Chapter 10

Thiruvenkatam 3 - (கண் ஆர்)

திருவேங்கடம்- 3
Thiruvenkatam 3 - (கண் ஆர்)
"Remove my ego and sense of possessiveness, and grant me devotion. You must accept my services!" pleads the āzhvār to Venkatesa.
என்னுடைய அகங்கார மமகாரங்களை நீக்கி, எனக்குப் பக்தியைத் தரவேண்டும். என்னிடம் கைங்கரியங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும்! என்று வேங்கடவனை வேண்டுகிறார் ஆழ்வார்.
Verses: 1038 to 1047
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: மேகராகக்குறிஞ்சி
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a God
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 1.10.1

1038 கண்ணார்கடல்சூழ் இலங்கைக்குஇறைவன்தன் *
திண்ணாகம்பிளக்கச் சரம்செலஉய்த்தாய்! *
விண்ணோர்தொழும் வேங்கடமாமலைமேய *
அண்ணா! அடியேனிடரைக் களையாயே. (2)
1038 ## கண் ஆர் கடல் சூழ் * இலங்கைக்கு இறைவன் தன் *
திண் ஆகம் பிளக்கச் * சரம் செல உய்த்தாய் **
விண்ணோர் தொழும் * வேங்கட மா மலை மேய *
அண்ணா அடியேன் * இடரைக் களையாயே 1
1038 ## kaṇ ār kaṭal cūzh * ilaṅkaikku iṟaivaṉ-taṉ *
tiṇ ākam pil̤akkac * caram cĕla uyttāy **
viṇṇor tŏzhum * veṅkaṭa mā malai meya *
aṇṇā aṭiyeṉ * iṭaraik kal̤aiyāye-1

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1038. O Lord, You once aimed your mighty arrows to tear apart the strong frame of Lanka’s proud king, who ruled a vast island encircled by deep seas. You, whom the gods above worship and serve, now dwell upon the great Vēṅkaṭa hills. O my Master, kin of all, You who know every bond. This servant has come to You. Please, remove my sorrows.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கண்ணார் விசாலமான; கடல் சூழ் கடலாலே சூழப்பட்ட; இலங்கைக்கு இலங்கை தலைவன்; இறைவன் தன் இராவணனுடைய; திண் ஆகம் திடமான சரீரம்; பிளக்க பிளந்துபோகும் படி; சரம் செல அம்புகளை; உய்த்தாய்! செலுத்தினவனே!; விண்ணோர் தொழும் தேவர்கள் வணங்கும்; வேங்கட மா மலை மேய திருமலையிலே; அண்ணா! ஸகலவித பந்துவுமாக; அடியேன் இருக்கும் பெருமானே!; இடரைக் என் துன்பங்களை; களையாயே நீக்கியருள வேணும்
kaṇ ār Vast; kadal sūzh being surrounded by ocean; ilangaikku for lankā; iṛaivan than the leader, rāvaṇa-s; thiṇ firm; āgam body; pil̤akka to split [into two]; saram arrows; sela to be shot; uyththāy the one who directed; viṇṇŏr dhĕvathās such as brahmā et al; thozhum to surrender; great; vĕngada malai in thirumalā; mĕya residing eternally; aṇṇā oh one who is all types of relationship!; adiyĕn the servitor, my; idarai sorrow; kal̤aiyāy kindly eliminate.

PT 1.10.2

1039 இலங்கைப்பதிக்கு அன்றுஇறையாய * அரக்கர்
குலம்கெட்டுஅவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்! *
விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய *
அலங்கல்துளபமுடியாய்! அருளாயே.
1039 இலங்கைப் பதிக்கு * அன்று இறை ஆய * அரக்கர்
குலம் கெட்டு அவர் மாளக் * கொடிப் புள் திரித்தாய் **
விலங்கல் குடுமித் * திருவேங்கடம் மேய *
அலங்கல் துளப முடியாய் * அருளாயே 2
1039 ilaṅkaip patikku * aṉṟu iṟai āya * arakkar
kulam kĕṭṭu avar māl̤ak * kŏṭip pul̤ tirittāy **
vilaṅkal kuṭumit * tiruveṅkaṭam meya *
alaṅkal tul̤apa muṭiyāy * arul̤āye-2

