38

Annan Koil

திருவெள்ளக்குளம்

Annan Koil

Thiruvellakkulam, Thiru Nāngur

ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ கண்ணநாராயணாய நமஹ

Thiruvellakulam got its name from the Sweta Pushkarani, a sacred white tank located in front of the temple. In Sanskrit, "Sweta" means white, hence Sweta Pushkarani became known as Vellakulam in Tamil.

It is well known that in Thirumala, the deity is called Srinivasan (Thiruvengadamudaiyān) and the goddess is Alamel Mangai Thayar. Thiruvellakulam + Read more
திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வெண்மை என்று பொருள். எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக் குளமாகி, அதுவே திருவெள்ளக்குளமாயிற்று.

திருமலையில் ஸ்ரீனிவாசன் என்பது எம்பெருமானுக்கு (திருவேங்கடமுடையான்) + Read more
Thayar: Sri Alarmelmangai, Sri Poovār Thirumagal Nāchiyār, Padmavathi
Moolavar: Srinivāsan, Kannan, Nārāyanan, Annan Perumāl
Utsavar: Srinivasan
Vimaanam: Thatvathyodhaka
Pushkarani: Thiruvellakkulam
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 7:00 a.m. to 12:00 noon 4:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thiruvellakkulam
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.7.1

1308 கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்! *
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர் *
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! * அடியேனிடரைக்களையாயே. (2)
1308 ## கண் ஆர் கடல்போல் * திருமேனி கரியாய் *
நண்ணார் முனை * வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த் **
திண் ஆர் மதிள் சூழ் * திருவெள்ளக்குளத்துள்
அண்ணா * அடியேன் இடரைக் களையாயே-1
1308. ##
kaNNār kadalpOl * thirumEni kariyāy *
naNNārmunai * venRiKoLvār mannu nāngoor *
thiNNār mathiLchoozh * thiruveLLak kuLaththuL_aNNā *
adiyENnidaraikkaLaiyāyE (4.7.1)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1308. You, the highest one with a divine body that is dark as the wide ocean stay in Thiruvellakkulam temple in Nāngur surrounded by strong walls whose kings conquer their enemies. I am your slave. Take away my troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண் ஆர் கடல் போல் பரந்த கடல்போலே; கரியாய்! கறுத்த அழகையும் கம்பீரத்தோடு கூடின; திருமேனி திருமேனியுடையவனே!; நண்ணார் சத்துருக்களை; முனை வென்றி யுத்தத்திலே வெல்லும்; கொள்வார் மன்னு அந்தணர் வாழும்; திண் ஆர் திடமான; மதிள் சூழ் மதிளாலே சூழ்ந்த; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில் இருக்கும்; அண்ணா! அடியேன் அண்ணா! அடியேனுடைய; இடரைக் களையாயே துன்பங்களைப் போக்கவேண்டும்
kaN Ar vast; kadal pOl like ocean (having beauty and depth); thirumEni having divine form; kariyAy Oh krishNa!; naNNAr enemies-; munai in the battle; venRi koLvAr best among brAhmaNas who can defeat (the enemies); mannu eternally residing; nAngUr in thirunAngUr; thiN Ar strong; madhiL by forts; sUzh surrounded; thiruveLLak kuLaththuL mercifully living in the dhivyadhESam named thiruveLLakkuLam; aNNA Oh you who are naturally related!; adiyEn I, who have no refuge, my; idarai sorrows (viz. connection with prakruthi (this body)); kaLaiyAy you should mercifully sever.

