PT 4.5.3

நப்பின்னை தோள்புணர்ந்தவன் தங்கும் இடம்

1290 மாத்தொழில்மடங்கக்செற்று மருதிறநடந்து * வன்தாள்
சேத்தொழில்சிதைத்துப் பின்னைசெவ்வித்தோள் புணர்ந்தஎந்தை *
நாத்தொழில்மறைவல்லார்கள் நயந்துஅறம்பயந்த * வண்கைத்
தீத்தொழில்பயிலும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
PT.4.5.3
1290 māt tŏzhil maṭaṅkac cĕṟṟu *
marutu iṟa naṭantu * vaṉ tāl̤
cet tŏzhil citaittup * piṉṉai
cĕvvit tol̤ puṇarnta ĕntai ** -
nāt tŏzhil maṟai vallārkal̤ *
nayantu aṟam payanta vaṇ kait *
tīt tŏzhil payilum nāṅkūrt *
tirumaṇikkūṭattāṉe-3

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1290. Our father who conquered the Asuran Kesi when he came as a horse, went between two marudu trees and destroyed the Asurans, and fought with seven bulls and married Nappinnai, embracing her beautiful arms, stays in Thirumanikkudam in Nāngur where generous, virtuous Andanars recite the Vedās well and perform fire sacrifices.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாத் தொழில் குதிரை வடிவுகொண்டு வந்த; மடங்கக் செற்று அஸுரனைக் கொன்று; மருது மருதமரங்கள்; இற நடந்து இற்று விழும்படி நடந்து; வன்தாள் வலிய கால்களையுடைய; சேத் தொழில் ஏழு ரிஷபங்களை; சிதைத்து அழித்து; பின்னை நப்பின்னையின்; செவ்வி தோள் அழகிய தோள்களை; புணர்ந்த எந்தை அணைத்த பெருமான்; நாத் தொழில் நாவுக்கு வியாபாரமான; மறை வேதங்களைக் கற்ற; வல்லார்கள் வல்லவர்கள் அவைகளை; நயந்து மதித்து; அறம்பயந்த தருமங்களை அனுஷ்டித்தவர்களும்; வண் கை திடமான கைகளாலே செய்யப்படும்; தீத் தொழில் அக்நி காரியங்களை; பயிலும் இடை விடாது செய்யும் வைதிகர்கள் வாழும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
kĕṣi, the demon-s; thozhil act; madanga to be controlled; seṝu killed; marudhu marudha trees; iṛa to break; nadandhu crawled in between those; van strong; thāl̤ having feet; bulls; thozhil act; sidhaiththu destroyed; pinnai nappinnaip pirātti-s; sevvi beautiful; thŏl̤ with shoulders; puṇarndha one who embraced; endhai my lord; nā thozhil the act of the tongue, adhyayanam (learning/reciting) which was done; maṛai vĕdhams; vallārgal̤ brāhmaṇas who can handle; nayandhu eagerly; dharmaththai conducted; vaṇ generous; kai with the hands; thī thozhil fire rituals; payilum conducting; nāngūr present in thirunāngūr; thirumaṇik kūdaththān is mercifully present in thirumaṇik kūdam.