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1039. Once, You destroyed the demon race that ruled Lanka and made them fall, by riding with Garuda as Your flag. At Thiruvēṅkaṭam, where moon and sun veer away from the mountain’s towering peaks, You dwell, wearing a divine crown and the sacred tulasi garlands. Mercifully protect me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இலங்கைப் பதிக்கு லங்காபுரிக்கு; அன்று எக்காலத்திலும்; இறை ஆய அரசர்களாயிருந்த; அரக்கர் குலம் அரக்கர் குலம்; கெட்டு கெட்டு; அவர் மாள அவர்கள் மாளும்படி; கொடிப் புள் கருடனைக் கொடியாகக் கொண்டு; திரித்தாய்! திரிந்து அவர்களை அழித்தாய்; விலங்கல் சந்திர ஸூர்யர்கள் விலகும்படியான; குடுமி சிகரங்கள் உள்ள; திருவேங்கடம் மேய திருமலையிலிருக்கும்; துளப முடியாய் திருத்துழாய் மாலையை; அலங்கல்! அணிந்தவனே!; அருளாயே எனக்கு அருள் புரிவாயே!
ilangaip padhikku for the city of lankā; enṛu always; iṛaiyāya being kings; arakkar kulam demoniac clan; avar those demons such as māli etc; kettu having their state damaged; māl̤a to die; kodi being the flag; pul̤ (climbing) periya thiruvadi (garudāzhvār); thiriththāy one who made to roam around; vilangal (chandhra (moon) and sūrya (sun)) move away from their paths; kudumi having tall peaks; thiruvĕngadam on thirumalā which is known as thiruvĕngadam; mĕya being the one who eternally resides; thul̤abam made with thiruththuzhāy (thul̤asi); alangal decorated with garland; mudiyāy oh one who is having divine crown!; arul̤āy ẏou should mercifully protect me.

PT 1.10.3

1040 நீரார்கடலும் நிலனும்முழுதுண்டு *
ஏராலமிளந்தளிர்மேல் துயில்எந்தாய்! *
சீரார்திருவேங்கடமாமலைமேய *
ஆராவமுதே! அடியேற்கு அருளாயே.
1040 நீர் ஆர் கடலும் * நிலனும் முழுது உண்டு *
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் * துயில் எந்தாய் **
சீர் ஆர் * திருவேங்கட மா மலை மேய *
ஆரா அமுதே * அடியேற்கு அருளாயே 3
1040 nīr ār kaṭalum * nilaṉum muzhutu uṇṭu *
er ālam il̤an tal̤irmel * tuyil ĕntāy **
cīr ār * tiruveṅkaṭa mā malai meya *
ārā amute * aṭiyeṟku arul̤āye-3

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1040. O Lord who swallowed the vast ocean and all the earth, And rested gently on a tender peepal leaf. Protector of all, who rests in beauty beyond thought! At Thiruvēṅkaṭam, the great hill of abundant wealth, You dwell, sweeter than nectar, never tiring to the soul. O Master! Show mercy to me, Your servant!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நீர் ஆர் நீர் நிரம்பியிருக்கும்; கடலும் கடலையும்; நிலனும் பூமியையும்; முழுது உண்டு அனைத்தையும் முழுதும்; உண்டு பிரளய காலத்தில் உண்டு; ஏர் ஆலம் அழகிய ஆலிலை; இளந்தளிர் இளந்தளிர் மேல்; துயில் எந்தாய்! துயின்ற எம்பெருமானே!; சீர் ஆர் செல்வச்செழிப்பு நிறைந்த; திரு வேங்கட திருவேங்கடமலையில்; மா மலை மேய இருப்பவனே!; ஆரா அமுதே! ஆரா அமுதே!; அடியேற்கு தாஸனான என்னை; அருளாயே காத்தருள வேண்டும்
nīr ār filled with water; kadalum ocean; nilanum earth; muzhudhu and all other objects; uṇdu consumed; ĕr beautiful; il̤am very tender; ālam thal̤ir mĕl on the peepal leaf; thuyil mercifully resting; endhāy ŏh one who is the protector for those who are like me!; sīr ār ḥaving abundant wealth; great; thiruvĕngada malai on thirumalā; mĕya residing eternally; ārā not satiating (even if enjoyed forever); amudhĕ ŏh one who is enjoyable like nectar!; adiyĕṛku for me, the servitor; arul̤āy show your mercy.