PT 4.7.2

1309 கொந்தார்துளவமலர்கொன்டு அணிவானே! *
நந்தாதபெரும்புகழ் வேதியர்நாங்கூர் *
செந்தாமரைநீர்த் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய்! * அடியேனிடரைக்களையாயே.
1309 கொந்து ஆர் துளவ * மலர் கொண்டு அணிவானே *
நந்தாத பெரும் புகழ் * வேதியர் நாங்கூர் **
செந்தாமரை நீர்த் * திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் * அடியேன் இடரைக் களையாயே-2
1309
KonthārthuLava * malarKondu aNivānE *
nanthātha perumpugazh * vEthiyarn^āngoor *
senthāmarain^eerth * thiruveLLak kuLaththuL_enthāy *
adiyENnidaraik_kaLaiyāyE (4.7.2)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1309. O father, adorned with a thulasi garland strung together with bunches of flowers you stay in Thiruvellakkulam temple filled with beautiful ponds where red lotuses bloom, where Vediyars recite the Vedās, living with undying fame. I am your slave. Take away my troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொந்து ஆர் பூங்கொத்துக்கள் நிறைந்த; துளவ திருத்துழாய்; மலர் கொண்டு மலர்களின் மாலையை; அணிவானே! அணிந்தவனே!; நந்தாத அழிவில்லாத; பெரும் புகழ் பெரும் புகழையுடைய; வேதியர் அந்தணர் வாழும்; செந்தாமரை செந்தாமரைகளோடு கூடின; நீர் நீர்நிலைகளையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில் இருக்கும்; எந்தாய்! அடியேன் என் தந்தையே! அடியேனுடைய; இடரைக் களையாயே துன்பங்களைப் போக்கவேண்டும்
kondhu Ar filled with flower bunches; thuLavam thuLasi-s; malar koNdu stringing flowers as garland; aNivAnE you who are mercifully adorning (on the divine crown)!; nandhAdha imperishable; perum inconceivable; pugazh having glories; vEdhiyar best of brAhmaNas, their; nAngUr in thirunAngUr; sendhAmarai having reddish lotus flowers; nIr surrounded by ponds; thiruveLLak kuLaththuL mercifully residing in thiruveLLak kuLam; endhAy Oh my lord!; adiyEn I, who have no refuge, my; idarai sorrows (viz. connection with prakruthi (this body)); kaLaiyAy you should mercifully sever.

PT 4.7.3

1310 குன்றால்குளிர்மாரி தடுத்துஉகந்தானே! *
நன்றாயபெரும்புகழ் வேதியர்நாங்கூர் *
சென்றார்வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய்! * நெடியாய்! அடியேனிடர்நீக்கே.
1310 குன்றால் குளிர் மாரி * தடுத்து உகந்தானே *
நன்று ஆய பெரும் புகழ் * வேதியர் நாங்கூர் **
சென்றார் வணங்கும் * திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் * நெடியாய் அடியேன் இடர் நீக்கே-3
1310
kunRāl kuLirmāri * thaduththukanthānE *
nanRāya perumpugazh * vEthiyarn^āngoor *
senRār vaNangum * thiruveLLak kuLaththuL_ninRāy *
nediyāy ! adiyENnidarn^eekkE (4.7.3)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1310. O Thirumāl, you carried Govardhanā mountain as an umbrella and protected the cows from the cold rain. You, the tall one, stay in Thiruvellakkulam temple in Nāngur where famous Vediyars live and recite the Vedās and devotees come to worship you. I am your slave. Take away my trouble.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றால் மலையைக் கொண்டு; குளிர் மாரி குளிர் மழையை; தடுத்து உகந்தானே! தடுத்து மகிழ்ந்தவனே!; நன்று ஆய நல்ல பெருமைப்படத்தக்க; பெரும் புகழ் பெரும் புகழையுடைய; வேதியர் அந்தணர் மற்றும்; சென்றார் வணங்கும் அனைவரும் வணங்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில்; நின்றாய்! நெடியாய்! நிற்கின்றவனே! எம்பெருமானே!; அடியேன் அடியேனுடைய; இடர் நீக்கே துன்பங்களைப் போக்கவேண்டும்
kunRAl lifting up gOvardhana mountain; kuLir mAri rain which made everyone freeze; thaduththu stopped; ugandhAnE oh you who became joyful!; nanRAya distinguished; perum pugazh great glories; vEdhiyar nAngUr of brAhmaNas in thirunAngUr; senRAr those who go; vaNangum worshipping; thiruveLLak kuLaththuL in thiruveLLakkuLam; ninRAy oh you who are mercifully residing!; nediyAy Oh you who are having inconceivable svarUpam, guNam etc!; adiyEn idar nIkku you should mercifully eliminate my sorrows.

