PT 4.5.6

தசாவதாரம் எடுத்தவன் தங்கும் இடம்

1293 கெண்டையும்குறளும்புள்ளும் கேழலும்அரியும்மாவும் *
அண்டமும்சுடரும்அல்லாவாற்றலும்ஆயஎந்தை *
ஓண்டிறல்தென்னனோடவடவரசோட்டம்கண்ட *
திண்டிறலாளர்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
PT.4.5.6
1293 kĕṇṭaiyum kuṟal̤um pul̤l̤um * kezhalum ariyum māvum *
aṇṭamum cuṭarum allā * āṟṟalum āya ĕntai **
ŏṇ tiṟal tĕṉṉaṉ oṭa * vaṭa aracu oṭṭam kaṇṭa *
tiṇ tiṟalāl̤ar nāṅkūrt * tirumaṇikkūṭattāṉe-6

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1293. Our father who is the earth, the sun, the moon and all other things and has taken the forms of a fish, a dwarf, a swan, a boar, a man-lion and a horse stays in the Thirumanikkudam temple in Nāngur where warriors chased off the northern Cholas and the strong southern Pandiyan kings and defeated them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கெண்டையும் குறளும் மத்ஸ்யமும் வாமனனும்; புள்ளும்கேழலும் ஹம்ஸமும் வராஹமும்; அரியும் நரசிம்மமும்; மாவும் ஹயக்ரீவனும் ஆகிய இவ்வவதாரங்களையுடையவனும்; அண்டமும் சுடரும் அண்டமும் சூரியசந்திரர்களும்; அல்லா ஆற்றலும் மற்றுமுள்ள எல்லா வஸ்துக்களிலுமிருக்கும்; ஆய எந்தை எம்பெருமான்; ஒண் திறல் மிக்க பலத்தையுடைய; தென்னன் தென் தேசத்துக்கு அரசனான பாண்டியன்; ஓட ஓடும்படியாகவும்; வட அரசு வடக்கேயுள்ள சோழ; ஓட்டம் கண்ட அரசனை ஓடச் செய்தும்; திண் திறலாளர் திடமான பலத்தையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
keṇdaiyum mathsya (fish); kuṛal̤um vāmana; pul̤l̤um hamsa (swan), the bird; kĕzhalum varāha (pig); ariyum narasimha; mavum hayagrīva (having such incarnations); aṇdamum brahmā-s oval shaped universe; sudarum sun and moon; allā other; āṝalum best entities; āya one who is mercifully present to have as his prakāram (forms); endhai my lord; oṇ thiṛal very strong; thennan pāṇdiya, who was the ruler of southern region; ŏda to flee; vadavarasu chŏzha who was the king of the region north of pāṇdiya-s kingdom; ŏttam kaṇda made to flee after losing; thiṇ thiṛalāl̤ar very strong brāhmaṇas-; nāngūr present in thirunāngūr; thirumaṇik kūdaththān is mercifully present in thirumaṇik kūdam.