36

Thirutthetri ambalam

திருத்தெற்றியம்பலம்

Thirutthetri ambalam

Thiru Nāngur

ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ஸ்வாமிநே நமஹ

Thiruththeriyambalam is not well known to many, but if you mention the Pallikonda Perumal Sannadhi, everyone will recognize it.

This deity, reclining on Adisesha with four arms, is known for his beautiful eyes as described by the term Sengalmal.

Among the eleven Perumal deities that came to Thirunangoor, this deity is the Srirangam Aranganathan.

+ Read more
திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது. பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.

நான்கு புஜங்களுடன் ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலத்தில் இருக்கும் இந்த எம்பெருமான், செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு மிக்கவர்.

திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் + Read more
Thayar: Sri Senkamala Valli
Moolavar: Senkan Māl Ranganāthan, Sri Lakshmirangar
Utsavar: Aranganāthan
Vimaanam: Vedha
Pushkarani: Soorya
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 1:00 p.m. 3:00 p.m. to 8:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Thiruthetriyambalam
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.4.1

1278 மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
மற்றவர்தம்காதலிமார்குழையும் * தந்தை
கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்
கதநாகம்காத்தளித்தகண்ணர்கண்டீர் *
நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து
இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின் *
சேற்றளையில்வெண்முத்தம்சிந்து நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே. (2)
1278 ## மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் *
மற்று அவர்-தம் காதலிமார் குழையும் * தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் *
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்- **
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து *
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் *
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-1
1278 ## māṟṟaracar maṇi muṭiyum tiṟalum tecum *
maṟṟu avar-tam kātalimār kuzhaiyum * tantai
kāl tal̤aiyum uṭaṉ kazhala vantu toṉṟik *
kata nākam kāttu al̤itta kaṇṇar kaṇṭīr- **
nūṟṟitazh kŏl̤ aravintam nuzhainta pal̤l̤attu *
il̤aṅ kamukiṉ mutu pāl̤ai paku vāy naṇṭiṉ *
ceṟṟu al̤aiyil vĕṇ muttam cintum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-1

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-29

Simple Translation

1278. See, as Kannan, the lovely-eyed Thirumāl who destroyed the shining crowns of his enemies, their strength and their fame and made their wives shed their ornaments, cut the chain on the anklets of his father and released him from prison, and saved the elephant Gajendra from the crocodile stays in Thiruthetriyambalam in Nāngur where thousand-petaled lotuses bloom and the branches of young kamugu trees drop white pearls into the holes where crabs live.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பள்ளத்து பள்ளதில் முளைத்த; நூற்றிதழ் கொள் நூறிதழ் கொண்ட; அரவிந்தம் நுழைந்த தாமரைப் பூவிலே பிரவேசித்த; பகு வாய் பெரிய வாயை உடைய; நண்டின் நண்டின்; சேற்று அளையில் சேற்று வளையில்; இளம் கமுகின் இளம் பாக்கு மரங்களின்; முது பாளை முற்றின பாளையானது; வெண் முத்தம் வெளுத்த முத்துக்களை; சிந்தும் இறைக்க; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானே!; மாற்று பகைவரான அரசர்களின்; அரசர் துர்யோதனாதிகளின்; மணிமுடியும் மணிகளிழைத்த கிரீடங்களும்; திறலும் அவர்களின் திறமையும்; தேசும் மதிப்பும் பெருமையும்; மற்று அவர் மேலும் அவர்களுடைய; காதலிமார் மனைவிமார்களின்; குழையும் காதணிகளும்; தம் தந்தை தன் தகப்பனாரான வஸுதேவருடைய; கால் காலிலே இடப்பட்டிருந்த; தளையும் விலங்கும்; உடன் ஒரே சமயத்தில்; கழல கழன்று விழும்படியாக; வந்து தோன்றி கண்ணன் அவதரித்தான்; கத நாகம் சீற்றத்தை உடைய கஜேந்திரனை; காத்து அளித்த காத்தருளின; கண்ணர் கண்டீர் கண்ணனை காணுங்கள்
pal̤l̤aththu sprouted from a pit; nūṛu idhazhgal̤ having many petals; aravindham lotus flowers; nuzhaindha entered; paguvāy having huge mouth; naṇdin crab-s; sĕṛu al̤aiyil mud filled hole; il̤am kamugin young areca trees-; mudhu pāl̤ai ripened swathes; veṇ muththam white pearls; sindhu dispersing; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; māṝu arasar dhuryŏdhana et al, who are enemies, their; maṇi embossed with precious gems; mudiyum crowns; thiṛalum strength; thĕsum fame; maṝu further; avar tham their; kādhalimār wives-; kuzhaiyum earrings, mangal̤asūthram etc; thandhai his father vasudhĕva-s; kāl tied on his feet; thal̤aiyum shackles; udan at once; kazhala to slip and fall down; vandhu descended from paramapadham; thŏnṛi being the one who incarnated; kadham angry; nāgam gajĕndhrāzhwān; kāththu protected; al̤iththa showed his mercy; kaṇṇar kaṇdīr merciful krishṇa