PT 1.10.4

1041 உண்டாஉறிமேல் நறுநெய்அமுதாக *
கொண்டாய்குறளாய் நிலம்ஈரடியாலே *
விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய *
அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே.
1041 உண்டாய் உறிமேல் * நறு நெய் அமுது ஆக *
கொண்டாய் குறள் ஆய் * நிலம் ஈர் அடியாலே **
விண் தோய் சிகரத் * திருவேங்கடம் மேய *
அண்டா அடியேனுக்கு * அருள்புரியாயே 4
1041 uṇṭāy-uṟimel * naṟu nĕy amutu āka *
kŏṇṭāy-kuṟal̤ āy * nilam īr aṭiyāle **
viṇ toy cikarat * tiruveṅkaṭam meya *
aṇṭā aṭiyeṉukku * arul̤puriyāye-4

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1041. O Lord who ate the fragrant ghee stored in pots, Tasting it as nectar, with childlike joy. O Vāmana! You took the earth itself with just two divine steps! You now dwell on Thiruvēṅkaṭam’s towering peaks. O Lord of all the devas! Grant Your grace to me, Your humble servant.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
உறிமேல் உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த; நறு நெய் நல்ல நெய்யை; அமுதாக அம்ருதமாக; உண்டாய் கொண்டு உண்டாய்; குறள் ஆய் நிலம் வாமநனாகி பூமியை; ஈர் அடியாலே இரண்டடியாலே; கொண்டாய் அளந்து கொண்டவனே!; விண் தோய் ஆகாசம் வரை உயர்ந்த; சிகர சிகரத்தையுடைய; திரு வேங்கடம் மேய திருவேங்கடத்திலிருக்கும்; அண்டா! தேவர்களுக்கெல்லாம் தேவனே!; அடியேனுக்கு என்னை; அருள்புரியாயே காத்தருள வேண்டும்
uṛi mĕl placed on the ropes hanging down from ceiling; naṛu ney pure ghee; amudhāga as nectar; uṇdāy ŏh one who mercifully ate!; kuṛal̤āy mercifully incarnating as vāmana; nilam earth; īradiyālĕ with two steps; koṇdāy ŏh one who measured and accepted!; viṇ thŏy tall to reach up to paramapadham; sigaram having peak; thiruvĕngadam in thirumalā; mĕya one who remains firmly; aṇdā ŏh controller of dhĕvas who live inside the oval shaped world!; adiyĕnukku for me, the servitor; arul̤ puriyāy mercifully grant the opportunity to serve you.

PT 1.10.5

1042 தூணாய்அதனூடு அரியாய்வந்துதோன்றி *
பேணாஅவுணனுடலம் பிளந்திட்டாய்! *
சேணார்திருவேங்கட மாமலைமேய *
கோணாகணையாய்! குறிக்கொள்எனைநீயே.
1042 தூண் ஆய் அதனூடு * அரியாய் வந்து தோன்றி *
பேணா அவுணன் உடலம் * பிளந்திட்டாய் **
சேண் ஆர் * திருவேங்கட மா மலை மேய *
கோள் நாகணையாய் * குறிக்கொள் எனை நீயே 5
1042 tūṇ āy ataṉūṭu * ariyāy vantu toṉṟi *
peṇā avuṇaṉ uṭalam * pil̤antiṭṭāy **
ceṇ ār * tiruveṅkaṭa mā malai meya *
kol̤ nākaṇaiyāy * kuṟikkŏl̤ ĕṉai nīye-5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1042. From the pillar, You burst forth as Narasimha, tearing apart the chest of Hiraṇya, the wicked one who scorned You! O Lord who rests upon the mighty coils of Ādiśeṣa and dwelling atop Thiruvēṅkaṭam, tall and radiant! Look upon me, Your servant, and choose me as Your own.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தூண் ஆய் அதனூடு தூணிலிருந்து; அரியாய் நரசிம்மனாய்; வந்து தோன்றி வந்து தோன்றி; பேணா அவுணன் இரணியனின்; உடலம் பிளந்திட்டாய்! உடலை பிளந்தவனே!; சேண் ஆர் மிக உயர்ந்த; திரு வேங்கட திரு வேங்கடம் என்னும்; மா மலை மேய திருமலையிலே இருக்கும்; கோள் மிடுக்கையுடைய; நாகணையாய்! ஆதிசேஷன் மீது துயில்பவனே!; எனை நீயே நீயே என்னை; குறிக் கொள் காத்தருள வேண்டும்
thūṇāy being a mere pillar; adhanūdu inside it; ariyāy being narasimha; vandhu thŏnṛi came and incarnated; pĕṇā one who did not respect; avuṇan hiraṇya-s; udalam chest; pil̤andhittāy oh one who split it into two and threw it down!; sĕṇ ār being very tall; having great glory; thiruvĕngada malai on thirumalā; mĕya residing firmly; kŏl̤ strong; nāgam thiruvanandhāzhwān (ādhiṣĕsha); aṇaiyāy ŏh one who has as divine mattress!; enai me, the servitor; ī your highness; kuṛikkol̤ should consider in your divine heart.

