TKT 4

வராகனைக் கனவில் கண்டு விழுங்கினேன்

2035 கேட்கயானுற்றதுண்டு கேழலாய்உலகங்கொண்ட *
பூக்கெழுவண்ணனாரைப் போதரக்கனவில்கண்டு *
வாக்கினால்கருமந்தன்னால் மனத்தினால்சிரத்தைதன்னால் *
வேட்கைமீதூரவாங்கி விழுங்கினேற்குஇனியவாறே.
2035 keṭka yāṉ uṟṟatu uṇṭu * kezhal āy ulakam kŏṇṭa *
pūk kĕzhu vaṇṇaṉāraip * potarak kaṉavil kaṇṭu **
vākkiṉāl karumam-taṉṉāl * maṉattiṉāl cirattai-taṉṉāl *
veṭkai mītūra vāṅki * vizhuṅkiṉeṟku iṉiyavāṟe-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2035. I long to see in my dreams the sweet lord with the color of a dark Kāyām flower. He took the form of a boar and brought the earth goddess from beneath the earth. I worship him with words and praise him with devotion, thinking of him with love in my mind and caring.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேட்க யான் அடியேன் ஒரு விஷயம் கேட்க; உற்றது உண்டு விரும்பியது உண்டு; கேழல் ஆய் வராஹமாய்; உலகம் உலகத்தை; கொண்ட இடந்து கொண்டு வந்த; பூக் கெழு பூப்போன்ற மெல்லிய; வண்ணனாரை பெருமானை; போதர கனவில் கனவில் தோன்றியதை; கண்டு கண்டு; வாக்கினால் வாக்கினாலும்; கருமம் தன்னால் செயலினாலும்; மனத்தினால் மனத்தினாலும் ஈடுபட்டு; சிரத்தை தன்னால் சிரத்தையுடன்; வேட்கை மீதூர ஆசையின் மிகுதியால்; வாங்கி விழுங்குவதுபோல்; விழுங்கினேற்கு அநுபவித்த எனக்கு; இனியவாறே இனியதாயிருப்பது எப்படி?