PT 4.4.2

1279 பொற்றொடித்தோள்மடமகள்தன்வடிவுகொண்ட
பொல்லாதவன்பேய்ச்சிகொங்கைவாங்கி *
பெற்றெடுத்ததாய்போலமடுப்பஆரும்
பேணாநஞ்சுண்டுகந்தபிள்ளைகண்டீர் *
நெல்தொடுத்தமலர்நீலம்நிறைந்தசூழல்
இருஞ்சிறையவண்டொலியும்நெடுங்கணார்தம் *
சிற்றடிமேல்சிலம்பொலியும்மிழற்றுநாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1279 பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட *
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி *
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப * ஆரும்
பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர் **
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் *
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார் தம் *
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-2
1279 pŏṟṟŏṭit tol̤ maṭa makal̤- taṉ vaṭivu kŏṇṭa *
pŏllāta vaṉ peycci kŏṅkai vāṅki *
pĕṟṟu ĕṭutta tāypola maṭuppa * ārum
peṇā nañcu uṇṭu ukanta pil̤l̤ai kaṇṭīr **
nĕl tŏṭutta malar nīlam niṟainta cūzhal *
iruñ ciṟaiya vaṇṭu ŏliyum nĕṭuṅ kaṇār tam *
ciṟṟaṭimel cilampu ŏliyum mizhaṟṟum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-2

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1279. See, our lovely-eyed Nedumal who drank poisonous milk from the devil Putanā when she came as if she were the mother who bore him, wearing golden bangles on her hands, stays in Thiruthetriyambalam in Nāngur where neelam flowers bloom abundantly in the midst of paddy lands and the music of dark-winged bees and the tinkling of the anklets on women’s small feet sound softly together.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெல் நெற்கதிர்களின்மேல்; தொடுத்த தொடுக்கப்பட்ட; மலர் நீலம் நீல பூக்களாலே; நிறைந்த சூழல் நிறைந்த சுற்றுபுறங்களில்; இருஞ் சிறைய அழகிய சிறகுகளையுடைய; வண்டு ஒலியும் வண்டுகளின் ஆரவாரமும்; நெடுங் கணார் நீண்ட கண்களையுடையரான; தம் மாதர்களின்; சிற்றடி மேல் சிறிய பாதங்களிலணிந்த; சிலம்பு ஒலியும் சிலம்பு ஒலி; மிழற்றும் சப்திக்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானே!; பொற்றொடித் பொன் வளைகளணிந்த; தோள் தோள்களையுடைய; மட மகள் தன் யசோதையின்; வடிவு கொண்ட வடிவழகுடன் வந்த; பொல்லாத வன் பேய்ச்சி மிகவும் பொல்லாத பூதனை; கொங்கை வாங்கி தன் மார்பகத்திலிருந்து பாலை; பெற்று எடுத்த தாய்போல பெற்று எடுத்த தாய்போல; மடுப்ப இவன் வாயில் கொடுக்க; ஆரும் பேணா ஒருவரும் அறியாதவாறு; நஞ்சு உண்டு விஷம் உண்டு; உகந்த பிள்ளை மகிழ்ந்த பிள்ளையை; கண்டீர்! கண்டீர்களோ!
nel on paddy grains; thoduththa tied in rows; neelam malar by karuneydhal flowers; niṛaindha complete; sūzhal in the surroundings; irum beautiful; siṛaiya having wings; vaṇdu beetles-; oliyum sound; nedum wide; kaṇār tham ladies who are having eyes; siṛu small; adi mĕl worn on the feet; silambu anklets-; oliyum sound; mizhaṝu sounding in an incoherent manner; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; pon golden; thodi having bangles on the forearm; thŏl̤ having shoulders; madam filled with noble qualities; magal̤ than yaṣŏdhāp pirātti-s; vadivu form; koṇda one who came accepting; pollādha evil; van cruel-hearted; pĕychchi pūthanā; kongai (her) bosom; vāngi pulled out from the cloth which was covering it; peṝu eduththa one who gave birth; thāypŏla like the mother; maduppa placed (in his mouth) (at that time); ārum anyone; pĕṇā not desired; nanju poison (in that bosom); uṇdu mercifully consumed; ugandha became joyful; pil̤l̤ai kaṇdīr this is the child.

PT 4.4.3

1280 படலடைந்தசிறுகுரம்பைநுழைந்துபுக்குப்
பசுவெண்ணெய்பதமாரப்பண்ணைமுற்றும் *
அடலடர்த்தவேற்கண்ணார்தோக்கை பற்றி
அலந்தலைமைசெய்துழலும்ஐயன்கண்டீர் *
மடலெடுத்தநெடுந்தெங்கின்பழங்கள்வீழ
மாங்கனிகள்திரட்டுருட்டாவருநீர்ப்பொன்னி *
திடலெடுத்துமலர்சுமந்துஅங்குஇழியும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1280 படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் *
பசு வெண்ணெய் பதம் ஆரப் பண்ணை முற்றும் *
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி *
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் **
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ *
மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி *
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-3
1280 paṭal aṭaitta ciṟu kurampai nuzhaintu pukkup *
pacu vĕṇṇĕy patam ārap paṇṇai muṟṟum *
aṭal aṭartta vel kaṇār tokkai paṟṟi *
alantalaimai cĕytu uzhalum aiyaṉ kaṇṭīr **
maṭal ĕṭutta nĕṭun tĕṅkiṉ pazhaṅkal̤ vīzha *
māṅkaṉikal̤ tiraṭṭu uruṭṭā varu nīrp pŏṉṉi *
tiṭal ĕṭuttu malar cumantu aṅku izhiyum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-3

