TKT 12

அஞ்சாதே என்று காட்சி தந்தார்

2043 ஆவியைஅரங்கமாலை அழுக்குடம்பெச்சில்வாயால் *
தூய்மையில்தொண்டனேன்நான் சொல்லினேன்தொல்லைநாமம் *
பாவியேன்பிழைத்தவாறென்று அஞ்சினேற்குஅஞ்சலென்று *
காவிபோல்வண்ணர்வந்து என்கண்ணுளேதோன்றினாரே.
2043 ஆவியை அரங்க மாலை * அழுக்கு உடம்பு எச்சில் வாயால் *
தூய்மை இல் தொண்டனேன் நான் * சொல்லினேன் தொல்லை நாமம் **
பாவியேன் பிழைத்தவாறு என்று * அஞ்சினேற்கு அஞ்சல் என்று *
காவிபோல் வண்ணர் வந்து * என் கண்ணுளே தோன்றினாரே 12
2043 āviyai araṅka mālai * azhukku uṭampu ĕccil vāyāl *
tūymai il tŏṇṭaṉeṉ nāṉ * cŏlliṉeṉ tŏllai nāmam **
pāviyeṉ pizhaittavāṟu ĕṉṟu * añciṉeṟku añcal ĕṉṟu *
kāvipol vaṇṇar vantu * ĕṉ kaṇṇul̤e toṉṟiṉāre-12

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Divya Desam

Simple Translation

2043. You, the life of all, stay in Srirangam. When I, your impure devotee, was afraid because I have done bad karmā and I worried how I am going to escape its results, you, the kāvi-flower-colored lord came, entered my heart and said, “Do not be afraid. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஆவியை உலகங்களுக்கெல்லாம் உயிராயிருப்பவனும்; அரங்க திருவரங்கத்து; மாலை எம்பெருமானைக் குறித்து; அழுக்கு உடம்பு இவ்வழுக்குடம்பின்; எச்சில் வாயால் எச்சில் வாயால்; தூய்மை இல் தூய்மையில்லாத; தொண்டனேன் நான் தொண்டு செய்பவனான நான்; தொல்லை அநாதியான மேன்மையான; நாமம் அவன் நாமத்தை; சொல்லினேன் சொன்னேன்; பாவியேன் பாவியான நான்; பிழைத்தவாறு! பிழை செய்து; என்று அஞ்சினேற்கு அனுதாபமற்ற எனக்கு; அஞ்சல் என்று அபயமளித்து; காவிபோல் கருங்குவளை போன்ற; வண்ணர் வந்து நிறத்தவரான பெருமான் வந்து; என் கண்ணுளே என் கண்களுக்குள்ளே; தோன்றினாரே தோன்றினாரே என்னே அருள்!