TKT 15

அன்பினால் ஞான நீர் கொண்டு நீராட்டுவேன்

2046 முன்பொலாஇராவணன்தன் முதுமதிளிலங்கைவேவித்து *
அன்பினால்அனுமன்வந்து ஆங்கடியிணைபணியநின்றார்க்கு *
என்பெலாம்உருகியுக்கிட்டு என்னுடைநெஞ்சமென்னும் *
அன்பினால்ஞானநீர்கொண்டு ஆட்டுவன்அடியனேனே.
2046 muṉ pŏlā irāvaṇaṉ-taṉ * mutu matil̤ ilaṅkai vevittu *
aṉpiṉāl aṉumaṉ vantu * āṅku aṭi-iṇai paṇiya niṉṟārkku **
ĕṉpu ĕlām uruki ukkiṭṭu * ĕṉṉuṭai nĕñcam ĕṉṉum *
aṉpiṉāl ñāṉa nīr kŏṇṭu * āṭṭuvaṉ aṭiyaṉeṉe-15

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2046. Hanuman, your messenger, went to Lankā, burned Rāvana’s Lankā surrounded with strong walls, came back and bowed devotedly to Rāma's feet. Even though I cannot do what he did, I am your devotee. With my bones melting, I take the water of knowledge with the love that is my heart and bathe you in it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் பொலா முன்பு பொல்லாத; இராவணன் தன் இராவணனின்; முது மதிள் வலிய மதிள்களையுடைய; இலங்கை இலங்கையை; வேவித்து தீயிலிட்டு; அனுமன் அனுமன் ஸீதாதேவியை கண்டபின்; அன்பினால் வந்து மகிழ்ந்து வந்து; ஆங்கு ராமபிரானின்; அடிஇணை திருவடிகளை; பணிய தொழும்படியாக; நின்றார்க்கு நின்ற எம்பெருமானுக்கு; என்பு எலாம் என்னுடைய எலும்பெல்லாம்; உருகி உக்கிட்டு உருகும்படி; என்னுடை நெஞ்சம் என் மனதில் தோன்றிய; என்னும் பக்தி என்னும்; அன்பினால் ஆர்வத்தினால்; ஞான ஞானமாகிற; நீர் கொண்டு நீரைக் கொண்டு; அடியனேனே ஆட்டுவன் நானே நீராட்டுவேன்