PT 4.5.7

பஞ்சபூதங்களாகிய இறைவன் தங்கும் இடம்

1294 குன்றமும்வானும்மண்ணும் குளிர்புனல்திங்களோடு *
நின்றவெஞ்சுடரும் அல்லாநிலைகளும்ஆயஎந்தை *
மன்றமும்வயலும்காவும் மாடமும்மணங்கொண்டு * எங்கும்
தென்றல்வந்துலவும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
PT.4.5.7
1294 kuṉṟamum vāṉum maṇṇum *
kul̤ir puṉal tiṅkal̤oṭu *
niṉṟa vĕm cuṭarum allā *
nilaikal̤um āya ĕntai ** -
maṉṟamum vayalum kāvum *
māṭamum maṇaṅ kŏṇṭu * ĕṅkum
tĕṉṟal vantu ulavum nāṅkūrt *
tirumaṇikkūṭattāṉe-7

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1294. Our father who is the mountains, the sky, the earth, cool water, the moon, the hot sun and all other things stays in Thirumanikkudam temple in Nāngur where a breeze blows spreading fragrance everywhere through mandrams, fields, groves and palaces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றமும் மலைகளும்; வானும் ஆகாசமும்; மண்ணும் பூமியும்; குளிர் புனல் குளிர்ந்த நீரும்; திங்களோடு சந்திரனும்; நின்ற நிலையான; வெம் சுடரும் வெப்பமுடைய சூரியனும்; அல்லா மற்றுமுள்ள; நிலைகளும் நக்ஷத்ராதிகளும்; ஆய ஆகிய அனைத்தும் தானேயாய்; எந்தை இருக்கும் எம்பெருமான்; மன்றமும் பெரிய வீதிகளும்; வயலும் வயல்களும்; காவும் தோட்டங்களும்; மாடமும் மாட மாளிகைகளும் ஆகிய; எங்கும் எல்லாவிடங்களிலும்; தென்றல் தென்றல் காற்றானது; மணங்கொண்டு மணம் வீசிக்கொண்டு; வந்து உலவும் வந்து உலாவும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருமணிக்கூடத் தானே திருமணிக்கூடத்தில் உள்ளான்
kunṛamum mountains; vānum ether; maṇṇum earth; kul̤ir cool; punal water; thingal̤ŏdu moon; ninṛa firmly stood; vem sudarum sun which has hot rays; allā nilaigal̤um all other stars (all of these); āya having as his prakāram; endhai my lord; manṛamum wide streets; vayalum fertile fields; kāvum gardens; mādamum mansions (caused from these); maṇam fragrance; koṇdu vandhu extracting it; engum in all places; thenṛal southerly breeśe from the mountain; ulavum roaming; nāngūr present in thirunāngūr; thirumaṇik kūdaththān is mercifully present in thirumaṇik kūdam.