்களும் ஆய எந்தை ** -
மூவரில் எங்கள் மூர்த்தி *
இவன் என முனிவரோடு *
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே-9
1296
pāvamum aRamum veedum * inbamum thunbam thānum *
kOvamum aruLum allāk * kuNangaLum āya_enthai *
'moovaril engaL moorththi * ivaNn, 'eNna munivarOdu *
thEvar van^thiRainchum nāngoor_th * thirumaNikkoodaththanE (4.5.9)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1296. Our father who is sin, dharma, Mokshā, happiness, sorrow, anger, compassion and all good qualities stays in Thirumanikkudam temple in Nāngur where sages and all the gods come and worship him saying, “Of all the three gods he is dearest to us. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாவமும் பாபமும்; அறமும் புண்ணியமும்; வீடும் மோக்ஷமும்; இன்பமும் இன்பமும்; துன்பம் தானும் துக்கமும்; கோவமும் கோபமும்; அருளும் அருளும்; அல்லா மற்றுமுள்ள அனைத்து; குணங்களும் குணங்களும் உடைய; ஆய தானேயாயிருக்கும்; எந்தை எம்பெருமான்; மூவரில் மும்மூர்த்திகளுள்; எங்கள் மூர்த்தி எங்கள் மூர்த்தி விஷ்ணு; இவன் என என தெளிந்து; முனிவரோடு முனிவரோடு; தேவர் தேவர்களும்; வந்து இறைஞ்சும் வந்து வணங்குமிடமான; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
pAvamum pApam (sin); aRamum puNNiyam (puNyam/virtue); vIdum mOksham; inbamum joy; thunbam thAnum sorrow; kOvamum anger; aruLum mercy; allA other; guNangaLum qualities such as sathva (goodness) etc (all of these); Aya one who controls; endhai my lord; mUvaril among brahmA, vishNu and rudhra; engaL one who is our refuge; mUrththi lord; ivan ena being clear that it is only this vishNu; munivarOdu along with sages such as sanaka et al; dhEvar dhEvathAs such as indhra et al; vandhu approach; iRainjum remaining to be surrendered to; nAngUr present in thirunAngUr; thirumaNik kUdaththAn is mercifully present in thirumaNik kUdam.

PT 4.5.10

1297 திங்கள்தோய்மாடநாங்கூர்த் திருமணிக்கூடத்தானை *
மங்கையர்தலைவன் வண்தார்க்கலியன்வாயொலிகள் வல்லார் *
பொங்குநீருலகமாண்டு பொன்னுலகாண்டு * பின்னும்
வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே. (2)
1297 ## திங்கள் தோய் மாட நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானை *
மங்கையர் தலைவன் வண் தார்க் *
கலியன் வாய் ஒலிகள் வல்லார் **
பொங்கு நீர் உலகம் ஆண்டு *
பொன்-உலகு ஆண்டு * பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
ஊடு போய் * விளங்குவாரே-10
1297. ##
thingaLthOy māda nāngoor_th * thirumaNikkoodaththānai *
mangaiyar thalaivaNn vaN_thārk * kaliyan vāYoligaL vallār *
Pongu_n^eer ulaga māNdu * Ponnulakāndu *
pinnumVengathirp parithi vattaththoodupOy * viLanguvārE (4.5.10)

Ragam

பிலஹரி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1297. Kaliyan, the chief of Thirumangai adorned with beautiful garlands composed ten pāsurams praising the god of Thirumanikkudam Koyil in Nāngur where the moon shines above palaces. If devotees learn and recite these pāsurams they will rule this world surrounded by the ocean and go to the golden world of the spiritual world, becoming stars and shining in the sky where the sun and moon move.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திங்கள் சந்திரனை; தோய் தொடும்படி உயர்ந்த; மாட மாடங்களையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத்தானை எம்பெருமானைக் குறித்து; மங்கையர் தலைவன் திருமங்கைத் தலைவன்; வண் தார் அழகிய மாலையை; கலியன் அணிந்த ஆழ்வார்; வாய் அருளிச்செய்த; ஒலிகள் இப்பாசுரங்களை; வல்லார் ஓத வல்லார்; பொங்கு நீர் கடல் சூழ்ந்த; உலகம் ஆண்டு இவ்வுலகை ஆண்டு பின்பு; பொன் உலகு ஸ்வர்க்கலோகத்தை; ஆண்டு அனுபவித்து; பின்னும் மேலும்; வெம் கதிர்ப் பரிதி ஸூர்யமண்டலத்தின்; வட்டத்து ஊடு போய் வழியேசென்று; விளங்குவாரே பரமபதத்தில் வாழ்வர்
thingaL (reaching) in the orbit of moon; thOy touching; mAdam having mansions; nAngUr in thirunAngUr; thirumaNikkUdaththAnai on emperumAn who is mercifully residing in the dhivyadhESam named thirumaNikkUdam; mangaiyar for the residents of thirumangai region; thalaivan being the king; vaN beautiful; thAr having garland; kaliyan thirumangai AzhwAr; vAy mercifully spoke; oligaL these ten pAsurams which are a garland of words; vallAr those who can recite; pongu rising; nIr being surrounded by water-filled ocean; ulagam earth; ANdu rule over; pon ulagu heaven; ANdu enjoy; pinnum further; vem kadhir sun-s; parudhi vattaththu orbit-s; Udu pOy going through the middle (i.e. going through the archirAdhi mArgam); viLanguvAr will shine (in paramapadham)