Chapter 9

Thiruvenkatam 2 - (தாயே தந்தை)

திருவேங்கடம்-2
Thiruvenkatam 2 - (தாயே தந்தை)

The āzhvār directed his heart to Thiruvengadamudaiyan and took it to the hill to worship Him. However, Srinivasa did not welcome the āzhvār as expected or engage him in service. The āzhvār felt sorrowful! He lamented, "I have grown up committing sins, and I have come to you in repentance. You are the protector of all, and Piratti (the goddess) is with

+ Read more

ஆழ்வார் தமதுநெஞ்சை இசையவைத்தார்; திருவேங்கடமுடையானை ஸேவிக்க மலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஆழ்வார் எதிர்பார்த்தபடி ஸ்ரீநிவாஸன் ஆழ்வாரை எதிர் கொண்டு அழைக்கவில்லை; கைங்கரியத்தில் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. ஆழ்வாருக்கு வருத்தம்! நான் பாவமே செய்து வளர்ந்துள்ளேன் அதற்காக வருந்தி உன்னிடம்

+ Read more
Verses: 1028 to 1037
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will not get affected by the results of karma
  • PT 1.9.1
    1028 ## தாயே தந்தை என்றும் * தாரமே கிளை மக்கள் என்றும் *
    நோயே பட்டொழிந்தேன் * நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால் **
    வேய் ஏய் பூம் பொழில் சூழ் * விரை ஆர் திருவேங்கடவா! *
    நாயேன் வந்து அடைந்தேன் * நல்கி ஆள் என்னைக் கொண்டருளே 1
  • PT 1.9.2
    1029 மான் ஏய் கண் மடவார் * மயக்கில் பட்டு * மா நிலத்து
    நானே நானாவித * நரகம் புகும் பாவம் செய்தேன் **
    தேன் ஏய் பூம் பொழில் சூழ் * திருவேங்கட மா மலை * என்
    ஆனாய்! வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 2
  • PT 1.9.3
    1030 கொன்றேன் பல் உயிரைக் * குறிக்கோள் ஒன்று இலாமையினால் *
    என்றேனும் இரந்தார்க்கு * இனிது ஆக உரைத்து அறியேன் **
    குன்று ஏய் மேகம் அதிர் * குளிர் மா மலை வேங்கடவா *
    அன்றே வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 3
  • PT 1.9.4
    1031 குலம் தான் எத்தனையும் * பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் *
    நலம் தான் ஒன்றும் இலேன் * நல்லது ஓர் அறம் செய்தும் இலேன் **
    நிலம் தோய் நீள் முகில் சேர் * நெறி ஆர் திருவேங்கடவா! *
    அலந்தேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 4
  • PT 1.9.5
    1032 எப் பாவம் பலவும் * இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
    துப்பா நின் அடியே * தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் **
    செப்பு ஆர் திண் வரை சூழ் * திருவேங்கட மா மலை * என்
    அப்பா! வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 5
  • PT 1.9.6
    1033 மண் ஆய் நீர் எரி கால் * மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் *
    புண் ஆர் ஆக்கை தன்னுள் * புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன் **
    விண் ஆர் நீள் சிகர * விரைஆர் திருவேங்கடவா! *
    அண்ணா வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 6
  • PT 1.9.7
    1034 தெரியேன் பாலகனாய்ப் * பல தீமைகள் செய்துமிட்டேன் *
    பெரியேன் ஆயினபின் * பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன் **
    கரி சேர் பூம் பொழில் சூழ் * கன மா மலை வேங்கடவா! *
    அரியே வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 7
  • PT 1.9.8
    1035 நோற்றேன் பல் பிறவி * நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால் *
    ஏற்றேன் இப் பிறப்பே * இடர் உற்றனன் எம் பெருமான் **
    கோல் தேன் பாய்ந்து ஒழுகும் * குளிர் சோலை சூழ் வேங்கடவா *
    ஆற்றேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 8
  • PT 1.9.9
    1036 பற்றேல் ஒன்றும் இலேன் * பாவமே செய்து பாவி ஆனேன் *
    மற்றேல் ஒன்று அறியேன் * மாயனே எங்கள் மாதவனே **
    கல் தேன் பாய்ந்து ஒழுகும் * கமலச் சுனை வேங்கடவா! *
    அற்றேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 9
  • PT 1.9.10
    1037 ## கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய * எம் கார் வண்ணனை *
    விண்ணோர் தாம் பரவும் * பொழில் வேங்கட வேதியனை **
    திண் ஆர் மாடங்கள் சூழ் * திரு மங்கையர் கோன் கலியன் *
    பண் ஆர் பாடல் பத்தும் * பயில்வார்க்கு இல்லை பாவங்களே 10