PT 1.10.6

1043 மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி *
தன்னாக்கித் தன்னின்னருள்செய்யும்தலைவன் *
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய *
என்னானைஎன்னப்பன் என்நெஞ்சிலுளானே.
1043 மன்னா * இம் மனிசப் பிறவியை நீக்கி *
தன் ஆக்கித் * தன் இன் அருள் செய்யும் தலைவன் **
மின் ஆர் முகில் சேர் * திருவேங்கடம் மேய *
என் ஆனை என் அப்பன் * என் நெஞ்சில் உளானே 6
1043 maṉṉā * im maṉicap piṟaviyai nīkki *
taṉ ākkit * taṉ iṉ arul̤ cĕyyum talaivaṉ **
miṉ ār mukil cer * tiruveṅkaṭam meya *
ĕṉ āṉai ĕṉ appaṉ * ĕṉ nĕñcil ul̤āṉe-6

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1043. He removes this fleeting human birth. Makes us His own, and with boundless grace, protects us. That Lord of compassion, whose form is like a regal elephant, dwells upon Thiruvēṅkaṭam, where clouds gather with flashing lightning. He is my father, my Lord, and now, He lives within my heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மன்னா இம் மனிச நிலையில்லாத; பிறவியை இந்த மனித ஜன்மத்தை; நீக்கி விடுவித்து; தன் ஆக்கி தனக்கு ஆளாக்கிக்கொண்டு; தன் இன் தனது பரமகிருபையை; அருள் செய்யும் அருளிச் செய்யும்; தலைவன் தலைவன்; மின் ஆர் மின்னலோடுகூடின; முகில் சேர் மேகங்கள்; திரு வேங்கடம் மேய திருமலையிலே; என் ஆனை என் ஆனை போன்ற அழகையுடைய; என் அப்பன் எம்பெருமான்; என் நெஞ்சில் உளானே என் மனதில் உள்ளானே
mannā impermanent; i this; manisap piṛaviyai human birth; nīkki eliminating; than for him; ākki having as a servitor; than his; in arul̤ great mercy; seyyum showering; thalaivan having leadership; min by lightning; ār filled with; mugil clouds; sĕr have gathered and are residing; thiruvĕngadam on thirumalā; mĕya firmly residing; en to give enjoyment to me; ānai having a beautiful form like an elephant; en for me; appan being great benefactor; en my; nenjilĕ in heart; ul̤ān is eternally residing.

PT 1.10.7

1044 மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த *
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா *
தேனே! திருவேங்கடமாமலைமேய *
கோனே! என்மனம் குடிகொண்டிருந்தாயே.
1044 மான் ஏய் மட நோக்கி * திறத்து எதிர் வந்த *
ஆன் ஏழ் விடை செற்ற * அணி வரைத் தோளா **
தேனே * திருவேங்கட மா மலை மேய *
கோனே என் மனம் * குடிகொண்டு இருந்தாயே 7
1044 māṉ ey maṭa nokki * tiṟattu ĕtir vanta *
āṉ ezh viṭai cĕṟṟa * aṇi varait tol̤ā **
teṉe * tiruveṅkaṭa mā malai meya *
koṉe ĕṉ maṉam * kuṭikŏṇṭu iruntāye-7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1044. To win Nappinnai, whose eyes are like a soft doe’s gaze, You struck down seven fierce bulls that charged Your path. O Lord with mountain-like shoulders, sweet as honey, You reign on the glorious peak of Thiruvēṅkaṭam! And now, O King, You have made Your home within my heart, never to part.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மான் ஏய் மட மான் விழியுடைய அழகிய; நோக்கி திறத்து நப்பின்னையைப் பெற; எதிர் வந்த எதிர் வந்த; ஆன் ஏழ் விடை ஏழு ரிஷபங்களை; செற்ற கொன்ற; அணி வரைத் அழகிய மலைபோன்ற திடமான; தோளா! தேனே! தோள்களை யுடையவனே! தேனே!; திருவேங்கட திருவேங்கடமென்னும்; மாமலை மேய! கோனே! திருமலையில் உள்ள அரசே!; என் மனம் குடிகொண்டு என் மனதில் குடி ஏறி; இருந்தாயே எனக்கு அருள் புரிகின்றாய்
mān deer-s eyes; ĕy matching; madam beautiful; nŏkki thiṛaththu on nappinnaip pirātti who is having divine eyes; edhir vandha came as hurdle; ān (roaming) amidst cows; ĕzh vidai the seven bulls; seṝa one who killed; aṇi very beautiful; varai firm like mountain; thŏl̤ā oh one who is having divine shoulders!; thĕnĕ ŏh one who is sweet like honey for me!; glorious; thiruvĕngadamalai on thirumalā; mĕya being the one who permanently resides; kŏnĕ ŏh one who enslaved me!; en my; manam mind; kudi koṇdu having as abode; irundhāy you remained firmly.

