TKT 9

O God of Gods! You Alone are Our Support.

தேவதேவரே! எங்கட்கு நீரே துணை

2040 உள்ளமோ ஒன்றில்நில்லாது ஓசையிலெரிநின்றுண்ணும் *
கொள்ளிமேலெறும்புபோலக் குழையுமால்என்தனுள்ளம் *
தெள்ளியீர்! தேவர்க்கெல்லாம் தேவராய்உலகம்கொண்ட *
ஒள்ளியீர்! உம்மையல்லால் எழுமையும்துணையிலோமே.
2040 ul̤l̤amo ŏṉṟil nillātu * ocaiyil ĕri niṉṟu uṇṇum *
kŏl̤l̤imel ĕṟumpupolak * kuzhaiyumāl ĕṉ-taṉ ul̤l̤am **
tĕl̤l̤iyīr tevarkku ĕllām * tevarāy ulakam kŏṇṭa *
ŏl̤l̤iyīr ummai allāl * ĕzhumaiyum tuṇai ilome-9

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2040. My heart, confused and unable to stay on one thought, suffers like an ant on a torch burning at both end. You are wise, the god of the gods in the sky, the light that swallowed the whole world. I have no help but you for all my seven births.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
உள்ளமோ மனமோவென்னில்; ஒன்றில் ஒரு விஷயத்திலும்; நில்லாது நிலைத்து நிற்காது; ஓசையில் ஓசையுடன்; எரி நின்று எரியும் நெருப்பின் நடுவில் நின்று; உண்ணும் உண்ணும்; கொள்ளிமேல் கொள்ளியில் அகப்பட்ட; எறும்பு போல எறும்பு போல; என் தன் உள்ளம் என் உள்ளம்; குழையுமால் குமைகிறது; தெள்ளியீர்! தெளிந்த ஸ்வபாவத்தை உடையவரே!; தேவர்க்கு எல்லாம் தேவர்க்கு எல்லாம்; தேவராய் தேவராய்; உலகம் கொண்ட மகாபலியிடம் மூவடி மண் யாசித்த; ஒள்ளியீர்! ஒளிமிக்கவரே!; உம்மை அல்லால் உம்மைத் தவிர; எழுமையும் ஏழு பிறப்பும்; துணை இலோமே எனக்கு வேறு துணை இல்லை
ul̤l̤amo oh mind; nillātu that doesnt remain steadfast; ŏṉṟil in thing; ĕṟumpu pola like an ant; kŏl̤l̤imel that is caught on a torch; ĕri niṉṟu with the fire burning; uṇṇum and consuming; ocaiyil with cracking sound; ĕṉ taṉ ul̤l̤am my heart; kuzhaiyumāl trembles; tĕl̤l̤iyīr! o Lord of pure and serene nature!; tevarāy the God; tevarkku ĕllām of all gods; ŏl̤l̤iyīr! o Radiant One!; ulakam kŏṇda begged from Mahabali, for the three steps of land; ummai allāl apart from You; tuṇai ilome I have no other refuge; ĕzhumaiyum in seven births