PT 4.5.10

மண்ணுலகும் பொன்னுலகும் ஆள்வர்

1297 திங்கள்தோய்மாடநாங்கூர்த் திருமணிக்கூடத்தானை *
மங்கையர்தலைவன் வண்தார்க்கலியன்வாயொலிகள் வல்லார் *
பொங்குநீருலகமாண்டு பொன்னுலகாண்டு * பின்னும்
வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே. (2)
PT.4.5.10
1297 ## tiṅkal̤ toy māṭa nāṅkūrt *
tirumaṇikkūṭattāṉai *
maṅkaiyar talaivaṉ vaṇ tārk *
kaliyaṉ vāy ŏlikal̤ vallār **
pŏṅku nīr ulakam āṇṭu *
pŏṉ-ulaku āṇṭu * piṉṉum
vĕm katirp pariti vaṭṭattu
ūṭu poy * vil̤aṅkuvāre-10

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1297. Kaliyan, the chief of Thirumangai adorned with beautiful garlands composed ten pāsurams praising the god of Thirumanikkudam Koyil in Nāngur where the moon shines above palaces. If devotees learn and recite these pāsurams they will rule this world surrounded by the ocean and go to the golden world of the spiritual world, becoming stars and shining in the sky where the sun and moon move.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திங்கள் சந்திரனை; தோய் தொடும்படி உயர்ந்த; மாட மாடங்களையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத்தானை எம்பெருமானைக் குறித்து; மங்கையர் தலைவன் திருமங்கைத் தலைவன்; வண் தார் அழகிய மாலையை; கலியன் அணிந்த ஆழ்வார்; வாய் அருளிச்செய்த; ஒலிகள் இப்பாசுரங்களை; வல்லார் ஓத வல்லார்; பொங்கு நீர் கடல் சூழ்ந்த; உலகம் ஆண்டு இவ்வுலகை ஆண்டு பின்பு; பொன் உலகு ஸ்வர்க்கலோகத்தை; ஆண்டு அனுபவித்து; பின்னும் மேலும்; வெம் கதிர்ப் பரிதி ஸூர்யமண்டலத்தின்; வட்டத்து ஊடு போய் வழியேசென்று; விளங்குவாரே பரமபதத்தில் வாழ்வர்
thingal̤ (reaching) in the orbit of moon; thŏy touching; mādam having mansions; nāngūr in thirunāngūr; thirumaṇikkūdaththānai on emperumān who is mercifully residing in the dhivyadhĕṣam named thirumaṇikkūdam; mangaiyar for the residents of thirumangai region; thalaivan being the king; vaṇ beautiful; thār having garland; kaliyan thirumangai āzhvār; vāy mercifully spoke; oligal̤ these ten pāsurams which are a garland of words; vallār those who can recite; pongu rising; nīr being surrounded by water-filled ocean; ulagam earth; āṇdu rule over; pon ulagu heaven; āṇdu enjoy; pinnum further; vem kadhir sun-s; parudhi vattaththu orbit-s; ūdu pŏy going through the middle (i.e. going through the archirādhi mārgam); vil̤anguvār will shine (in paramapadham)