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1280. See, Thirumāl with beautiful eyes who entered the small palm-leaf huts of the sharp spear-eyed cowherd women, stole and ate the good butter that they had churned and kept and stole and hid their clothes and upset them stays happily in Thiruthetriyambalam in Nāngur where the Kaveri river brings and piles up mangoes that have dropped from their trees when coconuts have fallen on them, and its water, covered with flowers and flowing between the mounds, is split into small channels.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மடல் எடுத்த பாளைகள் நிறைந்து; நெடும் உயர்ந்துள்ள; தெங்கின் தென்னை மரங்களினின்று; பழங்கள் வீழ காய்கள் கீழே விழ; மாங்கனிகள் திரட்டு மாம்பழத் திரள்களை; உருட்டாவரு உருட்டிக்கொண்டும்; மலர் பல வகைப் பூக்களையடித்து; சுமந்து கொண்டும் பெருகுகின்ற; நீர்ப் பொன்னி காவேரி நதி; திடல் எடுத்து மணல் மேடுகளை; அங்கு இழியும் அழித்துப் பாயும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; பசு அப்போது கடைந்து வைத்த; வெண்ணெய் வெண்ணெயை; பதம் ஆர அமுது செய்வதற்காக; படல் அடைத்த தட்டியால் அடைத்த; சிறு குரம்பை சிறு குடில்களிலே; நுழைந்து புக்கு நுழைந்து உள்ளே புகுந்து; அடல் அடர்த்த வேற்படைபோன்ற; வேல் கணார் கண்களையுடைய பெண்களின்; தோக்கை சேலையை; பற்றி பிடித்திழுத்து; அலந்தலைமை செய்து துன்பப் படுத்தி; பண்ணை முற்றும் இடைச்சேரி எங்கும்; உழலும் திரிகின்ற; ஐயன் கண்டீர்! ஐயனைக் கண்டீர்களோ!
madal eduththa with abundant branches; nedu tall; thengin from coconut trees; pazhangal̤ fruits; vīzha as they fall (on the mangoes, dropping off due to that); mānganigal̤ mangoes; thirattu as a bunch; uruttā pushing along; varu coming; nīr having water; ponni river kāviri; thidal dunes; eduththu eliminated; angu in those places where there were dunes; malar flowers; sumandhu carrying and arriving; izhiyum flowing; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; pasu veṇṇey freshly churned butter; padham in the well formed state (before it loses its freshness); āra to mercifully consume; padal adaiththa closed with the door; siṛu small; kurambai in the huts; pukku carefully analysed and entered inside; adal adarththa set out to fight; vĕl sharp like spear; kaṇār the cowherd girls who are having eyes, their; thŏkkai top end of sari (near border); paṝi held (and pulled); alandhalamai torment; seydhu caused; paṇṇai muṝum everywhere in the town of the cowherds; uzhalum roaming around; aiyan kaṇdīr is the lord.

PT 4.4.4

1281 வாராரும்முலைமடவாள்பின்னைக்காகி
வளைமருப்பிற்கடுஞ்சினத்துவன்தாளார்ந்த *
காரார்திண்விடையடர்த்துவதுவையாண்ட
கருமுகில்போல்திருநிறத்துஎன்கண்ணர்கண்டீர் *
ஏராரும்மலர்ப்பொழில்கள்தழுவிஎங்கும்
எழில்மதியைக்கால்தொடரவிளங்குசோதி *
சீராருமணிமாடம்திகழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1281 வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி *
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த *
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட *
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் **
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் *
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதி *
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-4
1281 vār ārum mulai maṭavāl̤ piṉṉaikku āki *
val̤ai maruppiṉ kaṭuñ ciṉattu vaṉ tāl̤ ārnta *
kār ār tiṇ viṭai aṭarttu vatuvai āṇṭa *
karu mukilpol tiru niṟattu ĕṉ kaṇṇar kaṇṭīr **
er ārum malarp pŏzhilkal̤ tazhuvi ĕṅkum *
ĕzhil matiyaik kāl tŏṭara vil̤aṅku coti *
cīr ārum maṇi māṭam tikazhum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-4