PT 4.7.4

1311 கானார்கரிகொம்பது ஒசித்தகளிறே! *
நானாவகைநல்லவர் மன்னியநாங்கூர் *
தேனார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்து
ளானாய் * அடியேனுக்கு அருள்புரியாயே.
1311 கான் ஆர் கரிக் கொம்பு * -அது ஒசித்த களிறே *
நானாவகை * நல்லவர் மன்னிய நாங்கூர் **
தேன் ஆர் பொழில் சூழ் * திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் * அடியேனுக்கு அருள்புரியாயே-4
1311
kāNnār kariKompu * athosiththa kaLiRE! *
nāNnāvagai * n^allavar manNniya n^āngoor *
thENnār pozhilchoozh * thiruveLLak kuLaththuLāNnāy *
adiyENnukku aruLpuriyāyE (4.7.4)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1311. Strong as an elephant, you broke the tusks of the forest elephant Kuvalayābeedam. You stay in Thiruvellakkulam temple in Nāngur surrounded by groves dripping with honey where people of good families live. I am your slave. Give me your grace.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கான் ஆர் காட்டிலே திரிந்த குவலயாபீட; கரிக் கொம்பு யானையின் கொம்பை; அது ஒசித்த முறித்த; களிறே! ஆண் யானையான எம்பெருமானே!; நானாவகை குலம் கல்வி போன்ற பலவகைகளிலும்; நல்லவர் மன்னிய நல்லவர்களாக வாழும்; தேன் ஆர் தேன் நிறைந்த; பொழில் சூழ் சோலைகளால் சூழந்த; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில்; ஆனாய்! இருப்பவனே!; அடியேனுக்கு அடியேனுடைய; அருள் துன்பங்களைப் போக்கி; புரியாயே அருள்புரிய வேண்டும்
kAn in the forest; Ar youthful (and roaming around in the forest); kari kuvalayApIdam-s; adhu kombu great, matching tusk; osiththa broke; kaLiRE Oh wild elephant!; nAnA vagai complete in all manner; nallavar distinguished, noble persons; manniya residing firmly; nAngUr in thirunAngUr; thEn Ar filled with beetles; pozhil by gardens; sUzh surrounded; thiruveLLak kuLaththuL mercifully present in thiruveLLak kuLam; AnAy Oh you who are like a wild elephant!; adiyEnukku towards me, the servitor; aruL puriyAy kindly shower your mercy.

PT 4.7.5

1312 வேடார்திருவேங்கடம் மேயவிளக்கே! *
நாடார்புகழ்வேதியர் மன்னியநாங்கூர் *
சேடார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய்! *
பாடாவருவேன் வினையாயினபாற்றே. (2)
1312 ## வேடு ஆர் * திருவேங்கடம் மேய விளக்கே *
நாடு ஆர் புகழ் * வேதியர் மன்னிய நாங்கூர் **
சேடு ஆர் பொழில் சூழ் * திருவெள்ளக்குளத்தாய் *
பாடா வருவேன் * வினை ஆயின பாற்றே-5
1312. ##
vEdār * thiruvENGkadam mEyaviLakkE *
nādār pugazh * vEthiyar maNnNniya n^āngoor *
chEdār pozhilchoozh * thiruveLLakkuLaththāy *
pādā varuvEn * vinaiyāyiNna pāRRE (4.7.5)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1312. O lord who shine as a light on the Thiruvenkatam hills, you stay in the Thiruvellakkulam temple in Nāngur surrounded by thick groves where Vediyars live, praised by all in all lands. I come to you singing your praise. Remove all my karmā and save me.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேடு ஆர் வேடர்கள் மலிந்த; திருவேங்கடம் திருமலையிலிருக்கும்; மேய விளக்கே! விளக்குப்போன்றவனே!; நாடு ஆர் நாடெங்கும் நிறைந்த; புகழ் புகழையுடைய; வேதியர் மன்னிய அந்தணர் வாழும்; சேடு ஆர் சூழ் தளிர்களால் சூழ்ந்த; பொழில் சோலைகளையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக் குளத்து திருவெள்ளக் குளத்தில்; ஆய்! இருப்பவனே!; பாடா உன்னைப் பாடிக்கொண்டு; வருவேன் வரும் அடியேனின்; வினை ஆயின பாவங்கள் அனைத்தையும்; பாற்றே சிதறடிக்க வேணும்
vEdu Ar filled with hunters; thiruvEngadam on thiruvEngadam mountain; mEya eternally residing; viLakkE you who are self-illuminous!; nAdu Ar spread all over the nation; pugazh having glories; vEdhiyar manniya nAngUr in thirunAngUr which is firmly inhabited by brAhmaNas; sEdu Ar filled with sprouts; pozhil sUzh surrounded by gardens; thiruveLLakkuLaththAy Oh you who are mercifully residing in thiruveLLakkuLam!; pAdA Singing (about you); varuvEn I, who am coming; vinai Ayina all the sins; pARRu you should mercifully drive away (destroy).

