PT 1.10.8

வேங்கடவன் அடியன்றி வேறொன்றையும் அறியேன்

1045 சேயன்அணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன் * மணிவாளொளி வெண்தரளங்கள் *
வேய்விண்டுஉதிர் வேங்கடமாமலைமேய *
ஆயனடியல்லது மற்றறியேனே.
PT.1.10.8
1045 ceyaṉ aṇiyaṉ * ĕṉa cintaiyul̤ niṉṟa
māyaṉ * maṇi vāl̤ ŏl̤i * vĕṇ taral̤aṅkal̤ **
vey viṇṭu utir * veṅkaṭa mā malai meya *
āyaṉ aṭi allatu * maṟṟu aṟiyeṉe-8

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1045. He is far, beyond reach for those who do not seek, Yet near to devotees. He stands in my heart, the wondrous One. On Thiruvēṅkaṭam’s peak, where radiant pearls spill from split bamboo stalks, and shining gems lie scattered, there, the cowherd Lord resides. I know nothing else but His divine feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேயன் பக்தியில்லாதவர்களுக்கு எட்டாதவனும்; அணியன் பக்தர்களுக்கு அருகிலிருப்பவனும்; என சிந்தையுள் என் மனதிலே; நின்ற மாயன் வந்து நின்ற மாயன்; வேய் மூங்கில்; விண்டு பிளவுபட்டு சிந்திக்கிடப்பதான; ஒளி வெண் ஒளியுள்ள வெளுத்த; தரளங்கள் முத்துக்களையும்; வாள் ஒளியுள்ள; மணி ரத்னங்களையும்; உதிர் உதிர்க்குமிடமான; வேங்கட திருவேங்கடமென்னும்; மா மலை மேய திருமலையில் இருக்கும்; ஆயன் கண்ணனுடைய; அடி அல்லது திருவடிகளைத் தவிர; மற்று அறியேனே வேறொன்றையும் அறியேனே
sĕyan being unreachable (for those who do not surrender); aṇiyan being easily reachable (for those who surrender); ena my; sindhai ul̤ in mind; ninṛa one who is eternally residing; māyan amaśing; vĕy bamboos; viṇdu split; udhir remaining scattered on the ground; ol̤i radiance; veṇ having whiteness; tharal̤angal̤ pearls; vāl̤ radiant; maṇi having precious gems; very glorious; vĕngada malai on thirumalā; mĕya being the one who is firmly residing; āyan krishṇa, the cowherd-s; adi alladhu other than the divine feet; maṝu anything else; aṛiyĕn ī don-t consider as an entity.