TKT 10

அத்தா! உன் அடிமை ஒன்றுதான் நான் அறிவேன்

2041 சித்தமும்செவ்வைநில்லாது என்செய்கேன்தீவினையேன்? *
பத்திமைக்கன்புடையேனாவதே பணியாய்எந்தாய்! *
முத்தொளிமரகதமே! முழங்கொளிமுகில்வண்ணா * என்
அத்த! நின்னடிமையல்லால் யாதுமொன்றறிகிலேனே.
2041 cittamum cĕvvai nillātu * ĕṉ cĕykeṉ tīviṉaiyeṉ *
pattimaikku aṉpu uṭaiyeṉ āvate * paṇiyāy ĕntāy **
muttu ŏl̤i marakatame muzhaṅku ŏl̤i mukil vaṇṇā * ĕṉ
atta niṉ aṭimai allāl * yātum ŏṉṟu aṟikileṉe-10

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2041. You are my father, a pearl, a shining emerald, with the color of a cloud shining with lightning and roaring with thunder. My mind is not steady—what can I do? I have done bad karmā. Give me your grace and tell me what should I do to love you with devotion. You are my lord and I know nothing except being a slave for you and loving you with devotion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சித்தமும் மனமும்; செவ்வை நில்லாது தரித்து நிற்பதில்லை; தீ வினையேன் மஹா பாபியான நான்; என் செய்கேன் என் செய்வேன் என்னை; பத்திமைக்கு பக்தியின் ஸ்தானத்திலே; அன்பு உடையேன் அன்பை உடையவனாக; ஆவதே பணியாய் செய்தருளவேணும்; எந்தாய்! எம்பெருமானே!; முத்து ஒளி முத்துப் போன்றவனே!; மரதகமே! ஒளியுள்ள மரகதப்பச்சை போன்றவனே!; முழங்கு ஒளி கர்ஜிக்கும் ஒளி பொருந்திய; முகில் வண்ணா! மேகம் போன்றவனே!; என அத்த! என் நாயகனே!; நின் அடிமை உனக்கு கைங்கரியம்; அல்லால் செய்வது தவிர; யாதும் ஒன்று வேறொன்றும்; அறிகிலேனே அறியேன்