PT 4.7.6

1313 கல்லால்கடலை அணைகட்டி உகந்தாய்! *
நல்லார்பலர் வேதியர்மன்னியநாங்கூர்ச் *
செல்வா! * திருவெள்ளக்குளத்துஉறைவானே! *
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே.
1313 கல்லால் கடலை * அணை கட்டி உகந்தாய் *
நல்லார் பலர் * வேதியர் மன்னிய நாங்கூர்ச் **
செல்வா * திருவெள்ளக்குளத்து உறைவானே *
எல்லா இடரும் * கெடுமாறு அருளாயே-6
1313
kallāl kadalai * aNaikatti uganthāy *
nallār palar * vEthiyar maNnNniya n^āngoor *
selvā * thiruveLLakkuLaththu uRaivānE *
ellā_idarum * kedumāRu aruLāyE (4.7.6)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1313. You who happily built a bridge of stones to go to Lankā stay in the Thiruvellakkulam temple in Nāngur where many Vediyars, learned in the Vedās live. Give me your grace and take away the troubles of my karmā.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல்லால் கடலை கல்லால் கடலில்; அணைகட்டி அணைகட்டி; உகந்தாய்! மகிழ்ந்தவனே!; நல்லார் பலர் நல்ல பல; வேதியர் மன்னிய அந்தணர் வாழும்; செல்வா! நாங்கூர் செல்வா! திருநாங்கூரின்; திருவெள்ளக் குளத்து திருவெள்ளக் குளத்தில்; உறைவானே! இருப்பவனே!; எல்லா இடரும் என்னுடைய துன்பங்களெல்லாம்; கெடுமாறு அருளாயே தீரும்படி அருள் புரிவாயே!
kallAl with rocks; kadalai ocean; aNai katti built a bridge; ugandhAy oh you who became joyful!; nallAr having the goodness named compassion; palar many; vEdhiyar brAhmaNas; manniya nAngUr thirunAngUr where they remain firmly; thiruveLLak kuLaththu in thiruveLLak kuLam; uRaivAnE oh you who are eternally residing!; selvA Oh SrImAn! [one who has all the wealth]; ellA idarum all sins; kedumARu to be destroyed; aruLAy you should kindly shower your mercy.

PT 4.7.7

1314 கோலால்நிரைமேய்த்த எங்கோவலர்கோவே! *
நாலாகியவேதியர் மன்னியநாங்கூர் *
சேலார்வயல்சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே! * எனவல்வினை தீர்த்தருளாயே.
1314 கோலால் நிரை மேய்த்த * எம் கோவலர்-கோவே *
நால் ஆகிய * வேதியர் மன்னிய நாங்கூர் **
சேல் ஆர் வயல் சூழ் * திருவெள்ளக்குளத்துள்
மாலே * என வல் வினை தீர்த்தருளாயே-7
1314
kOlāl niraimEyththa * engOvalar_kOvE *
nālākiya * vEthiyar manniya n^āngoor *
sElār vayalchoozh * thiruveLLak kuLaththuLmālE *
enavalviNnai * theerththaruLāyE (4.7.7)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1314. O Thirumāl, the king of the cowherds, who grazed the cows holding a stick, you stay in the Thiruvellakkulam temple in Nāngur where Vediyars live and fish frolic in ponds filled with abundant water. Take away my bad karmā and give me your grace.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோலால் கோல்கொண்டு; நிரை மேய்த்த பசுக்கூட்டங்களை மேய்த்த; எம் கோவலர் கோவே! எமது கோபால கிருஷ்ணனே!; நால் ஆகிய நாலு வேதங்களையும்; வேதியர் மன்னிய அறிந்தவர்கள் வாழும்; சேல் ஆர் மீன்கள் நிறைந்த; வயல் சூழ் வயல்களால் சூழ்ந்த; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக் குளத்துள் திருவெள்ளக் குளத்திலிருக்கும்; மாலே! திருமாலே!; என வல்வினை என்னுடைய துன்பங்களெல்லாம்; தீர்த்தருளாயே தீரும்படி அருள் புரிவாயே!
kOlAl Having a stick as the instrument; nirai mEyththa tended the cows; em one who made me exist for you; kOvalar kOvE Oh best among the cowherd people!; nAl Agiya in four categories; vEdhiyar best among brAhmaNas who have learnt vEdhams; manniya nAngUr firmly inhabited thirunAngUr; sEl Ar filled with sEl fish; vayal sUzh surrounded by fertile fields; thiruveLLak kuLaththuL mercifully residing in thiruveLLak kuLam; mAlE Oh great one!; ena valvinai my cruel sins; thIrththu aruLAy you should mercifully eliminate.

