(இவ் விருபது பாசுரங்களையும் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்ய ப்ரயோஜநராய்க் கற்று வல்லவர்கள் தெளி விசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று.)
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும் ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-
பதவுரை
வானவர்