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1281. See, our dark cloud-colored Kannan with lovely eyes who fought the dark angry bulls with curved horns and strong legs to marry Nappinnai, the beautiful daughter of the cowherds, stays in the Thiruthetriyambalam temple in Nāngur where beautiful blooming groves embrace the tops of the diamond-studded palaces and touch the shining moon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏர் ஆரும் மலர் அழகிய மலர்களையுடைய; பொழில்கள் சோலைகள்; எங்கும் தழுவி எங்கும் வியாபித்து; எழில் மதியை அழகிய சந்திரனை; கால் தொடர காற்றானது அசையவிடாமல் இருந்த; விளங்கு சோதி சீர் ஒளியையுடைய அழகிய; மணி மாடம் மணி மாடங்களால்; திகழும் திகழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; வார் ஆரும் கச்சணிந்த; முலை மடவாள் நப்பின்னையை; பின்னைக்கு ஆகி பெறுவதற்காக; வளை மருப்பின் வளைந்த கொம்புகளையுடைய; கடுஞ்சினத்து கடும் கோபத்துடன் கூடிய; வன் தாள் ஆர்ந்த வலுவான கால்களையுடைய; கார் ஆர் திண் கருத்த திடமான; விடை அடர்த்து ரிஷபங்களை அடக்கி; வதுவை ஆண்ட அவளை மணம் புரிந்த; கரு முகில் கருத்த மேகம்; போல் திரு நிறத்து போன்ற நிறமுடைய; என் கண்ணர் கண்ணனை; கண்டீர்! கண்டீர்களோ!
ĕr ārum ḥaving complete beauty; malar having flowers; pozhilgal̤ in the gardens; engum at all places; thazhuvi embraced and came; ezhil having beauty (fragrance); kāl wind; madhiyai moon; thodar stopped from moving; vil̤angu shining due to that; sŏdhi having radiance; sīr ārum complete in wealth; maṇi mādam on the mansions which are studded with precious gems; thigazhum shining; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; vār ārum held by the corset; mulai having bosoms; madavāl̤ having humility; pinnaikkāgi for nappinnaip pirātti; val̤ai curved; maruppil having horns; kadum cruel; sinaththu having anger; van strong; thāl̤ ārndha having feet; kār ār being black (due to their youth); thiṇ firm; vidai bulls; adarththu crushed together; vadhuvai āṇda one who directed the auspicious marriage ceremony; karu mugil pŏl like a black cloud; thiru niṛaththu having nice beauty; en one who enslaved me showing that beauty; kaṇṇar kaṇdīr is krishṇa.

PT 4.4.5

1282 கலையிலங்கும்அகலல்குல்கமலப்பாவை
கதிர்முத்தவெண்ணகையாள்கருங்கணாய்ச்சி *
முலையிலங்கும்ஒளிமணிப்பூண்வடமும்தேய்ப்ப
மூவாதவரைநெடுந்தோள்மூர்த்திகண்டீர் *
மலையிலங்குநிரைச்சந்திமாடவீதி
ஆடவரைமடமொழியார்முகத்து * இரண்டு
சிலைவிலங்கிமனஞ்சிறைகொண்டிருக்கும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1282 கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை *
கதிர் முத்த வெண்ண கையாள் கருங் கண் ஆய்ச்சி *
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப *
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர் **
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி *
ஆடவரை மட மொழியார் முகத்து * இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-5
1282 kalai ilaṅkum akal alkul kamalap pāvai *
katir mutta vĕṇṇa kaiyāl̤ karuṅ kaṇ āycci *
mulai ilaṅkum ŏl̤i maṇip pūṇ vaṭamum teyppa *
mūvāta varai nĕṭun tol̤ mūrtti kaṇṭīr **
malai ilaṅku niraic canti māṭa vīti *
āṭavarai maṭa mŏzhiyār mukattu * iraṇṭu
cilai vilaṅki maṉam ciṟai kŏṇṭu irukkum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-5

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1282. See, he is the young Thirumāl with lovely eyes his arms as strong as mountains. Making their ornaments touch his chest, he embraces beautiful wide-hipped Lakshmi and the cowherd girl Nappinnai with dark eyes and pearl-like white teeth and a shining diamond necklace around her neck. He stays in Thiruthetriyambalam in Nāngur where shining palaces like small hills are next to each other on the large streets and women with sweet voices attract men with their bow-like eyebrows, capture them and make them live in their hearts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலை இலங்கு மலைபோல் விளங்கும்; நிரைச் சந்தி வரிசை வரிசையாக; மாட வீதி மாடங்களையுடைய வீதிகளிலே; மட மொழியார் இனிய பேச்சுடைய பெண்களின்; முகத்து இரண்டு முகத்திலுள்ள இரண்டு; சிலை விலங்கி வில் போன்ற புருவங்கள் வளைந்து; ஆடவரை மனம் சிறை ஆண்களை மயக்கி; கொண்டு இருக்கும் கொண்டு இருக்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; கலை இலங்கும் மேகலை போன்ற; அகல் அல்குல் இடையுடைய; கதிர் ஒளிபொருந்திய; முத்த முத்துப் போலே; வெண்ண நகையாள் வெண் பற்களையுடைய; கமலப் பாவை திருமகளுடையவும்; கருங் கண் கறுத்த கண்களையுடைய; ஆய்ச்சி நப்பின்னையுடையவும்; முலை இலங்கும் மார்பின் மீது; ஒளி மணி பூண் கண்டிகையும்; வடமும் தேய்ப்ப ஹாரமும் உராய; மூவாத வரை நித்யயௌவனம் மாறாத; நெடுந்தோள் நெடிய தோள்களையுடைய; மூர்த்தி கண்டீர் மூர்த்தியை கண்டீர்களோ!
malai ilangu shining like mountains; nirai in rows; sandhi connected with each other; mādam having mansions; vīdhi on the streets; madam incoherently sweet; mozhiyār ladies who have the speech; mugaththu shining in the face; iraṇdu silai eye-brows which resemble two bows; vilangi curved; ādavarai heroes-; manam siṛai koṇdu irukkum capturing the heart; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; kalai by the garment; ilangum shining; agal wide; algul having waist region; kadhir having rays; muththa like pearl; veṇ whitish; nagaiyāl̤ having rows of teeth; kamalap pāvai periya pirāttiyār-s; karum kaṇ having black eyes; āychchi napinnaip pirātti-s; mulai bosoms; ilangum shining; ol̤i maṇi made of radiant gems; pūṇ necklace; vadamum pearl necklace; thĕyppa as they rub (his divine chest) (due to that); mūvādha not ageing (i.e. not losing freshness); varai mountain like; nedum lengthy; thŏl̤ having shoulders; mūrththi kaṇdīr is the lord.

