PT 1.10.5

வேங்கடவா! என்னை நினைவில் கொள்

1042 தூணாய்அதனூடு அரியாய்வந்துதோன்றி *
பேணாஅவுணனுடலம் பிளந்திட்டாய்! *
சேணார்திருவேங்கட மாமலைமேய *
கோணாகணையாய்! குறிக்கொள்எனைநீயே.
PT.1.10.5
1042 tūṇ āy ataṉūṭu * ariyāy vantu toṉṟi *
peṇā avuṇaṉ uṭalam * pil̤antiṭṭāy **
ceṇ ār * tiruveṅkaṭa mā malai meya *
kol̤ nākaṇaiyāy * kuṟikkŏl̤ ĕṉai nīye-5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1042. From the pillar, You burst forth as Narasimha, tearing apart the chest of Hiraṇya, the wicked one who scorned You! O Lord who rests upon the mighty coils of Ādiśeṣa and dwelling atop Thiruvēṅkaṭam, tall and radiant! Look upon me, Your servant, and choose me as Your own.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூண் ஆய் அதனூடு தூணிலிருந்து; அரியாய் நரசிம்மனாய்; வந்து தோன்றி வந்து தோன்றி; பேணா அவுணன் இரணியனின்; உடலம் பிளந்திட்டாய்! உடலை பிளந்தவனே!; சேண் ஆர் மிக உயர்ந்த; திரு வேங்கட திரு வேங்கடம் என்னும்; மா மலை மேய திருமலையிலே இருக்கும்; கோள் மிடுக்கையுடைய; நாகணையாய்! ஆதிசேஷன் மீது துயில்பவனே!; எனை நீயே நீயே என்னை; குறிக் கொள் காத்தருள வேண்டும்
thūṇāy being a mere pillar; adhanūdu inside it; ariyāy being narasimha; vandhu thŏnṛi came and incarnated; pĕṇā one who did not respect; avuṇan hiraṇya-s; udalam chest; pil̤andhittāy oh one who split it into two and threw it down!; sĕṇ ār being very tall; having great glory; thiruvĕngada malai on thirumalā; mĕya residing firmly; kŏl̤ strong; nāgam thiruvanandhāzhwān (ādhiṣĕsha); aṇaiyāy ŏh one who has as divine mattress!; enai me, the servitor; ī your highness; kuṛikkol̤ should consider in your divine heart.