Thirukkurundānḍagam

திருக்குறுந்தாண்டகம்

Thirukkurundānḍagam
Thirukurunthandakam is one of the Prabandhams that emerged as an angam ( auxiliary discipline) of the four Vedas composed by Nammazhvar. Thirumangai āzhvār, having been refined and engaged in service by the Lord, begins by lamenting with 'Vadinen Vadi,' crying out to the Lord. Unable to bear the separation, Thirumangai āzhvār sings of the Lord with + Read more
நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு வேதஸாரமான பிரபந்தங்களுக்கு ஆறங்கம் கூற அவதரித்த பிரபந்தங்களில் ஒன்று திருக்குறுந்தாண்டகம். திருமங்கை ஆழ்வார் எம்பெருமானால் திருத்திப் பணி கொள்ளப்பட்டு 'வாடினேன் வாடி' என்று தொடங்கி அவனிடத்தில் கதறி அழுகிறார். பகவானோ இவருக்கு முகம் காட்டாதிருக்க, பிரிவை + Read more
Group: 2nd 1000
Verses: 2032 to 2051
Glorification: Archa / Manifest State (அர்ச்சாவதாரம்)
Eq scripture: Nirukta
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TKT 1

2032 நிதியினைப்பவளத்தூணை நெறிமையால்நினையவல்லார் *
கதியினைக்கஞ்சன்மாளக் கண்டுமுன்அண்டமாளும் *
மதியினைமாலைவாழ்த்தி வணங்கிஎன்மனத்துவந்த *
விதியினைக்கண்டுகொண்ட தொண்டனேன்விடுகிலேனே. (2)
2032 ## நிதியினைப் பவளத் தூணை * நெறிமையால் நினைய வல்லார் *
கதியினைக் கஞ்சன் மாளக் * கண்டு முன் அண்டம் ஆளும் **
மதியினை மாலை வாழ்த்தி * வணங்கி என் மனத்து வந்த *
விதியினைக் கண்டு கொண்ட * தொண்டனேன் விடுகிலேனே 1
2032 ## nitiyiṉaip paval̤at tūṇai * nĕṟimaiyāl niṉaiya vallār *
katiyiṉaik kañcaṉ māl̤ak * kaṇṭu muṉ aṇṭam āl̤um **
matiyiṉai mālai vāzhtti * vaṇaṅki ĕṉ maṉattu vanta *
vitiyiṉaik kaṇṭu kŏṇṭa * tŏṇṭaṉeṉ-viṭukileṉe-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2032. I bow and praise him, the wise Thirumāl, a treasure, a coral pillar, my fate. He killed Kamsan to protect the world. If the devotees think of him as a true path, he will give them Mokshā, and I am his devotee and he has entered my heart. I will not leave him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிதியினை நிதிபோன்றவனும்; பவளத் தூணை பவழத் தூண் போல் இனியவனும்; நெறிமையால் முறையாக அவனை; நினைய வல்லார் சிந்திப்பவர்களுக்கு; கதியினை கதியாயிருப்பவனும்; முன் முன்பு; கஞ்சன் மாள கம்சனை முடித்து; கண்டு அண்டம் உலகங்களை; ஆளும் காத்தவனும்; மதியினை அடியார்களுக்கு அருள்பவனுமான; மாலை வாழ்த்தி திருமாலை வாழ்த்தி; வணங்கி வணங்கும்படி; என் மனத்து வந்த என் மனத்தில் வந்து நின்ற; விதியினை என் பாக்யத்தை எம்பெருமானை; கண்டுகொண்ட கண்டுகொண்ட; தொண்டனேன் தொண்டனான நான்; விடுகிலேனே இனி ஒருநாளும் விடமாட்டேன்

TKT 2

2033 காற்றினைப்புனலைத்தீயைக் கடிமதிளிலங்கைசெற்ற
ஏற்றினை * இமயம்மேய எழில்மணித்திரளை * இன்ப
ஆற்றினை அமுதந்தன்னை அவுணனாருயிரையுண்ட
கூற்றினை * குணங்கொண்டுஉள்ளம் கூறுநீகூறுமாறே.
2033 காற்றினைப் புனலைத் தீயைக் * கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை * இமயம் மேய * எழில் மணித் திரளை * இன்ப
ஆற்றினை அமுதம் தன்னை * அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை * குணங்கொண்டு உள்ளம் * கூறு நீ கூறுமாறே 2
2033 kāṟṟiṉaip puṉalait tīyaik * kaṭi matil̤ ilaṅkai cĕṟṟa
eṟṟiṉai * imayam meya * ĕzhil maṇit tiral̤ai * iṉpa
āṟṟiṉai amutam-taṉṉai * avuṇaṉ ār uyirai uṇṭa
kūṟṟiṉai * kuṇaṅkŏṇṭu ul̤l̤am * kūṟu-nī kūṟumāṟe-2

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2033. The lord is the earth, wind, water, fire, the sky, a beautiful heap of shining jewels, nectar, a river of joy for his devotees, Yama for the Asuras like Hiranyan and he stays in the Himalayas. He is as strong as a bull and he destroyed Lankā surrounded with protected walls. O heart, think of the divine nature of the lord and praise him, praise him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காற்றினை புனலை காற்று நீர் வாயு ஆகாசம்; தீயை தீ ஆகியவற்றை தன் சரீரமாக உடையவனும்; கடி மதிள் அரணான மதிள்களையுடைய; இலங்கை செற்ற இலங்கையை அழித்த; ஏற்றினை காளை போன்றவனும்; இமயம் மேய இமயமலையில் இருப்பவனும்; எழில் அழகிய; மணித் திரளை மணித்திரள் போன்றவனும்; இன்ப ஆற்றினை இன்ப வெள்ளமாயிருப்பவனும்; அமுதம் தன்னை அமுதம் போன்றவனும்; அவுணன் ஆர் இரணியனின் அரிய; உயிரை உண்ட உயிரை உண்ட; கூற்றினை யமன் போன்ற எம்பெருமானின்; குணங்கொண்டு திருக்குணங்களை; உள்ளம்! உள்ளத்தில் சிந்தித்து ஈடுபட்டு; நீ கூறு நீ கூறுவாயாக; கூறுமாறே! இதைக் காட்டிலும் வேறு பேறு உண்டோ?