PT 4.7.8

1315 வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய்! *
நாராயணனே! நல்லவேதியர்நாங்கூர் *
சீரார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராவமுதே! * அடியேற்கு அருளாயே.
1315 வாராகம்-அது ஆகி * இம் மண்ணை இடந்தாய் *
நாராயணனே! * நல்ல வேதியர் நாங்கூர் *
சீர் ஆர் பொழில் சூழ் * திருவெள்ளக்குளத்துள் *
ஆராஅமுதே * அடியேற்கு அருளாயே-8
1315
varākamathāki * immaNNai_idanthāy *
nārāyaNaNE! * nalla vEthiyarn^āngoor *
cheerār pozhilchoozh * thiruveLLakkuLaththuL *
ārāvamuthE * adiyERku_aruLāyE (4.7.8)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1315. You, Nārāyanan, who took the form of a boar and split open the earth stay in the Thiruvellakkulam temple in Nāngur surrounded by beautiful groves where good Vediyars recite the Vedās. I am your slave. O sweet nectar, give me your grace.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாராகம் அது ஆகி வராஹமாய் அவதரித்து; இம் மண்ணை இப்பூமியை அண்டத்திலிருந்து; இடந்தாய்! விடுவித்தெடுத்தவனே!; நாராயணனே! நாராயணனே!; நல்ல வேதியர் நல்ல அந்தணர்கள் வாழும்; சீர் ஆர் சிறந்த; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்திலிருக்கும்; ஆராவமுதே! ஆராவமுதனே!; அடியேற்கு அருளாயே அடியேனுக்கு அருள்புரிவாயே!
adhu such distinguished; vArAgam Agi being the one who incarnated as varAha [wild boar]; immaNNai this earth; idandhAy (from the wall of the oval shaped universe) oh you, who dug out!; nArAyaNanE Oh you who have vAthsalyam (motherly love towards all creatures)!; nalla having good conduct; vEdhiyar brAhmaNas-; nAngUr in thirunAngUr; sIr Ar filled with wealth; pozhil sUzh surrounded by gardens; thiruveLLak kuLaththuL in thiruveLLak kuLam; ArAvamudhE Oh you who are very sweet who never satiates!; adiyERku for me who is a servitor; aruLAy kindly shower your mercy.

