TKT 14

அந்தோ! வீண் பொழுது போக்கினேனே!

2045 காவியைவென்றகண்ணார் கலவியேகருதி * நாளும்
பாவியேனாகஎண்ணி அதனுள்ளேபழுத்தொழிந்தேன் *
தூவிசேரன்னம்மன்னும் சூழ்புனல்குடந்தையானை *
பாவியேன்பாவியாது பாவியேனாயினேனே.
2045 kāviyai vĕṉṟa kaṇṇār * kalaviye karuti * nāl̤um
pāviyeṉ āka ĕṇṇi * ataṉul̤l̤e pazhuttŏzhinteṉ **
tūvi cer aṉṉam maṉṉum * cūzh puṉal kuṭantaiyāṉai *
pāviyeṉ pāviyātu * pāviyeṉ āyiṉeṉe-14

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2045. I, a sinner, always thought of embracing women whose beautiful eyes vanquish Kāvi flowers, plunged into my desires and was destroyed without thinking of you, god of Kudandai surrounded with water where swans that have beautiful feathers live.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காவியை வென்ற கருநெய்தல்மலரை வென்ற; கண்ணார் கண்களையுடைய பெண்களின்; கலவியே கருதி சேர்க்கையையே நினைத்து; நாளும் அநாதிகாலமாக; பாவியேன் ஆக பாவியாவதையே; எண்ணி எண்ணி; அதனுள்ளே அந்தப் பாவப் படுகுழியிலேயே; பழுத்தொழிந்தேன் விழுந்து விட்டேன்; தூவி சேர் அழகிய சிறகையுடைய; அன்னம் அன்னப்பறவைகள்; மன்னும் வாழும்; சூழ் புனல் நீர் நிலைகள் சூழ்ந்த; குடந்தையானை திருக்குடந்தையில் இருக்கும் பெருமானை; பாவியேன் பாவியான நான்; பாவியாது சிந்திக்காமல்; பாவியேன் ஆயினேனே பாவி ஆனேன்