Chapter 10

Thiruvenkatam 3 - (கண் ஆர்)

திருவேங்கடம்- 3
Thiruvenkatam 3 - (கண் ஆர்)
"Remove my ego and sense of possessiveness, and grant me devotion. You must accept my services!" pleads the āzhvār to Venkatesa.
என்னுடைய அகங்கார மமகாரங்களை நீக்கி, எனக்குப் பக்தியைத் தரவேண்டும். என்னிடம் கைங்கரியங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும்! என்று வேங்கடவனை வேண்டுகிறார் ஆழ்வார்.
Verses: 1038 to 1047
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: மேகராகக்குறிஞ்சி
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a God
  • PT 1.10.1
    1038 ## கண் ஆர் கடல் சூழ் * இலங்கைக்கு இறைவன் தன் *
    திண் ஆகம் பிளக்கச் * சரம் செல உய்த்தாய் **
    விண்ணோர் தொழும் * வேங்கட மா மலை மேய *
    அண்ணா அடியேன் * இடரைக் களையாயே 1
  • PT 1.10.2
    1039 இலங்கைப் பதிக்கு * அன்று இறை ஆய * அரக்கர்
    குலம் கெட்டு அவர் மாளக் * கொடிப் புள் திரித்தாய் **
    விலங்கல் குடுமித் * திருவேங்கடம் மேய *
    அலங்கல் துளப முடியாய் * அருளாயே 2
  • PT 1.10.3
    1040 நீர் ஆர் கடலும் * நிலனும் முழுது உண்டு *
    ஏர் ஆலம் இளந் தளிர்மேல் * துயில் எந்தாய் **
    சீர் ஆர் * திருவேங்கட மா மலை மேய *
    ஆரா அமுதே * அடியேற்கு அருளாயே 3
  • PT 1.10.4
    1041 உண்டாய் உறிமேல் * நறு நெய் அமுது ஆக *
    கொண்டாய் குறள் ஆய் * நிலம் ஈர் அடியாலே **
    விண் தோய் சிகரத் * திருவேங்கடம் மேய *
    அண்டா அடியேனுக்கு * அருள்புரியாயே 4
  • PT 1.10.5
    1042 தூண் ஆய் அதனூடு * அரியாய் வந்து தோன்றி *
    பேணா அவுணன் உடலம் * பிளந்திட்டாய் **
    சேண் ஆர் * திருவேங்கட மா மலை மேய *
    கோள் நாகணையாய் * குறிக்கொள் எனை நீயே 5
  • PT 1.10.6
    1043 மன்னா * இம் மனிசப் பிறவியை நீக்கி *
    தன் ஆக்கித் * தன் இன் அருள் செய்யும் தலைவன் **
    மின் ஆர் முகில் சேர் * திருவேங்கடம் மேய *
    என் ஆனை என் அப்பன் * என் நெஞ்சில் உளானே 6
  • PT 1.10.7
    1044 மான் ஏய் மட நோக்கி * திறத்து எதிர் வந்த *
    ஆன் ஏழ் விடை செற்ற * அணி வரைத் தோளா **
    தேனே * திருவேங்கட மா மலை மேய *
    கோனே என் மனம் * குடிகொண்டு இருந்தாயே 7
  • PT 1.10.8
    1045 சேயன் அணியன் * என சிந்தையுள் நின்ற
    மாயன் * மணி வாள் ஒளி * வெண் தரளங்கள் **
    வேய் விண்டு உதிர் * வேங்கட மா மலை மேய *
    ஆயன் அடி அல்லது * மற்று அறியேனே 8
  • PT 1.10.9
    1046 வந்தாய் என் மனம் புகுந்தாய் * மன்னி நின்றாய் *
    நந்தாத கொழுஞ் சுடரே * எங்கள் நம்பீ **
    சிந்தாமணியே * திருவேங்கடம் மேய *
    எந்தாய்! இனி யான் உன்னை * என்றும் விடேனே 9
  • PT 1.10.10
    1047 ## வில்லார் மலி * வேங்கட மா மலை மேய *
    மல் ஆர் திரள் தோள் * மணி வண்ணன் அம்மானை **
    கல் ஆர் திரள் தோள் * கலியன் சொன்ன மாலை *
    வல்லார் அவர் * வானவர் ஆகுவர் தாமே 10