TKT 3

2034 பாயிரும்பரவைதன்னுள் பருவரைதிரித்து * வானோர்க்
காயிருந்துஅமுதம்கொண்ட அப்பனைஎம்பிரானை *
வேயிருஞ்சோலைசூழ்ந்து விரிகதிரிரியநின்ற *
மாயிருஞ்சோலைமேய மைந்தனைவணங்கினேனே.
2034 பா இரும் பரவை தன்னுள் * பரு வரை திரித்து * வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட * அப்பனை எம் பிரானை **
வேய் இருஞ் சோலை சூழ்ந்து * விரி கதிர் இரிய நின்ற *
மா இருஞ் சோலை மேய * மைந்தனை வணங்கினேனே 3
2034 pā irum paravai-taṉṉul̤ * paru varai tirittu * vāṉorkku
āy iruntu amutaṅ kŏṇṭa * appaṉai ĕm pirāṉai **
vey iruñ colai cūzhntu * viri katir iriya niṉṟa *
mā iruñ colai meya * maintaṉai-vaṇaṅkiṉeṉe-3

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2034. Our father, the highest, churned the wide milky ocean using large Mandara mountain as a churning stick and the snake Vāsuki as a rope, took nectar from it and gave it to the gods. I worship the young god of Thirumālirunjolai filled with thick bamboo groves where the rays of the sun cannot go.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பா இரும் பரந்து ஆழ்ந்த; பரவை தன்னுள் திருப்பாற்கடலில்; பரு வரை பெரிய மந்தர மலையை நாட்டி; திரித்து சுழலச்செய்து; வானோர்க்கு தேவர்களுக்கு; ஆய் இருந்து பக்ஷபாதியாக இருந்து; அமுதம் கொண்ட அமுதமெடுத்துக் கொடுத்த; அப்பனை எம் பிரானை எம் பெருமானை; விரி கதிர் சூரியக் கிரணங்கள்; இரிய நின்ற புகாத; இரு மிகப்பெரிய; வேய் சோலை மூங்கிற்சோலைகளால்; சூழ்ந்து சூழ்ந்த; மா இருஞ்சோலை திருமாலிருஞ்சோலை மலையில்; மேய மைந்தனை இருக்கும் எம்பெருமானை; வணங்கினேனே அடியேன் வணங்கினேனே

TKT 4

2035 கேட்கயானுற்றதுண்டு கேழலாய்உலகங்கொண்ட *
பூக்கெழுவண்ணனாரைப் போதரக்கனவில்கண்டு *
வாக்கினால்கருமந்தன்னால் மனத்தினால்சிரத்தைதன்னால் *
வேட்கைமீதூரவாங்கி விழுங்கினேற்குஇனியவாறே.
2035 கேட்க யான் உற்றது உண்டு * கேழல் ஆய் உலகம் கொண்ட *
பூக் கெழு வண்ணனாரைப் * போதரக் கனவில் கண்டு **
வாக்கினால் கருமம் தன்னால் * மனத்தினால் சிரத்தை தன்னால் *
வேட்கை மீதூர வாங்கி * விழுங்கினேற்கு இனியவாறே 4
2035 keṭka yāṉ uṟṟatu uṇṭu * kezhal āy ulakam kŏṇṭa *
pūk kĕzhu vaṇṇaṉāraip * potarak kaṉavil kaṇṭu **
vākkiṉāl karumam-taṉṉāl * maṉattiṉāl cirattai-taṉṉāl *
veṭkai mītūra vāṅki * vizhuṅkiṉeṟku iṉiyavāṟe-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2035. I long to see in my dreams the sweet lord with the color of a dark Kāyām flower. He took the form of a boar and brought the earth goddess from beneath the earth. I worship him with words and praise him with devotion, thinking of him with love in my mind and caring.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேட்க யான் அடியேன் ஒரு விஷயம் கேட்க; உற்றது உண்டு விரும்பியது உண்டு; கேழல் ஆய் வராஹமாய்; உலகம் உலகத்தை; கொண்ட இடந்து கொண்டு வந்த; பூக் கெழு பூப்போன்ற மெல்லிய; வண்ணனாரை பெருமானை; போதர கனவில் கனவில் தோன்றியதை; கண்டு கண்டு; வாக்கினால் வாக்கினாலும்; கருமம் தன்னால் செயலினாலும்; மனத்தினால் மனத்தினாலும் ஈடுபட்டு; சிரத்தை தன்னால் சிரத்தையுடன்; வேட்கை மீதூர ஆசையின் மிகுதியால்; வாங்கி விழுங்குவதுபோல்; விழுங்கினேற்கு அநுபவித்த எனக்கு; இனியவாறே இனியதாயிருப்பது எப்படி?

TKT 5

2036 இரும்பனன்றுண்டநீர்போல் எம்பெருமானுக்கு * என்தன்
அரும்பெறலன்புபுக்கிட்டு அடிமைபூண்டுஉய்ந்துபோனேன் *
வரும்புயல்வண்ணனாரை மருவிஎன்மனத்துவைத்து *
கரும்பினின்சாறுபோலப் பருகினேற்குஇனியவாறே.
2036 இரும்பு அனன்று உண்ட நீர்போல் * எம் பெருமானுக்கு * என் தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு * அடிமைபூண்டு உய்ந்து போனேன் **
வரும் புயல் வண்ணனாரை * மருவி என் மனத்து வைத்து *
கரும்பின் இன் சாறு போலப் * பருகினேற்கு இனியவாறே 5
2036 irumpu aṉaṉṟu uṇṭa nīrpol * ĕm pĕrumāṉukku * ĕṉ-taṉ
arum pĕṟal aṉpu pukkiṭṭu * aṭimaipūṇṭu uyntu poṉeṉ **
varum puyal vaṇṇaṉārai * maruvi ĕṉ maṉattu vaittu *
karumpiṉ iṉ cāṟu polap * parukiṉeṟku iṉiyavāṟe-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2036. He is like hot iron and my love for him is like water poured on it as he takes my love inside him. His love is like sugarcane juice for me. I have become a slave for the sweet one and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரும்பு அனன்று பழுக்கக் காய்ந்த இரும்பு; உண்ட காய்ச்சல் அடங்கும்படி உட்கொண்ட; நீர்போல் நீர் போலே; எம்பெருமானுக்கு எம்பெருமானிடத்தில்; என் தன் அடியேன்; அரும்பெறல் கிடைத்தற்கரிய; அன்பு புக்கிட்டு அன்பைச் செலுத்தி; அடிமை பூண்டு கைங்காரியம் பண்ணி; உய்ந்து போனேன் உய்ந்து போனேன்; வரும் அடியார் இருக்குமிடம் தேடி வருகின்ற; புயல் வண்ணனாரை மேகவண்ணப் பெருமானை; மருவி அடைந்து; என் மனத்து வைத்து என் மனத்தில் வைத்து; கரும்பின் கரும்பின்; இன் சாறு போல இனிமையான சாற்றை; பருகினேற்கு பருகின இன்பத்தைப் பெற்ற எனக்கு; இனியவாறே இந்த இனிமை தான் என்ன ஆச்சர்யம்?

