TKT 7

அரங்கனை நினைவார் தலைமீது தங்குவார்

2038 இம்மையைமறுமைதன்னை எமக்குவீடாகிநின்ற *
மெய்ம்மையைவிரிந்தசோலை வியந்திருவரங்கம்மேய *
செம்மையைக்கருமைதன்னைத் திருமலையொருமையானை *
தன்மையைநினைவார் என்தன்தலைமிசைமன்னுவாரே.
2038 immaiyai maṟumai-taṉṉai * ĕmakku vīṭu āki niṉṟa *
mĕymmaiyai virinta colai * viyaṉ tiru araṅkam meya **
cĕmmaiyaik karumai-taṉṉait * tirumalai ŏrumaiyāṉai *
taṉmaiyai niṉaivār ĕṉ-taṉ * talaimicai maṉṉuvāre-7

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2038. The lord of Srirangam, surrounded by flourishing water is this birth, future births, Mokshā and truth for his devotees. Bowing my head, I worship the devotees of the dark faultless lord who think of the wonderful nature of the unique god of Thiruvenkatam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எமக்கு நமக்கு; இம்மையை இவ்வுலக இன்பம் தருமவனும்; மறுமை தன்னை பரலோக இன்பம் தருமவனும்; வீடாகி நின்ற மோக்ஷம் அடையும்; மெய்ம்மையை உண்மைப் பொருளை அளிப்பவனும்; விரிந்த சோலை பரந்த சோலைகளையுடைய; வியன் ஆச்சரியமான; திரு அரங்கம் மேய ஸ்ரீரங்கத்தில் இருப்பவனும்; செம்மையை யுக பேதத்தால் செந்நிறத்தையும்; கருமை தன்னை கருநிறத்தையும் உடையவனும்; திருமலை திருமலையில் நின்றவனும்; ஒருமையானை மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்; தன்மையை ஒருமைப்பட்டிருப்பவனின் சீலத்தை; நினைவார் நினைக்க வல்லவர்கள்; என் தன் என்னுடைய; தலைமிசை தலை மேல்; மன்னுவாரே இருக்கத் தக்கவர்கள்