TKT 5

கரும்புச் சாறு போல் அவனைப் பருகினேன்

2036 இரும்பனன்றுண்டநீர்போல் எம்பெருமானுக்கு * என்தன்
அரும்பெறலன்புபுக்கிட்டு அடிமைபூண்டுஉய்ந்துபோனேன் *
வரும்புயல்வண்ணனாரை மருவிஎன்மனத்துவைத்து *
கரும்பினின்சாறுபோலப் பருகினேற்குஇனியவாறே.
2036 irumpu aṉaṉṟu uṇṭa nīrpol * ĕm pĕrumāṉukku * ĕṉ-taṉ
arum pĕṟal aṉpu pukkiṭṭu * aṭimaipūṇṭu uyntu poṉeṉ **
varum puyal vaṇṇaṉārai * maruvi ĕṉ maṉattu vaittu *
karumpiṉ iṉ cāṟu polap * parukiṉeṟku iṉiyavāṟe-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2036. He is like hot iron and my love for him is like water poured on it as he takes my love inside him. His love is like sugarcane juice for me. I have become a slave for the sweet one and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரும்பு அனன்று பழுக்கக் காய்ந்த இரும்பு; உண்ட காய்ச்சல் அடங்கும்படி உட்கொண்ட; நீர்போல் நீர் போலே; எம்பெருமானுக்கு எம்பெருமானிடத்தில்; என் தன் அடியேன்; அரும்பெறல் கிடைத்தற்கரிய; அன்பு புக்கிட்டு அன்பைச் செலுத்தி; அடிமை பூண்டு கைங்காரியம் பண்ணி; உய்ந்து போனேன் உய்ந்து போனேன்; வரும் அடியார் இருக்குமிடம் தேடி வருகின்ற; புயல் வண்ணனாரை மேகவண்ணப் பெருமானை; மருவி அடைந்து; என் மனத்து வைத்து என் மனத்தில் வைத்து; கரும்பின் கரும்பின்; இன் சாறு போல இனிமையான சாற்றை; பருகினேற்கு பருகின இன்பத்தைப் பெற்ற எனக்கு; இனியவாறே இந்த இனிமை தான் என்ன ஆச்சர்யம்?