TKT 6

2037 மூவரில்முதல்வனாய ஒருவனை. உலகம்கொண்ட *
கோவினைக்குடந்தைமேய குருமணித்திரளை * இன்பப்
பாவினைப்பச்சைத்தேனைப் பைம்பொன்னையமரர்சென்னிப்
பூவினை * புகழும்தொண்டர் என்சொல்லிப்புகழ்வர்தாமே.
2037 மூவரில் முதல்வன் ஆய * ஒருவனை உலகம் கொண்ட *
கோவினைக் குடந்தை மேய * குரு மணித் திரளை ** இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் * பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினை * புகழும் தொண்டர் * என் சொல்லிப் புகழ்வர் தாமே? 6
2037 mūvaril mutalvaṉ āya * ŏruvaṉai ulakam kŏṇṭa *
koviṉaik kuṭantai meya * kuru maṇit tiral̤ai ** iṉpap
pāviṉaip paccait teṉaip * paim pŏṉṉai amarar cĕṉṉip
pūviṉai * pukazhum tŏṇṭar * ĕṉ cŏllip pukazhvar tāme?-6

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2037. He, the god of Kudandai shining like a pile of diamonds, is the first one among all the three gods, the king of the whole world, sweet poetry, fresh honey and pure gold and the flowers that adorn the hair of the gods in the sky. What can his devotees say to praise him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூவரில் மும்மூர்த்திகளுள்; முதல்வன் ஆய ஒருவனை முதல்வனும் ஒப்பற்றவனும்; உலகம் மகாபலியிடத்தில் உலகங்களை இரந்து; கொண்ட பெற்ற; கோவினை பெருமானும்; குடந்தை மேய திருக்குடந்தையில் இருப்பவனும்; குருமணி சிறந்த நீலமணி; திரளை குவியல் போன்றவனும்; இன்பப் பாவினை இன்பப் பாடல்கள் போன்றவனும்; பச்சைத் தேனை பசுந்தேன்போல் இனியனும்; பைம் பொன்னை பசும்பொன்போல் விரும்பத்தக்கவனும்; அமரர்சென்னி நித்ய ஸூரிகளின் தலையில் சூடும்; பூவினை பூ போன்றவனும்; புகழும் தொண்டர் புகழ்கின்ற தொண்டர்கள்; என் சொல்லி எதைச் சொல்லி; புகழ்வர் தாமே? புகழ்வார்களோ?

TKT 7

2038 இம்மையைமறுமைதன்னை எமக்குவீடாகிநின்ற *
மெய்ம்மையைவிரிந்தசோலை வியந்திருவரங்கம்மேய *
செம்மையைக்கருமைதன்னைத் திருமலையொருமையானை *
தன்மையைநினைவார் என்தன்தலைமிசைமன்னுவாரே.
2038 இம்மையை மறுமை தன்னை * எமக்கு வீடு ஆகி நின்ற *
மெய்ம்மையை விரிந்த சோலை * வியன் திரு அரங்கம் மேய **
செம்மையைக் கருமை தன்னைத் * திருமலை ஒருமையானை *
தன்மையை நினைவார் என் தன் * தலைமிசை மன்னுவாரே 7
2038 immaiyai maṟumai-taṉṉai * ĕmakku vīṭu āki niṉṟa *
mĕymmaiyai virinta colai * viyaṉ tiru araṅkam meya **
cĕmmaiyaik karumai-taṉṉait * tirumalai ŏrumaiyāṉai *
taṉmaiyai niṉaivār ĕṉ-taṉ * talaimicai maṉṉuvāre-7

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2038. The lord of Srirangam, surrounded by flourishing water is this birth, future births, Mokshā and truth for his devotees. Bowing my head, I worship the devotees of the dark faultless lord who think of the wonderful nature of the unique god of Thiruvenkatam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எமக்கு நமக்கு; இம்மையை இவ்வுலக இன்பம் தருமவனும்; மறுமை தன்னை பரலோக இன்பம் தருமவனும்; வீடாகி நின்ற மோக்ஷம் அடையும்; மெய்ம்மையை உண்மைப் பொருளை அளிப்பவனும்; விரிந்த சோலை பரந்த சோலைகளையுடைய; வியன் ஆச்சரியமான; திரு அரங்கம் மேய ஸ்ரீரங்கத்தில் இருப்பவனும்; செம்மையை யுக பேதத்தால் செந்நிறத்தையும்; கருமை தன்னை கருநிறத்தையும் உடையவனும்; திருமலை திருமலையில் நின்றவனும்; ஒருமையானை மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்; தன்மையை ஒருமைப்பட்டிருப்பவனின் சீலத்தை; நினைவார் நினைக்க வல்லவர்கள்; என் தன் என்னுடைய; தலைமிசை தலை மேல்; மன்னுவாரே இருக்கத் தக்கவர்கள்

TKT 8

2039 வானிடைப்புயலைமாலை வரையிடைப்பிரசம்ஈன்ற *
தேனிடைக்கரும்பின்சாற்றைத் திருவினைமருவிவாழார் *
மானிடப்பிறவி அந்தோ! மதிக்கிலர்கொள்க * தந்தம்
ஊனிடைக்குரம்பைவாழ்க்கைக்கு உறுதியேவேண்டினாரே.
2039 வானிடைப் புயலை மாலை * வரையிடைப் பிரசம் ஈன்ற *
தேனிடைக் கரும்பின் சாற்றைத் * திருவினை மருவி வாழார் **
மானிடப் பிறவி அந்தோ * மதிக்கிலர் கொள்க * தம் தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு * உறுதியே வேண்டினாரே 8
2039 vāṉiṭaip puyalai mālai * varaiyiṭaip piracam īṉṟa *
teṉiṭaik karumpiṉ cāṟṟait * tiruviṉai maruvi vāzhār- **
māṉiṭap piṟavi anto * matikkilar kŏl̤ka * -tam tam
ūṉiṭaik kurampai vāzhkkaikku * uṟutiye veṇṭiṉāre-8