PT 4.4.6

1283 தான்போலும்ஏன்றெழுந்தான்தரணியாளன்
அதுகண்டுதரித்திருப்பான் அரக்கர்தங்கள் *
கோன்போலும்ஏன்றெழுந்தான், குன்றமன்ன
இருபதுதோளுடன்துணித்தஒருவன்கண்டீர் *
மான்போலுமென்னோக்கின்செய்யவாயார்
மரகதம்போல்மடக்கிளியைக்கைமேற்கொண்டு *
தேன்போலுமென்மழலைபயிற்றும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1283 தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் *
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள் *
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன *
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் **
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் *
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு *
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-6
1283 tāṉpolum eṉṟu ĕzhuntāṉ taraṇiyāl̤aṉ *
atu kaṇṭu tarittiruppāṉ arakkar-taṅkal̤ *
koṉpolum eṉṟu ĕzhuntāṉ kuṉṟam aṉṉa *
irupatu tol̤ uṭaṉ tuṇitta ŏruvaṉ kaṇṭīr **
māṉpolum mĕṉ nokkiṉ cĕyya vāyār *
marakatampol maṭak kil̤iyaik kaimel kŏṇṭu *
teṉpolum mĕṉ mazhalai payiṟṟum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-6

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1283. See, when the Rākshasa king Rāvana realized that a king like himself had risen up, he thought he could defeat Rāma but when he fought with him Rāma cut off his twenty mountain-like arms and killed him. Our lord stays in Thiruthetriyambalam where lovely women with soft doe-like eyes, red mouths and prattling words as sweet as honey carry on their hands beautiful green emerald-colored parrots and teach them to speak baby talk and wander in the streets.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மான் போலும் மானின் பார்வை போன்ற; மென் நோக்கின் அழகிய பார்வை உடையவும்; செய்ய சிவந்த; வாயார் அதரத்தையுமுடைய பெண்கள்; மரகதம் போல் மரகதப்பச்சை போல்; மடக் கிளியை அழகிய கிளியை; கைமேல் கைமேல்; கொண்டு வைத்துக் கொண்டு; தேன் போலும் தேன் போலினிய; மென் மழலை மிருதுவான பேச்சை; பயிற்றும் கற்பிக்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; தரணியாளன் இராமபிரானை; தான்போலும் அரக்கர் அரசன் போல் நினைத்து; என்று எழுந்தான் எதிரிட்டு வருகிறான் என்று; அதுகண்டு அவனை; தரித்திருப்பான் தண்டிக்காமல் பொறுத்திருந்தவனை; அரக்கர் தங்கள் இவன் அரக்கர்; கோன்போலும் தலைவனாவனோ என்று எழுந்த ராவணனின்; குன்றம் அன்ன மலைபோன்ற; இருபது தோள் இருபது தோள்களையும்; உடன் துணித்த ஒரே சமயத்தில் துணித்த; ஒருவன் கண்டீர் ஒருவனைக் கண்டீர்களோ!
mān pŏlum like a deer; mel tender; nŏkkil vision; seyya reddish; vāyār ladies who are having lips; maradhagam pŏl having greenish complexion similar to that of emerald; madam having childishness; kil̤iyai parrot; kai mĕl koṇdu having on their hands; thĕn pŏlum like honey; mel sweet; mazhalai tender speech; payiṝum teaching; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; dharaṇiyāl̤an chakravarthith thirumagan who is the emperor of earth; thān pŏlum like a king; ĕnṛu arose; ezhundhān came opposing; enṛu simply considering this; adhu kaṇdu seeing such simplicity; dhariththu iruppān being fearless; arakkar thangal̤ demons-; kŏn pŏlum like the king (considering himself to be great); ĕnṛu arose; ezhundhān rāvaṇa who came fighting, his; kunṛam anna like a mountain; irubadhu thŏl̤ twenty shoulders; udan at once; thuṇiththa severed; oruvan kaṇdīr is the unique one.