PT 1.10.8

1045 சேயன்அணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன் * மணிவாளொளி வெண்தரளங்கள் *
வேய்விண்டுஉதிர் வேங்கடமாமலைமேய *
ஆயனடியல்லது மற்றறியேனே.
1045 சேயன் அணியன் * என சிந்தையுள் நின்ற
மாயன் * மணி வாள் ஒளி * வெண் தரளங்கள் **
வேய் விண்டு உதிர் * வேங்கட மா மலை மேய *
ஆயன் அடி அல்லது * மற்று அறியேனே 8
1045 ceyaṉ aṇiyaṉ * ĕṉa cintaiyul̤ niṉṟa
māyaṉ * maṇi vāl̤ ŏl̤i * vĕṇ taral̤aṅkal̤ **
vey viṇṭu utir * veṅkaṭa mā malai meya *
āyaṉ aṭi allatu * maṟṟu aṟiyeṉe-8

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1045. He is far, beyond reach for those who do not seek, Yet near to devotees. He stands in my heart, the wondrous One. On Thiruvēṅkaṭam’s peak, where radiant pearls spill from split bamboo stalks, and shining gems lie scattered, there, the cowherd Lord resides. I know nothing else but His divine feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சேயன் பக்தியில்லாதவர்களுக்கு எட்டாதவனும்; அணியன் பக்தர்களுக்கு அருகிலிருப்பவனும்; என சிந்தையுள் என் மனதிலே; நின்ற மாயன் வந்து நின்ற மாயன்; வேய் மூங்கில்; விண்டு பிளவுபட்டு சிந்திக்கிடப்பதான; ஒளி வெண் ஒளியுள்ள வெளுத்த; தரளங்கள் முத்துக்களையும்; வாள் ஒளியுள்ள; மணி ரத்னங்களையும்; உதிர் உதிர்க்குமிடமான; வேங்கட திருவேங்கடமென்னும்; மா மலை மேய திருமலையில் இருக்கும்; ஆயன் கண்ணனுடைய; அடி அல்லது திருவடிகளைத் தவிர; மற்று அறியேனே வேறொன்றையும் அறியேனே
sĕyan being unreachable (for those who do not surrender); aṇiyan being easily reachable (for those who surrender); ena my; sindhai ul̤ in mind; ninṛa one who is eternally residing; māyan amaśing; vĕy bamboos; viṇdu split; udhir remaining scattered on the ground; ol̤i radiance; veṇ having whiteness; tharal̤angal̤ pearls; vāl̤ radiant; maṇi having precious gems; very glorious; vĕngada malai on thirumalā; mĕya being the one who is firmly residing; āyan krishṇa, the cowherd-s; adi alladhu other than the divine feet; maṝu anything else; aṛiyĕn ī don-t consider as an entity.

PT 1.10.9

1046 வந்தாய்என்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்! *
நந்தாதகொழுஞ்சுடரே எங்கள்நம்பீ! *
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்! * இனியான்உன்னை என்றும்விடேனே.
1046 வந்தாய் என் மனம் புகுந்தாய் * மன்னி நின்றாய் *
நந்தாத கொழுஞ் சுடரே * எங்கள் நம்பீ **
சிந்தாமணியே * திருவேங்கடம் மேய *
எந்தாய்! இனி யான் உன்னை * என்றும் விடேனே 9
1046 vantāy ĕṉ maṉam pukuntāy * maṉṉi niṉṟāy *
nantāta kŏzhuñ cuṭare * ĕṅkal̤ nampī **
cintāmaṇiye * tiruveṅkaṭam meya *
ĕntāy!- iṉi yāṉ uṉṉai * ĕṉṟum viṭeṉe-9