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2039. Thirumāl, colored like a cloud in the sky, is the honey that bees make in the hills, sugarcane juice and a treasure. If devotees do not embrace him and live they do not realize that their human birth is a waste. If the devotees think of him always they will find happiness in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானிடை ஆகாசத்தில் இருக்கும்; புயலை மேகம் போன்றவனும்; வரையிடை மலையில்; பிரசம் ஈன்ற தேனீக்களாலே சேர்க்கப்பட்ட; தேனிடை மலைத்தேன் கலந்த; கரும்பின் கரும்பின்; சாற்றை சாற்றைபோல் இனிய; மாலை திருமாலை; திருவினை திருவுக்குந் திருவாகிய செல்வனை; மருவி வாழார் ஆச்ரயித்து வாழமாட்டார்கள்; மானிடப் பிறவி மானிடப் பிறவி எடுத்தும்; மதிக்கிலர் பெருமானை மதிக்காமலிருக்கிறார்களே; கொள்க தம் தம் தங்கள் தங்களுடைய; ஊனிடைக் குரம்பை மாம்ஸமயமான சரீரத்தில்; வாழ்க்கைக்கு வாழ்வதற்கு; உறுதியே உறுதியையே; வேண்டினாரே விரும்பி நிற்கின்றார்களே; அந்தோ! அந்தோ!

TKT 9

2040 உள்ளமோ ஒன்றில்நில்லாது ஓசையிலெரிநின்றுண்ணும் *
கொள்ளிமேலெறும்புபோலக் குழையுமால்என்தனுள்ளம் *
தெள்ளியீர்! தேவர்க்கெல்லாம் தேவராய்உலகம்கொண்ட *
ஒள்ளியீர்! உம்மையல்லால் எழுமையும்துணையிலோமே.
2040 உள்ளமோ ஒன்றில் நில்லாது * ஓசையில் எரி நின்று உண்ணும் *
கொள்ளிமேல் எறும்புபோலக் * குழையுமால் என் தன் உள்ளம் **
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் * தேவராய் உலகம் கொண்ட *
ஒள்ளியீர் உம்மை அல்லால் * எழுமையும் துணை இலோமே 9
2040 ul̤l̤amo ŏṉṟil nillātu * ocaiyil ĕri niṉṟu uṇṇum *
kŏl̤l̤imel ĕṟumpupolak * kuzhaiyumāl ĕṉ-taṉ ul̤l̤am **
tĕl̤l̤iyīr tevarkku ĕllām * tevarāy ulakam kŏṇṭa *
ŏl̤l̤iyīr ummai allāl * ĕzhumaiyum tuṇai ilome-9

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2040. My heart, confused and unable to stay on one thought, suffers like an ant on a torch burning at both end. You are wise, the god of the gods in the sky, the light that swallowed the whole world. I have no help but you for all my seven births.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உள்ளமோ மனமோவென்னில்; ஒன்றில் ஒரு விஷயத்திலும்; நில்லாது நிலைத்து நிற்காது; ஓசையில் ஓசையுடன்; எரி நின்று எரியும் நெருப்பின் நடுவில் நின்று; உண்ணும் உண்ணும்; கொள்ளிமேல் கொள்ளியில் அகப்பட்ட; எறும்பு போல எறும்பு போல; என் தன் உள்ளம் என் உள்ளம்; குழையுமால் குமைகிறது; தெள்ளியீர்! தெளிந்த ஸ்வபாவத்தை உடையவரே!; தேவர்க்கு எல்லாம் தேவர்க்கு எல்லாம்; தேவராய் தேவராய்; உலகம் கொண்ட மகாபலியிடம் மூவடி மண் யாசித்த; ஒள்ளியீர்! ஒளிமிக்கவரே!; உம்மை அல்லால் உம்மைத் தவிர; எழுமையும் ஏழு பிறப்பும்; துணை இலோமே எனக்கு வேறு துணை இல்லை

TKT 10

2041 சித்தமும்செவ்வைநில்லாது என்செய்கேன்தீவினையேன்? *
பத்திமைக்கன்புடையேனாவதே பணியாய்எந்தாய்! *
முத்தொளிமரகதமே! முழங்கொளிமுகில்வண்ணா * என்
அத்த! நின்னடிமையல்லால் யாதுமொன்றறிகிலேனே.
2041 சித்தமும் செவ்வை நில்லாது * என் செய்கேன் தீவினையேன் *
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே * பணியாய் எந்தாய் **
முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில் வண்ணா * என்
அத்த நின் அடிமை அல்லால் * யாதும் ஒன்று அறிகிலேனே 10
2041 cittamum cĕvvai nillātu * ĕṉ cĕykeṉ tīviṉaiyeṉ *
pattimaikku aṉpu uṭaiyeṉ āvate * paṇiyāy ĕntāy **
muttu ŏl̤i marakatame muzhaṅku ŏl̤i mukil vaṇṇā * ĕṉ
atta niṉ aṭimai allāl * yātum ŏṉṟu aṟikileṉe-10

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2041. You are my father, a pearl, a shining emerald, with the color of a cloud shining with lightning and roaring with thunder. My mind is not steady—what can I do? I have done bad karmā. Give me your grace and tell me what should I do to love you with devotion. You are my lord and I know nothing except being a slave for you and loving you with devotion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சித்தமும் மனமும்; செவ்வை நில்லாது தரித்து நிற்பதில்லை; தீ வினையேன் மஹா பாபியான நான்; என் செய்கேன் என் செய்வேன் என்னை; பத்திமைக்கு பக்தியின் ஸ்தானத்திலே; அன்பு உடையேன் அன்பை உடையவனாக; ஆவதே பணியாய் செய்தருளவேணும்; எந்தாய்! எம்பெருமானே!; முத்து ஒளி முத்துப் போன்றவனே!; மரதகமே! ஒளியுள்ள மரகதப்பச்சை போன்றவனே!; முழங்கு ஒளி கர்ஜிக்கும் ஒளி பொருந்திய; முகில் வண்ணா! மேகம் போன்றவனே!; என அத்த! என் நாயகனே!; நின் அடிமை உனக்கு கைங்கரியம்; அல்லால் செய்வது தவிர; யாதும் ஒன்று வேறொன்றும்; அறிகிலேனே அறியேன்