PT 4.4.7

1284 பொங்கிலங்குபுரிநூலும்தோலும்தாழப்
பொல்லாதகுறளுருவாய்ப்பொருந்தாவாணன் *
மங்கலம்சேர்மறைவேள்வியதனுள்புக்கு
மண்ணகலம்குறையிரந்தமைந்தன்கண்டீர் *
கொங்கலர்ந்தமலர்க்குழலார்கொங்கைதோய்ந்த
குங்குமத்தின்குழம்பளைந்தகோலந்தன்னால் *
செங்கலங்கல்வெண்மணல்மேல்தவழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1284 பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் *
பொல்லாத குறள் உரு ஆய்ப் பொருந்தா வாணன் *
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு *
மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் **
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த *
குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் *
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-7
1284 pŏṅku ilaṅku puri nūlum tolum tāzhap *
pŏllāta kuṟal̤ uru āyp pŏruntā vāṇaṉ *
maṅkalam cer maṟai vel̤vi-ataṉul̤ pukku *
maṇ akalam kuṟai iranta maintaṉ kaṇṭīr **
kŏṅku alarnta malark kuzhalār kŏṅkai toynta *
kuṅkumattiṉ kuzhampu al̤ainta kolam-taṉṉāl *
cĕṅ kalaṅkal vĕṇ maṇalmel tavazhum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-7

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1284. Our beautiful-eyed lord, as a naughty dwarf, wearing a shining divine thread on his chest and a skin dress around his waist, went to the sacrifice of the enemy of the gods, king Mahābali, where Vediyars recited the auspicious Vedās and asked the king to give him three feet of land and when he received the boon, he measured the whole earth and the sky with his two feet. He stays in Thiruthetriyambalam in Nāngur where water mixed with kumkum and sandal paste from women’s breasts adorned with fresh flower garlands flows on the white sand and turns it red.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு அலர்ந்த அன்றலர்ந்த மணம் மிக்க; மலர்க் குழலார் மலர்களை அணிந்த பெண்களின்; கொங்கை தோய்ந்த ஸ்தனங்களின் மீது படிந்த; குங்குமத்தின் குங்குமத்தின் குழம்பு; குழம்பு அளைந்த அளைந்ததால்; செங் கோலன் தன்னால் அழகிய சிவந்திருக்கிற; கலங்கல் கலங்கல் வெள்ளம்; வெண் வெளுத்த; மணல்மேல் தவழும் மணல் குன்றுகளின் மேல் பரவ; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; பொங்கு இலங்கு ஒளிபொருந்திய; புரி நூலும் பூணூலும்; தோலும் தாழ தோலும் தாழ; பொல்லாத அழகிய; குறள் உருவாய் வாமநமூர்த்தியாகி; பொருந்தா வாணன் மஹாபலியினுடைய; மங்கலம் சேர் மங்களம் பொருந்திய; மறை வேதபாராயணத்தையுடைய; வேள்வி அதனுள் புக்கு வேள்வியில் புகுந்து; மண் அகலம் குறை இரந்த பூமியையாசித்த; மைந்தன் கண்டீர்? கண்ணனை கண்டீர்களோ?
kongu fragrance; alarndha spreading; malar decorated with flowers; kuzhalār ladies who are having hair; kongai on the bosoms; thŏyndha spread; kungumaththin kumkum (vermillion), its; kuzhambu slush; alaindha mixed; kŏlam thannāl by the beauty; sem reddish; kalangal the flood which is muddy; veṇ whitish; maṇal mĕl on the sand dunes; thavazhum slowly spreading; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; pongu having well-grown radiance; ilangu shining; puri having strings; nūlum yagyŏpavītham (sacred thread); thŏlum krishṇājinam (deer skin); thāzha hanging; pollādha beautiful; kuṛal̤ uruvāy being in the vāmana [dwarf] form; porundhā having a birth which does not align with him; vāṇan mahābali-s; mangalam auspicious; sĕr apt; maṛai having chants of vĕdham; vĕl̤vi adhanul̤ in the fire sacrifice; pukku entered; kuṛai which he was not owning; maṇ agalam the earth; irandha begged; maindhan kaṇdīr is the young boy.

PT 4.4.8

1285 சிலம்பினிடைச்சிறுபரல்போல்பெரியமேரு
திருக்குளம்பில்கணகணப்பத் திருவாகாரம்
குலுங்க * நிலமடந்தைதனைஇடந்துபுல்கிக்
கோட்டிடைவைத்தருளியஎங்கோமான்கண்டீர் *
இலங்கிய நான்மறையனைத்தும்அங்கமாறும்
ஏழிசையும்கேள்விகளும்எண்திக்கெங்கும் *
சிலம்பியநற்பெருஞ்செல்வம்திகழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே. 8
1285 சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு *
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க *
நில-மடந்தை-தனை இடந்து புல்கிக் *
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் **
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் *
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் *
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-8
1285 cilampiṉ iṭaic ciṟu paralpol pĕriya meru *
tiruk kul̤ampil kaṇakaṇappa tiru ākāram kuluṅka *
nila-maṭantai-taṉai iṭantu pulkik *
koṭṭiṭai vaittarul̤iya ĕm komāṉ kaṇṭīr **
ilaṅkiya nāl maṟai aṉaittum aṅkam āṟum *
ezh icaiyum kel̤vikal̤um ĕṇ tikku ĕṅkum *
cilampiya nal pĕruñ cĕlvam tikazhum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-8

