PT 4.5.8

எல்லாப் பொருள்களுமானவன் தங்கும் இடம்

1295 சங்கையும்துணிவும்பொய்யும்மெய்யும் இத்தரணி யோம்பும் *
பொங்கியமுகிலும் அல்லாப்பொருள்களும்ஆயஎந்தை *
பங்கயமுகுத்ததேறல்பருகியவாளைபாய *
செங்கயலுகளும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
PT.4.5.8
1295 caṅkaiyum tuṇivum pŏyyum *
mĕyyum it taraṇi ompum *
pŏṅkiya mukilum allāp *
pŏrul̤kal̤um āya ĕntai ** -
paṅkayam ukutta teṟal *
parukiya vāl̤ai pāya *
cĕṅ kayal ukal̤um nāṅkūrt *
tirumaṇikkūṭattāṉe -8

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1295. Our father who is doubt, bravery, lies and truth, the cloud that nourishes the earth and all other things stays in Thirumanikkudam temple in Nāngur where vālai fish drink honey dripping from lotuses and jump while beautiful kayal fish frolic in the ponds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கையும் ஸந்தேஹமும்; துணிவும் நிச்சயமும்; பொய்யும் அஸத்யமும்; மெய்யும் ஸத்யமும்; இத் தரணி இந்த உலகத்தை; ஓம்பும் காக்கும்; பொங்கிய பலனை எதிபார்க்காத; முகிலும் மேகமும்; அல்லா மற்றுமுள்ள; பொருள்களும் பொருள்களும்; ஆய தானேயாய் இருக்கும்; எந்தை எம்பெருமான்; பங்கயம் தாமரைப் பூவிலிருந்து; உகுத்த தேறல் பெருகின தேனை; பருகிய வாளை பருகிய வாளை; பாய மீன்கள் இங்குமங்கும் ஓட; செங்கயல் சிவந்த கயல் மீன்கள்; உகளும் பயந்து துள்ளுமிடமான; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
sangaiyum doubt; thuṇivum clarity; poyyum untruth; meyyum truth; iththaraṇi this earth; ŏmbum one which protects; pongiya growing; mugilum cloud; allā other; porul̤gal̤um entities (all of these); āya one who can control; endhai my lord; pangayam from lotus flower; uguththa flowing; thĕṛal honey; parugiya drank; vāl̤ai huge fish; pāya as it jumps; sem reddish; kayal small fish; ugal̤um jump away (due to fear); nāngūr present in thirunāngūr; thirumaṇik kūdaththān is mercifully present in thirumaṇik kūdam.