TKT 11

2042 தொண்டெல்லாம்பரவிநின்னைத் தொழுதுஅடிபணியுமாறு
கண்டு * தான்கவலைதீர்ப்பான்ஆவதே பணியாய் எந்தாய்! *
அண்டமாய்எண்திசைக்கும் ஆதியாய்! நீதியான *
பண்டமாம்பரமசோதி! நின்னையேபரவுவேனே.
2042 தொண்டு எல்லாம் பரவி நின்னைத் * தொழுது அடி பணியுமாறு
கண்டு * தான் கவலை தீர்ப்பான் ஆவதே * பணியாய் எந்தாய் **
அண்டம் ஆய் எண் திசைக்கும் * ஆதி ஆய் நீதி ஆன *
பண்டம் ஆம் பரம சோதி * நின்னையே பரவுவேனே 11
2042 tŏṇṭu ĕllām paravi niṉṉait * tŏzhutu aṭi paṇiyumāṟu
kaṇṭu * tāṉ kavalai tīrppāṉ āvate * paṇiyāy ĕntāy **
aṇṭam āy ĕṇ ticaikkum * āti āy nīti āṉa *
paṇṭam ām parama coti * niṉṉaiye paravuveṉe-11

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2042. O father, give me your grace so that I may serve you, praise you and worship your feet. You are the world, the ancient god of all eight directions, justice and the highest light in Vaikuntam. Take away all my worries. I will praise only you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தாய்! எம்பெருமானே!; தொண்டு எல்லாம் கைங்கர்யம் எல்லாம்; பரவி வாயாரப்பேசி; நின்னைத் தொழுது உன்னை வணங்கி; அடி பணியுமாறு திருவடிகளிலே கைங்கர்யம்; கண்டு செய்வதை ஆசைப்பட்டு; தான் ஒருவன்; கவலை கவலை; தீர்ப்பான் ஆவதே தீர்த்துக் கொள்ள முடியுமோ?; பணியாய் நீதான் போக்கி அருள வேண்டும்; அண்டம் ஆய் அண்டத்திலுள்ளவர்களின் தலைவனும்; எண் எட்டு; திசைக்கும் திசையிலுமுள்ள தேவதைகளுக்கும்; ஆதியாய் காரணபூதனும்; நீதி ஆன முறைமையான; பண்டமாம் செல்வமாயிருப்பவனுமான; பரஞ்சோதி! பரஞ்சோதி! நீ; நின்னையே உன்னையே; பரவுவேனே நான் வணங்குவேன்

TKT 12

2043 ஆவியைஅரங்கமாலை அழுக்குடம்பெச்சில்வாயால் *
தூய்மையில்தொண்டனேன்நான் சொல்லினேன்தொல்லைநாமம் *
பாவியேன்பிழைத்தவாறென்று அஞ்சினேற்குஅஞ்சலென்று *
காவிபோல்வண்ணர்வந்து என்கண்ணுளேதோன்றினாரே.
2043 ஆவியை அரங்க மாலை * அழுக்கு உடம்பு எச்சில் வாயால் *
தூய்மை இல் தொண்டனேன் நான் * சொல்லினேன் தொல்லை நாமம் **
பாவியேன் பிழைத்தவாறு என்று * அஞ்சினேற்கு அஞ்சல் என்று *
காவிபோல் வண்ணர் வந்து * என் கண்ணுளே தோன்றினாரே 12
2043 āviyai araṅka mālai * azhukku uṭampu ĕccil vāyāl *
tūymai il tŏṇṭaṉeṉ nāṉ * cŏlliṉeṉ tŏllai nāmam **
pāviyeṉ pizhaittavāṟu ĕṉṟu * añciṉeṟku añcal ĕṉṟu *
kāvipol vaṇṇar vantu * ĕṉ kaṇṇul̤e toṉṟiṉāre-12

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Divya Desam

Simple Translation

2043. You, the life of all, stay in Srirangam. When I, your impure devotee, was afraid because I have done bad karmā and I worried how I am going to escape its results, you, the kāvi-flower-colored lord came, entered my heart and said, “Do not be afraid. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆவியை உலகங்களுக்கெல்லாம் உயிராயிருப்பவனும்; அரங்க திருவரங்கத்து; மாலை எம்பெருமானைக் குறித்து; அழுக்கு உடம்பு இவ்வழுக்குடம்பின்; எச்சில் வாயால் எச்சில் வாயால்; தூய்மை இல் தூய்மையில்லாத; தொண்டனேன் நான் தொண்டு செய்பவனான நான்; தொல்லை அநாதியான மேன்மையான; நாமம் அவன் நாமத்தை; சொல்லினேன் சொன்னேன்; பாவியேன் பாவியான நான்; பிழைத்தவாறு! பிழை செய்து; என்று அஞ்சினேற்கு அனுதாபமற்ற எனக்கு; அஞ்சல் என்று அபயமளித்து; காவிபோல் கருங்குவளை போன்ற; வண்ணர் வந்து நிறத்தவரான பெருமான் வந்து; என் கண்ணுளே என் கண்களுக்குள்ளே; தோன்றினாரே தோன்றினாரே என்னே அருள்!