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1285. See, our king, the lovely-eyed Thirumāl took the form of a boar ornamented with anklets with small bells that made the sound “gana, gana” on his feet as large as a Meru mountain, who went to the underworld and brought up the earth goddess on his tusks as Lakshmi on his chest trembled stays in Thiruthetriyambalam in Nāngur filled with wealth where Vediyars recite the four divine Vedās, the six Upanishads and the sastras and sing the seven kinds of music making the sound spread in all the eight directions.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கிய பிரபலமான; நால்மறை நான்கு வேதங்கள்; அனைத்தும் அனைத்தும்; அங்கம் ஆறும் ஆறு அங்கங்களும்; ஏழ் இசையும் ஸப்த ஸ்வரங்களும்; கேள்விகளும் இதிஹாஸ புராணங்களும்; எண் திக்கு எங்கும் எட்டு திக்கிலும்; சிலம்பிய சப்திக்கும்; நல் பெருஞ்செல்வம் நல் பெருஞ்செல்வம்; திகழும் திகழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; சிலம்பின் இடை தண்டைச்சிலம்பின் நடுவிலிட்ட; சிறு பரல் போல் சிறிய கருங்கல்போல; பெரிய மேரு பெருத்த மேருமலையானது; திருக் குளம்பில் அழகிய குளம்பிலே; கணகணப்ப கணகணப்ப; திரு ஆகாரம் மார்பில்; குலுங்க திருமகள் குலுங்க; நில மடந்தை தனை பூமியை; இடந்து கொம்பால் குத்தியெடுத்து; புல்கி தழுவிக்கொண்டு; கோட்டிடை கோரைப் பல்லின்மீது; வைத்தருளிய வைத்தருளிய; எம் கோமான் கண்டீர்! எம்பெருமானைக் கண்டீர்களோ!
ilangiya shining; nāl maṛai anaiththum all vĕdhams which are of four classifications; angam āṛum the six ancillary subjects [of vĕdhams] viś vyākaraṇam, ṣīkshā, niruktham, kalpam, chandhas, jyŏthisham; ĕzhu isaiyum saptha svaras (seven notes); kĕl̤vigal̤um ithihāsas (epics) etc; eṇ dhikku in all eight directions; engum in all areas; silambiya roaring; nal distinguished; perum immeasurable; selvam wealth; thigazhum shining; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; silambin idai placed inside the anklets; siṛu paralpŏl like the small stones; periya mĕru the huge, stout mĕru mountain; thirukkul̤ambil on the beautiful hoof; kaṇagaṇappa to sound; thiru (present in his divine chest) periya pirātti-s; ākāram presence; kulunga to sway; idandhu dug out and picked up (the earth); nila madandhai thanai ṣrī bhūmip pirātti; pulgi embraced; kŏttidai on the tusk; vaiththu arul̤iya one who mercifully placed; en kŏmān kaṇdīr is my lord.

PT 4.4.9

1286 ஏழுலகும்தாழ்வரையும்எங்குமூடி
எண்டிசையும்மண்டலமும்மண்டி * அண்டம்
மோழையெழுந்து ஆழிமிகும் ஊழிவெள்ளம்
முன்னகட்டிலொடுக்கிய எம்மூர்த்திகண்டீர் *
ஊழிதொறும் ஊழிதொறுமுயர்ந்தசெல்வத்து
ஓங்கியநான்மறையனைத்தும் தாங்குநாவர் *
சேழுயர்ந்தமணிமாடம்திகழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1286 ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி *
எண் திசையும் மண்டலமும் மண்டி * அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் *
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் **
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து *
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர் *
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே-9
1286 ezh ulakum tāzh varaiyum ĕṅkum mūṭi *
ĕṇ ticaiyum maṇṭalamum maṇṭi * aṇṭam
mozhai ĕzhuntu āzhi mikum ūzhi vĕl̤l̤am *
muṉ akaṭṭil ŏṭukkiya ĕm mūrtti kaṇṭīr **
ūzhitŏṟum ūzhitŏṟum uyarnta cĕlvattu *
oṅkiya nāṉmaṟai aṉaittum tāṅku nāvar *
cezh uyarnta maṇi māṭam tikazhum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-9

