PT 1.10.4

கண்ணா! வாமனா! அருள் செய்

1041 உண்டாஉறிமேல் நறுநெய்அமுதாக *
கொண்டாய்குறளாய் நிலம்ஈரடியாலே *
விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய *
அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே.
PT.1.10.4
1041 uṇṭāy-uṟimel * naṟu nĕy amutu āka *
kŏṇṭāy-kuṟal̤ āy * nilam īr aṭiyāle **
viṇ toy cikarat * tiruveṅkaṭam meya *
aṇṭā aṭiyeṉukku * arul̤puriyāye-4

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1041. O Lord who ate the fragrant ghee stored in pots, Tasting it as nectar, with childlike joy. O Vāmana! You took the earth itself with just two divine steps! You now dwell on Thiruvēṅkaṭam’s towering peaks. O Lord of all the devas! Grant Your grace to me, Your humble servant.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உறிமேல் உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த; நறு நெய் நல்ல நெய்யை; அமுதாக அம்ருதமாக; உண்டாய் கொண்டு உண்டாய்; குறள் ஆய் நிலம் வாமநனாகி பூமியை; ஈர் அடியாலே இரண்டடியாலே; கொண்டாய் அளந்து கொண்டவனே!; விண் தோய் ஆகாசம் வரை உயர்ந்த; சிகர சிகரத்தையுடைய; திரு வேங்கடம் மேய திருவேங்கடத்திலிருக்கும்; அண்டா! தேவர்களுக்கெல்லாம் தேவனே!; அடியேனுக்கு என்னை; அருள்புரியாயே காத்தருள வேண்டும்
uṛi mĕl placed on the ropes hanging down from ceiling; naṛu ney pure ghee; amudhāga as nectar; uṇdāy ŏh one who mercifully ate!; kuṛal̤āy mercifully incarnating as vāmana; nilam earth; īradiyālĕ with two steps; koṇdāy ŏh one who measured and accepted!; viṇ thŏy tall to reach up to paramapadham; sigaram having peak; thiruvĕngadam in thirumalā; mĕya one who remains firmly; aṇdā ŏh controller of dhĕvas who live inside the oval shaped world!; adiyĕnukku for me, the servitor; arul̤ puriyāy mercifully grant the opportunity to serve you.