TKT 13

2044 இரும்பனன்றுண்டநீரும் போதரும்கொள்க * என்றன்
அரும்பிணிபாவமெல்லாம் அகன்றனஎன்னைவிட்டு *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில்கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணைகளிக்குமாறே.
2044 இரும்பு அனன்று உண்ட நீரும் * போதரும் கொள்க * என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் * அகன்றன என்னை விட்டு **
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த * அரங்க மா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டுகொண்டு * என் கண் இணை களிக்குமாறே 13
2044 irumpu aṉaṉṟu uṇṭa nīrum * potarum kŏl̤ka * ĕṉ-taṉ
arum piṇi pāvam ĕllām * akaṉṟaṉa ĕṉṉai viṭṭu **
curumpu amar colai cūzhnta * araṅka mā koyil kŏṇṭa *
karumpiṉaik kaṇṭukŏṇṭu * ĕṉ kaṇ-iṇai kal̤ikkumāṟe-13

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2044. My eyes rejoiced seeing the god, sweet as sugarcane, of Srirangam surrounded with groves where bees swarm. Just as water sprinkled on iron dries up, my sorrows and karmā have gone away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரும்பு அனன்று பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பு; உண்ட நீரும் உண்ட நீரும்; போதரும் வெளியிலே வந்துவிடும்; கொள்க இது உறுதி; சுரும்பு அமர் வண்டுகள் அமரும்; சோலை சூழ்ந்த சோலைகள் சூழ்ந்த; அரங்க மா அரங்க மா நகரில்; கோயில் கொண்ட கோயில் கொண்டுள்ள; கரும்பினை இனிய எம்பெருமானை; என் கண் இணை எனது இரண்டு கண்களும்; கண்டுகொண்டு கண்டுகொண்டு; களிக்குமாறே! களிக்கவே!; என் தன் என்னுடைய; அரும் பிணி போக்கமுடியாத நோய் மற்றும்; பாவம் எல்லாம் பாவங்களெல்லாம்; என்னை விட்டு என்னை விட்டு; அகன்றன நீங்கிப்போயின

TKT 14

2045 காவியைவென்றகண்ணார் கலவியேகருதி * நாளும்
பாவியேனாகஎண்ணி அதனுள்ளேபழுத்தொழிந்தேன் *
தூவிசேரன்னம்மன்னும் சூழ்புனல்குடந்தையானை *
பாவியேன்பாவியாது பாவியேனாயினேனே.
2045 காவியை வென்ற கண்ணார் * கலவியே கருதி * நாளும்
பாவியேன் ஆக எண்ணி * அதனுள்ளே பழுத்தொழிந்தேன் **
தூவி சேர் அன்னம் மன்னும் * சூழ் புனல் குடந்தையானை *
பாவியேன் பாவியாது * பாவியேன் ஆயினேனே 14
2045 kāviyai vĕṉṟa kaṇṇār * kalaviye karuti * nāl̤um
pāviyeṉ āka ĕṇṇi * ataṉul̤l̤e pazhuttŏzhinteṉ **
tūvi cer aṉṉam maṉṉum * cūzh puṉal kuṭantaiyāṉai *
pāviyeṉ pāviyātu * pāviyeṉ āyiṉeṉe-14

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2045. I, a sinner, always thought of embracing women whose beautiful eyes vanquish Kāvi flowers, plunged into my desires and was destroyed without thinking of you, god of Kudandai surrounded with water where swans that have beautiful feathers live.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காவியை வென்ற கருநெய்தல்மலரை வென்ற; கண்ணார் கண்களையுடைய பெண்களின்; கலவியே கருதி சேர்க்கையையே நினைத்து; நாளும் அநாதிகாலமாக; பாவியேன் ஆக பாவியாவதையே; எண்ணி எண்ணி; அதனுள்ளே அந்தப் பாவப் படுகுழியிலேயே; பழுத்தொழிந்தேன் விழுந்து விட்டேன்; தூவி சேர் அழகிய சிறகையுடைய; அன்னம் அன்னப்பறவைகள்; மன்னும் வாழும்; சூழ் புனல் நீர் நிலைகள் சூழ்ந்த; குடந்தையானை திருக்குடந்தையில் இருக்கும் பெருமானை; பாவியேன் பாவியான நான்; பாவியாது சிந்திக்காமல்; பாவியேன் ஆயினேனே பாவி ஆனேன்

TKT 15

2046 முன்பொலாஇராவணன்தன் முதுமதிளிலங்கைவேவித்து *
அன்பினால்அனுமன்வந்து ஆங்கடியிணைபணியநின்றார்க்கு *
என்பெலாம்உருகியுக்கிட்டு என்னுடைநெஞ்சமென்னும் *
அன்பினால்ஞானநீர்கொண்டு ஆட்டுவன்அடியனேனே.
2046 முன் பொலா இராவணன் தன் * முது மதிள் இலங்கை வேவித்து *
அன்பினால் அனுமன் வந்து * ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு **
என்பு எலாம் உருகி உக்கிட்டு * என்னுடை நெஞ்சம் என்னும் *
அன்பினால் ஞான நீர் கொண்டு * ஆட்டுவன் அடியனேனே 15
2046 muṉ pŏlā irāvaṇaṉ-taṉ * mutu matil̤ ilaṅkai vevittu *
aṉpiṉāl aṉumaṉ vantu * āṅku aṭi-iṇai paṇiya niṉṟārkku **
ĕṉpu ĕlām uruki ukkiṭṭu * ĕṉṉuṭai nĕñcam ĕṉṉum *
aṉpiṉāl ñāṉa nīr kŏṇṭu * āṭṭuvaṉ aṭiyaṉeṉe-15

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2046. Hanuman, your messenger, went to Lankā, burned Rāvana’s Lankā surrounded with strong walls, came back and bowed devotedly to Rāma's feet. Even though I cannot do what he did, I am your devotee. With my bones melting, I take the water of knowledge with the love that is my heart and bathe you in it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் பொலா முன்பு பொல்லாத; இராவணன் தன் இராவணனின்; முது மதிள் வலிய மதிள்களையுடைய; இலங்கை இலங்கையை; வேவித்து தீயிலிட்டு; அனுமன் அனுமன் ஸீதாதேவியை கண்டபின்; அன்பினால் வந்து மகிழ்ந்து வந்து; ஆங்கு ராமபிரானின்; அடிஇணை திருவடிகளை; பணிய தொழும்படியாக; நின்றார்க்கு நின்ற எம்பெருமானுக்கு; என்பு எலாம் என்னுடைய எலும்பெல்லாம்; உருகி உக்கிட்டு உருகும்படி; என்னுடை நெஞ்சம் என் மனதில் தோன்றிய; என்னும் பக்தி என்னும்; அன்பினால் ஆர்வத்தினால்; ஞான ஞானமாகிற; நீர் கொண்டு நீரைக் கொண்டு; அடியனேனே ஆட்டுவன் நானே நீராட்டுவேன்