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1286. At the end of the eon, our lovely-eyed Thirumāl swallowed all the seven worlds, the seven mountains, everything in the eight directions, the earth, the sky, the oceans and the flood and kept them in his stomach. He stays in Thiruthetriyambalam in Nāngur where shining diamond-studded palaces touch the sky and famous Vediyars, scholars of the four Vedās, recite eon after eon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊழிதொறும் ஊழிதொறும் காலங்காலமாக; உயர்ந்த வளர்ந்து வருகிற; செல்வத்து செல்வத்தையுடையராய்; ஓங்கிய நான்மறை சிறந்த வேதங்களை ஓதும்; அனைத்தும் நாவையுடையரான; தாங்கும் நாவர் வைதிகர்கள் வாழும்; சேழ் உயர்ந்த மிகவும் உயர்ந்த; மணி மாடம் திகழும் மணிமாடங்கள் திகழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; ஏழ் உலகும் ஏழு உலகங்களும்; தாழ் வரையும் மலைகளும் ஆகிய; எங்கும் மூடி எல்லா இடங்களையும்; எண் திசையும் எட்டுத் திக்குக்களிலும்; மண்டலமும் பூமியிலும்; மண்டி அண்டம் அண்டத்திலும் பரவி; மோழை எழுந்து குமிழி எழுந்து; ஆழி மிகும் பெரும் கடல்; ஊழி வெள்ளம் பொங்கி வரும் வெள்ளத்தை; முன் அகட்டில் முன்பு ஒரு சமயம்; ஒடுக்கிய வயிற்றில் ஒடுக்கிய; எம் மூர்த்தி கண்டீர்! எம்பெருமானை கண்டீர்களோ!
ūzhidhoṛum ūzhidhoṛum through ages; uyarndha grown; selvaththu having wealth; ŏngiya rising in tumult; nāl maṛai anaiththum all vĕdhams which are in four categories; thāngum holding; nāvar having brāhmaṇas who are having the tongue; sĕzh uyarndha very tall; maṇi gem studded; mādam by mansions; thigazhum shining; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; ĕzh ulagum in seven islands; thāl̤ having nearby hills; varaiyum on mountains; engum at all areas; ūdi climbed and flew; eṇ thisaiyum in all eight directions; maṇdalamum at all places; aṇdam in brahmā-s universe; maṇdi greatly; mŏzhai ezhundhu bubbles rose; āzhi ocean; migum overflowing; ūzhi vel̤l̤am flood during deluge; mun in earlier times; agattil in his divine stomach; odukkiya one who secured; em mūrththi kaṇdīr is our lord.

PT 4.4.10

1287 சீரணிந்தமணிமாடம்திகழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலை *
கூரணிந்தவேல்வலவன்ஆலிநாடன்
கொடிமாடமங்கையர்கோன்குறையலாளி
பாரணிந்ததொல்புகழான்கலியன்சொன்ன
பாமாலையிவையைந்துமைந்தும்வல்லார் *
சீரணிந்தஉலகத்துமன்னராகிச்
சேண்விசும்பில்வானவராய்த்திகழ்வர் தாமே. (2)
1287 ## சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை *
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் *
கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி **
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன *
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் *
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி *
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே-10
1287 ## cīr aṇinta maṇi māṭam tikazhum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ mālai *
kūr aṇinta vel valavaṉ āli nāṭaṉ *
kŏṭi māṭa maṅkaiyar-koṉ kuṟaiyal āl̤i **
pār aṇinta tŏl pukazhāṉ kaliyaṉ cŏṉṉa *
pāmālai ivai aintum aintum vallār *
cīr aṇinta ulakattu maṉṉar āki *
ceṇ vicumpil vāṉavar āyt tikazhvar-tāme-10

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1287. Kaliyan with a sharp beautiful spear, the king of Thiruvāli filled with palaces where flags fly, praised by the whole world, composed ten pāsurams on Thirumāl who stays in Thiruthetriyambalam in Nāngur where diamond-studded palaces shine. If devotees learn and recite this garland of pāsurams, they will rule this beautiful world as kings and go to the highest sky and shine as gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் அணிந்த சிறப்பான; மணி மாடம் திகழும் மணிமாடங்கள் திகழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; கூர் அணிந்த கூர்மையான; வேல் வலவன் வேல் படையுடையவரும்; ஆலி திருவாலி நாட்டுக்கு; நாடன் தலைவரும்; கொடி கொடிகளோடு கூடின; மாட மாடங்களையுடைய; மங்கையர் கோன் திருமங்கை அரசனும்; குறையல் திருக்குறையலூரை; ஆளி ஆள்பவரும்; பார் அணிந்த பூமி எங்கும்; தொல் வியாபித்த பெரும்; புகழான் புகழையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; சொன்ன அருளிச்செய்த; பாமாலை பாசுரங்களான இந்த; இவை ஐந்தும் ஐந்தும் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்; சீர் அணிந்த சீர் அணிந்த; உலகத்து உலகத்து; மன்னராகி மன்னர்களாக வழ்ந்து பின்; சேண் விசும்பில் பரமபதத்திலே; வானவராய் நித்யசூரிகளாய்; திகழ்வர் தாமே விளங்குவார்கள்
sīr wealth; aṇindha having; maṇi filled with gems; mādam mansions; thigazhum shining; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ mālai on sarvĕṣvaran who is having reddish eyes; kūr aṇindha sharp; vĕl spear; valavan one who handles; āli nādan being the ruler of thiruvāli region; kodi having flags; mādam filled with mansions; mangaiyar for the residents of thirumangai region; kŏn being the king; kuṛaiyal āl̤i being the protector of thirukkuṛaiyalūr; pār aṇindha spread all over the earth; thol natural; pugazhān having fame; kaliyan thirumangai āzhvār; sonna mercifully spoke; pāmālai in the form of a garland of songs; ivai aindhum aindhum these ten pāsurams; vallār those who can recite; sīr aṇindha having wealth; ulagaththu in this world; mannar āgi being kings (subsequently); sĕṇ visumbil in paramapadham; vānavarāy being present along with nithyasūris; thigazhvar will shine.