PT 4.7.1

திருவெள்ளக்குளத்து அண்ணா! என் துன்பம் துடை

1308 கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்! *
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர் *
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! * அடியேனிடரைக்களையாயே. (2)
PT.4.7.1
1308 ## kaṇ ār kaṭalpol * tirumeṉi kariyāy *
naṇṇār muṉai * vĕṉṟi kŏl̤vār maṉṉum nāṅkūrt **
tiṇ ār matil̤ cūzh * tiruvĕl̤l̤akkul̤attul̤
aṇṇā * aṭiyeṉ iṭaraik kal̤aiyāye-1

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1308. You, the highest one with a divine body that is dark as the wide ocean stay in Thiruvellakkulam temple in Nāngur surrounded by strong walls whose kings conquer their enemies. I am your slave. Take away my troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண் ஆர் கடல் போல் பரந்த கடல்போலே; கரியாய்! கறுத்த அழகையும் கம்பீரத்தோடு கூடின; திருமேனி திருமேனியுடையவனே!; நண்ணார் சத்துருக்களை; முனை வென்றி யுத்தத்திலே வெல்லும்; கொள்வார் மன்னு அந்தணர் வாழும்; திண் ஆர் திடமான; மதிள் சூழ் மதிளாலே சூழ்ந்த; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில் இருக்கும்; அண்ணா! அடியேன் அண்ணா! அடியேனுடைய; இடரைக் களையாயே துன்பங்களைப் போக்கவேண்டும்
kaṇ ār vast; kadal pŏl like ocean (having beauty and depth); thirumĕni having divine form; kariyāy ŏh krishṇa!; naṇṇār enemies-; munai in the battle; venṛi kol̤vār best among brāhmaṇas who can defeat (the enemies); mannu eternally residing; nāngūr in thirunāngūr; thiṇ ār strong; madhil̤ by forts; sūzh surrounded; thiruvel̤l̤ak kul̤aththul̤ mercifully living in the dhivyadhĕṣam named thiruvel̤l̤akkul̤am; aṇṇā ŏh you who are naturally related!; adiyĕn ī, who have no refuge, my; idarai sorrows (viś. connection with prakruthi (this body)); kal̤aiyāy you should mercifully sever.