TKT 16

2047 மாயமான்மாயச்செற்று மருதிறநடந்து * வையம்
தாயமாபரவைபொங்கத் தடவரைதிரித்து * வானோர்க்கு
ஈயுமால்எம்பிரானார்க்கு என்னுடைச்சொற்களென்னும் *
தூயமாமாலைகொண்டு சூட்டுவன்தொண்டனேனே.
2047 மாய மான் மாயச் செற்று * மருது இற நடந்து * வையம்
தாய் அமா பரவை பொங்கத் * தட வரை திரித்து ** வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு * என்னுடைச் சொற்கள் என்னும் *
தூய மா மாலைகொண்டு * சூட்டுவன் தொண்டனேனே 16
2047 māya māṉ māyac cĕṟṟu * marutu iṟa naṭantu * vaiyam
tāy amā paravai pŏṅkat * taṭa varai tirittu ** vāṉorkku
īyum māl ĕmpirāṉārkku * ĕṉṉuṭaic cŏṟkal̤ ĕṉṉum *
tūya mā mālaikŏṇṭu * cūṭṭuvaṉ tŏṇṭaṉeṉe-16

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2047. Our lord killed the Rakshasā Mārisan when he came as a magical deer, walked between the marudam trees and destroyed the two Asurans, measured the world and the sky with his feet at Mahābali's sacrifice, and churned the milky ocean, took the nectar from it and gave it to the gods in the sky. I, his devotee, adorn my dear lord with a pure beautiful garland made of my praise.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாய மான் மாரீசன் என்னும் மாய மான்; மாயச் செற்று அழியும்படி கொன்றவனும்; மருது இரட்டை மருதமரங்கள்; இற நடந்து முறிந்து விழும்படி நடந்தவனும்; வையம் திருவிக்ரமனாய் உலகை; தாய் தாவி அளந்தவனும்; மா பரவை பொங்க பெரிய கடல் பொங்க; தடவரை பெரிய மந்தர மலையை நட்டு; திரித்து கடைந்து; வானோர்க்கு தேவர்களுக்கு அமுதம்; ஈயுமால் கொடுத்த; எம்பிரானார்க்கு எம்பெருமானுக்கு; என்னுடை என்னுடைய; சொற்கள் என்னும் சொற்கள் என்னும்; தூய மா தூய்மையான சிறந்த; மாலை கொண்டு மாலை கொண்டு; தொண்டனேனே தொண்டனான நான்; சூட்டுவன் சூட்டுவேன்

TKT 17

2048 பேசினார்பிறவிநீத்தார் பேருளான்பெருமைபேசி *
ஏசினார்உய்ந்துபோனார்என்பது இவ்வுலகின்வண்ணம் *
பேசினேன்ஏசமாட்டேன் பேதையேன்பிறவிநீத்தற்கு *
ஆசையோபெரிதுகொள்க அலைகடல்வண்ணர்பாலே.
2048 பேசினார் பிறவி நீத்தார் * பேர் உளான் பெருமை பேசி *
ஏசினார் உய்ந்து போனார் * என்பது இவ் உலகின் வண்ணம் **
பேசினேன் ஏச மாட்டேன் * பேதையேன் பிறவி நீத்தற்கு *
ஆசையோ பெரிது கொள்க * அலை கடல் வண்ணர்பாலே 17
2048 peciṉār piṟavi nīttār- * per ul̤āṉ pĕrumai peci *
eciṉār uyntu poṉār * ĕṉpatu iv ulakiṉ vaṇṇam **
peciṉeṉ eca māṭṭeṉ * petaiyeṉ piṟavi nīttaṟku *
ācaiyo pĕritu kŏl̤ka- * alai kaṭal vaṇṇarpāle-17

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2048. If devotees praise the compassion of the generous lord they will not be born again. The world says that even those devotees who, like Sisupālan, scolded him were saved by him and reached Mokshā. Though I am ignorant and have many desires, I praise him and do not scold him because I do not want to be born again. I have abundant love for him and wish to join the lord whose color is like the wave-filled ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் திருப்பேர் நகரில்; உளான் இருக்கும் எம்பெருமானின்; பெருமை பெருமையை; பேசினார் பேசினவர்கள்; பிறவி ஸம்ஸாரத்தைக் கடந்து; நீத்தார் முக்தரானார்கள்; பேசி அவன் பெருமையைப் பேசி; ஏசினார் ஏசினவர்களும் [சிசுபாலன்]; உய்ந்து உய்ந்து; போனார் என்பது போனார்கள் என்பது; இவ் உலகின் இவ் உலகில்; வண்ணம் உள்ளவர்கள் கூறுவர்; பேதையேன் பேதையான நான்; பேசினேன் ஏதோ பேசினேன்; ஏச மாட்டேன் ஏசமாட்டேன்; பிறவி நீத்தற்கு பிறவி நீங்குவதற்கு; அலைகடல் அலைகடல் போன்ற; வண்ணர்பாலே நிறமுடைய பெருமானிடம்; ஆசையோ பெரிது நான் கொண்ட ஆசையோ; பெரிது கொள்க மிகப்பெரியது இது உண்மை

TKT 18

2049 இளைப்பினை இயக்கம்நீக்கி இருந்துமுன்இமையைக்கூட்டி *
அளப்பிலைம்புலனடக்கி அன்புஅவர்கண்ணேவைத்து *
துளக்கமில்சிந்தைசெய்து தோன்றலும்சுடர்விட்டு * ஆங்கே
விளக்கினைவிதியின்காண்பார் மெய்ம்மையைக்காண்கிற்பாரே.
2049 இளைப்பினை இயக்கம் நீக்கி * இருந்து முன் இமையைக் கூட்டி *
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி * அன்பு அவர்கண்ணே வைத்து **
துளக்கம் இல் சிந்தைசெய்து * தோன்றலும் சுடர்விட்டு * ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார் * மெய்ம்மையைக் காண்கிற்பாரே 18
2049 il̤aippiṉai iyakkam nīkki * iruntu muṉ imaiyaik kūṭṭi *
al̤appu il aimpulaṉ aṭakki * aṉpu avarkaṇṇe vaittu **
tul̤akkam il cintaicĕytu * toṉṟalum cuṭarviṭṭu * āṅke
vil̤akkiṉai vitiyiṉ kāṇpār * mĕymmaiyaik kāṇkiṟpāre-18