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1046. O radiant One, ever shining and full! O flawless Gem who grants every wish. Our refuge, our Nambī, who removes all our blemishes. You dwell on Thiruvēṅkaṭam’s sacred heights. You came to me, entered my heart, And there You stand, unwavering. Now, and forever, I will never let You go.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நந்தாத குறைவில்லாத; கொழுஞ் நிறைந்த; சுடரே! பிரகாசமுடையவனே!; எங்கள் நம்பீ! எங்கள் குறைகளை நீக்குபவனே!; சிந்தாமணியே! வேண்டியதைக் கொடுக்கும் மணியே; திரு வேங்கடம் மேய திருமலையில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; வந்தாய் நீயாகவே வந்து; என் மனம் என் மனதில்; புகுந்தாய் புகுந்தாய்; மன்னி நின்றாய் மனதில் நிலைத்து நின்றாய்; இனி இனிமேல்; யான் உன்னை நான் உன்னை; என்றும் விடேனே ஒருநாளும் விடமாட்டேன்
nandhādha continuous; kozhu abundant; sudarĕ ŏh one who is having radiance!; engal̤ being able to eliminate shortcomings of ours, we being incomplete; nambī ŏh complete one!; sindhā (chinthā) just on thinking; maṇiyĕ ŏh precious gem (which will fulfil all desires)!; thiruvĕngadam ŏn vĕnkatāchalam; mĕya firmly residing; endhāy oh my relative!; vandhāy ẏou arrived (where ī am residing);; en manam in my heart; pugundhāy you entered;; manni ninṛāy you firmly remained (in my heart);; ini now onwards; yān ī; unnai you who are the benefactor in this manner; enṛum ever; vidĕn will not leave.

PT 1.10.10

1047 வில்லார்மலி வேங்கடமாமலைமேய *
மல்லார்திரள்தோள் மணிவண்ணனம்மானை *
கல்லார்திரள்தோள் கலியன்சொன்னமாலை *
வல்லாரவர் வானவராகுவர்தாமே. (2)
1047 ## வில்லார் மலி * வேங்கட மா மலை மேய *
மல் ஆர் திரள் தோள் * மணி வண்ணன் அம்மானை **
கல் ஆர் திரள் தோள் * கலியன் சொன்ன மாலை *
வல்லார் அவர் * வானவர் ஆகுவர் தாமே 10
1047 ## villār mali * veṅkaṭa mā malai meya *
mal ār tiral̤ tol̤ * maṇi vaṇṇaṉ ammāṉai **
kal ār tiral̤ tol̤ * kaliyaṉ cŏṉṉa mālai *
vallār-avar * vāṉavar ākuvar tāme-10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1047. On Thiruvēṅkaṭam, where bow-bearing hunters freely roam, dwells the Lord with broad, strong shoulders. His hue like the deep blue of a precious gem. The mighty One, our radiant Master. These verses, sung by Kaliyan of rock-like shoulders, are garlands of praise rich with meaning. Those who learn and recite them with devotion, shall get to do kainkaryam (service) like the Nityasuris.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வில்லார் மலி வேடர்கள் நிறைந்த; வேங்கட திருவேங்கடமென்னும்; மா மலை மேய திருமலையிலிருக்கும்; மல் ஆர் திரள் மிடுக்குடைய திரண்ட அழகிய; தோள் தோள்களை யுடையவனும்; மணி வண்ணன் நீலமணி நிறத்தையுடையவனுமான; அம்மானை எம்பெருமானைக் குறித்து; கல் ஆர் திரள் கல் போன்ற திரண்ட; தோள் தோள்களையுடையவரான; கலியன் சொன்ன திருமங்கைமன்னன் அருளிச்செய்த; மாலை இச்சொல்மாலையை பாசுரங்களை; வல்லார் அவர் பொருளோடு ஓதவல்லார்கள்; வானவர் ஆகுவர் தாமே நித்யஸூரிகளாவார்கள்
villār the divine hunters who always carry bow; mali abundant; vĕngada mā malai on thirumalā; mĕya one who is residing firmly; mal ār very strong; thiral̤ well rounded; thŏl̤ shoulders; maṇi like a blue gem; vaṇṇan having divine complexion; ammānai on sarvĕṣvaran; kal rock; ār matching; thiral̤ well rounded; thŏl̤ having shoulders; kaliyan āzhvār; sonna mercifully spoke; mālai this decad which is in the form of a garland; vallār avar thām those who can learn with meanings; vānavar āguvar will get to perform kainkaryam like nithyasūris