TKT 17

I Shall Speak Only of My Lord's Greatness

எம்பிரான் பெருமையையே பேசுவேன்

2048 பேசினார்பிறவிநீத்தார் பேருளான்பெருமைபேசி *
ஏசினார்உய்ந்துபோனார்என்பது இவ்வுலகின்வண்ணம் *
பேசினேன்ஏசமாட்டேன் பேதையேன்பிறவிநீத்தற்கு *
ஆசையோபெரிதுகொள்க அலைகடல்வண்ணர்பாலே.
2048 peciṉār piṟavi nīttār- * per ul̤āṉ pĕrumai peci *
eciṉār uyntu poṉār * ĕṉpatu iv ulakiṉ vaṇṇam **
peciṉeṉ eca māṭṭeṉ * petaiyeṉ piṟavi nīttaṟku *
ācaiyo pĕritu kŏl̤ka- * alai kaṭal vaṇṇarpāle-17

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2048. If devotees praise the compassion of the generous lord they will not be born again. The world says that even those devotees who, like Sisupālan, scolded him were saved by him and reached Mokshā. Though I am ignorant and have many desires, I praise him and do not scold him because I do not want to be born again. I have abundant love for him and wish to join the lord whose color is like the wave-filled ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பேர் திருப்பேர் நகரில்; உளான் இருக்கும் எம்பெருமானின்; பெருமை பெருமையை; பேசினார் பேசினவர்கள்; பிறவி ஸம்ஸாரத்தைக் கடந்து; நீத்தார் முக்தரானார்கள்; பேசி அவன் பெருமையைப் பேசி; ஏசினார் ஏசினவர்களும் [சிசுபாலன்]; உய்ந்து உய்ந்து; போனார் என்பது போனார்கள் என்பது; இவ் உலகின் இவ் உலகில்; வண்ணம் உள்ளவர்கள் கூறுவர்; பேதையேன் பேதையான நான்; பேசினேன் ஏதோ பேசினேன்; ஏச மாட்டேன் ஏசமாட்டேன்; பிறவி நீத்தற்கு பிறவி நீங்குவதற்கு; அலைகடல் அலைகடல் போன்ற; வண்ணர்பாலே நிறமுடைய பெருமானிடம்; ஆசையோ பெரிது நான் கொண்ட ஆசையோ; பெரிது கொள்க மிகப்பெரியது இது உண்மை
peciṉār those who spoke of; pĕrumai the greatness of; ul̤āṉ the Lord who is; per in the holy city of Thirupper; piṟavi got liberated; nīttār and attained moksha; eciṉār and those who mocked; peci Him; poṉār ĕṉpatu also; uyntu were uplifted; iv ulakiṉ this worldly; vaṇṇam people say so; petaiyeṉ but, I the ignorant one; peciṉeṉ spoke something; eca māṭṭeṉ will not speak in scorn; piṟavi nīttaṟku to be freed from rebirth; ācaiyo pĕritu the devotion I have for; vaṇṇarpāle the Lord with the complexion; alaikadal like the wavy ocean; pĕritu kŏl̤ka is immense, this is the truth