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2049. If someone removes the weakness that comes from ignorance and egoism and closes his eyes and controls the desires of the five senses, loving only him and not letting his thoughts wander, he will see the shining light that is truly the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இளைப்பினை கிலேசங்களினுடைய; இயக்கம் நீக்கி ஸஞ்சாரத்தை நீக்கி; இருந்து முன் அசைவின்றி ஒரு இடத்தில் இருந்து; இமையைக் கூட்டி கண்ணை மூடி; அளப்பு இல் அளவில்லாத; ஐம்புலன் அடக்கி ஐம்புலன்களை அடக்கி; அவர் கண்ணே எம்பெருமானிடத்திலேயே; துளக்கம் இல் இடைவிடாமல்; அன்பு வைத்து அன்பு வைத்து; சிந்தைசெய்து தியானம் பண்ணி; ஆங்கே அந்த நிலைமையிலே; சுடர்விட்டு ஒளியுடன்; தோன்றலும் தோன்றும் எம்பெருமானான; விளக்கினை விளக்கினை; விதியில் முறைப்படி; காண்பார் காணவேண்டும் என்கிறவர்கள்; காண்கிற்பாரே? காண்பார்களோ?; மெய்ம்மையே உள்ளபடியே காண்பார்கள்

TKT 19

2050 பிண்டியார்மண்டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணும்
முண்டியான் * சாபம்தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர்அரங்கம்மெய்யம் கச்சிபேர்மல்லையென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? (2)
2050 பிண்டி ஆர் மண்டை ஏந்திப் * பிறர் மனை திரிதந்து உண்ணும் *
முண்டியான் சாபம் தீர்த்த * ஒருவன் ஊர் ** உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் * உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யல் ஆமே? 19
2050 piṇṭi ār maṇṭai entip * piṟar maṉai tiritantu uṇṇum *
muṇṭiyāṉ cāpam tīrtta * ŏruvaṉ ūr ** ulakam ettum
kaṇṭiyūr araṅkam mĕyyam * kacci per mallai ĕṉṟu
maṇṭiṉār * uyyal allāl * maṟṟaiyārkku uyyal āme?-19

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2050. When the skull of the Nānmuhan on the lotus was stuck to Shivā's hand and he wandered among houses begging for food, our lord removed the curse of Shivā and made it fall off. If devotees go to Thirukkandiyur, Srirangam, Thirumeyyam, Thirukkachi, Thirupper (Koiladi) and Thirukkadalmallai, and worship him, they will be saved. How can others be saved if they do not worship him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிண்டி ஆர் பொடிகள் உதிரும்; மண்டை ஏந்தி கபாலத்தை கையிலேந்தி; பிறர் மனை அயலார் வீடுகளில்; திரிதந்து உண்ணும் திரிந்து இரந்து உண்ணும்; முண்டியான் ருத்ரனின்; சாபம் தீர்த்த சாபம் தீர்த்த; ஒருவன் ஊர் ஒப்பற்ற ஒருவன் ஊர்; உலகம் உலகத்தவர்களால்; ஏத்தும் கொண்டாடப்படும்; கண்டியூர் திருக்கண்டியூர்; அரங்கம் திருவரங்கம்; மெய்யம் திருமெய்யம்; கச்சி திருக்கச்சி; பேர் திருப்பேர்; மல்லை என்று திருக்கடல்மல்லை என்னும் இடங்களில்; மண்டினார் இருக்கும் எம்பெருமானிடம் ஈடுபட்டவர்கள்; உய்யல் அல்லால் உய்ந்து போவார்கள் அல்லால்; மற்றையார்க்கு மற்றவர்கள் யாருக்கு; உய்யலாமே? உய்ய வழி உண்டோ? இல்லை

TKT 20

2051 வானவர்தங்கள்கோனும் மலர்மிசையயனும் * நாளும்
தேமலர்தூவியேத்தும் சேவடிச்செங்கண்மாலை *
மானவேல்கலியன்சொன்ன வண்தமிழ்மாலைநாலைந்தும் *
ஊனமதின்றிவல்லார் ஒளிவிசும்பாள்வர்தாமே. (2)
2051 ## வானவர் தங்கள் கோனும் * மலர்மிசை அயனும் * நாளும்
தே மலர் தூவி ஏத்தும் * சேவடிச் செங் கண் மாலை **
மான வேல் கலியன் சொன்ன * வண் தமிழ் மாலை நாலைந்தும் *
ஊனம் அது இன்றி வல்லார் * ஒளி விசும்பு ஆள்வர் தாமே 20
2051 ## vāṉavar-taṅkal̤-koṉum * malarmicai ayaṉum * nāl̤um
te malar tūvi ettum * cevaṭic cĕṅ kaṇ mālai **
māṉa vel kaliyaṉ cŏṉṉa * vaṇ tamizh-mālai nālaintum- *
ūṉam-atu iṉṟi vallār * ŏl̤i vicumpu āl̤var tāme-20

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2051. Kaliyan with a strong spear composed a beautiful garland of twenty Tamil pasurams on our lovely-eyed lord. Indra, the king of gods and Nānmuhan who stays on a lotus, worship his feet every day, sprinkling flowers that drip with honey. If devotees learn and recite these twenty pasurams faultlessly they will go to the bright sky and rule there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் தங்கள் கோனும் தேவேந்திரனும்; மலர்மிசை அயனும் பூவிற்பிறந்த பிரமனும்; நாளும் நாள்தோறும்; தே மலர் தூவி தேன் மலர்களைத் தூவி; ஏத்தும் சேவடி வணங்கும் திருவடிகளோடு கூடின; செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலை திருமாலைக் குறித்து; மான வேல் பெருமையுள்ள வேல் படையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; சொன்ன அருளிச்செய்த; வண் தமிழ் செந்தமிழாலான; மாலை நாலைந்தும் இருபதுப் பாசுரங்களையும்; ஊனம் அது இன்றி குறையொன்றும் இல்லாமல்; வல்லார் ஓத வல்லார்கள்; ஒளி விசும்பு பரமபதத்தை; ஆள்வர் தாமே ஆளப்பெறுவர்