TKT 19

திருக்கோயில் சேர்க: உய்யலாம்

2050 பிண்டியார்மண்டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணும்
முண்டியான் * சாபம்தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர்அரங்கம்மெய்யம் கச்சிபேர்மல்லையென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? (2)
2050 piṇṭi ār maṇṭai entip * piṟar maṉai tiritantu uṇṇum *
muṇṭiyāṉ cāpam tīrtta * ŏruvaṉ ūr ** ulakam ettum
kaṇṭiyūr araṅkam mĕyyam * kacci per mallai ĕṉṟu
maṇṭiṉār * uyyal allāl * maṟṟaiyārkku uyyal āme?-19

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2050. When the skull of the Nānmuhan on the lotus was stuck to Shivā's hand and he wandered among houses begging for food, our lord removed the curse of Shivā and made it fall off. If devotees go to Thirukkandiyur, Srirangam, Thirumeyyam, Thirukkachi, Thirupper (Koiladi) and Thirukkadalmallai, and worship him, they will be saved. How can others be saved if they do not worship him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிண்டி ஆர் பொடிகள் உதிரும்; மண்டை ஏந்தி கபாலத்தை கையிலேந்தி; பிறர் மனை அயலார் வீடுகளில்; திரிதந்து உண்ணும் திரிந்து இரந்து உண்ணும்; முண்டியான் ருத்ரனின்; சாபம் தீர்த்த சாபம் தீர்த்த; ஒருவன் ஊர் ஒப்பற்ற ஒருவன் ஊர்; உலகம் உலகத்தவர்களால்; ஏத்தும் கொண்டாடப்படும்; கண்டியூர் திருக்கண்டியூர்; அரங்கம் திருவரங்கம்; மெய்யம் திருமெய்யம்; கச்சி திருக்கச்சி; பேர் திருப்பேர்; மல்லை என்று திருக்கடல்மல்லை என்னும் இடங்களில்; மண்டினார் இருக்கும் எம்பெருமானிடம் ஈடுபட்டவர்கள்; உய்யல் அல்லால் உய்ந்து போவார்கள் அல்லால்; மற்றையார்க்கு மற்றவர்கள் யாருக்கு; உய்யலாமே? உய்ய வழி உண்டோ? இல்லை