PT 4.7.9

1316 பூவார் திருமாமகள் புல்லியமார்பா! *
நாவார்புகழ் வேதியர்மன்னியநாங்கூர் *
தேவா! திருவெள்ளக்குளத்துஉறைவானே! *
ஆவா! அடியான் இவனென்றுஅருளாயே.
1316 பூ ஆர் திரு மா மகள் * புல்கிய மார்பா *
நா ஆர் புகழ் * வேதியர் மன்னிய நாங்கூர் **
தேவா * திருவெள்ளக்குளத்து உறைவானே *
ஆ ஆ அடியான் * இவன் என்று அருளாயே-9
1316
poovār_thirumāmagaL * pulgiyamārbā! *
nāvār pugazh * vEthiyar maNnNniya n^āngoor *
thEvā! * thiruveLLakkuLaththu uRaivānE *
'āvā! adiyāNn * ivaNn_eNnRu aruLāyE (4.7.9)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1316. You, the divine one, embracing on your chest the beautiful Lakshmi, stay in the Thiruvellakkulam temple in Nāngur where famous Vediyars live and recite the Vedās. I am your slave. Have pity on me and give me your grace.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூ ஆர் தாமரைப் பூவிலிருக்கும்; திரு மா மகள் திருமகள்; புல்கிய அணைத்த; மார்பா! மார்பையுடையவனே!; நா ஆர் புகழ் உலகத்தோரால் புகழப்படும்; வேதியர் மன்னிய அந்தணர்கள் வாழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக் குளத்துள் திருவெள்ளக் குளத்தில்; உறைவானே! இருப்பவனே!; தேவா! தேவதேவனே!; அடியான் இந்த அடியவன்; ஆ ஆ! இவன் துன்பப்படுகிறானே; என்று என்று மனமிறங்கி; அருளாயே அருள் புரிவாயே!
pU Ar firmly residing on the lotus flower; thirumAmagaL periya pirAttiyAr; pulgiya embraced; mArbA oh you who are having divine chest!; nA Ar filled in the tongue (of the people of the world); pugazh having glory; vEdhiyar brAhmaNas; manniya residing firmly; nAngUr in thirunAngUr; thiruveLLak kuLaththu uRaivAnE Oh you who are residing in thiruveLLak kuLam!; dhEvA Oh you who are shining due to your simplicity!; ivan this; adiyAn servitor; A A Alas! Alas! (He is suffering in this samsAram); enRu aruLAy you should kindly shower your mercy.

PT 4.7.10

1317 நல்லன்புடை வேதியர்மன்னியநாங்கூர் *
செல்வன் திருவெள்ளக்குளத்துஉறைவானை *
கல்லின்மலிதோள் கலியன்சொன்னமாலை *
வல்லரெனவல்லவர் வானவர்தாமே. (2)
1317 ## நல் அன்பு உடை * வேதியர் மன்னிய நாங்கூர் *
செல்வன் * திருவெள்ளக்குளத்து உறைவானை **
கல்லின் மலி தோள் * கலியன் சொன்ன மாலை *
வல்லர் என வல்லவர் * வானவர்-தாமே-10
1317. ##
nallaNnpudai * vEthiyar manniya n^āngoor *
selvaNn * thiruveLLakkuLaththu uRaivānai *
kallin malithOL * kaliyan sonnamālai *
vallareNna vallavar * vāNnavar_thāmE (4.7.10)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1317. Kaliyan with arms stronger than mountains composed a garland of ten pāsurams on the dear one of the prosperous Thiruvellakkulam temple in Nāngai where Vediyars live, compassionate to all life. If devotees learn and recite these ten pāsurams well they will go to the spiritual world and be with gods.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் அன்பு உடை சிறந்த பக்தியையுடைய; வேதியர் மன்னிய அந்தணர்கள் வாழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்து திருவெள்ளக்குளத்தில்; உறைவானே இருப்பவனைக் குறித்து; கல்லின் மலையைக் காட்டிலும்; மலி அதிக பலமுடைய; தோள் தோள்களையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; சொன்ன அருளிச்செய்த; மாலை பாசுரங்களை; வல்லர் என இவர்கள் கற்க வல்லவர்கள் என்று; வல்லவர் பிறரால் சொல்லும்படியாக ஓதவல்லவர்கள்; வானவர் தாமே நித்யஸூரிகளோடு சேருவர்
nal anbudai having paramabhakthi (supreme state of devotion); vEdhiyar best among brAhmaNas; manniya firmly residing; nAngUr in thirunAngUr; thiruveLLak kuLaththu in the dhivyadhESam named thiruveLLak kuLam; uRaivAn one who eternally resides; selvanai towards SrImAn; kallil more than mountain; mali great (having strength); thOL having shoulders; kaliyan thirumangai AzhwAr; sonna mercifully spoke; mAlai these ten pAsurams which are in form of a garland of words; vallar ena that they can recite; vallavar those who could be classified (by others); vAnavar thAmE will become part of the assembly of nithyasUris