PT 1.10.9

வேங்கடவா! உன்னை இனி விடமாட்டேன்

1046 வந்தாய்என்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்! *
நந்தாதகொழுஞ்சுடரே எங்கள்நம்பீ! *
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்! * இனியான்உன்னை என்றும்விடேனே.
PT.1.10.9
1046 vantāy ĕṉ maṉam pukuntāy * maṉṉi niṉṟāy *
nantāta kŏzhuñ cuṭare * ĕṅkal̤ nampī **
cintāmaṇiye * tiruveṅkaṭam meya *
ĕntāy!- iṉi yāṉ uṉṉai * ĕṉṟum viṭeṉe-9

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1046. O radiant One, ever shining and full! O flawless Gem who grants every wish. Our refuge, our Nambī, who removes all our blemishes. You dwell on Thiruvēṅkaṭam’s sacred heights. You came to me, entered my heart, And there You stand, unwavering. Now, and forever, I will never let You go.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நந்தாத குறைவில்லாத; கொழுஞ் நிறைந்த; சுடரே! பிரகாசமுடையவனே!; எங்கள் நம்பீ! எங்கள் குறைகளை நீக்குபவனே!; சிந்தாமணியே! வேண்டியதைக் கொடுக்கும் மணியே; திரு வேங்கடம் மேய திருமலையில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; வந்தாய் நீயாகவே வந்து; என் மனம் என் மனதில்; புகுந்தாய் புகுந்தாய்; மன்னி நின்றாய் மனதில் நிலைத்து நின்றாய்; இனி இனிமேல்; யான் உன்னை நான் உன்னை; என்றும் விடேனே ஒருநாளும் விடமாட்டேன்
nandhādha continuous; kozhu abundant; sudarĕ ŏh one who is having radiance!; engal̤ being able to eliminate shortcomings of ours, we being incomplete; nambī ŏh complete one!; sindhā (chinthā) just on thinking; maṇiyĕ ŏh precious gem (which will fulfil all desires)!; thiruvĕngadam ŏn vĕnkatāchalam; mĕya firmly residing; endhāy oh my relative!; vandhāy ẏou arrived (where ī am residing);; en manam in my heart; pugundhāy you entered;; manni ninṛāy you firmly remained (in my heart);; ini now onwards; yān ī; unnai you who are the benefactor in this manner; enṛum ever; vidĕn will not leave.