TKT 18

பகவானையே சிந்தனை செய்: மெய்ம்மை காணலாம்

2049 இளைப்பினை இயக்கம்நீக்கி இருந்துமுன்இமையைக்கூட்டி *
அளப்பிலைம்புலனடக்கி அன்புஅவர்கண்ணேவைத்து *
துளக்கமில்சிந்தைசெய்து தோன்றலும்சுடர்விட்டு * ஆங்கே
விளக்கினைவிதியின்காண்பார் மெய்ம்மையைக்காண்கிற்பாரே.
2049 il̤aippiṉai iyakkam nīkki * iruntu muṉ imaiyaik kūṭṭi *
al̤appu il aimpulaṉ aṭakki * aṉpu avarkaṇṇe vaittu **
tul̤akkam il cintaicĕytu * toṉṟalum cuṭarviṭṭu * āṅke
vil̤akkiṉai vitiyiṉ kāṇpār * mĕymmaiyaik kāṇkiṟpāre-18

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2049. If someone removes the weakness that comes from ignorance and egoism and closes his eyes and controls the desires of the five senses, loving only him and not letting his thoughts wander, he will see the shining light that is truly the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இளைப்பினை கிலேசங்களினுடைய; இயக்கம் நீக்கி ஸஞ்சாரத்தை நீக்கி; இருந்து முன் அசைவின்றி ஒரு இடத்தில் இருந்து; இமையைக் கூட்டி கண்ணை மூடி; அளப்பு இல் அளவில்லாத; ஐம்புலன் அடக்கி ஐம்புலன்களை அடக்கி; அவர் கண்ணே எம்பெருமானிடத்திலேயே; துளக்கம் இல் இடைவிடாமல்; அன்பு வைத்து அன்பு வைத்து; சிந்தைசெய்து தியானம் பண்ணி; ஆங்கே அந்த நிலைமையிலே; சுடர்விட்டு ஒளியுடன்; தோன்றலும் தோன்றும் எம்பெருமானான; விளக்கினை விளக்கினை; விதியில் முறைப்படி; காண்பார் காணவேண்டும் என்கிறவர்கள்; காண்கிற்பாரே? காண்பார்களோ?; மெய்ம்மையே உள்ளபடியே காண்பார்கள்