PT 4.5.1

ஆனையின் துயர் நீக்கியவன் அமரும் இடம்

1288 தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி * மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை *
பூம்புனற்பொன்னி முற்றும்புகுந்து பொன்வரண்ட * எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே. (2)
PT.4.5.1
1288 ## tūmpu uṭaip paṉaik kai vezham *
tuyar kĕṭuttarul̤i * maṉṉum
kāmpu uṭaik kuṉṟam entik *
kaṭu mazhai kātta ĕntai *
pūm puṉal pŏṉṉi muṟṟum **
pukuntu pŏṉ varaṉṭa ĕṅkum *
tem pŏzhil kamazhum nāṅkūrt *
tirumaṇikkūṭattāṉe-1

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1288. Our father who took away the suffering of the long-trunked elephant Gajendra when he was caught by a crocodile and carried Govardhanā mountain as an umbrella and saved the cows and cowherds from the storm stays in Thirumanikkudam in Nangur blooming with fragrant flowers in the groves that shed honey where the Kaveri river with flourishing water flows bringing gold and leaving it on its banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூம்பு உடை துளைகளையுடைய பெரிய; பனைக்கை பனை போல் தும்பிக்கையுடைய; வேழம் துயர் யானையின் துயர்; கெடுத்தருளி கெடுத்தருளினவனும்; மன்னும் பூமியில் மூங்கில்கள்; காம்புடை வேரூன்றியிருந்த; குன்றம் கோவர்த்தன மலையை; ஏந்தி குடையாக தூக்கி; கடு மழை கடும் மழை; காத்த எந்தை காத்த எம்பெருமான்; பூம்புனல் அழகிய ஜலத்தையுடைய; பொன்னி காவேரி; முற்றும் புகுந்து எங்கும் பாய்ந்து; பொன் பொற்குவியல்களை; வரண்ட எங்கும் தள்ளிக் கொண்டு வர; தேம்பொழில் நீர் நிறந்த சோலைகள்; கமழும் மணம் வீசும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
thūmbu udai having holes; panai stout like a palm tree; kai having trunk; vĕzham gajĕndhrāzhwān-s; thuyar sorrow; keduththu arul̤i mercifully eliminated; mannu fitting well (on earth) and remaining (well rooted); kāmbu udai having bamboos; kunṛam gŏvardhana mountain; ĕndhi held as umbrella; kadu cruel; mazhai hailstorm; kāththa stopped and protected gŏkulam; endhai my lord; beautiful; punal having water; ponni the divine kāvĕri river; muṝum at all places; pugundhu entered; pon gold (which were present there); varaṇda as brought along; engum at all places; thĕm pozhil water filled gardens; kamazhum spreading fragrance; nāngūr present in thirunāngūr; thirumaṇik kūdaththān is mercifully present in thirumaṇik kūdam.